Sunday, August 5, 2012

41-உயிரினத்தோற்றம்


       41-கனிமம்  + கரிமம் +ஈரம் +காற்று>;உயிரினம்
       (உலோகம்+அலோகம்+நீர்மம் +காற்று>; உயிரினம்)
                     
        (INORGQNIC + ORGANIC + WET+AIR>; biological)
        ( METALIC+NQN METALIC+WATER+AIR>;LIVING CELLS)

குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கலாம் என அறிவியல் பூர்வமாக கணக்கிட்டு(scientific formulae) அறிவியலாளர்கள் நம்  பொருளியல்(pragmatism) வாதத்திற்கு வலு சேர்க்கின்றனர். இந்த கொள்கை உருவாகி 300 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது இதுவரை ஒரு குரங்கும் மனிதனாக மாறவில்லை.மாறும் தன்மையும் தெரியவில்லை. பரிணாம வளர்ச்சி என்னும் வார்த்தைக்கு அர்த்தமே இதுவரை விளங்கவில்லை.
ஈரமுள்ள மண்ணில் உயிரினங்கள் தோன்றுகின்றன.அவைகள் தாவரங்களாகவும்,விலங்குகளாகவும்(மனிதன் உட்பட)வளர்ந்து பின் மண்ணில் மறைகின்றன.இறந்துபோன உடலில் இருந்து பல புழு ,பூச்சிகள் கள் உருவாவதை நாம் கண்கூடாக பார்த்துள்ளோம். இறந்துபோன விலங்கின் உடலிலிருந்து விலங்குகள் உருவாவதில்லை.ஆனால் இறந்துபோன தாவரத்திலிருந்து அதன் இனத்தாவரம் உருவாகிறது.

ஒரு செல் உயிரினங்களான அமிபா,பாக்டிரியா மற்றும் வைரஸ் போன்ற  இவைகள்  அதன் உருவங்களை மாற்றிக்கொள்ள வில்லை.ஆனால் வடிவங்களை மாற்றிக்கொள்கின்றன.மற்ற உயிரினத்தின் வடிவங்களை மாற்றுகின்றன.
பல செல்களின் கூட்டு இயக்கம்தான் விலங்கினம்.
ஒரு உயிரின செல்லை பகுத்து பார்த்தால் அதில் கனிமங்கள்,கரிமங்களின்(inorganic,organic salts) உப்புக்கள் உள்ளன. கனிமங்களின் உப்பு என்பது பொட்டாசியம்,மங்கனீசு மற்றும் கால்சியத்தின் கலவைகள் உள்ளன.

ஈரமண்ணிலிருந்து மண்புழுக்கள் உருவாகின்றன. மனிதன் தலையிலிருந்து பேன் உருவாகிறது. மிருகங்கள் உடலிலிருந்து உண்ணி போன்ற உயிரினங்கள் உருவாகின்றன. ஒரு உயிரினத்திலிருந்து இன்னொரு உயிரினம் ஒட்டுண்ணிகளாக (உருவாகின்றன)வளர்கின்றன.

உலகில் அடிப்படை உயிரினம் தோன்ற காரணம் ஈரமண் தான்.சரி இந்த ஈரமண்ணில் அப்படி என்னதான் உள்ளது?
கரி உள்ளது(C12,C14-CARBON ATOMS & AVTIVATED CARBON ATOMS) நாம் உண்ணும் உணவில் நீரும் கார்போ ஹைட்ரேட்டும் நிறைந்து காணப்படுகிறது. நீரில்(H2O)-ம்,கார்போஹைட்ரேட்டில்-(C-H-O) கரியும் ஹைட்ரசனும்.ஆக்சிசனும் மூலக்கூறுகளாக (molecular bond) அமைந்துள்ளன.
மண்ணில் கிடக்கும் கனிம மற்றும் கரிம அணுக்களின் கூட்டோடு காற்றில் இருக்கும் ஹைட்ரசனோடு அணு இ(பி)ணைப்பு( ATOMIC FUISION) ஏற்பட்டு தொடர் நிகழ்ச்சியின் விளைவாக உயிரினம் தோன்றுகிறது.
                                         
ஒரு உயிரின செல்லில் மையக்கரு (nucleic acid) உள்ளது. அதைச்சுற்றிலும் உயிர்மை ஆற்றல்பெற்ற திரவங்கள் உள்ளன.உயிரின செல்லைச்சுற்றிலும் நீழ்ச்சியடையக்கூடிய மெல்லிய பாதுகாப்பு சுவர் உள்ளது    
                                
எப்படி ஒரு அணுவின் மையப்பகுதியில் கருவும் (நியூட்ரான்+புரட்டான்) அதைச்சுற்றிலும் நிலைபெறா தன்மையுடைய எலக்ட்ரான்கள்(electrons) உள்ளதோ அதைப்போலவே உயிரினச்செல்லிலும் அமைந்துள்ளது.
முதலில் தோன்றிய உலகில், அதாவது எரிமலைக் குழம்பில் கனிம,கரிம கூட்டில் நீரோடு இணைந்து வேதியல் மாற்றத்தால்  ஒரு செல் உயிரினம் தோன்றியது.(வேதியல் மாற்றம் என்பது நிலையானது. உலகம் சுழலும் வரை உயிர்கள் இயங்கும் வரை ஒரு தொடர் நிகழ்ச்சியே வேதியல் மாற்றம்)  
உலகில் அணுச் சிதறல் நிகழ்ச்சி (அதாவது ஒரு அணுவின் எலக்ட்ரான்கள் விடுபட்டு இன்னொரு அணுவில் இணையும் நிகழ்ச்சி) அன்றடம் நடக்கும்.இதனால் அணுத் தொடர்   (atomic reaction) வினை நிகழ்ந்து கொண்டே இருக்கும். உலகத்திலுள்ள உயிரினங்கள்  தொடர்ந்து இயங்குவதற்கு இது தான் காரணம்.

அணுவும் நிலைத்தன்மை அற்றது. உயிரினச் செல்லும் நிலைத்தன்மை அற்றது. உயிரினச் சலனங்களுக்கு இதுவே காரணம்.

ஒரு செல் உயிரினங்களான அமிபா,பாக்ட்ரியா மற்றும் வைரசுகளின் கூட்டுச் செல்கள்தான்  உயிரினங்களான தாவரங்கள்,விலங்குகள்,மற்றும் மனிதர்களை தாக்கி சேதங்களையும் உருவ மாற்றங்களையும்(damage and de-morphing)  ஏற்படுத்துகின்றன.

இந்த உருமாற்றங்களுக்கு காரணமான மூலக்கூறு(god particle) எது என ஆராய்ந்ததில் இன்றய(05.07.2012) செய்தி மற்றும் ஊடகங்கள் வாயிலாக படித்திருப்பீர்கள். ஐரோப்ய கூட்டமைப்பு நாடுகள் ஒன்று சேர்ந்து அணுக்கரு ஆராய்ச்சி மையம்(CERN-CENTRE FOR NUCLEAR RESEARCH) ஒன்றை உருவாக்கி பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு நேற்றுதான் அந்த ரகசியத்தை கண்டறிந்ததாக செய்தி வெளியிடப்பட்டது.

கடவுளைக் கண்டேன் என இந்திய ஆன்மீக வாதிகள் சொல்வதற்கும் கடவுள் துகள் கண்டுபிடிப்பதற்கும் பெரிய வேறுபாடுகள் இருப்பதாக தெரியவில்லை. அப்படியானால் இது மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் செயலாகத் தோன்றவில்லையா?  

கடவுள் துகளின் செயல்பாடுகள் என்ன? அதை கட்டுபடுத்துவது எப்படி? யாருக்கு கட்டுப்பட்டு இயங்குகின்றது? உயிரினங்களின் வாழ்நாளை நிர்னயிப்பது யார்? பெரும்பாலும் உயிரினங்கள் தங்கள் வாழ்நாளை(தாவரம்,விலங்கினம் மற்றும் மனிதம்)  முழுமையாக முடிக்காமல் இடையில் மரணமடைவது ஏன்? என்பதற்கு விடை கிடைக்கும்


மனிதன் காலங்காலமாக சிந்தித்து  கட்டுக்கதைகளையும் புராணங்களையும் எழுதிவைத்துவிட்டு போனதை இன்றும் அதில் அறிவியல் உண்மைகள் இருக்காதா ? என  ஆராய்ந்துகொண்டிருப்பதின் விளைவே இந்த கடவுள் துகள் கோட்பாடு.

கட்டுக்கதைகளுக்கும் உண்மைக்குப் புறம்பான  செய்திகளை மற்றவர்களுக்கு பறைசாற்றுவதில் கைதேர்ந்த இந்திய அறிவியலாளரில் ஒருவரான சத்யேந்நிர போஸ்-ன்(1925) கொள்கையும் அய்ரோப்ய அறிவியலாளர்(இங்கிலாந்து) பீட்டர் ஹிக்சு(வயது84) கொள்கைகளை இணைத்து (HIGGS +BOSE=HIGGS BOSANS THEORY) வெளியிட்டனர். இதற்குபேர்தான் கடவுள் துகள் கண்டுபிடிப்பு என பெயரிட்டனர்.

பூமிக்கு அடியில் 300 அடி ஆழத்தில் 27 கி.மி தூரத்திற்கு நீள்வட்ட சோதனை கூடத்தை கட்டி அதில் அணுக்களுக்கு இடையே பேரிடியை(BIG BANG) ஏற்படுத்தி ஒர் எடையற்ற (mass) பருமனை (புகைபோன்ற)உருவாக்கி அதற்கு எடையை உருவாக்கும் சக்தி எது என கண்டறிந்து அதற்கு கடவுள் துகள்(god particle) என பெயரிட்டனர். அவ்வளவே.

இந்த கண்டுபிடிப்பால் மனிதன் சாதிக்கப்போவது என்ன? எதுவும் இருக்காது.
அந்த சக்திவாயந்த துகளை மனிதன் தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு  விளையாட முடியுமா என்ன?

மனிதன் நினைப்பது என்ன?
கடவுள் ஒருவர் உருவமாக இருப்பதாகவே கற்பனையாக வைத்துக் கொள்வோம்.அந்த உருவத்திற்கு மனிதனுக்கு இருப்பது போல் ஆசைகள் எல்லாம் இருக்கக்கூடாது.அதாவது கடவுள் தனக்கென்று மனைவி மகன் அல்லது மகள் உறவு என சொல்லிக் கொள்ள யாருமே இருக்கக்கூடாது. அசையும் அல்லது அசையா சொத்து இருக்க கூடாது.

மனிதன் தான் நினைப்பதை எல்லாம் நொடிப்பொழுதில் கிடைக்க கடவுள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
1-வாலிபம் நிலைக்க வேண்டும்
2-தான் நினைக்கும் பெண்ணோடு கூடவேண்டும்
3-இவனுக்கு பிறக்கும் பிள்ளைகளும் இவன் பேச்சை மட்டுமே கேட்க வேண்டும்
4-நோய் வரக்கூடாது
5-இவன் வேண்டும்போது இடியில்லா மழை பொழிய வேண்டும்.
6-இவன் வேண்டும்போது மழை நிற்கவேண்டும்
7-மழையால் வெள்ள பாதிப்பு வரக்கூடாது
8-சுனாமி வரக்கூடாது
9-பூகம்பம் வரக்கூடாது.
10-மற்ற விலங்கு முதற்கொண்டு மனிதர்கள் அனைவரும் இவன் சொல்வதை கேட்க வேண்டும், கேட்டு அதன்படி நடக்கவேண்டும். மரணமே நிகழக்கூடாது.மற்றவனுக்கு மரணம் வந்தால்கூட இவனுக்கு மட்டும் மரணமே நிகழக்கூடாது.மொத்தத்தில் இவனே கடவுளாக மாறவேண்டும்.
அதுசரி மனிதன்மட்டுமே உலகை ஆளவேண்டுமா? மனிதனுக்கு இணை பெண் அல்லவா? பெண் நினைப்பது என்ன?
ஆண்கள் மட்டும் தான் வித விதமான பெண்களை(தங்களை) அனுபவிக்க வேண்டுமா?
பெண்களுக்கும் ஆண்களைபோல் ஆசை உண்டே! ,வெளியில் சொல்ல முடியாத ஆசை . அது என்ன?
1-ஆண்களை அடக்கியாள வேண்டும்
2-தான் நினைக்கும் ஆணோடு இணைய வேண்டும்
3-பெண்மை எப்பொழுதும்(இளமை) நிலைத்திருக்க வேண்டும்
4-உலகில் இவளே பேரழகி என எல்லோரும் பாராட்டவேண்டும்.
5-கணவன், மாமனார்,மாமியார்,நாத்தனார் மகன் மகள் உள்பட அனைத்து உறவுகளும் இவள் பேச்சை கேட்க வேண்டும்.அதன்படி நடக்கவேண்டும்.
6-நோய் இல்லா வாழ்க்கை வேண்டும்.
7-மரணமே நிகழக்கூடாது.      

இதெல்லாம் நடக்க கூடிய காரியமா?

இப்படி சிந்தித்த மனிதன் அவனே கடவுள் அவதாரமாக ஏன் மாறக்கூடாது? பெண் இனத்தை தலைதூக்க விடக்கூடாது.அப்படித்தான் சாமியார்களும்,மத குருமார்களும், பாதர்,பிஷப்,போப் மற்றும் இமாம்,காஜி போன்ற மத இடைத்தரகர்கள் (கடவுளுக்கும் பாமர மனிதர்களுக்கும்-கடவுள் இருக்கின்றாராம் ஆனால் பாமர மனிதனிடம் கடவுள்  பேசமாட்டாராம்,பேசக்கூடாதாம் ,அதானால்தான் இந்த இடைத்தரகு ஏற்பாடு) என உலகம் முழுக்க  உருவாக்கினர்.. 
இவர்களை மனிதர்களின் அய்யோக்கியர்கள் என அழைத்தால் என்ன தவறு?அதாவது அடுத்தவர் உழைப்பை சுரண்டி வாழ வாழ்வாதாரங்களை அமைத்துக் கொண்டவர்களை அப்படித்தானே அழைக்க முடியும்?

பிரபஞ்ச அமைப்பு அதாவது ஆகாயத்தில் அமைந்துள்ள சூரிய குடும்பம்(சூரிய குடும்பம் என்பது சூரியனை சுற்றி இயங்கும் கோள்கள் பூமியில் உயிரினங்கள் வாழ உதவுகின்றன) எப்படி இயங்குகின்றன என பல ஆயிரக்கணக்கான வருடங்களாக மனிதன் தன் அறிவாற்றலால் கற்பனையாகவும் தொலை நோக்கு கருவி கொண்டு சில நிஜங்களையும் (12 கோள்களும் அவைகளைச் சுற்றி துணைக்கோள்களும் இணைந்து சூரியனைச் சுற்றிவரும் கோட்பாடு) விளக்கும் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டன. கற்பனையில் எழுதப்பட்டது பஞ்சாங்கம்(Almanac) தொலை நோக்கு கருவி கொண்டு எழுதப்பட்ட நூல்கள் வான் அறிவியல் (Astranomy)எனப்படுகின்றன. பல பிரபஞ்சங்கள் சேர்ந்தது தான் மகா பிரபஞ்சம் (பேரண்டம்)

பிரபஞ்ச இயக்கத்தின் அடிப்படையே அணுத் துகள்(Atomic particles) கட்டமைப்பில் தான் இயங்குகின்றது. எனவே இந்த அணுத்துகளுக்கு எடை ஏற்றுவது எது என தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த எடை ஏற்றம் எப்படி நிகழ்கிறது என நாம் தெரிந்துகொள்ள அதைப்பற்றிய கொள்கை வடிவ நூல்கள் வெளிவந்த பிறகே நாம் அறிய முடியும்.

தானாக உயிரினங்கள் எப்படி உருவாகின்றது என்பதை விளக்குவது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.உலகம் முழுக்க பல தரப்பட்ட கனிமங்களும்(சுமார் 104 கனிமங்கள் ) அதனைச்சுற்றிலும் பல தரப்பட்ட கரிமங்களும் (கார்பன்,சுண்ணாம்பு,மங்கனீசு,பொட்டாசியம்,பாஸ்பரஸ் மற்றும் சிலிகா போன்ற) அதனதன் தன்மைகளுக்கு ஏற்ப மண்ணில் ஈரத்துடனும் நீருடனும் இணைந்து பல வேதியல் மாற்றங்களுக்குப்பின் பல  தரப்பட்ட பல்வேறு வடிவங்காக உயிரினங்கள் தோன்றுகின்றன.உயினங்களின் உச்சகட்ட உரு மாற்றமே தற்பொழுதுள்ள மனிதர்கள்.

இந்நிலையில் மனிதர்களை நல்வழிப்படுத்த மனிதனே உருவாக்கிய கொள்கைதான் கடவுள் வழிபாட்டுக்கொள்கை. இந்த கொள்கை வழிப்பாட்டில் சொர்க்கம்,நரகம்,முற்பிறவி மறுபிறவி,பாவம் ,புண்ணியம் இவைகளை அடைய  சடங்குகள் செய்தாலோ அல்லது செய்யாமல் விட்டாலோ அவரவர் எண்ணங்களுக்கு ஏற்றாற் போல் அமையட்டும்.

ஆனால் இந்த சடங்குகளால் அல்லது உடலை வருத்தும் விரத வழி பாட்டால்(கடவுள் வழிபாட்டால்) மனிதனிடம்(உழைப்பாளியிடம்) மனிதனே(உழைக்காமல்) பணம் பண்ணும் செயல்களை நாம் எப்படி நியாயப்படுத்த முடியும்?            
  



Sunday, July 8, 2012

40-;நீதிபதிகளின் மறுமுகங்கள்


                               40-நீதிபதிகளின் மறுமுகங்கள்
மனிதன் உருவாக்கிய மதங்களில்(religions) மயங்கியவன் இன்றளவும் தெளிவு பெறவில்லை.
மதக்கொள்கைக்கு உடன் பாடு இல்லாதவர்களை அந்நியராக நினைத்து சமுதாயத்தில் செயல் இழக்கச் செய்வதில் மனிதனுக்கு நிகர் மனிதனே.

1-பாகித்தானில் குரானை அவமதித்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்(இன்றய 06.07.2012 தேதியிட்ட தினத்தந்தி) ஊர்மக்கள் ஒன்று கூடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு  குரானை அவமதித்தவரை வெளியே இழுத்துவந்து பெட்டரோல் ஊற்றி கொளுத்தி சாகடித்து விட்டனர்.

2-கிருட்னகிரி(தர்மபுரி) அருகே கோயில் திருவிழாவில் ஆன்மீகத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தவரை துப்பாக்கியால் சுட்டும் தலையை வெறிதீர தனியே வெட்டி வீசினர்,ஆன்மீகவாதிகள்

3-காவேரிப்பாக்கம் அரசு பள்ளி வளாகத்தில் பெரியார் சிலை நிறுவுவதில் உள்ளூர் ஆன்மீக வாதிகளுக்கும் (பாரதீய சனதா கட்சி)பெரியார் ஆதரவாளருக்கும் நீதி மன்ற வழக்கு நிலுவையிலிருந்து நேற்று (05.07.2012)தீர்ப்பளிக்கப்பட்டது. ‘பள்ளி வளாகத்தில் பெரியார் சிலையை நிறுவுவதால் பள்ளி மாணவர்கள் நாத்திக வாதியாக அதாவது கடவுள் மறுப்பாளராக மாறிவிடுவர் என அஞ்சத்தேவையில்லை’ என தீர்ப்பு சொல்லி சிலையை நிறுவலாம் அனுமதி அளித்தது.
 மனிதன் காட்டுவாசியாக வாழ்ந்த காலந்தொட்டு , இயற்கை சீற்றங்களுக்கு பயந்து தான் உயிர்வாழ நடத்திய சடங்குகளை, இன்றுவரை மதவாதிகள் தன் சுய லாபத்திற்காக விளம்பரப்படுத்தி சிறிதும் தொய்வில்லாமல்  பாமரனை மதி மயக்கி வைத்துள்ளனர்.
இதன் விளைவால் நிகழ்வதுதான் மேலே குறிப்பிடப்பட்ட 3 நிகழ்ச்சிகள். தங்களுடைய பாதுகாப்பிற்கும் எதிர்கால வாழ்வாதாரங்களைப் பற்றியும்  சிறிதும் கவலைப்படாத காட்டுமிராண்டி ஆன்மீக வாதிகளால்(பாமரவாசிகள்) தான் மனித சமுதாயத்திற்கு அழிவைத்தவிர வேறு என்ன நன்மை ஏற்படப்போகிறது?

இதற்கெல்லாம் காரணம் நாட்டின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் ஆட்சியாளர்கள்தானே?
ஆன்மீகம் மனிதநேயமற்றது. பகுத்தறிவாதம் மட்டுமே மனித வளம் பெறுக வழிகாட்டும்.

அப்பொழுதுகூட நாத்திகவாதிகளால் மனித சமுதாயத்திற்கு என்ன தீமை விளையும் ?என அந்த தீர்ப்பு ஏன் அமையவில்லை? நீதிபதியும் ஆன்மீக வம்சத்திலிருந்து வந்தவர்தானே?
நீதி பதிகளின் மறுமுகங்களை காண்பீர்! 

           


Monday, July 2, 2012

39-பக்தர்களின் மறுமுகங்கள்


                               39-பக்தர்களின் மறுமுகங்கள்

இன்றய செய்தி தாளில் (30.06.2012 தேதியிட்ட தினத்தந்தி) திருப்பதியில்  1¼ லட்சம் மது புட்டிகளும் மக்களின் உணவு பொருட்களான கோழி மற்றும்  ஆட்டிறைச்சியையும் அழித்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என அதே செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது. அதாவது மேல் திருப்பதி(திருமலை) கடவுள் வாழும் இடமாம். அங்கே மதுவுக்கும் இறைச்சிக்கும் இடமில்லையாம்.
அப்படியானால் அங்கே மனிதர்கள் வாழ்வதே இல்லையா? மனிதன் உண்ணும் உணவுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு ?மனிதன் தாவரங்களையோ அல்லது தாவர தானியங்களையோ மட்டுமே உயிர்வாழ முடியாதென்பது நிருபிக்கப்பட்ட உண்மை.
 மதுவோடு மாமிசம் உண்பதால் மனிதன் அறவழி தவறிய செயல்களில் ஈடுபடுவான் என்பது உண்மைதான். அதற்காக பயணம் செய்யும் காலங்களில் மட்டும் மதுவை தடை செய்யலாம் .இன்றியமையாத மாமிச உணவை தடை செய்வது என்பது அரசாங்கம்  மனித உரிமையில் தலையிடும்  செயலாகும். 
விலங்கினங்களிலும் மனிதரிலும் சைவ உணவு விரும்பிகள் உண்டு .ஆனால் அவைகள் யாவும் அசைவ உணவான தன் தாய் இனத்தின் ரத்தத்தை(பால்) உறிஞ்சி வளர்கின்றன. வளர்ந்த பின் ஆடு மாடுகளும் சில மனித இனங்களும் தாவர உணவுக்கு மாறுகின்றன.

அப்பொழுது கூட வளர்ந்த மனிதர்கள் மாட்டுப்பாலையும் ஆட்டுப்பாலையும் அதன் விளைபொருட்களான தயிர் மற்றும் நெய் போன்ற வற்றை இறக்கும் வரைகூட விடுவதில்லை. அந்த வகையில் சைவ விலங்குகளை விட சைவ மனிதன் மோசமானவன்.

உலகில் சுமார் 700 கோடி மக்கள் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகம் சைவ உணவு உண்டு வாழும் மக்கள்   இந்தியாவில் உள்ளனர்.(சுமார் 20 கோடி மக்கள்)

சுமார் 680 கோடி மக்கள் அசைவ உணவு பிரியர்களே. இவர்களில் 300 கோடி மக்கள்(கிறித்துவம் மற்றும் இசுலாம் மதம்) தினமும் யேசு மற்றும் அல்லா போன்ற தெய்வங்களை வணங்குபவர்கள்.மற்ற 380  கோடி மக்களில் 100 கோடிக்குமேல் இந்துக்கள்(இந்தியா மற்றும் நேபாளம்) அசைவ உணவு விரும்பிகள்.மீதமுள்ள 280 கோடி மக்கள் புத்த மத மற்றும் மாறுபட்ட இந்துக்களாக சைனா,சப்பான்,மலேசியா,சிங்கப்பூர்,கம்போடியா வியட்நாம்,தாய்லாந்து,இலங்கை,மியான்மர் போன்ற நாடுகளில் வாழ்கின்றனர் .

இவர்கள் யாவருமே அசைவ உணவு பிரியர்கள் தான் முக்காலமும் கடவுள் பக்தி கொண்டவர்கள். அசைவ உணவு உண்ணும் மக்களுக்கு எல்லாம் ஆண்டவன் அருள் கிடைக்காதா?என்னதான் தங்களுக்கு இறைவன் அருள் என்றும் உள்ளது என நம்பி வாழ்ந்தாலும்  வழக்கமான இயற்கை சீற்றங்களான பூகம்பம்,சுனாமி,இடி,மின்னல்,வெள்ளச்சீற்றம், மற்றும் சாலை,கடல் மற்றும் வானூர்தி விபத்துக்கள் (என்னதான் மனம் உருகி இறைவனை வேண்டினாலும்) போன்றவைகளிலிருந்து மனிதன் தப்ப முடியவில்லை.உலகில் மனிதனின் சராசரி வாழ்நாளான 100 ஆண்டுகளை முழுவதுமாக நிம்மதியாக முடிக்க முடியவதில்லை.
                            
உயிர்வாழ உணவு உண்ண வேண்டும்.என்னதான் உண்ணா நோன்பு இருந்தாலும் மீண்டும் உணவு உண்ண வேண்டும்.இதில் சைவமா இருந்தால் என்ன? அசைவமாயிருந்தால் என்ன? எல்லாருக்கும் முடிவு ஒன்றுதானே?

உலக மக்கள் இப்படி இருக்க திருப்பதியில்  வாழும் கடவுளுக்கு பாலாபிஷேகம்(அசைவம்)மட்டும் பிடிக்குமாம்.   திருமலையில் வாழும் மக்களுக்கு இறைச்சி உணவு பிடிக்காது என்பது யார் கண்டுபிடித்த உண்மை? திருமலையில் உணவைத்தேடும் பக்தர்களுக்கு (மக்களுக்கு நீரிழிவு நோயைத் தரக்கூடிய)சைவ உணவை திணிப்பது மனித உரிமை மீறல் அல்லவா? இவையாவும்(இறைச்சி உணவை அழிப்பது) இறைவனின் இடைத்தரகர்களான மதவாதிகளின்  ஆர்பாட்டம் அல்லவா?கடவுள் பக்தர்களின்(மத வாதிகளின் ) மறுமுகங்களை காண்பீர்!        




Friday, June 22, 2012

38-தமிழரின் மறுமுகங்கள்


                            38  தமிழரின் மறுமுகங்கள்

ஒவ்வொரு இனமும் அதன் குணம் சார்ந்த அதாவது ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடக்கியாள நினைக்கும் மிருக குணம் நிறைந்த மக்கள் இனம் தான் அதிகம்.
மனிதனை மனிதன் அடக்கியாள உருவாக்கிய கருவி தான் வே(பே)தங்கள்.
எத்தனை மதங்கள்? எத்தனை வே(பே)தங்கள்-வேறுபாடுகள்? இதோ
1-     இந்து மதம் உருவாக்கியதுதான் பகவத் கீதை                       
கடவுள் மனிதனுக்கு அறிவுருத்திய அறிவுரைகள் அடங்கிய நூல்.அதாவது கிருட்ண கடவுள் அவதாரம் அர்ச்சுனன் என்னும் அசாதாரண மனிதனுக்கு போர்களத்தில் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பை(வாழ்வியல் தத்துவம்) நூல் வடிவமாக மக்களுக்கு தந்தது வியாசமுனிவர்.(3000 ம் ஆண்டுகளுக்கு முன்)

2-இந்து மதத்திலிருந்து பகுத்தறிவாத இயக்கம், மதமாக  மாறிப்போன புத்த மற்றும் சைன மதங்களின்- போதனைகள் அடங்கிய வேத நூல்கள்(2500 ஆண்டுகளுக்கு முன்) பராமரிக்கப்படவில்லை எனினும் சைன மதத்தில் மனிதன் மகிழ்ச்சியாகவும் சக மனிதனை(உயிரினங்களை) துன்ப படுத்தாமல் அறவழி நிலையை கடைபிடிக்க  மக்களுக்கு போதிக்கப்பட்டன. 

3-கடவுள் அனுப்பிய தூதராக(யாரும் கடவுளை கண்டதாக  பைபிளில் கூறப்படவில்லை)  மண்ணில் தோன்றிய யேசுவின் அறிவுரைகளினால் வெகுண்டெழுந்த மன்னர்களின் கோபத்திற்க்கு ஆளாகி சிலுவையில் அறையப்பட்டார்.மக்களின் அனுதாபத்தை பெற்ற யேசு மீண்டும் உயிர்த்தெழுந்ததாக கூறப்படும்  10 கட்டளைகளின்(மனிதர்களின் வாழ்வியல் தத்துவம்) விரிவாக்கம் தான் பைபிள் (2000 ம் ஆண்டுகளுக்கு முன்)

4- ஆனால் கடவுளே தனக்கு நேரில்(கனவில்?)தோன்றி அருளப்பட்டது தான் குரான் எனும் மனித வாழ்க்கை வழி காட்டி நூல் என முகமது நபி அவர்கள் மக்களை நம்பச் செய்தார். (1500 ஆண்டுகளுக்கு முன்)

5-அறிவியல் முன்னேற்றம் அடைந்த காலங்களில் இந்தியாவில் உருவான சீக்கிய மதம்,அறிவியல் ரீதியாக மக்களை அடக்கியாள முடியாது என அறிவியலை புறந்தள்ளி   மூட நம்பிக்கைகள் கொண்ட புதிய மதம் இது.(400 ஆண்டுகள் முந்தையது) இதன் மத நூல் கிரந்தம்  என அழைக்கப்படுகிறது.  

சைன மதம் தவிர அனைத்து மத மக்களும் அறவழி தவறிய செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முனைப்பு காட்டுகின்றன.(மனித வதை,மிருக வதை,கோபம்,களவு,மனித மற்றும் மிருக கொலை போன்ற கொடிய அறவழி தவறிய செயல்)

அதாவது தனக்காக ஒரு வாழ்க்கை பிறருக்காக ஒரு வாழ்க்கை என இரட்டை நிலைதான் இப்பொழுது பெரும்பாலான மதம் சார்ந்த மக்களின் வாழ்க்கையாகிவிட்டது.தன்னலம் ஒன்றே இந்த அனைத்து மத மக்களின் கொள்கையாகிவிட்டது .

மத நூல் வழிகாட்டும் அறிவரைகளை யாரும் கடைபிடிப்பதே இல்லை; மத குருமார்கள் உட்பட. இதனால்தான் போலி சாமியார்கள் பிரச்சினைகள் தலைதூக்குகின்றன.
தற்கால சைன மதத்தவரும் அறவழி தவறிய வட்டிக்கடை, மற்றும் அதர்ம வியாபார உத்திகளை கையாளுகின்றனர்.இவர்கள் வெய்யிலில் உழைக்க விரும்புவதே இல்லை. (உழைக்காமல் பிழைக்கும் யுக்தி) பின் எப்படி தர்ம சிந்தனை தோன்றும்?

மனிதனின் கற்பனா சக்தியில் உருவானதுதான் கடவுள் கொள்கை.கற்பனையும் உண்மைக்கு புறம்பான கட்டுக்கதைகள் நிறைந்த, நிருபிக்க முடியாத, சொல்லாற்றல் பெற்றதுதான்(enchanting words or mantras) புராணக்கதைகள். நடந்த உண்மை நிகழ்ச்சிகளாக புராணத்தில் கூறப்படும் செய்திகள் யாவும் அறிவியல் பூர்வமாக மாற்றமுடியாதா ? என மனிதனை ஏங்க வைக்கும் கற்பனை கதைகள்.  புராணக்கதைகள் எல்லா மதங்களிலும் உலகம் முழுக்க பரவியுள்ளது.

மதமும் அறிவியலும் ஒன்றாக ஒத்து இயங்காது .அறிவியல் பூர்வமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும், என உலகில் யாரும் கவலைப்பட்டுக் கொள்ளவதில்லை. இதற்கு காரணம் நாட்டின் ஆட்சியாளர்களே இந்த சிந்தனையில் அமைவதில்லை.

அப்படி ஒரு சிந்தனையாளன் நாட்டில் உருவனால் அவனுக்கு பாராட்டு தெரிவிப்பதோடு சரி,அவனுடைய புரட்சிகரமான கொள்கைகளை வாழ்க்கையில் கடைபிடிக்க முயற்சிப்பதோ அல்லது முயற்சிக்க வைப்பதோ முனைப்பு கட்டுவதில்லை. பெரியாரின் பிறந்த நாளை கொண்டாடுவதும் அவர் இறந்த நாளை நினைவு கூறுவதும் ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்ச்சிகள்.ஆனால் அவருடைய பகுத்தறிவாத சிந்தனைகளை பள்ளி மற்றும் கல்லுரி பாடத்திட்டத்தில் சேர்க்க திராவிட கட்சி ஆட்சி காலத்தில் அதன் தலைவர்கள் ஏனோ முயற்சிக்கவில்லை. 

அதைப்போலவே புரட்சிக்கவி பாரதிதாசனின் பிறந்த நாளும் கொண்டாடப்படுகின்றன.   புரட்சிக்கவி இறந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் அவருடைய பகுத்தறிவாத கவிதைகளை,பாடல்களை பள்ளி கல்வி பாடத்திட்டத்தில்,கல்லுரி பாடத்திட்டத்தில்  இதுவரை ஏன் சேர்க்கவில்லை? திராவிடக்கட்சிகள் அவருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக அவருடைய கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் பரப்ப ஏன் முயற்சிக்கவில்லை?

பொய்யும் கற்பனையும் நிறைந்ததுதான் சமய இலக்கியங்கள்.சமய இலக்கியங்களை பய பக்தியுடன் போற்றி பாதுகாக்கும் குணம் கொண்டவர்களாக தமிழர்களை மாற்றிவிட்டனர். மக்களை  தற்சிந்தனையாளராக மாற்ற எந்த அரசியல் கட்சியும், ஆட்சியாளரும் விரும்புவதில்லை. தமிழகத்தை ஆண்ட ஆளப்போகும்,ஆளத்துடிக்கும் அத்தனை கட்சிகளும் தமிழர்களை திராவிட இனங்களில் ஒன்றாக நினைக்கிறது. தமிழ் நாட்டில் தனியாக தமிழர்களுக்கு என்று தனி இட ஒதிக்கீடு வழங்க முடியாது என்கிற எண்ணத்தில் செயல்படுகின்றன
.தமிழகத்தில்

1-முதல் தர குடிமக்களாக தெலுங்கர்கள்(நாயுடு,கம்ம நாயுடு,நாயக்கர்)உள்ளனர்.தமிழகத்தின் பெரும் பணக்காரர்களாக உள்ளனர்,சுமார் 400 பொறியியல் கல்லுரிகளும் 10க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லுரிகளும்,பெரும் நில உடமையாளர்களாகவும் தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.
2- அடுத்து வட இந்தியாவைச்சார்ந்த சைன சமுகத்தினர் மற்றும் ராசபுத்திர ர்கள்(மார்வாரிகள்) -இவர்கள் தமிழக கிராமபுர மக்களின் நம்பிக்கைகளான தாலி மற்றும் பித்தளை பாத்திரங்களை அடகுவைத்து அதிக வட்டிக்கு பணத்தை கொடுத்து அவைகளை மீட்டெடுக்க ஏழைகளின் வியர்வை துளிகளை தங்களின் ஆடம்பர வாழ்க்கைக்கு அடித்தளமாக பயன்படுத்துவதை இன்றளவும் காணலாம் - இவர்கள் தமிழகத்தின் இரண்டாம் தர குடிமக்களாக வாழ்கின்றனர். 
3-அடுத்து மலயாளிகள்(நாயர்,மேனன் போன்றோர்) தமிழகம் முழுக்க தேநீர் மற்றும் உணவு விடுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் வைத்து மூன்றாம் தர குடிமக்களாக வாழ்கின்றனர்

4- அடுத்து கன்னடியர்கள்(அய்யங்கார்,கவுடா,லிங்காயத் போன்றோர்),இவர்கள் உடுப்பி உணவகங்கள் ,பேக்கரிகள் நடத்தி நான்காம் தர குடிமக்களாக வாழ்கின்றனர்.

(தமிழகத்தில் பணம் கொழிக்கும் தொழிலான சினிமா உலகத்தை சார்ந்தவர்கள் கூட மேலே சொன்ன நான்கு  இனத்தவர்தான், திரை இசை பின்னணி குரலில் பாட கூட ஒரு தமிழனும் இதுவரை பிறக்கவில்லை)
தமிழகத்தின் நிரந்தர ஆட்சியாளர்களாக I.A.S,I.P.S  போன்ற ஆட்சியாளர்களாக இருப்பவர்கள் கூட தெலுங்கு,மலயாளம் ,கன்னடம்,மற்றும் ஒடிசா போன்ற வடமாநிலத்தவராகவே உள்ளனர்..இதுதான் கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடந்துவரும் -நடக்கும் ஆட்சியாகும் .இதனல்தான் இதுவரை தமிழில் ஒரு அரசு ஆணை கூட வெளியிட முடியவில்லை .தப்பித்தவறி ஒரு தமிழன் அமைச்சராகிவிட்டால் அவருடைய தேவைகளை மட்டும் அறிந்து அவருக்குமட்டும் பயன் அளிக்கும் விதமாக நடந்துகொண்டு, அரசு பணிகளை தங்கள் இன மக்களுக்கு அளித்துவிடுவர். .தமிழருக்கு கடைநிலை பணிகளான வாகன ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணிகள் கிடைக்கச்செய்வர்.   எல்லாம் பணம் படுத்தும் பாடு.ஊழல் அரசு.
5- அடுத்து நம் தமிழர்கள் வெய்யிலில் வயல் வெளியில் உழைக்கும் கடும் உழைப்பாளிகள். கூழுக்கும் குடிக்கும் ஆசைபட்டு மற்ற நான்கு இனங்கள் நடத்தும் அரசியல் கட்சிகளுக்கு ஒட்டு போடுவார்கள்.இவர்களை அய்ந்தாம் தர மக்கள் என்று அழைப்பதில் என்ன தவறு?     தமிழர்களுக்கு மொழி உணர்வும் இல்லை, சாதிய உணர்வும் இல்லை, என்பதை தமிழ் நாட்டில் வாழும் மற்ற இனத்தினர்  நன்கு உணர்ந்துள்ளனர்.

இதற்கு உதாரணமாக கூறவேண்டுமானால் 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் ராவண காவியமே(ராமாயணம்)இதற்கு சாட்சி..அதில் தமிழன் (ராவணன்) குடும்பத்தில் தோன்றிய(உடன் பிறந்த) ஒரு இனத்துரோகியைப் பற்றி   அப்பொழுதே விபிஷணன் என்கிற கதாபாத்திரத்தின் மூலம்    அந்த கதையில் விவரிக்கப்பட்டுள்ளது. இன்றளவும் தமிழினத்தின் நிலை இதுவே. அதாவது ஒரு இனத்து மக்கள் ஓரணியில்(ஒரு கட்சியில்) இல்லை என்பதற்கு இன்றய அரசியல் தன்மை எடுத்துக்காட்டுகளாக உள்ளது. இதைப்பறியெல்லாம் நினைத்து வெட்கி தலைகுனியும் நிலை எப்பொழுது இந்த தமிழனுக்கு ஏற்படும்? அந்த நாளே தமிழன் தன்னிலை உணர்ந்த நாள்.

தமிழர்களுக்கு மொழி உணர்வு இருந்திருந்தால், ஆந்திரம்,கேரளம்,மற்றும் கன்னடம் போன்று தனித்துவமாக மொழி சார்ந்த மாநிலம் அமைத்திருப்பார்கள். தமிழ் பேசும் இனங்களில் பல சாதிய அமைப்புகள் உள்ளன. ஒரு சாதிக்கும் தன் இனத்தோடு ஒத்து வாழ தெரியவில்லை.
தமிழ் பேசுபவர்கள் பெரும்பாலும் ஏழைகளே. இவர்களில்- அவர் வாழும் ஊர்களில் யாரவது ஒருவர் சுய முயற்சியாலோ அல்லது பிறர் உதவியாலோ பொருளாதாரத்தில் முன்னேறினால் அவரை தன் இனத்திலிருந்து ஒதுக்கிவிடுவர். நேற்றுவரை நம்மோடு பசியும் பட்டினியுமாய் இருந்தவனுக்கு எப்படி பணக்காரனாக மாறினான்.இது நியாய வழியில் வந்ததாக இருக்காது,என பழித்து கூறுவர்.இதுவே தமிழரை நண்டு இனத்திற்கு ஒப்பிடுவர், மற்ற முன்னேறிய இனத்தவர்.

