Tuesday, September 10, 2013

மூட நம்பிக்கை ஒழிப்பு முடியுமா?



                     மூட நம்பிக்கை ஒழிப்பு முடியுமா?
மக்கள் சமுகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள்,சமுதாய மக்களின் கல்வியில்-கல்வி மேம்பாட்டில் பகுத்தறிவாத சிந்தனையில் நாட்டமுள்ளவர்கள் நாட்டின் தலைவராக வர முயற்சிக்க வேண்டும். அந்த சிந்தனை உள்ள அரசியல் தலைவர்களையே தேர்வு செய்ய வேண்டும்.

இதுபோன்ற சிந்தனை உள்ள மக்கள் வாழும் நாடுகளில் மட்டுமே புரட்சிகள் தோன்றும்.மக்களின் நம்பிக்கை என்பது மன ஒழுக்கம் சார்ந்தது.மக்கள் கூட்டத்துக்கு அல்லது பல தரப்பு மக்கள் கொண்ட  மாநிலத்துக்கு அல்லது ஒரு நாட்டுக்கு தலைவனாகும் தகுதி அடைந்தாலே பின்பு அவனுடைய வாரிசு வம்சாவழிகளை,மக்கள் புரட்சி வெடித்தாலொழிய தலைவர் பதவியில் இருந்து இரக்க அல்லது இரங்க முடியாது.

எப்பொழுதுமே, எங்குமே  அதிகார மையம் அல்லது வலிமை மிக்க தலைவனைச் சுற்றி முகத்துதி செய்பவர்ளும் அதிகார இடைத்தரகர்களும் (POWER BROAKERS) உருவாகி விடுவார்கள்.அறிவாற்றலும் சுய சிந்தனை மிக்க தலைவனால் மட்டுமே இவர்களை அடையாளம் காண்டு களையெடுக்க முடியும்.

அரசனையோ அல்லது மக்கள் தலைவனையோ கடவுளுக்கு சமமாக வைத்து ஆரதிக்கும் போக்கினை கண்டிப்புடன் களைந்தால் ஒழிய அதிகார இடைத்தரகர்களை ஒழிக்க முடியாது.கடந்த கால உலக  வரலாற்றை படிக்கும் போது இப்படியெல்லாம் அதிசயங்கள் இரண்டு நாடுகளில் நடந்துள்ளது.(ரஷ்யா மற்றும் சைனா)அந்த இரண்டு நாடுகளுமே வல்லரசுகளாகிவிட்டது.கியூபா,வட கொரியா போன்ற சிறு சிறு நாடுகளும் தன்னிறைவு அடைந்த நாடுகளாக திகழ்கின்றன.

மூட நம்பிக்கையே மக்கள் தலைவனிடம் இருந்துதான் ஆரம்ப மாகிறது.முட்டாள் மக்களைத்தானே ஒருவன் ஆள முடியும்?

மக்களை புரட்சிப்பாதைக்கு வழி நடத்திச்செல்ல உலகில் முதன்முதலில் கொள்கையை வகுத்தவர் காரல்மார்க்சு. அந்த கொள்கைக்கு வடிவம் கொடுத்தவர் ரஷ்ய புரட்சியாளர் லெனின். அவரைத்தொடர்ந்து சைனாவின் மாசே துங் மாபெரும் மக்கள் தலைவராக திகழ்ந்தார். இந்த இருவரும் மக்கள் இயக்கத்தைக்க கொண்டு உலகின் மாபெரும் வல்லரசு நாடுகளை  உருவாக்கினர். அங்கேயும் மக்கள் மூட நம்கிக்கையோடு வாழ்க்கை நடத்துகின்றனர். ஆனால் அரசங்கம் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

இந்தியாவில் மேற்கு வங்கதில் ஒரு தலைமுறைக்கு மேல் கம்யூனிச ஆட்சி இருந்தது.மறைந்த திரு சோதி பாசு சுமார் 27 ஆண்டுகளாக அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தார். காரல் மார்க்சுவின் கொள்கைகளை பின்பற்றுபவர் என பலராலும் பேசப்பட்டவர். ஆனால் அவர் மட்டுமே பகுத்தறிவாதியாக வாழ்ந்தார்.அவர் மாநிலத்து மக்களை திருத்த முயற்சிக்கவில்லை.அடிப்படை கல்வி அமைப்பை மாற்ற முயற்சிக்கவில்லை.மூட நம்பிக்கையின் மூல வித்துவான கல்கத்தா காளி கோயிலை மூட முயற்சிக்கவில்லை.
அதேபோன்று கேரளாவிலும் ஒரு தலைமுறைக்குமேல் கம்யூனிச ஆட்சி அந்த மாநிலத்தை ஆண்டது.ஆனால் அங்குதான் பேய் விரட்டு,பில்லி சூன்யம் மந்திர மயாம் போன்ற கருப்புவித்தை(black magic)தொழில் கொடிகட்டிப் பறக்கிறது.

இந்திய கம்யூனிச வாதிகள் எல்லாம் வயிற்று பிழைப்பாளிகள்.போலிப்பொதுவுடமை வாதிகள். 

மூட நம்பிக்கை ஒழிப்பு என்பது மூட நம்பிக்கை ஒழிப்பாளர் தனது வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.
எது மூட நம்பிக்கை?வாழ்க்கைநடத்த வாழ்க்கையில் என்னென்ன நம்பிக்கைகள் அவசியம் என குடும்பத்தலைவன் மற்றும் குடும்பத்தலைவி உணர வேண்டும்.


உலகில் ஒவ்வொரு குடும்பத் தலைவனுக்கும் உறவுகள் நண்பர்கள் அமைவார்கள்.அவற்றுள்
1-நன்கு படித்த சுய சிந்தனை உள்ள குடும்பத்தலைவனும் உண்டு.
2- படிக்காத சுய சிந்தனை உள்ள தலைவனும் உண்டு.
3- படித்தும், படிக்காத, பிறர்  பேச்சைக் கேட்டு குடும்பம் நடத்தும் குடும்பத் தலைவர்களும் உண்டு.

இதில் மூன்றாவதாக குறிப்பிடப்பட்டுள்ள குடும்பங்கள் தான் உலகில் 99% சதவிகித மக்கள் வாழ்கின்றனர்.இந்தவகையான குடும்பங்களில் இருந்துதான் மக்கள் தலைவனும் உருவாகின்றனர். இந்த மாதிரியான தலைவர்கள் நாட்டை ஆளும்போது மூட நம்பிக்கைகளை மக்களிடமிருந்து ஒழிக்க முடியாது.

சமிபத்தில் மகாராட்ரத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
உடனே சில மாநில அரசுகள் மூட நம்பிக்கை பழக்கங்களான பில்லி சூன்யம், மந்திரம், குட்டிச்சாத்தான் போன்று பயன்படுத்தும் அல்லது விளம்பரப்படுத்தி பாமர மக்களை மயக்கி பணம் பண்ணும் முறைகளை சட்டம் போட்டு தடுக்க ஆசைப்பட்டது.

சட்டத்தினால் மக்களின் மூடபழக்கங்களை திருத்தமுடியாது.பழக்கங்கள் என்பது தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்படுவது. இதற்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?
1-அடிப்படை ஆரம்பக்கல்வியை பொருளியல் (pragmatism)கல்விக்கு மாற்ற அரசு முன் வரவேண்டும்.
2-மக்கள்  கோயிலுக்கு சென்று கடவுளை வழிப்பட்டால் துன்பங்கள் நீங்கும் எனும் பொய்ப்பிரச்சாரத்தை தடைசெய்யப்பட வேண்டும்.
3-பொது வழிப்பாட்டுத் தலங்களில் மக்கள் கூடுவதை தடைசெய்யப்படவேண்டும்.
4-முக்கியமாக கோயில்களில் காணிக்கை செலுத்தும் பழக்கமான தலைமயிரை மழிப்பது,பொங்கலிட்டு மிருக பலி செய்வது,கோயில் குளத்தில் குளிப்பது,உண்டியல் மூலம் காசு காணிக்கை யாக்குவது போன்ற எல்லாம்  மூட நம்பிக்கைகள் என மக்களிடத்தில் அரசு பிரச்சாரம் செய்யவேண்டும். .இதற்கு மாநில அரசுகள் சட்டமியற்றவேண்டும். செய்யுமா இந்த அரசு?             
          

No comments: