கடவுள்
மனிதர்களை சாகடிக்கிறார்
பூசாரியால் கடவுளுக்கு பூசை செய்ய
முடியவில்லை
கடந்த ஒருவாரமாக(சூன்
-16முதல்)இமயமலைப்பகுதியில்(உத்தரகாண்ட்) தொடர்மழை பெய்கிறது.பெய்கிறது என்பதை விட
வானம் இடிந்து விழுந்துவிட்டது என்றே கூறலாம்.அப்படி ஒரு
மழை,வெள்ளப்பெருக்கு.ஆற்றங்கரை ஓரம் கட்டப்பட்ட பல அடுக்கு தங்கும் விடுதிகள்
(சுமார் 90 ?) வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டன.அதில் தங்கியவர்கள் கதி என்ன?
இந்த இயற்கைச் சீற்றம் ஆண்டுதோறும்
நடப்பதுதான்.30அல்லது 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை (பொதுவாக சூன்
மாதங்களில்)கட்டுக்கடங்காத காட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். பெரும்பாலும்
வான் மழையால் இந்த வெள்ளபெருக்கு என சிலர் நினைப்பது தவறு.சூன் மாதங்களில்
பூமியின் வட கோளத்தை சூரியனின் வெப்பக்கதிர்கள் தாக்குவதன் விளைவு இமயமலையின் பனி
உருகி வெள்ளக்காடாக பெருக்கெடுக்கும்.இது ஆண்டுதோறும் நடக்கும் இயற்கை நிகழ்ச்சி.
சுற்றுலாவாசிகள்(இவர்களை பக்தர்கள்
என்றும் அழைக்கின்றனர்) ஆண்டுதோறும் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிபோகும்
நிகழ்சிகள் காலம்காலமாக நடக்கும் மனித சஞ்சலம்.அதேபோல் வடக்கிலிருந்து தெற்கே கன்யாகுமரி வரை மனித சஞ்சலம் நடக்கும்.புலம்
பெயர்வது மனித இயல்பு.பிரம்மாண்டமான நீர் நிலைகளையும் உயர்ந்த மலைகளையும்
பள்ளத்தாக்குகளையும் மனிதர்கள் கண்டு வியப்பது ஒன்றும் வியப்புக்குரிய
நிகழ்ச்சிகள் இல்லை.
மழை வெள்ளம் இவற்றினால் ஆண்டுதோறும்
நிகழும் சேதங்கள் பற்றி உத்தரகாண்ட் மாநில அரசு கண்டு கொள்ளவில்லை.அங்கே
கட்டப்படும் கட்டடங்கள் மழை வெள்ளம் தாக்குபிடிக்குமா ? என ஆய்வு செய்து
கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கியிருந்தால் இவ்வளவு பெரிய மனித இழப்பு
ஏற்பட்டிருக்காது.இயற்கை சூழலையும் புதிய இடங்களையும் காணும் ஆர்வத்தில் மக்கள்
கூடுவது இயற்கையே. ஆனால் அத்தனை நபர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க
வேண்டியது அரசின் கடமையல்லவா? ஆற்றங்கரையோரம் கட்டப்பட்ட 3அல்லது 4 அடுக்குமாடிகள்
கொண்ட சுமார் 90 விடுதிகள் அடித்துச்செல்லப்பட்டன என செய்திகள்
தெரிவிக்கின்றன.இதில் தங்கிருந்த மக்களின் கதி என்ன? என தெரியவில்லை.
இவ்வளவு களேபரத்திலும் கேதார்நாத்
கோயிலுக்கு ஒன்றும் ஆகவில்லையாம்!.என்னே கடவுளின் மகிமை என பத்திரிக்கைகள் மேலும்
மக்களை சிந்திக்க வைக்காமல் வியப்பு செய்திகளை வெளியிடுகின்றன. மக்களை காப்பாற்ற
வேண்டிய கடவுளுக்கு மிகவும் பாதுகாப்பான வீட்டை(கோயிலை)கட்டிக்கொடுத்த மனிதர்கள்
தங்களுக்கு பாதுகாப்பான வீடுகளை கட்டிக்கொள்ள தகுதி அற்ற மனிதர்களாக வாழ்கின்றோம்.
கேதார்நாத் கோயில் பூசாரி வெள்ளப் பெருக்கிலிருந்து
தப்பி பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்(23.06.013 தேதியிட்ட தினத்தந்தி செய்தி)அப்பொழுது
அந்த பூசாரி, ‘இப்பொழுது என் கவலையெல்லாம் என்ன தெரியுமா? கோவிலில் உள்ள என் சிவ
பெருமானை யார் கவனித்துக் கொள்வார்கள்?அங்கே யார் தீபம் ஏற்றுவார்கள்?யார் பூஜை
செய்வார்கள்? இதுதான் என் மனதை இப்போது வாட்டிக்கொண்டிருக்கிறது’
இவருடைய(இந்த பூசாரி) வாழ்வாதாரமே அந்த கல்லுதானே!இவரைமட்டும்
இவருடைய வயிற்றை கழுவ உதவும் கல், அங்கே காணவரும் பக்தர்களை காப்பாற்ற முடியாத
கையாலாகத கல் என்றுதானே கூறவேண்டும்?
இன்றும்(26.06.13) மழை வெள்ளம்
விட்டபாடில்லை .இன்னும் ஆயிரக்கணக்கான பிணங்களும் பிணங்காளாகப்போகும் மனிதர்களும்
தப்பிக்க வழித்தெரியாது தவிக்கின்றனர். இதற்குள் தப்பிவந்த பூசாரி,கேதார்நாத்
சிவனுக்கு பூசை,தூபாரதனை தொடர்கிறது பக்தர்கள் எல்லாம் மீண்டும் வாருங்கள் என
செய்தியாக(தினத்தந்தி-26.06.13)தெரிவிக்கிறார்.ஆமா அவர் வயிறு நிரம்ப வேண்டாமா?
No comments:
Post a Comment