Wednesday, September 23, 2020

ஏ.அ-5

 

கூடுகளிலிருந்து நூலெடுத்து பட்டாடை உடுத்த வேண்டும்.

*கூலிக்கு வேலை செய்யக்கூடாது மாறாக தட்சணை பெற்று (காசை வெற்றிலையில் வைத்து தருவது) மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.

*உழைப்பாளிகள் பேசும் மொழியில் மந்திரம் சொல்லக்கூடாது,பார்ப்பனர்கள் பேசும் மொழியில் மந்திரம் உச்சரிக்க வேண்டும்.

*பஞ்சாங்கமே மூலதனம். உழைப்பாளிகள் உடுத்தும் முறையில் உடை உடுத்தக்  கூடாது,பஞ்சகச்சம் எனப்படும் வேட்டி இனப்பெருக்க உறுப்பை  மறைக்க வேண்டும். மேலாடை கூடாது.இவர்களை உழைப்பாளிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட மார்பின் குறுக்கே பட்டு(பூ நூல்) நூல் அணிய வேண்டும். இதுவே உலகமுழுவதும் பரவியிருக்கும் பார்ப்பனர்களின் உடை கலாச்சாரம்.

பிகார் மாநிலத்தில் தோன்றியவர் புத்தர்.இவருக்கு 30 வயதில் ஞானோதயம் வந்ததாக நாம் இளவயதில் புத்தகங்களில் படித்திருப்போம்.அதென்ன ஞானோதயம்?

ஞானோதயம் என்பது சுய சிந்தனை,பகுத்தறிவு.,அதன் உட்பொருள் என்ன என்று அப்போது பாடம் நடத்திய ஆசிரியரும் நமக்கு விளக்கியிருக்க மாட்டார்,நாமும் அதன் பொருளென்ன என ஆசிரியரை கேட்டிருக்க மாட்டோம்....இப்பொழுதும் எந்த மாணவனும் ஆசிரியரை கேட்டதாக தெரியவில்லை.

புத்தர் பிறந்தார், அரச முறைப்படி வளர்க்கப்பட்டார், குழந்தை பருவம், விடலைப்பருவம்(பதின்ம வயது) கடந்து மணமுடிக்கப்பட்டது,அதுவரை அவர் வெளி உலக மக்களோடு பழகியது இல்லை

No comments: