Sunday, January 10, 2021

ஏ.அ-68

 

ட்விட்டர்(twitter)லும் கணக்கை ஆரம்பித்தேன், ஆனால் அதில் நீண்ட பதிவுகள் போட இயலாது.சுருக்கமாக கருத்து பரிமாற்றங்களுக்கு மட்டுமே பயன் பட்டது.இதனால் உலகின் அரசியல் தலைவர்கள் அறிமுகம் கிடைத்தது.

2009 ல் , ‘அறவழி சுய சிந்தனையுடன் மகிழ்ச்சியுடன் வாழ ஒரு வழிகாட்டிஎனும் நூலை வடிவமைத்தேன் 100 பக்கங்கள் கொண்டது.

தமிழ் குடும்பங்களில் பின்பற்றும் சடங்கு சம்பரதாயங்களில் உள்ள மூட நம்ப்பிக்கைகளை களைவது எப்படி என வரையறுத்து இருப்பேன். பஞ்சாங்கம் பார்த்தலில் உள்ள தில்லுமுல்லு கணக்கு, ஒரு நாளைக்கு மணி நேரம் எப்படி கெட்டநேரமாகும்,அதற்கு ராகு காலம் எனவும் மற்றும் இன்னொரு 1 ½  மணிநேரத்தை எம கண்டம் எனவும் பஞ்சாங்கத்தில் எழுதப்பட்டதை உழைப்பாளிகளின் மனதில் மூட நம்பிக்கைகளை விதைத்து பார்ப்பனர்கள் பணம் பறித்து தங்கள் வாழ்வாதரத்தை பெருக்கும் நோக்கத்தை கிள்ளியேறியவேண்டும் என எழுதி இருப்பேன்.

இந்நூலை தமிழ் நாட்டில் உலாவரும் சமுக சிந்தனையாளர்களான மருத்துவர் ராமதாசு,

தொல் திருமாவளவன் மற்றும் சீமான் போன்றோரின் அணிந்துரை வாங்க ஆசைப்பட்டேன்.

No comments: