ஆன்மா-ஆத்மா
ஆன்மா என்றால் என்ன? ஆத்மா என்றால் என்ன? வேறொன்றும் இல்லை ஆன்மா என்றால் மனம்,ஆத்மா என்றால் ஆசை.மனித மனம் ஆசைகளுக்கு உட்பட்டது.ஆசைப்படும் மனதை கட்டுப்படுத்த வழி முறைகளை சொல்லித்தருவது தான் ஆன்மீகம்.
உலகிலுள்ள அனைத்து மதங்களுக்கும் அந்தந்த மதங்களைச்சார்ந்த மக்களுக்கு ஆன்மீக நெறிமுறைகளை சொல்லித்தர ஏராளமான நூல்கள் உள்ளன.
ஆன்மா ஆத்மா என்னும் எளிதில் புரியாத சொற்களை பயன்படுத்தி பாமரனை குழப்பி மயக்க நிலையில் பாமர மக்களை வைத்திருக்க வேண்டும் என்பது மத நூல்களின் கோட்பாடு.அப்படியானால் மனம் ஆசை என்னும் எளிதில் புரியும் வார்த்தைகளை பயன் படுத்தினால் என்னவாம் ?
மனிதனுக்கு மற்றவர்களால் அடையும் பயன்கள் எளிதில் கிடைக்க கூடியதாக சாதாரண மனிதன் எண்ணுதல் கூடாது. இது ஆன்மீக வாதிகளின் (அய்யோக்கிய) குணம் .
சுற்றுப்புற உணவுப் பொருள் மற்றும் தாவரங்கள் மூலம் கிடைக்கும் மனித மருத்துவ குணம் கொண்ட உணவுப்பொருளுக்கு புரியத பெயர்வைத்து அதன் மூலம் பணம் பண்ணுவது மருத்துவர்களின் குணம்.
சாதாரண மக்கள் பிரச்சினைகளுக்கு நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகளுக்கு அகராதி தேட முடியாது, அதற்கு பணம் பண்ணும் தொழில்தான் வழக்குரைஞர் அல்லது வழக்கறிஞர் தொழில்.
மக்கள் தங்கள் நில உடமைகளை தங்களுக்கு உரிய சொத்து மதிப்பு தெரிந்துகொள்ள கூட அரசாங்க அதிகாரிகளான வி.ஏ.ஓ மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை அணுக வேண்டும். இது அதிகாரிகள் குணம்.
இதற்கெல்லாம் யார் பொறுப்பு? மக்களை ஆளும் ஆட்சியாளர்கள் தானே? இவைகளையெல்லாம் மக்கள் தெரிந்து கொள்ள பள்ளி மற்றும் கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்க அரசு ஏன் அக்கறை கொள்ளவில்லை?
இதுபோன்ற நிறைய சொற்கள் மக்கள் மனதில் நிலைத்துள்ளன. ஆனால் அவைகளின் அர்த்தங்கள் புரிந்து நம்மக்கள் பயன்படுத்துவதில்லை.வார்த்தைகள் புரிந்தால் அதன் வசிகரம் போய்விடும் என்கிற எண்ணத்தில் ஆன்மீக வாதிகள் மக்கள் மனதில் புரியாத வாய்ப்பாடுகளை பதியவைப்பதின் நோக்கமே பணம் பண்ணும் நோக்கம் தான்.இதுதான் மத இடைத்தரகர்களின் கோட்பாடு.
No comments:
Post a Comment