பிள்ளைகள் படிப்பை முடித்து வேலை தேடிக் கொண்டிருந்தனர்.இந்நிலையில் என் அனுபவங்களை திரட்டி புத்தகம் எழுதலாம் என நினைத்தேன்.என் எண்ணங்களை எழுத்து வடிவில் கொண்டுவர முடியவில்லை,தமிழில் எழுத வரவில்லை,எழுதினாலும் படிக்க முடியவில்லை,நான் ஒரு பயனற்றவனாக இருப்பதை எண்ணி மனைவியிடம் சொல்லி கண்கலங்கி விட்டேன்.
‘நீங்கள் சொல்லுங்கள் நான் எழுதுகிறேன்’ என என் மனைவி சொன்னதைக்கேட்டு,என் பெரிய மகன் என்னிடம் இவ்வாறு கூறினான், ‘அப்பா,உங்களுக்கு ஒரு கம்யூட்டர் வாங்கித்தருகின்றேன்,அதில் உங்களுக்கு சொந்தமான ஒரு வலைதளத்தை உருவாக்கி தருகின்றேன்,நீங்கள் தமிழ் கீ போர்டை அச்சு அடிக்க பழகிக் கொள்ளுங்கள்’ என்றான். சரி என சொன்னவுடன் ஒரு கணினி வாங்கப்பட்டது,அதில் தமிழ் கீ போர்டை பதிவிறக்கம் செய்து கொடுத்தான்,இரண்டு நாளில் தமிழ் கைப்பழக்கம் வந்து விட்டது. www.thiru-rationalism.blogspot.in எனும் வலைதளம் உருவாக்கப்பட்டது.
வலைதளத்தில் கடவுள் மறுப்பு சிந்தனைகளையும், பகுத்தறிவு சிந்தனைகளையும் எழுத தொடங்கினேன்.
ஓரிரு நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டு, ‘உங்கள் எண்ணங்களை நூலாக வெளியிடுங்கள், எங்களைப் போன்றவர்களுக்கு படிக்க உதவும்’ என்றனர்.
No comments:
Post a Comment