Wednesday, June 5, 2013

44-இடிதா(ங்)க்கிய இறைவன்



                     44-இடி தா(ங்)க்கிய இறைவன்                              
                                                                        
 வேலூர் மாவட்டம் பனப்பாக்கம்  அருகே நெமிலி கீழ்வீதி எனும் பழமைவாய்ந்த கிராமம். இங்கே 12-ஆம் நூற்றாண்டு பழமைவாய்ந்த சுந்தரவரதராச பெருமாள் கோயில் உள்ளது.31.05.2013 அன்று அந்த கிராமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிந்தது. அன்று மாலை 6 மணி அளவில் அந்த கோயிலின் 36 அடி கொடி மரத்தின் மீது இடி தாக்கியது. மரத்தின் உச்சியில் 3 கலசங்கள் சேதமடைந்தது. கொடிமரம் இரண்டாகப் பிளந்து,மரத்தின் பீடமும் கருகியது.இது பத்தரிக்கைச் செய்தி.

இது குறித்து அந்த கோயில் குருக்கள் செய்தியாக தெரிவிப்பது யாதெனில், ‘கொடிமரத்தை இடி தாக்கியதால் யாரும் பயப்படவேண்டாம்.ஊருக்கு வந்த பெரியா ஆபத்தை பெருமாள் தடுத்துள்ளார் .இது ஒரு தெய்வ செயல்’ ,

உலகம் சுழல்வதும்,இரவு பகல் ஏற்படுவதும் இடி மழை பொழிவதும் தெய்வ செயல் என கூறும் ஆன்மீக வாதிகள் ஒரு சில இடங்களில் மழை பொழியாமலிருப்பதற்கும் இறைவன் பொருப்பு ஏற்க வேண்டும்.

உலகிலுள்ள அனைத்து மக்களும் ஏதாவது ஒரு மதம் தழுவிய கோட்பாட்டில் இயங்குவர்.மனிதனுக்கு மன ஒழுக்கம் வேண்டும். அப்பொழுதுதான் அவன் மிருக உணர்விலிருந்து விடுபட முடியும்.இதன் பொருட்டு வேத நூல்கள் தோன்றின. கடவுள் நேரடியாகவோ அல்லது கடவுள் தனது தூதர் மூலமாகவோ  அருளியதாக உருவாக்கப்பட்டதுதான் இன்று உலகிலுள்ள மதங்களில் வேத நூல்கள் உலா வருகின்றன.
                                 
                         இறைவன் சாதிக்கப்போவது என்ன ?


எந்த வேதங்களிலும், ‘இறைவனாகிய என்னை வழிபடுங்கள் இறுதியாக என்னை வந்து சேர்வீர்கள்’ என்றுதான் எழுதப்பட்டுள்ளது. இந்த பூமியில் வாழும் அல்லது பிறக்கும் உயிர்கள் இத்தனை ஆண்டுகள் வாழவேண்டும் பின் என்னிடத்தில் வரவேண்டும் என எங்கும் வரையறுத்துக் கூறப்படவில்லை.உயிர்களின் பிறப்புக்கு உத்தரவாதம் அளிக்காத வேதங்கள், பிறந்தபின் மரணத்தை தவிர்க்கவோ அல்லது தள்ளிப்போடவோ ஆலோசனை வழங்கவில்லை.

இந்து மதத்தில் (பகவத் கீதை) மனிதனுக்கு(ஆன்மா அழிவதில்லை) மறுபிறவி உண்டென்றும்,இப்பிறவியிலேயே மறுபிறவியை தவிர்க்க துறவர வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.

இங்கே ஒரு முறண் தெரியவில்லையா? எல்லாரும் துறவரம் மேற் கொண்டால்,பிறப்பே இல்லாமல் அல்லது தோன்றாமல் ஆகிவிடும். அல்லவா?

இதிலிருந்து தெரியவில்லையா? இறைவன் பேச்சை சம்சாரிகளும் சரி துறவி என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் மனிதர்களும் சரி யாரும் இறைவன் அருளிய நூல்களான வேதங்கள் சொல்வதை யாரும் மதிக்கவில்லை என்று. கோயில்களில்,சர்ச்சுகளில்,மசுதிகளில் இறைவன் இருப்பதாக பொய் பிரச்சாரங்கள் செய்து  மக்கள் நம்புவதை கைவிடும் வரை மத இடைத்தரக்களின் சுக வாழ்க்கை செழிக்கும்.

மனிதன் மீது இடிவிழுந்தால் அவன் பாவப்பட்டவன் என கூறும் மத இடைத்தரகர்கள், கோயில் கோபுரம் மீது இடிவிழுந்து அழிகிறதே அதற்கு இறைவன் பாவப்பட்டவன் என்று தானே கூறவேண்டும்?         

  



No comments: