Thursday, January 21, 2021

ஏ.அ-72

2014ம் ஆண்டு அகவை முதிர்ந்த தமிழறிஞர்விருதுக்கு தமிழக அரசு விளம்பரம் வெளியிட்டது. விளம்பரத்தில் உள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்து விண்ணப்பித்தேன்.அப்போது முதல்வர் ஜெயல லிதா,கடவுள் நம்பிக்கை கொண்டவர்.என்னை இவர் தேர்வு செய்யமாட்டார் என நினைத்து மனுவை மறந்து விட்டேன்.

2014 ல் தேர்வு செய்யப்பட்ட விருது பெறுவோர் பட்டியலில் என் பேர் இல்லை.எனக்கு ஏமாற்றமும் இல்லை.அதைப்பற்றி எண்ணமில்லாமல் இருந்தேன். 2015 ல் நான் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் நான் உறுப்பினர் ஆனேன்.அந்த ஆண்டு  எட்டையபுரத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா  நடந்தது.அந்த விழாவில் ‘பாரதி பணிச் செல்வன்’ எனும் விருது வழங்கப்பட்டது. விழா முடிந்ததும் குற்றாலத்தில் இருக்கும் புரவலர் நடராஜன் ஓய்வு இல்லத்தில் தங்கி இருந்த நேரத்தில் எனக்கு சென்னை தமிழ் வளர்ச்சித்துறையிலிருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. ‘அய்யா, நீங்கள் அடுத்த ஆண்டு(2016) ஜனவரி 16ம் நாள் பல்கலைக்கழக மண்டபத்தில் தங்களுக்கு அகவை முதிர்ந்த தமிழறிஞர் விருது,தமிழக முதல்வர் தலைமையில் வழங்கப்பட உள்ளது.நீங்கள் தவறாது விழாவில் கலந்து கொள்ள வேண்டும்’ என கூறினர்.

எனக்கு இந்த செய்தி ஆச்சர்யத்தை தந்தது.எப்படி நான் தேர்வு செய்யப்பட்டேன் என பின்னாளில் விசாரித்து தெரிந்து கொண்டேன்.ஐந்து துறைத்தலைவர்கள் இணைந்து விருது பெறுவோரை தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

அதாவது முதல்வர் தலைமையில் தேர்வு கமிட்டி சுதந்திரமாக செயல்பட்டது என்பது தெளிவாகிறது.

 

Monday, January 18, 2021

ஏ.அ-71

 

மீண்டும் மருத்துவர் அய்யாவை அணுகினேன்.

அவர், ‘சமுக முன்னேற்ற சங்கத்தலைவர் திரு கோபால் அவர்களை அணுகுங்கள் என்றார்.அவரை சென்னையில் சென்று பார்த்தேன்.

அவர் உங்கள் ஊரில் திரு செம்மங்குடி துரையரசனை சென்று பாருங்கள் என்றார்.அவரை தேடிச்சென்றேன்.இன்முகத்துடன் என்னை வரவேற்று. ‘இந்நூல் சிறப்பாக உள்ளது,விழாவை சிறப்பாக நடத்துவோம்என்றார்.

ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்தோம்.2011ம் ஆண்டு திரு கோபால் மற்றும் திரு ஜெயபாஸ்கரன் அவர்களை நேரில் சென்று அழைத்தோம்.திரு செம்மங்குடி தலைமை தாங்க,திரு கோபால் நூலை வெளியிட,திரு ஜெயபாஸ்கரன் நூலை பெற்றுக்கொள்ள ,அனைவரும் நூலைப்பற்றிய உரை நிகழ்த்தினர்.விழா இனிதே நிறைவுற்றது.

அவ்வாண்டு தமிழக அரசு தன் நூலகங்களுக்கு நூலை பதிப்பகத்தாரிடமிருந்து வாங்க விளம்பறம் வெளியிட்டது.நூலை தபாலில் அனுப்பினேன்.என் நூலை ரூ 37 ஆயிரத்திற்கு 600 நூல்களை அரசாங்கம் வாங்கிக் கொண்டது.

2012ல் ,’அறவழி சுய சிந்தனையுடன் மகிழ்ச்சியுடன் வாழும் வழிகள்எனும் இரண்டாம் விரிவாக்க நூல் 320 பக்கம் கொண்டது நூலை எழுதி முடித்தேன்,அந்நூலை திரு செம்மங்குடியாரே வெளியிட இசைவு தந்தார்.2013 ல் இந்நூலையும் ரூபாய் 45 ஆயிரத்திற்கு 600 நூல்களை தன் நூலகங்களுக்கு அரசு வாங்கிக் கொண்டது.

தமிழ் நாட்டு நூலகங்களில் என் நூல்கள் வாசகர்கள் படித்து சிலர் போனில் தொடர்பு கொண்டு பாராட்டினர்.எனக்கு தலகாலே புரிய வில்லை அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.சாதாரண விவசாய கூலிக்குடும்பத்தில் படிப்பறிவற்ற பெற்றோர்களுக்கு 8ம் மகனாக  பிறந்த எனக்கு இந்த பாராட்டு பெறுமகிழ்ச்சியை தந்தது.

Sunday, January 17, 2021

ஏ.அ-70

 

திருவள்ளூரில் யாரும் நூல் அச்சடிப்பதில்லை, நீங்கள் சென்னைக்குத்தான் செல்ல வேண்டும் என ஒரு அச்சக உரிமையாளர் தெரிவித்தார்.சென்னை உயர்நீதிமன்றம் எதிரே உள்ள ஒரு ஜெராக்சு கடையில் வேலை செய்யும் ஒரு நபரை குறிப்பிட்டார்.அந்த நபரின் அடையாளம் கண்டு நூல் அச்சடிக்க வேண்டும் என கூறினேன். அதற்கு அவர் என் கைப்பிரதியைப் பார்த்துவிட்டு, ‘இதை இப்படியே அச்சிலேற்ற முடியாது சார்.இதை பேஜ் மேக்கர்செய்ய வேண்டும் என்றார்.

பேஜ் மேக்கர் செய்யக்கூடிய ஒரு பெண்ணை எனக்கு அறிமுகம் செய்தார்,அவருக்கு வியாசர்பாடியில் வீடு.அவர் வீட்டை தேடி போனேன்,கைப்பிரதியை வாங்கிக்கொண்டார், ‘ஒரு பக்கத்துக்கு ரூபாய் 10 ஆகும் சார்என்றார். சரி என சொல்லிவிட்டு ஒரு வாரம் கழித்து சென்று அந்த நூலை பெற்று வந்தேன்.அதை மீண்டும் ,ஜெராக்சு கடையில் வேலை பார்ப்பவரிடம் தந்தேன். அவர், ‘இதை ஒரு அச்சக உரிமையாளரிடம் தந்து நான் நூலாக்கித்தருகிறேன் சார்,இதற்கு பக்கத்திற்கு ரூபாய் 25 ஆகும் சார் என்றார்.

மேலும் அவர், ‘இந்த நூலுக்கு மேல் அட்டை வடிவமைக்க ஒரு தொழில் நுட்பம் தெரிந்தவரை அணுக வேண்டும் என்றார்.

 அதற்கு அந்த பேஜ் மேக்கர் செய்த பெண்ணையே பாருங்க சார்அந்த பெண் அவருக்கு தெரிந்த ஒரு அட்டையை தேர்வு செய்து தந்தார்.மீண்டும் அந்த நூலை ஜெராக்சு கடையில் வேலை பார்ப்பவரிடம் தந்தேன். நூல் தயாராகி விட்டது.

இந்த நூலை வெளியிட ஒரு பெரிய அறிஞர் தலமையில் நிகழ்த்த வேண்டும் என்றனர்.

Saturday, January 16, 2021

ஏ.அ-69

 

2010 ல் திருவள்ளூர் பெரிய குப்பத்திற்கு தமிழர் திருநாளாம் பொங்கல் நாளை கொண்டாட சீமான் அவர்களை வர வழைத்திருந்தனர்,நான் அவரை சந்தித்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.கணினி மூலம் அச்சடிக்கப்பட்ட கைப்பிரதியை அவரிடம் காண்பித்தேன்,வாங்கி புரட்டி பார்த்தார். நல்லா இருக்கு நான் ஒரு வாரத்தில் அணிந்துரை வழங்கி எனது உதவியாளரிடம் தெரிவிக்கிறேன் என்றார். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.

மருத்துவர் அய்யாவை திருவள்ளூர் வந்த போது சந்தித்தேன். நூல் நல்லா இருக்குய்யா,இப்படித்தான் நூல் இருக்க வேண்டும்என்றார். இரண்டு அல்லது மூன்று முறை சந்திக்கும் போதெல்லாம் இருய்யா சொல்கிறேன்என்பார். இதற்கிடையே சென்னை அண்ணா சாலையில் தேவனேய பாவாணர் நூலகத்தில்  ஒரு நாள் அய்யாவும்,தொல் திருமாவளவனும் இணைந்து ஒரு நிகழ்ச்சிக்கு வந்த போது இருவரையும் தனித்தனியே சந்தித்தேன்.

அப்போது திருமாவளவன், நூலை புரட்டி பார்த்து.நான் ஏழாம் அறிவு இயக்கம் பற்றி கேள்வி பட்டிருக்கின்றேன், ‘நூலுக்கு அணிந்துரை தருகிறேன் என சொல்லி ஒரு பிரதியை வாங்கிக் கொண்டார்.ஒரு கைபேசி எண்ணை கொடுத்தார்,அந்த எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இறுதியாக மருத்துவர் அய்யாவை தொடர்ந்து  தொடர்பு கொண்டேன்,ஒரு நாள் தன் உதவியாளர் மூலம் என்னை தொடர்பு கொண்டு ஒரு குறிப்பிட்ட முகவரியில் கவிஞர் ஜெயபாஸ்கரன் உள்ளார் அவரிடம் சென்று அணிந்துரை வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். அவருடைய  முகவரி திருவான்மியூரில் உள்ளது.அங்கே  சென்று அவரிடம்  அணிந்துரை பெற்று நூலை அச்சடிக்க உள்ளூர் அச்சகத்தை நாடினேன்.