Saturday, January 16, 2021

ஏ.அ-69

 

2010 ல் திருவள்ளூர் பெரிய குப்பத்திற்கு தமிழர் திருநாளாம் பொங்கல் நாளை கொண்டாட சீமான் அவர்களை வர வழைத்திருந்தனர்,நான் அவரை சந்தித்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.கணினி மூலம் அச்சடிக்கப்பட்ட கைப்பிரதியை அவரிடம் காண்பித்தேன்,வாங்கி புரட்டி பார்த்தார். நல்லா இருக்கு நான் ஒரு வாரத்தில் அணிந்துரை வழங்கி எனது உதவியாளரிடம் தெரிவிக்கிறேன் என்றார். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.

மருத்துவர் அய்யாவை திருவள்ளூர் வந்த போது சந்தித்தேன். நூல் நல்லா இருக்குய்யா,இப்படித்தான் நூல் இருக்க வேண்டும்என்றார். இரண்டு அல்லது மூன்று முறை சந்திக்கும் போதெல்லாம் இருய்யா சொல்கிறேன்என்பார். இதற்கிடையே சென்னை அண்ணா சாலையில் தேவனேய பாவாணர் நூலகத்தில்  ஒரு நாள் அய்யாவும்,தொல் திருமாவளவனும் இணைந்து ஒரு நிகழ்ச்சிக்கு வந்த போது இருவரையும் தனித்தனியே சந்தித்தேன்.

அப்போது திருமாவளவன், நூலை புரட்டி பார்த்து.நான் ஏழாம் அறிவு இயக்கம் பற்றி கேள்வி பட்டிருக்கின்றேன், ‘நூலுக்கு அணிந்துரை தருகிறேன் என சொல்லி ஒரு பிரதியை வாங்கிக் கொண்டார்.ஒரு கைபேசி எண்ணை கொடுத்தார்,அந்த எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இறுதியாக மருத்துவர் அய்யாவை தொடர்ந்து  தொடர்பு கொண்டேன்,ஒரு நாள் தன் உதவியாளர் மூலம் என்னை தொடர்பு கொண்டு ஒரு குறிப்பிட்ட முகவரியில் கவிஞர் ஜெயபாஸ்கரன் உள்ளார் அவரிடம் சென்று அணிந்துரை வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். அவருடைய  முகவரி திருவான்மியூரில் உள்ளது.அங்கே  சென்று அவரிடம்  அணிந்துரை பெற்று நூலை அச்சடிக்க உள்ளூர் அச்சகத்தை நாடினேன்.

No comments: