Thursday, January 21, 2021

ஏ.அ-72

2014ம் ஆண்டு அகவை முதிர்ந்த தமிழறிஞர்விருதுக்கு தமிழக அரசு விளம்பரம் வெளியிட்டது. விளம்பரத்தில் உள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்து விண்ணப்பித்தேன்.அப்போது முதல்வர் ஜெயல லிதா,கடவுள் நம்பிக்கை கொண்டவர்.என்னை இவர் தேர்வு செய்யமாட்டார் என நினைத்து மனுவை மறந்து விட்டேன்.

2014 ல் தேர்வு செய்யப்பட்ட விருது பெறுவோர் பட்டியலில் என் பேர் இல்லை.எனக்கு ஏமாற்றமும் இல்லை.அதைப்பற்றி எண்ணமில்லாமல் இருந்தேன். 2015 ல் நான் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் நான் உறுப்பினர் ஆனேன்.அந்த ஆண்டு  எட்டையபுரத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா  நடந்தது.அந்த விழாவில் ‘பாரதி பணிச் செல்வன்’ எனும் விருது வழங்கப்பட்டது. விழா முடிந்ததும் குற்றாலத்தில் இருக்கும் புரவலர் நடராஜன் ஓய்வு இல்லத்தில் தங்கி இருந்த நேரத்தில் எனக்கு சென்னை தமிழ் வளர்ச்சித்துறையிலிருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. ‘அய்யா, நீங்கள் அடுத்த ஆண்டு(2016) ஜனவரி 16ம் நாள் பல்கலைக்கழக மண்டபத்தில் தங்களுக்கு அகவை முதிர்ந்த தமிழறிஞர் விருது,தமிழக முதல்வர் தலைமையில் வழங்கப்பட உள்ளது.நீங்கள் தவறாது விழாவில் கலந்து கொள்ள வேண்டும்’ என கூறினர்.

எனக்கு இந்த செய்தி ஆச்சர்யத்தை தந்தது.எப்படி நான் தேர்வு செய்யப்பட்டேன் என பின்னாளில் விசாரித்து தெரிந்து கொண்டேன்.ஐந்து துறைத்தலைவர்கள் இணைந்து விருது பெறுவோரை தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

அதாவது முதல்வர் தலைமையில் தேர்வு கமிட்டி சுதந்திரமாக செயல்பட்டது என்பது தெளிவாகிறது.

 

No comments: