43- சுய சிந்தனைகள் தொடரட்டும்
1-ஏழாம் அறிவு இயக்கம் கடவுள் மறுப்பு
இயக்கமல்ல,பகுத்தறிவாத சுயசிந்தனை இயக்கம்
2-ஏழாம் அறிவு இயக்கம் பிராமணர்களுக்கு
எதிரானது அல்ல
3-அறிவுரை பெற பிராமணர்களை
தேடிச்செல்லும் உழைக்கும் மக்களுக்கு எதிரானது, இந்த ஏழாம் அறிவு இயக்கம்
4-பார்ப்பனர்களையும் பாம்பையும்
பார்த்தால் பாம்பை அடிக்காதே பார்ப்பனர்களை அடி என்பார் பெரியார்,ஆனால்
பார்ப்பனர்கள் பேசும் மொழியில்(சமஸ்கிருதம்)தெய்வீகம் உள்ளது என்றும் அந்த மொழிக்
கொண்டு உழைக்கும் மக்களின்(தமிழர்கள்)’திருமணம் மற்றும் கர்ம காரியங்களில்
சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஓதினால் வெய்யில் உழைப்பாளிகளின் வாழ்வில்
அற்புதங்கள் நிகழும்’ என நினைத்து சேர்த்த செல்வங்களை யெல்லாம் செலவழித்து,மன
அழுத்த நோயாளிகளாக வாழும் மக்களுக்கு எதிரானது இந்த ஏழாம் அறிவு இயக்கம்.
5-கோயிலில் உண்டியல் வைப்பதை
எதிர்க்கிறது இந்த ஏழாம் அறிவு இயக்கம். லஞ்சமற்ற சமுதாயம் உருவாக இது
வழிவகுக்கும். மக்களின் உபரியான பணங்கள் அரசுக்கு வர வேண்டுமானால் அத்தகைய
உண்டியலை வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கலாமே!
6-கோயில்களில் இருக்கும் சிலைகளுக்கு
விலை உயர்ந்த ஆபரணங்களை அணிவித்து அவைகளை பூட்டி வைத்து காவல் காக்கும் அரசுக்கு
எதிரானது இந்த ஏழாம் அறிவு இயக்கம்.
7-நாகரிகம் வளர்ச்சியடைந்த இந்த
காலத்திலும் பொது வழிபாட்டுத்தலங்கள் ஏற்படுத்தி பல மதங்கள் மோதிக்கொள்ளும்
போக்குக்கு எதிரானது இந்த ஏழாம் அறிவு இயக்கும்.
8-உழைக்கும் தொழிலாளி வாழ வேண்டிய வயதில்
விரதமேற்கொண்டு கோயிலுக்கு சென்று மொட்டை போடும் நாள், 'அவனுக்கு கெட்ட நாள்'என்கிறார் படைவீட்டார்
9-‘கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி’
என்கிறார் பெரியார். ‘கடவுளை வணங்குபவன் மன அழுத்த நோய்க்கு ஆட்பட்டு துன்ப
வாழ்க்கை நடத்துபவன்’ என்கிறார் படைவீட்டார்.
10-வெய்யில் உழைப்பாளிக்கும் கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர்கள்(அர்ச்சகர்,பாதிரியார், இமாம், பூசாரி போன்றோர்) ஏன்? உழைப்பாளியை மதிக்காத கடவுள் நமக்கு தேவை இல்லை.
10-வெய்யில் உழைப்பாளிக்கும் கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர்கள்(அர்ச்சகர்,பாதிரியார், இமாம், பூசாரி போன்றோர்) ஏன்? உழைப்பாளியை மதிக்காத கடவுள் நமக்கு தேவை இல்லை.
No comments:
Post a Comment