Wednesday, December 11, 2013

ஏழாம் அறிவு இயக்ககம்


தாய்த்தந்தையர் கோயில் மற்றும் கல்வெட்டுத் திறப்பு அழைப்பிதழ்


அன்புடையீர் வணக்கம்!

நிகழும் திருவள்ளுவர் ஆண்டு2044 கார்த்திகை 20-ம் நாள் (06.12.13) எமது கண்கண்ட தெய்வங்களான தாய்க்கு40-ம் ஆண்டு நினைவு நாளும்,எமது தந்தைக்கு 20-ம் ஆண்டு நினைவு நாளும் அனுசரிக்கப்படுவதால்,நான் பிறந்த மண்ணில் நான் நிறுவிய ஏழாம் அறிவு இயக்ககம்,இயக்கத்தின் சில முக்கிய குறிக்கோள்கள் அடங்கிய கல்வெட்டு திறக்கப்பட உள்ளது. அவ்வமயம் தாங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சினை சிறப்பிக்க வேண்டுகிறேன்.

கல்வெட்டுத் திறப்பாளர்,

முத்தமிழ் புலவரும்,இளையபல்லவன் கருணாகரத்தொண்டைமான்

என்கிற வரலாற்று காப்பிய நூலாசிரியருமான

திரு செம்மங்குடி துரையரசன் அவர்கள் இசைவு தந்துள்ளனர்



முன்னிலை: பேராசிரியர் திருமதி மங்கலம்துரையரசன்,MA.Bed,

புலவர் நாகலிங்கம், MABEd,உதவித் தலைமைப்பேராசிரியர்,

அரசு மேல்நிலைப்பள்ளி,பூண்டி

புலவர் சேகர்MABEd,தலைமை ஆசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி ஏகாட்டூர்

திரு. ஆ.யுகாபதி,கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர்

, மற்றும் கள்ளூர் கிராம மக்கள்

விழா நாள்: 06.12.13 காலை 11 மணி அளவில்.

இடம் : தெய்வத்திரு படைவீட்டு வன்னியர்,

தெய்வத்திருமதி கண்ணம்மா படைவீடு

இணையரின் நினைவு இல்லம் மற்றும்

ஏழாம் அறிவு இயக்ககம்

கள்ளூர் கிராமம்

ஆரணி வழி-கும்மிடிப்பூண்டி வட்டம்



                                                                     தங்கள் வரவை அன்புடன் எதிர் பார்க்கும்

                                                                                 புதுமுறைச்சிந்தனைச் சிற்பி

                                                                                    படைவீடு திருவேங்கடம்

                                                                                   (நிறுவனர் –ஏழாம் அறிவு இயக்கம்)

                                                                                              ராசாத்தி திருவேங்கடம்

                                                                                  திரு.வினோத் (விமானப்பொறியாளர்)

                                                                                                திருமதி சுதாவினோத் B.Com

                                                                         திரு. வசந்த் (இணைய தளப்பொறியாளர்)

கல்வெட்டில் காணலாம்,

* உலகைப்படைத்தது கடவுளாக இருக்கட்டும்

அதைப்பூட்டிவைத்து பூஜை செய்தால் உன்

பேச்சை கேட்குமா?...

* கோயிலில் உண்டியல் கூடாது…

* கடவுளைவணங்கும் உழைப்பாளிக்கும்

கடவுளுக்கும் மத இடைத்தரகர்கள் கூடாது…

இதுபோன்ற சிந்தனைகள் பல.. (visit:www.thiru-rationalism.blogspot.in)

Tuesday, September 10, 2013

மூட நம்பிக்கை ஒழிப்பு முடியுமா?



                     மூட நம்பிக்கை ஒழிப்பு முடியுமா?
மக்கள் சமுகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள்,சமுதாய மக்களின் கல்வியில்-கல்வி மேம்பாட்டில் பகுத்தறிவாத சிந்தனையில் நாட்டமுள்ளவர்கள் நாட்டின் தலைவராக வர முயற்சிக்க வேண்டும். அந்த சிந்தனை உள்ள அரசியல் தலைவர்களையே தேர்வு செய்ய வேண்டும்.

இதுபோன்ற சிந்தனை உள்ள மக்கள் வாழும் நாடுகளில் மட்டுமே புரட்சிகள் தோன்றும்.மக்களின் நம்பிக்கை என்பது மன ஒழுக்கம் சார்ந்தது.மக்கள் கூட்டத்துக்கு அல்லது பல தரப்பு மக்கள் கொண்ட  மாநிலத்துக்கு அல்லது ஒரு நாட்டுக்கு தலைவனாகும் தகுதி அடைந்தாலே பின்பு அவனுடைய வாரிசு வம்சாவழிகளை,மக்கள் புரட்சி வெடித்தாலொழிய தலைவர் பதவியில் இருந்து இரக்க அல்லது இரங்க முடியாது.

எப்பொழுதுமே, எங்குமே  அதிகார மையம் அல்லது வலிமை மிக்க தலைவனைச் சுற்றி முகத்துதி செய்பவர்ளும் அதிகார இடைத்தரகர்களும் (POWER BROAKERS) உருவாகி விடுவார்கள்.அறிவாற்றலும் சுய சிந்தனை மிக்க தலைவனால் மட்டுமே இவர்களை அடையாளம் காண்டு களையெடுக்க முடியும்.

அரசனையோ அல்லது மக்கள் தலைவனையோ கடவுளுக்கு சமமாக வைத்து ஆரதிக்கும் போக்கினை கண்டிப்புடன் களைந்தால் ஒழிய அதிகார இடைத்தரகர்களை ஒழிக்க முடியாது.கடந்த கால உலக  வரலாற்றை படிக்கும் போது இப்படியெல்லாம் அதிசயங்கள் இரண்டு நாடுகளில் நடந்துள்ளது.(ரஷ்யா மற்றும் சைனா)அந்த இரண்டு நாடுகளுமே வல்லரசுகளாகிவிட்டது.கியூபா,வட கொரியா போன்ற சிறு சிறு நாடுகளும் தன்னிறைவு அடைந்த நாடுகளாக திகழ்கின்றன.

மூட நம்பிக்கையே மக்கள் தலைவனிடம் இருந்துதான் ஆரம்ப மாகிறது.முட்டாள் மக்களைத்தானே ஒருவன் ஆள முடியும்?

மக்களை புரட்சிப்பாதைக்கு வழி நடத்திச்செல்ல உலகில் முதன்முதலில் கொள்கையை வகுத்தவர் காரல்மார்க்சு. அந்த கொள்கைக்கு வடிவம் கொடுத்தவர் ரஷ்ய புரட்சியாளர் லெனின். அவரைத்தொடர்ந்து சைனாவின் மாசே துங் மாபெரும் மக்கள் தலைவராக திகழ்ந்தார். இந்த இருவரும் மக்கள் இயக்கத்தைக்க கொண்டு உலகின் மாபெரும் வல்லரசு நாடுகளை  உருவாக்கினர். அங்கேயும் மக்கள் மூட நம்கிக்கையோடு வாழ்க்கை நடத்துகின்றனர். ஆனால் அரசங்கம் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

இந்தியாவில் மேற்கு வங்கதில் ஒரு தலைமுறைக்கு மேல் கம்யூனிச ஆட்சி இருந்தது.மறைந்த திரு சோதி பாசு சுமார் 27 ஆண்டுகளாக அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தார். காரல் மார்க்சுவின் கொள்கைகளை பின்பற்றுபவர் என பலராலும் பேசப்பட்டவர். ஆனால் அவர் மட்டுமே பகுத்தறிவாதியாக வாழ்ந்தார்.அவர் மாநிலத்து மக்களை திருத்த முயற்சிக்கவில்லை.அடிப்படை கல்வி அமைப்பை மாற்ற முயற்சிக்கவில்லை.மூட நம்பிக்கையின் மூல வித்துவான கல்கத்தா காளி கோயிலை மூட முயற்சிக்கவில்லை.
அதேபோன்று கேரளாவிலும் ஒரு தலைமுறைக்குமேல் கம்யூனிச ஆட்சி அந்த மாநிலத்தை ஆண்டது.ஆனால் அங்குதான் பேய் விரட்டு,பில்லி சூன்யம் மந்திர மயாம் போன்ற கருப்புவித்தை(black magic)தொழில் கொடிகட்டிப் பறக்கிறது.

இந்திய கம்யூனிச வாதிகள் எல்லாம் வயிற்று பிழைப்பாளிகள்.போலிப்பொதுவுடமை வாதிகள். 

மூட நம்பிக்கை ஒழிப்பு என்பது மூட நம்பிக்கை ஒழிப்பாளர் தனது வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.
எது மூட நம்பிக்கை?வாழ்க்கைநடத்த வாழ்க்கையில் என்னென்ன நம்பிக்கைகள் அவசியம் என குடும்பத்தலைவன் மற்றும் குடும்பத்தலைவி உணர வேண்டும்.


உலகில் ஒவ்வொரு குடும்பத் தலைவனுக்கும் உறவுகள் நண்பர்கள் அமைவார்கள்.அவற்றுள்
1-நன்கு படித்த சுய சிந்தனை உள்ள குடும்பத்தலைவனும் உண்டு.
2- படிக்காத சுய சிந்தனை உள்ள தலைவனும் உண்டு.
3- படித்தும், படிக்காத, பிறர்  பேச்சைக் கேட்டு குடும்பம் நடத்தும் குடும்பத் தலைவர்களும் உண்டு.

இதில் மூன்றாவதாக குறிப்பிடப்பட்டுள்ள குடும்பங்கள் தான் உலகில் 99% சதவிகித மக்கள் வாழ்கின்றனர்.இந்தவகையான குடும்பங்களில் இருந்துதான் மக்கள் தலைவனும் உருவாகின்றனர். இந்த மாதிரியான தலைவர்கள் நாட்டை ஆளும்போது மூட நம்பிக்கைகளை மக்களிடமிருந்து ஒழிக்க முடியாது.

சமிபத்தில் மகாராட்ரத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
உடனே சில மாநில அரசுகள் மூட நம்பிக்கை பழக்கங்களான பில்லி சூன்யம், மந்திரம், குட்டிச்சாத்தான் போன்று பயன்படுத்தும் அல்லது விளம்பரப்படுத்தி பாமர மக்களை மயக்கி பணம் பண்ணும் முறைகளை சட்டம் போட்டு தடுக்க ஆசைப்பட்டது.

சட்டத்தினால் மக்களின் மூடபழக்கங்களை திருத்தமுடியாது.பழக்கங்கள் என்பது தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்படுவது. இதற்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?
1-அடிப்படை ஆரம்பக்கல்வியை பொருளியல் (pragmatism)கல்விக்கு மாற்ற அரசு முன் வரவேண்டும்.
2-மக்கள்  கோயிலுக்கு சென்று கடவுளை வழிப்பட்டால் துன்பங்கள் நீங்கும் எனும் பொய்ப்பிரச்சாரத்தை தடைசெய்யப்பட வேண்டும்.
3-பொது வழிப்பாட்டுத் தலங்களில் மக்கள் கூடுவதை தடைசெய்யப்படவேண்டும்.
4-முக்கியமாக கோயில்களில் காணிக்கை செலுத்தும் பழக்கமான தலைமயிரை மழிப்பது,பொங்கலிட்டு மிருக பலி செய்வது,கோயில் குளத்தில் குளிப்பது,உண்டியல் மூலம் காசு காணிக்கை யாக்குவது போன்ற எல்லாம்  மூட நம்பிக்கைகள் என மக்களிடத்தில் அரசு பிரச்சாரம் செய்யவேண்டும். .இதற்கு மாநில அரசுகள் சட்டமியற்றவேண்டும். செய்யுமா இந்த அரசு?             
          

Sunday, July 21, 2013

காக்கா நம்பிக்கை


                  காக்கா நம்பிக்கை

இன்றய (20.07.13) செய்தியில் பெங்களூரில் ஒரு பொறியியலாளர் (H.A.L) தன் அலுவலகத்துக்கு செல்ல ஆயத்தமானார். வீட்டிற்கு வெளியே நின்ற போது ஒரு காகம் தன் தலையில் கொத்திவிட்டு சென்றது. இது என்ன அபசமுணமாக இருக்குமோ என தன் தாய் இடம் கேட்டார். ‘அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது நீ வேலைக்குப்போ’என தன் மகனை சமாதானப்படுத்தி வேலைக்கு அனுப்பினார்.

மகனும் அரை மனதோடு வேலைக்கு சென்றார்.தனக்கு ஏதாவது கெடுதல் நடக்குமோ என அஞ்சியவர்க்கு,மீண்டும் அதிர்ச்சி. அலுவலகத்திற்கு நுழையும்முன் வாயிலறுகே மீண்டும் ஒரு காகம் தன் தலையில் கொத்திச்சென்றது. தனக்கு கெடுதல் நெறுங்கிவிட்டது என பொறியியலாளரின் மனது ஆழமாக சிந்திக்க ஆரம்பித்தது. இதன் விளைவு.வீடு திரும்பிய பொறியியலாளர் அம்மாவிடம், ‘அம்மா எனக்கு கெடுதல் வரும் என தோன்றுகிறது காகம் இரண்டு முறை என் தலையில் கொத்திவிட்டதே! இது அப சகுணம் மட்டுமல்ல.இனி இவ்வுலகில் வாழ்வது கூடாது’ என வீட்டின் உள்ளே போனவர் தற்கொலை புரிந்து கொண்டுவிட்டார். 
இதற்கு யாரை நொந்துகொள்வது?
ஒரு பொறியியலாளர் உருவாவதற்கு அவர் குடும்பம் எவ்வளவு சிரமப்பட்டிருக்கும்?
அவருக்கு கல்வி அறிவைப்புகட்டிய பாடத்திட்டங்களில் உள்ள குறைபாடுதான் இதற்கு காரணம் என தெரியவில்லையா?
பொறியியல் பட்டதாரிக்கு அறிவியல் ரீதியிலான கல்வி அறிவைப்பபுகட்ட இந்த அரசு தவறிவிட்டது.
மதம்  ஏற்படுத்திய மூட நம்பிக்கை இது என தோன்றவில்லையா?
காக்காவை சனியனுக்கு ஒப்பிட்டு கதைகள் புனையப்பட்டுள்ளது தான் இதற்கு கரணம் என புரியவில்லையா? மேலும் அறிவியல் பூர்வமான விலங்கின கோட்பாடுகளை மாணவர்களுக்கு சொல்லித்தர நம் சமுதாயம் தவறிவிட்டது.காகா உட்பட எந்த பறவை இனமாகட்டும் கோழி கூட தான் முட்டைகளை பாதுகாக்கும் இடத்துக்கோ அல்லது குஞ்சுகள் இருக்கும் இடத்துக்கோ மனிதர்களோ அல்லது பிற இன விலங்குகளோ நெறுங்க விடாது.இது விலங்கினங்களின் தாய்பாசம்.அதன் விளைவுதான் காகா அந்த பொறியியலாளரின் தலையில் குத்தியது. இங்கே,இதற்கு அபசகுணம் எங்கே வந்தது?   

Sunday, July 14, 2013

தர்மபுரி தமிழகம்



                           தர்மபுரி தமிழகம்

இன்றைக்கு தலை தெரிக்கும் பிரச்சனையாக சாதி கலப்பு திருமணத்தை  ஊதி பெரிதாக்கும் முயற்சியில் அரசும் மற்றும் செய்தி ஊடகங்களான  தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்கள் வரிந்து கட்டி வாசிக்கின்றன. பேர்தான் தமிழகம்.ஆனால் தமிழ்பேசும் இனங்களுக்கு இங்கு தனித்தன்மை அல்லது ஆளுமை இல்லை.இதனை இப்போதைய மக்களுக்கு தெளிவு படுத்தும் பொருட்டு சில தன்னார்வ அமைப்புகள் சில பொதுக் கூட்டங்களும் ஊர்வலங்கள் நடத்தி புரியவைக்க ஆசைப்படுகின்றன.

இலவசங்களுக்கு ஏங்கும் தமிழினங்களுக்கு இதுவெல்லாம் புரிய சில காலங்கள் ஆகும்.சில சமுக அமைப்புகளும் தற்போதய அரசும் பாலை மக்களுக்கு(ஆதி தமிழர்களுக்கு)கல்வி மற்றும் வேலை வாய்புகளை உருவாக்கி தருகின்றன.இதனை இன்னமும் சரியாக பயன்படுத்திக் கொள்ள அல்லது பாலை மக்களுக்கு வழிகாட்ட எந்த சமுக அமைப்புகளோ அல்லது தலித்துகளுக்கு தாங்கள் தான் பாதுகாவலர் என கூறிக்கொள்ளும் அரசியல் கட்சிகளோ முன்வரவில்லை என்பது தான் உண்மை.

இதற்கு முந்தய அரசும் சரி அல்லது இப்போதைய அரசும் சரி தொடர்ந்து செய்யும் தவறுகளை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

1-முதலில் அரசு தன் குழந்தைகளுக்கு அளிக்கும் கல்வி பாடத்திட்டத்தை அனைவருக்கும் உண்டான கட்டாய சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல் படுத்த அரசு முன் வரவேண்டும்.

2-தரமான மற்றும் பொது அறிவு,ஆழ்ந்த கணக்கு திறன்,மற்றும்  அறிவியல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே பணியிலமர்த்த வேண்டும்.

3-கட்டாய சமச்சீர் கல்வி என்பது +2 வரையில் இலவசமாகவே அனைவருக்கும் (சாதி,மதம்,பணக்காரன்,ஏழை போன்ற வேறுபாடின்றி) அளிக்க அரசு முன்வரவேண்டும்.

4-இட ஒதுக்கீடு தேவை, (இது சாதிவாரியாக இதுதான் பொருளாதார மற்றும் கல்வி போன்ற அம்சங்களை - தீர் மானிக்கும் கருவியாக உள்ளது.)அதை மேல் படிப்புக்கும் வேலை வாய்ப்புக்கும் பயன் படுத்திக் கொள்ளலாம்.சமச்சீர் சமுதாயம் அமைக்க இதுவே உதவும்.

5- மக்களை முன்னேற்றும் நோக்கம் யாருக்கு அமையும் என்றால் தன் மொழி சார்ந்த அல்லது இனம் சார்ந்த தலைவர்களால் மட்டுமே களங்கம் இல்லா ஆட்சியைத் தர முடியும்.அதைப்போன்றொரு தலைவர்களை தேர்வு செய்வதில் தமினங்களுக்கு இன்றும் தடுமாற்றமே.காரணம் தமிழ் சமுதாயம் படிப்பறிவும் சுய சிந்தனையும் இழந்து பல நூற்றாண்டு களாகிவிட்டது.

இதனை சரியாக உணர்ந்து கொண்ட தமிழக திராவிடத் தலைவர்கள்(தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னடத்தை தாய் மொழியாக கொண்டவர்கள்)இலவசங்களை காட்டி தமிழ் பேசும் இனங்களை தமிழகத்தின் அகதிகள் நிலைக்கு தள்ளிவிட்டனர். இன்றும் இந்நிலை நீடிப்பதுதான் வேதனை அளிக்கிறது. போலி தேசிய நீரோட்டமே தமிழகத்தில் உலா வருகிறது.

6- தமிழ் இன வளர்ச்சியில் அக்கறை உள்ள தலைவர்கள் என்ன செய்ய வேண்டும்? குழந்தைகளின் ஆரம்ப கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.20குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியை,சுத்தமான கழிப்பிடவசதி,சத்தான உணவு மற்றும் மருத்துவ வசதி என அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தவேண்டும்.

7-6-ம் வகுப்பிலிருந்து +2 வரையில் மாணவர்களுக்கு,நமது சமுக அமைப்பில் எது தவறு? எது அறவழி? என விளக்கும் அல்லது விளங்கும் வகையில் பாடத்திட்டங்களை மாற்றி யமைக்க வேண்டும்.குறிப்பாக சட்டம் பற்றியும் சட்ட மீறல் பற்றியும் அதன் விளைவுகளை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் விதத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும்.

இளவயதில் எது தவறு? எது சரி ? என புரியமல் மாணவர்களை வளர்த்து பின் 100 மாணவர்களில் ஒருவரை பட்டப்படிப்பிற்கு பின் சட்டம் பற்றி தெரிந்துகொள்ள வைக்கும் பாடத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.சட்டம் படித்து பாமரனிடம் பணம் பிடுங்கும் தொழிலான வழக்குரைஞர் தொழிலை ஒழிக்க வேண்டும்.

இதுபோன்ற ஒரு பாடத்திட்டமே சமுகத்தில் குற்றவாளிகள் உருவாக தடுக்க உதவும்.

8- 8-ம் வகுப்பிலிருந்து +2 வரை உள்ள மாணவர்களுக்கு விரசமில்லா பாலியல் கல்வி அல்லது வளர்ச்சி அடைந்த ஆண் பெண் இன உருப்புக்களின் செயல்பாடுகளால்  ஏற்படும் முறையற்ற அல்லது பதின்ம வயதில் ஏற்படும் மோகங்களை களைய தகுந்த ஆசிரியர்களை கொண்டு தகுந்த பயிற்சி அளிக்க அரசு முன்வரவேண்டும்.இதன் வரம்பு மீறல்களுக்கு என்ன தண்டனை என மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் விதத்தில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.

9-தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அரசியல் வாதிகளில் சாதியத்தலைவர்கள் உருவாகிவிட்டனர். பாதிக்கப்பட்ட,ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய,மிகவும் பின்தங்கிய மற்றும் முன்னேறிய சாதியத்தலைவர்கள் உள்ளனர்.குறிப்பாக முன்னேறிய சாதியத்தலைவர்கள் சாதியைப்பற்றி பேசக்கூடாது இதனால் பிரச்சினைகள் வரும் என அவ்வப்போது மேடைகளில் பேசுவார்கள் இதன் பொருள் என்ன வெனில் பிற தாழ்த்தப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட இன மக்கள் விழிப்புணர்வு அடைந்து இதனால் தங்கள் இன பிழைப்புக்கே பாதகம் ஏற்பட்டுவிடும் என்கிற அச்சம்தான்.இதனை சரியாக புரிந்து கொள்ள முடியாத பாதிக்கப்பட்ட மக்கள் அத்தகையத் தலைவர்களின் பேச்சிற்கே தாளம் போடுவர்.

10-சாதியத் தலைவர்கள் தங்கள் இன பிள்ளைகளை படிக்கவேண்டிய காலத்தில் படிக்கவேண்டும்,வேலைத்தேடி பெற்றவர்களுக்கு உருதுணையாக இருக்கவேண்டும் பின் பெற்றவர்களின் சம்மதத்தோடு திருமணம் புரியவேண்டும்(காதலோ அல்லது பெற்றவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டதோ எதுவாகிலும்) பெத்தவர்கள் இணக்கம் மிக முக்கியம் என ஓட்டுக்கேட்கும் மேடைகளில் இதனையும் அறிவிக்கவேண்டும்.
எதிர்காலத்தில் தர்மபுரி போன்ற கலவரங்களை தடுக்க இந்த யோசனைகள் உருதுணையாக இருக்கும் 

                   

Tuesday, June 25, 2013

கடவுள் மனிதர்களை சாகடிக்கிறர்,பூசாரியால் கடவுளுக்கு பூசை செய்ய முடியவில்லை



                 கடவுள் மனிதர்களை சாகடிக்கிறார்
        பூசாரியால் கடவுளுக்கு பூசை செய்ய முடியவில்லை
கடந்த ஒருவாரமாக(சூன் -16முதல்)இமயமலைப்பகுதியில்(உத்தரகாண்ட்) தொடர்மழை பெய்கிறது.பெய்கிறது என்பதை விட வானம் இடிந்து விழுந்துவிட்டது என்றே கூறலாம்.அப்படி ஒரு மழை,வெள்ளப்பெருக்கு.ஆற்றங்கரை ஓரம் கட்டப்பட்ட பல அடுக்கு தங்கும் விடுதிகள் (சுமார் 90 ?) வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டன.அதில் தங்கியவர்கள் கதி என்ன?

இந்த இயற்கைச் சீற்றம் ஆண்டுதோறும் நடப்பதுதான்.30அல்லது 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை (பொதுவாக சூன் மாதங்களில்)கட்டுக்கடங்காத காட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். பெரும்பாலும் வான் மழையால் இந்த வெள்ளபெருக்கு என சிலர் நினைப்பது தவறு.சூன் மாதங்களில் பூமியின் வட கோளத்தை சூரியனின் வெப்பக்கதிர்கள் தாக்குவதன் விளைவு இமயமலையின் பனி உருகி வெள்ளக்காடாக பெருக்கெடுக்கும்.இது ஆண்டுதோறும் நடக்கும் இயற்கை நிகழ்ச்சி.

சுற்றுலாவாசிகள்(இவர்களை பக்தர்கள் என்றும் அழைக்கின்றனர்) ஆண்டுதோறும் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிபோகும் நிகழ்சிகள் காலம்காலமாக நடக்கும் மனித சஞ்சலம்.அதேபோல் வடக்கிலிருந்து  தெற்கே கன்யாகுமரி வரை மனித சஞ்சலம் நடக்கும்.புலம் பெயர்வது மனித இயல்பு.பிரம்மாண்டமான நீர் நிலைகளையும் உயர்ந்த மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் மனிதர்கள் கண்டு வியப்பது ஒன்றும் வியப்புக்குரிய நிகழ்ச்சிகள் இல்லை.

மழை வெள்ளம் இவற்றினால் ஆண்டுதோறும் நிகழும் சேதங்கள் பற்றி உத்தரகாண்ட் மாநில அரசு கண்டு கொள்ளவில்லை.அங்கே கட்டப்படும் கட்டடங்கள் மழை வெள்ளம் தாக்குபிடிக்குமா ? என ஆய்வு செய்து கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கியிருந்தால் இவ்வளவு பெரிய மனித இழப்பு ஏற்பட்டிருக்காது.இயற்கை சூழலையும் புதிய இடங்களையும் காணும் ஆர்வத்தில் மக்கள் கூடுவது இயற்கையே. ஆனால் அத்தனை நபர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க வேண்டியது அரசின் கடமையல்லவா? ஆற்றங்கரையோரம் கட்டப்பட்ட 3அல்லது 4 அடுக்குமாடிகள் கொண்ட சுமார் 90 விடுதிகள் அடித்துச்செல்லப்பட்டன என செய்திகள் தெரிவிக்கின்றன.இதில் தங்கிருந்த மக்களின் கதி என்ன? என தெரியவில்லை.

இவ்வளவு களேபரத்திலும் கேதார்நாத் கோயிலுக்கு ஒன்றும் ஆகவில்லையாம்!.என்னே கடவுளின் மகிமை என பத்திரிக்கைகள் மேலும் மக்களை சிந்திக்க வைக்காமல் வியப்பு செய்திகளை வெளியிடுகின்றன. மக்களை காப்பாற்ற வேண்டிய கடவுளுக்கு மிகவும் பாதுகாப்பான வீட்டை(கோயிலை)கட்டிக்கொடுத்த மனிதர்கள் தங்களுக்கு பாதுகாப்பான வீடுகளை கட்டிக்கொள்ள தகுதி அற்ற மனிதர்களாக வாழ்கின்றோம்.



கேதார்நாத் கோயில் பூசாரி வெள்ளப் பெருக்கிலிருந்து தப்பி பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்(23.06.013 தேதியிட்ட தினத்தந்தி செய்தி)அப்பொழுது அந்த பூசாரி, ‘இப்பொழுது என் கவலையெல்லாம் என்ன தெரியுமா? கோவிலில் உள்ள என் சிவ பெருமானை யார் கவனித்துக் கொள்வார்கள்?அங்கே யார் தீபம் ஏற்றுவார்கள்?யார் பூஜை செய்வார்கள்? இதுதான் என் மனதை இப்போது வாட்டிக்கொண்டிருக்கிறது’

இவருடைய(இந்த பூசாரி) வாழ்வாதாரமே அந்த கல்லுதானே!இவரைமட்டும் இவருடைய வயிற்றை கழுவ உதவும் கல், அங்கே காணவரும் பக்தர்களை காப்பாற்ற முடியாத கையாலாகத கல் என்றுதானே கூறவேண்டும்?

இன்றும்(26.06.13) மழை வெள்ளம் விட்டபாடில்லை .இன்னும் ஆயிரக்கணக்கான பிணங்களும் பிணங்காளாகப்போகும் மனிதர்களும் தப்பிக்க வழித்தெரியாது தவிக்கின்றனர். இதற்குள் தப்பிவந்த பூசாரி,கேதார்நாத் சிவனுக்கு பூசை,தூபாரதனை தொடர்கிறது பக்தர்கள் எல்லாம் மீண்டும் வாருங்கள் என செய்தியாக(தினத்தந்தி-26.06.13)தெரிவிக்கிறார்.ஆமா அவர் வயிறு நிரம்ப வேண்டாமா?                 

  

Friday, January 18, 2013

43-சுய சிந்தனைகள் தொடரட்டும்



                    43-    சுய சிந்தனைகள் தொடரட்டும்


1-ஏழாம் அறிவு இயக்கம் கடவுள் மறுப்பு இயக்கமல்ல,பகுத்தறிவாத சுயசிந்தனை இயக்கம்

2-ஏழாம் அறிவு இயக்கம் பிராமணர்களுக்கு எதிரானது அல்ல

3-அறிவுரை பெற பிராமணர்களை தேடிச்செல்லும் உழைக்கும் மக்களுக்கு எதிரானது, இந்த ஏழாம் அறிவு இயக்கம்

4-பார்ப்பனர்களையும் பாம்பையும் பார்த்தால் பாம்பை அடிக்காதே பார்ப்பனர்களை அடி என்பார் பெரியார்,ஆனால் பார்ப்பனர்கள் பேசும் மொழியில்(சமஸ்கிருதம்)தெய்வீகம் உள்ளது என்றும் அந்த மொழிக் கொண்டு உழைக்கும் மக்களின்(தமிழர்கள்)’திருமணம் மற்றும் கர்ம காரியங்களில் சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஓதினால் வெய்யில் உழைப்பாளிகளின் வாழ்வில் அற்புதங்கள் நிகழும்’ என நினைத்து சேர்த்த செல்வங்களை யெல்லாம் செலவழித்து,மன அழுத்த நோயாளிகளாக வாழும் மக்களுக்கு எதிரானது இந்த ஏழாம் அறிவு இயக்கம்.

5-கோயிலில் உண்டியல் வைப்பதை எதிர்க்கிறது இந்த ஏழாம் அறிவு இயக்கம். லஞ்சமற்ற சமுதாயம் உருவாக இது வழிவகுக்கும். மக்களின் உபரியான பணங்கள் அரசுக்கு வர வேண்டுமானால் அத்தகைய உண்டியலை வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கலாமே!

6-கோயில்களில் இருக்கும் சிலைகளுக்கு விலை உயர்ந்த ஆபரணங்களை அணிவித்து அவைகளை பூட்டி வைத்து காவல் காக்கும் அரசுக்கு எதிரானது இந்த ஏழாம் அறிவு இயக்கம்.

7-நாகரிகம் வளர்ச்சியடைந்த இந்த காலத்திலும் பொது வழிபாட்டுத்தலங்கள் ஏற்படுத்தி பல மதங்கள் மோதிக்கொள்ளும் போக்குக்கு எதிரானது இந்த ஏழாம் அறிவு இயக்கும்.

8-உழைக்கும் தொழிலாளி வாழ வேண்டிய வயதில் விரதமேற்கொண்டு கோயிலுக்கு சென்று மொட்டை போடும் நாள், 'அவனுக்கு கெட்ட நாள்'என்கிறார் படைவீட்டார்

9-‘கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி’ என்கிறார் பெரியார். ‘கடவுளை வணங்குபவன் மன அழுத்த நோய்க்கு ஆட்பட்டு துன்ப வாழ்க்கை நடத்துபவன்’ என்கிறார் படைவீட்டார்.
10-வெய்யில் உழைப்பாளிக்கும் கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர்கள்(அர்ச்சகர்,பாதிரியார், இமாம், பூசாரி போன்றோர்) ஏன்? உழைப்பாளியை மதிக்காத கடவுள் நமக்கு தேவை இல்லை.