Monday, February 22, 2021

ஏ.அ-77

கல்யாண விருந்தை சைவம் அசைவம் கலந்த உணவாக இருக்க வேண்டும் என விரும்பினேன்.

ஒரு வேளை உணவில் கல்யாணத்தை நடத்தி முடிப்பது புத்திசாலித்தனம் என கணக்குப் போட்டேன்.

சம்பரதாயம் சடங்கு என தேவையில்லாத செலவினங்களை தவிர்க்க நினைத்தேன்.

கல்யாணம் என்பது ஆண் பெண் இருவரையும் இணைந்து வாழ குடும்பத்து பெரியவர்கள் நிகழ்தும் நிகழ்ச்சியாகும்.எனவே தாலி கட்டுவது ஒன்றே மெய்பியல் நிகழ்ச்சி என தீர்மானித்தேன்.

உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்தேன். சுமார் 2000 பேர் கூடினர்.காலை 10 மணியிலிருந்து 12க்குள் தாலி கட்டும் நிகழ்ச்சியை முடித்தேன்.

மஞ்சள் குங்குமத்தை தவிர்த்தேன்.

மாவிலை தோரணம் வாழை மரங்கள் கட்டவில்லை.

மேளதாளங்கள் இல்லை.

பூசணிக்காய் தேங்காய் உடைக்க வில்லை.

கற்பூரம் ஊதுவத்தி இல்லை.

12 மணியிலிருந்து 2 மணிக்குள் சைவம் மற்றும் அசைவம் தனித்தனியே அமரவைத்து உணவு பரிமாறும் நிகழ்ச்சி முடிந்தது.

இசை நிகழ்ச்சி,கலை நிகழ்ச்சியை தவிர்த்தேன்.

கல்யாணத்திற்கு காலையில் வந்தவர்கள் மாலை அவரவர் வீடுபோய் சேரும்படி பார்த்துக் கொண்டேன்.

தேவையில்லாத செலவினங்களை தவிர்த்து,ஆடம்பர உணவு வகைகளை பரிமாறினேன்.

கல்யாணம் இனிதே முடிந்தது

 

No comments: