Monday, January 18, 2021

ஏ.அ-71

 

மீண்டும் மருத்துவர் அய்யாவை அணுகினேன்.

அவர், ‘சமுக முன்னேற்ற சங்கத்தலைவர் திரு கோபால் அவர்களை அணுகுங்கள் என்றார்.அவரை சென்னையில் சென்று பார்த்தேன்.

அவர் உங்கள் ஊரில் திரு செம்மங்குடி துரையரசனை சென்று பாருங்கள் என்றார்.அவரை தேடிச்சென்றேன்.இன்முகத்துடன் என்னை வரவேற்று. ‘இந்நூல் சிறப்பாக உள்ளது,விழாவை சிறப்பாக நடத்துவோம்என்றார்.

ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்தோம்.2011ம் ஆண்டு திரு கோபால் மற்றும் திரு ஜெயபாஸ்கரன் அவர்களை நேரில் சென்று அழைத்தோம்.திரு செம்மங்குடி தலைமை தாங்க,திரு கோபால் நூலை வெளியிட,திரு ஜெயபாஸ்கரன் நூலை பெற்றுக்கொள்ள ,அனைவரும் நூலைப்பற்றிய உரை நிகழ்த்தினர்.விழா இனிதே நிறைவுற்றது.

அவ்வாண்டு தமிழக அரசு தன் நூலகங்களுக்கு நூலை பதிப்பகத்தாரிடமிருந்து வாங்க விளம்பறம் வெளியிட்டது.நூலை தபாலில் அனுப்பினேன்.என் நூலை ரூ 37 ஆயிரத்திற்கு 600 நூல்களை அரசாங்கம் வாங்கிக் கொண்டது.

2012ல் ,’அறவழி சுய சிந்தனையுடன் மகிழ்ச்சியுடன் வாழும் வழிகள்எனும் இரண்டாம் விரிவாக்க நூல் 320 பக்கம் கொண்டது நூலை எழுதி முடித்தேன்,அந்நூலை திரு செம்மங்குடியாரே வெளியிட இசைவு தந்தார்.2013 ல் இந்நூலையும் ரூபாய் 45 ஆயிரத்திற்கு 600 நூல்களை தன் நூலகங்களுக்கு அரசு வாங்கிக் கொண்டது.

தமிழ் நாட்டு நூலகங்களில் என் நூல்கள் வாசகர்கள் படித்து சிலர் போனில் தொடர்பு கொண்டு பாராட்டினர்.எனக்கு தலகாலே புரிய வில்லை அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.சாதாரண விவசாய கூலிக்குடும்பத்தில் படிப்பறிவற்ற பெற்றோர்களுக்கு 8ம் மகனாக  பிறந்த எனக்கு இந்த பாராட்டு பெறுமகிழ்ச்சியை தந்தது.

No comments: