தர்மபுரி தமிழகம்
இன்றைக்கு தலை தெரிக்கும் பிரச்சனையாக
சாதி கலப்பு திருமணத்தை ஊதி பெரிதாக்கும்
முயற்சியில் அரசும் மற்றும் செய்தி ஊடகங்களான
தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்கள் வரிந்து கட்டி வாசிக்கின்றன. பேர்தான்
தமிழகம்.ஆனால் தமிழ்பேசும் இனங்களுக்கு இங்கு தனித்தன்மை அல்லது ஆளுமை இல்லை.இதனை
இப்போதைய மக்களுக்கு தெளிவு படுத்தும் பொருட்டு சில தன்னார்வ அமைப்புகள் சில
பொதுக் கூட்டங்களும் ஊர்வலங்கள் நடத்தி புரியவைக்க ஆசைப்படுகின்றன.
இலவசங்களுக்கு ஏங்கும் தமிழினங்களுக்கு
இதுவெல்லாம் புரிய சில காலங்கள் ஆகும்.சில சமுக அமைப்புகளும் தற்போதய அரசும் பாலை
மக்களுக்கு(ஆதி தமிழர்களுக்கு)கல்வி மற்றும் வேலை வாய்புகளை உருவாக்கி
தருகின்றன.இதனை இன்னமும் சரியாக பயன்படுத்திக் கொள்ள அல்லது பாலை மக்களுக்கு
வழிகாட்ட எந்த சமுக அமைப்புகளோ அல்லது தலித்துகளுக்கு தாங்கள் தான் பாதுகாவலர் என
கூறிக்கொள்ளும் அரசியல் கட்சிகளோ முன்வரவில்லை என்பது தான் உண்மை.
இதற்கு முந்தய அரசும் சரி அல்லது
இப்போதைய அரசும் சரி தொடர்ந்து செய்யும் தவறுகளை இங்கே சுட்டிக் காட்ட
விரும்புகிறோம்.
1-முதலில்
அரசு தன் குழந்தைகளுக்கு அளிக்கும் கல்வி பாடத்திட்டத்தை அனைவருக்கும் உண்டான கட்டாய சமச்சீர் கல்வித் திட்டத்தை
அமல் படுத்த அரசு முன் வரவேண்டும்.
2-தரமான
மற்றும் பொது அறிவு,ஆழ்ந்த கணக்கு திறன்,மற்றும்
அறிவியல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே பணியிலமர்த்த வேண்டும்.
3-கட்டாய
சமச்சீர் கல்வி என்பது +2 வரையில் இலவசமாகவே அனைவருக்கும் (சாதி,மதம்,பணக்காரன்,ஏழை
போன்ற வேறுபாடின்றி) அளிக்க அரசு முன்வரவேண்டும்.
4-இட
ஒதுக்கீடு தேவை, (இது சாதிவாரியாக –இதுதான்
பொருளாதார மற்றும் கல்வி போன்ற அம்சங்களை - தீர் மானிக்கும் கருவியாக உள்ளது.)அதை
மேல் படிப்புக்கும் வேலை வாய்ப்புக்கும் பயன் படுத்திக் கொள்ளலாம்.சமச்சீர்
சமுதாயம் அமைக்க இதுவே உதவும்.
5- மக்களை
முன்னேற்றும் நோக்கம் யாருக்கு அமையும் என்றால் தன் மொழி சார்ந்த அல்லது இனம்
சார்ந்த தலைவர்களால் மட்டுமே களங்கம் இல்லா ஆட்சியைத் தர முடியும்.அதைப்போன்றொரு
தலைவர்களை தேர்வு செய்வதில் தமினங்களுக்கு இன்றும் தடுமாற்றமே.காரணம் தமிழ்
சமுதாயம் படிப்பறிவும் சுய சிந்தனையும் இழந்து பல நூற்றாண்டு களாகிவிட்டது.
இதனை
சரியாக உணர்ந்து கொண்ட தமிழக திராவிடத் தலைவர்கள்(தெலுங்கு,மலையாளம் மற்றும்
கன்னடத்தை தாய் மொழியாக கொண்டவர்கள்)இலவசங்களை காட்டி தமிழ் பேசும் இனங்களை தமிழகத்தின்
அகதிகள் நிலைக்கு தள்ளிவிட்டனர். இன்றும் இந்நிலை நீடிப்பதுதான் வேதனை அளிக்கிறது.
போலி தேசிய நீரோட்டமே தமிழகத்தில் உலா வருகிறது.
6- தமிழ்
இன வளர்ச்சியில் அக்கறை உள்ள தலைவர்கள் என்ன செய்ய வேண்டும்? குழந்தைகளின் ஆரம்ப
கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.20குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியை,சுத்தமான
கழிப்பிடவசதி,சத்தான உணவு மற்றும் மருத்துவ வசதி என அனைத்து கிராமங்களிலும்
செயல்படுத்தவேண்டும்.
7-6-ம்
வகுப்பிலிருந்து +2 வரையில் மாணவர்களுக்கு,நமது சமுக அமைப்பில் எது தவறு? எது
அறவழி? என விளக்கும் அல்லது விளங்கும் வகையில் பாடத்திட்டங்களை மாற்றி யமைக்க
வேண்டும்.குறிப்பாக சட்டம் பற்றியும் சட்ட மீறல் பற்றியும் அதன் விளைவுகளை மாணவர்களுக்கு
எடுத்துரைக்கும் விதத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும்.
இளவயதில்
எது தவறு? எது சரி ? என புரியமல் மாணவர்களை வளர்த்து பின் 100 மாணவர்களில் ஒருவரை
பட்டப்படிப்பிற்கு பின் சட்டம் பற்றி தெரிந்துகொள்ள வைக்கும் பாடத்திட்டத்தை
உடனடியாக நிறுத்த வேண்டும்.சட்டம் படித்து பாமரனிடம் பணம் பிடுங்கும் தொழிலான
வழக்குரைஞர் தொழிலை ஒழிக்க வேண்டும்.
இதுபோன்ற
ஒரு பாடத்திட்டமே சமுகத்தில் குற்றவாளிகள் உருவாக தடுக்க உதவும்.
8- 8-ம்
வகுப்பிலிருந்து +2 வரை உள்ள மாணவர்களுக்கு விரசமில்லா பாலியல் கல்வி அல்லது
வளர்ச்சி அடைந்த ஆண் பெண் இன உருப்புக்களின் செயல்பாடுகளால் ஏற்படும் முறையற்ற அல்லது பதின்ம வயதில்
ஏற்படும் மோகங்களை களைய தகுந்த ஆசிரியர்களை கொண்டு தகுந்த பயிற்சி அளிக்க அரசு
முன்வரவேண்டும்.இதன் வரம்பு மீறல்களுக்கு என்ன தண்டனை என மாணவர்களுக்கு
எடுத்துரைக்கும் விதத்தில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.
9-தமிழகம்
மட்டுமல்ல இந்தியா முழுவதும் அரசியல் வாதிகளில் சாதியத்தலைவர்கள் உருவாகிவிட்டனர்.
பாதிக்கப்பட்ட,ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய,மிகவும் பின்தங்கிய மற்றும்
முன்னேறிய சாதியத்தலைவர்கள் உள்ளனர்.குறிப்பாக முன்னேறிய சாதியத்தலைவர்கள்
சாதியைப்பற்றி பேசக்கூடாது இதனால் பிரச்சினைகள் வரும் என அவ்வப்போது மேடைகளில்
பேசுவார்கள் இதன் பொருள் என்ன வெனில் பிற தாழ்த்தப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட இன
மக்கள் விழிப்புணர்வு அடைந்து இதனால் தங்கள் இன பிழைப்புக்கே பாதகம்
ஏற்பட்டுவிடும் என்கிற அச்சம்தான்.இதனை சரியாக புரிந்து கொள்ள முடியாத
பாதிக்கப்பட்ட மக்கள் அத்தகையத் தலைவர்களின் பேச்சிற்கே தாளம் போடுவர்.
10-சாதியத்
தலைவர்கள் தங்கள் இன பிள்ளைகளை படிக்கவேண்டிய காலத்தில் படிக்கவேண்டும்,வேலைத்தேடி
பெற்றவர்களுக்கு உருதுணையாக இருக்கவேண்டும் பின் பெற்றவர்களின் சம்மதத்தோடு
திருமணம் புரியவேண்டும்(காதலோ அல்லது பெற்றவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டதோ
எதுவாகிலும்) பெத்தவர்கள் இணக்கம் மிக முக்கியம் என ஓட்டுக்கேட்கும் மேடைகளில்
இதனையும் அறிவிக்கவேண்டும்.
எதிர்காலத்தில் தர்மபுரி போன்ற கலவரங்களை தடுக்க இந்த யோசனைகள் உருதுணையாக இருக்கும்
No comments:
Post a Comment