இந்தியாவில் 2500 ஆண்டுகளுக்கு முன் புத்தர் தோன்றி மக்கள் சிந்தனைக்கு வழி வகுத்தார். முதல் கடவுள் மறுப்பாளர் மட்டுமே..இதனை உணர்ந்த பார்ப்பனர்கள் புத்தரின் கொள்கையாளர்களை அப்போதைய மன்னர்களான மவுரிய மற்றும் குப்தர்கள் துணையோடு கிழக்காசிய நாடுகளுக்கு நாடு கடத்தி விட்டனர்.அதற்கு முன் பரவியிருந்த சத்ரியர்கள் புத்த மதத்தை தழுவ ஆரம்பித்தனர்.
புத்த மதமும் நாளடைவில் சிலை வழிபாடு என மூட பழக்க வழக்கங்கள் கொண்டதாக மாறின.1400 ஆண்டுகளுக்கு முன் முகமது நபி தோற்றுவித்த இஸ்லாம் மட்டுமே கட்டுப்பாடுகள் கொண்ட மதமாக உள்ளது.
1818 ல் தோன்றிய ஜெர்மனியின் காரல் மார்க்ஸ் தான் எழுதிய ‘மூலதனம்’ நூல் மூலம் உலகிற்கு மெய்ப்பியல்(pragmatism) கருத்துக்களையும்.பொது உடமை பொருண்மை(materialism) கருத்துக்களையும் மக்களுக்கு தந்து விட்டு சென்றார்.
1974-75 ல் பட்டப்படிப்பை முடித்து ஓராண்டு கழித்து (B.Ed) ஆசிரியர் பட்டயப்படிப்பை படிக்க நேர்ந்தது. அந்த படிப்பில் மனோதத்துவ இயல்(psychology) மற்றும் மானிட தத்துவம் (philosophy) எனக்கு பிடித்த பாடங்ளாக தோன்றியது. மனோதத்துவத்தில்,குழந்தை பருவம்,பெண்கள் மனோ தத்துவம், ஆண்கள் மனோ தத்துவம் எனவும் தத்துவத்தில் spiritualism, idealism, rationalism போன்ற பிரிவுகள் என் அறிவை விரிவாக்கியது.
1976ல் எனக்கு தமிழ் நாடு அரசின் (T.N.C.S.C) உணவுப் பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வேலை கிடைத்த பின் தான் நான் இந்த சமுகத்தில் எந்த நிலையில் உள்ளேன் என்பதை உணர முடிந்தது.
பள்ளிக்கூட நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் எல்லாரும் நண்பர்கள் எனும் கருத்தில் பழகினேன். எந்த சாதி மாணவர்களுக்கு என்ன குணம் இருக்கும் என தெரியாமல் பழகினேன்.அப்படியே கல்லூரியை விட்டு வெளியேறினேன். எனக்கு அரசுத்துறையில் வேலை கிடைத்த பின் தான் தெரிந்தது......நான் இந்த வேலைக்கு தகுதியற்றவன் என்று, இங்கிதமாக பழக வேண்டும்,நாசுக்காக பழகவேண்டும்.யதார்த்தமாக பேச வேண்டும்-இதை எந்த பள்ளி மற்றும் கல்லூரியிலும் சொல்லித் தரவில்லை.என் நண்பர்களுக்கும் இது பற்றி தெரியவில்லை. சாதிகளுக்கு ஏற்ற குணம்,குணத்துக்கு ஏற்ற கலாச்சாரம். எங்கள் ஊரில் எல்லாம் ஒரே சாதியைச் சார்ந்தவர்கள். மாறு பட்ட குணம் கொண்ட சாதிகளிடம் பழகியது இல்லை.
No comments:
Post a Comment