காக்கா நம்பிக்கை
இன்றய (20.07.13) செய்தியில் பெங்களூரில்
ஒரு பொறியியலாளர் (H.A.L) தன் அலுவலகத்துக்கு செல்ல ஆயத்தமானார். வீட்டிற்கு
வெளியே நின்ற போது ஒரு காகம் தன் தலையில் கொத்திவிட்டு சென்றது. இது என்ன
அபசமுணமாக இருக்குமோ என தன் தாய் இடம் கேட்டார். ‘அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது நீ
வேலைக்குப்போ’என தன் மகனை சமாதானப்படுத்தி வேலைக்கு அனுப்பினார்.
மகனும் அரை மனதோடு வேலைக்கு
சென்றார்.தனக்கு ஏதாவது கெடுதல் நடக்குமோ என அஞ்சியவர்க்கு,மீண்டும் அதிர்ச்சி.
அலுவலகத்திற்கு நுழையும்முன் வாயிலறுகே மீண்டும் ஒரு காகம் தன் தலையில்
கொத்திச்சென்றது. தனக்கு கெடுதல் நெறுங்கிவிட்டது என பொறியியலாளரின் மனது ஆழமாக
சிந்திக்க ஆரம்பித்தது. இதன் விளைவு.வீடு திரும்பிய பொறியியலாளர் அம்மாவிடம்,
‘அம்மா எனக்கு கெடுதல் வரும் என தோன்றுகிறது காகம் இரண்டு முறை என் தலையில் கொத்திவிட்டதே!
இது அப சகுணம் மட்டுமல்ல.இனி இவ்வுலகில் வாழ்வது கூடாது’ என வீட்டின் உள்ளே போனவர்
தற்கொலை புரிந்து கொண்டுவிட்டார்.
இதற்கு யாரை நொந்துகொள்வது?
ஒரு பொறியியலாளர் உருவாவதற்கு அவர்
குடும்பம் எவ்வளவு சிரமப்பட்டிருக்கும்?
அவருக்கு கல்வி அறிவைப்புகட்டிய
பாடத்திட்டங்களில் உள்ள குறைபாடுதான் இதற்கு காரணம் என தெரியவில்லையா?
பொறியியல் பட்டதாரிக்கு அறிவியல்
ரீதியிலான கல்வி அறிவைப்பபுகட்ட இந்த அரசு தவறிவிட்டது.
மதம்
ஏற்படுத்திய மூட நம்பிக்கை இது என தோன்றவில்லையா?
காக்காவை சனியனுக்கு ஒப்பிட்டு கதைகள்
புனையப்பட்டுள்ளது தான் இதற்கு கரணம் என புரியவில்லையா? மேலும் அறிவியல் பூர்வமான விலங்கின கோட்பாடுகளை மாணவர்களுக்கு சொல்லித்தர நம் சமுதாயம் தவறிவிட்டது.காகா உட்பட எந்த பறவை இனமாகட்டும் கோழி கூட தான் முட்டைகளை பாதுகாக்கும் இடத்துக்கோ அல்லது குஞ்சுகள் இருக்கும் இடத்துக்கோ மனிதர்களோ அல்லது பிற இன விலங்குகளோ நெறுங்க விடாது.இது விலங்கினங்களின் தாய்பாசம்.அதன் விளைவுதான் காகா அந்த பொறியியலாளரின் தலையில் குத்தியது. இங்கே,இதற்கு அபசகுணம் எங்கே வந்தது?
No comments:
Post a Comment