பணி ஓய்வு காலத்தில் வெய்யிலாளி இனமான என் சமுக மக்களின் கல்வியறிவும் சுய சிந்தனையும் வளர்க்கும் பொருட்டு என் சிந்தனையில் உருவான பகுத்தறிவு இயக்கமான ‘ஏழாம் அறிவு இயக்கம்’ என்னுடைய வலைதளமான www.thiru-rationqlism.blogspot.in ல் ஆரம்பித்தேன். இந்த வலைதளத்தை என் மகன் வினோத் உருவாக்கினான். இந்த வலைதளம் ஒரு சிறந்த சிந்தனைக் களமாக உலக மக்களிடம் சென்றடைந்தது. நூல்களை கணினிமூலம் அச்சிலேற்றி நூலாக்கி பின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறேன்
அதை தொடர்ந்து, வலைதளத்தில் உள்ள என் சுய சிந்தனைக் கருத்துகளை, ‘அறவழி சுய சிந்தனையுடன் மகிழ்ச்சியுடன் வாழும் வழிகள்’ எனும் நூலில் தொகுத்து வழங்கினேன்(2011).இந்நூல் பல தரப்பட்ட மக்களை சென்றடைந்தது.தமிழக அரசும் தன் நூலகங்களுக்கு இந்நூலை வாங்கிக் கொண்டது.
வலைதள (blogspot) பயன்பாடு மக்களிடம் அதிகம் இல்லை,இதை உணர்ந்த நான் முகநூல்,வாட்சப் மற்றும் ட்விட்டரில் தினமும் என் சிந்தனைகளை பதிவிடுகிறேன். எல்லாவிதமான வினாக்களுக்கும் என்னால் பதிலளிக்க முடிகிறது.
No comments:
Post a Comment