திராவிடர் கழகத்தின் தலைமை இடமாக சென்னை வேப்பேரியில் இடம் வாங்கி அதை தனக்குப்பின் மணியம்மை மற்றும் வீரமணி இயக்கத்தை வழி நடத்துவர் என்று சொன்னார்.
பெரியார் தனது 95 வயதில் கூட மேடையேறி கடவுள் மறுப்பு கொள்கைகளை பரப்பினார்,ஆனால் வீரமணி தனது 60 வயதிலேயே பெரியார் கொள்கையான கடவுள் மறுப்பு கொள்கை போராட்டங்களை கைவிட்டு விட்டார். இன்று வீரமணிக்கு வயது 90 நெருங்குகிறது.இன்றளவும் இதே நிலைதான். பெரியார் திடலின் சொத்துக்களை பாது காக்கும் பொறுப்பை மட்டுமே வீரமணி செய்து கொண்டிருக்கின்றார். பகுத்தறிவு கொள்கைகளை சமுக பரவலாக்கும் போக்கை கைவிட்டு விட்டார்.
கடவுள் மறுப்பு சிந்தனையும் பகுத்தறிவு கொள்கைகளையும் ஒருசேர இன்றும் முகநூல், ட்விட்டர் மற்றும் வாட்சப்பின் மூலம் சமுக பரவலாக மாற்ற முயன்று வருகிறேன்.
2007 ஜூலையில் நான் பணி ஒய்வு பெற்றேன். பணிக்காலத்தில் எனக்கு ஏற்பட்ட மான அவமானங்களை அனுபவங்களாக ஏற்றுக் கொண்டேன். 2007 ஆகஸ்ட் வீட்டில் முடங்கினேன், என்ன செய்வதென்றே தெரியவில்லை.மாத சம்பளம் நின்று விட்டது, வருமானம் குறைந்து விட்டது.நான் பிஎட் பட்டம் பெற்றுள்ளதால் தனியார் பள்ளிகளில் வேலைத்தேடினேன், எனக்கு ஆங்கிலத்தை பிழையின்றி எழுத படிக்கதெரியும், எனவே அதை சொல்லி வேலைக் கேட்டேன்.பணியிடம் காலி இல்லை என சொல்லிவிட்டனர்.
No comments:
Post a Comment