என்னோடு வேலைக்கு சேர்ந்தவர்கள் ஒருவர் பள்ளிக்கால நண்பர்,ஆனால் தெலுங்கு.இன்னொரு நண்பர் கல்லுரி கால நண்பர்,தமிழ் கணக்குப்பிள்ளை. இருவருமே ஒத்த குணம் கொண்டவர்கள்.என்னோடு அவர்களால் ஒத்துப்போக முடியவில்லை என்பதை விட அவர்களோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை, என்பதே சரி.இது சாதிய கோட்பாடு என பின்னாளில் புரிந்தது.
நண்பர்களின் கேலிக்குண்டான என் கடவுள் மறுப்பு கொள்கையை நிஜப்படுத்த விரும்பினேன். அதற்கான காலம் கனிந்து வந்தது.
2015ல் என் இளைய மகன் வசந்துக்கு கல்யாணம் நடத்த விரும்பினேன். அதற்காக பல இடங்களில் எனக்கு வரப்போகும் மறுமகளை தேடினேன்,சுமார் 5 ஆண்டுகள் தேடினேன். இதற்காக என் கடவுள் மறுப்பு சிந்தனையை தளர்த்திக்கொண்டு பெண் வீட்டாரிடம் அதைப்பற்றி பேசுவதை தவிர்த்தேன்.இறுதியாக என் சிந்தனைக்கேற்ற சம்பந்தி அமைந்தார்.
‘கல்யாணத்தை தங்கள் விருப்பபடி நடத்துங்கள் எனக்கும் உடன்பாடுதான் ‘ என தெரிவித்தார்.
2015 ஆகத்து 30 எனும் நாளை நான் தெரிவு செய்தேன்.விடுமுறை நணாளான ஞாயிறு இருக்கும் படி பார்த்துக் கொண்டேன்.நாம் செய்யும் கல்யாண தேதி முகுர்த்த நாளாக இருக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்,காரணம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இன்னொரு முக்கிய கல்யாணம் இருக்கிறது என சொல்லக்கூடாது அல்லவா?
No comments:
Post a Comment