தமிழர்கள் சங்கம் வைத்து இலக்கியங்கள் வளர்த்த காலங்களில் (சுமார் 2000-ம் ஆண்டுகளுக்கு முன்) கவிதைகளில் உணர்வுகளை பறிமாறிக்கொண்டனர்.அத்தகைய மொழிக்கு வசியம் இருந்தது அதாவது மந்திர சக்தி இருந்தது .பின்பு வந்த ஆரியர்கள், ‘தமிழ் நீச மொழி அதில் மந்திர சக்தி இல்லை’  என தன் மொழியை மட்டுமல்ல இனத்தையும்  பழித்ததை உணர முடியாமல் போனது எப்படி? என இன்றுவரை தெரியவில்லை.  எப்படி சுரணையற்ற தமிழராக மாறினார்கள் ? சமஸ்கிரதம் தேவ மொழி என்று கூறியதை நம்மவர்கள் எப்படி நம்பினர் என இன்று வரை தெரியவில்லை.
                                         
 இன்றும் திருமணங்களில் புரியாத சமஸ்கிரதத்தை ஓதுவதால் மணவாழ்க்கையில் அற்புதங்கள் நிகழும் என பாமரன் மட்டுமல்ல எம்.ஏ.எம்.பில்-பி.எச்.டி படித்தவர் மட்டுமல்ல உயர் அறிவியல் பட்டதாரிகளும்,பொறியியல் வல்லுநர் பட்டம் பெற்றவர்களும்   அதை நம்புகிறார் எனில், ஆட்சியாளருக்கு மட்டும் எப்படி சிந்தனை தோன்றும்?

முற்கால தமிழக மன்னர்கள் தற்ச்சிந்தனை அற்றவர்களாக இருந்தனர். சமய சடங்குகளில் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். மக்கள் வரிப்பணத்தில்  உயர்ந்த கோபுரங்களை கொண்ட சைவ மற்றும் வைணவத்தலங்களை அதிகம் கட்டினர்.
குருகுலம் போன்ற பள்ளிக்கூடங்களை நகரங்களில் அமைத்தனர். வெய்யிலில் உழைக்கும் தமிழர்களுக்கு பள்ளிக்கூடம் தேவையில்லை என மன்னரின் அவையில் தீர்மானிக்கப்பட்டது. இதன் காரணமாக படிப்பறிவே இல்லாத கிராமத் தமிழ் சமுதாயம் உருவாகியது.   
                                        
 தமிழகத்தின் நீர்நிலை பிடிப்புள்ள வளமான நிலங்களை ஆந்திரத்தின் தெலுங்கர்கள் கைப்பற்றினர். தமிழர்கள் மலையும் மலைச்சார்ந்த அல்லது கடலும் கடல்சார்ந்த இடங்களில் குடியேறினர். தமிழர்கள்  பங்காளிகளை பகையாளிகளாக்கி வீரத்தை நிலைநாட்டினர்.இனப்பெருக்கம் செய்வது மட்டுமே இவர்கள் பொழுதுபோக்கு.

தங்களுக்குப் பின்னும் தற்சிந்தனையற்ற வாரிசுகள் உருவாவதையே விரும்பினர்.
இதனாலே முன்னோர் கடைபிடித்த சடங்குகளான மூட நம்பிக்கைகளை இன்றளவும் போற்றி பாதுகாக்கின்றனர்.தப்பித்தவறி தானாக படித்து தெளிவடைந்தவனை கூட ‘படித்த முட்டாள்’ என பட்டம் கொடுத்து மகிழ்கின்றனர்.

சமீபத்தில் நான் ஒரு நாள்காட்டி(காலண்டர்) வடிவமைக்க அச்சகத்திற்கு சென்றேன். ராகுகாலம் எம கண்டம் நல்லநாள் கெட்ட நாள் குறிக்கப்படாத நாள்காட்டி அச்சடிக்க விரும்பினேன். அப்படி நாள்காட்டியே அச்சடிக்க முடியாது என அச்சகத்தார் சொல்லிவிட்டனர். ‘அப்படி ஒரு நாள்காட்டி அச்சடிக்க விரும்பினால் ரூ.5000.00லிருந்து 10000.00 வரை செலவாகும். அதுவும் அதை நீங்களே வைத்துக் கொள்ள வேண்டியதுதான்,அப்படி ஒரு நாள்காட்டியை நாங்கள் வணிகத்தனமாக வியாபாரம் செய்ய இயலாது.’ என கூறிவிட்டனர். அப்படியும் ஒரு அச்சக நண்பர் ‘உங்களுக்காக ஒரு இங்லீசு நாள்காட்டி வலை தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து 200 நாள்காட்டி செய்து தருகிறேன்’ எனக் கூறினார்.

அப்படி என் செலவில் அச்சடித்த நாள் காட்டியை நான் அன்றாடம் சந்திக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு விநியோகம் செய்தேன். எனக்கு நன்கு பழக்கமான மளிகை கடைக்காரர் ,நான் தினமும் பத்திரிக்கை வாங்கும் தேநீர் கடைக்காரர் இங்கெல்லாம், ‘நீங்கள் பஞ்சாங்கம் காட்டும் நாட் காட்டி பக்கத்தில் இதையும் மாட்டவேண்டும்’ என கேட்டுக்கொண்டேன்.

மளிகைகடைகாரர் வன்பொருள் கடைக்காரர் இவர்களெல்லாம் வாங்கி வைத்துக்கொண்டனர். தேநீர் கடைக்காரர் வாங்கி வைத்துக்கொண்டு இதை மாட்ட இடமில்லை என கூறிவந்தார்.

நானே அவர் கடையில் இடம் உருவாக்கி மாட்ட வைத்தேன். சனவரி மாதம் மாட்டிய நாள்காட்டி மார்ச் வரை மாற்றவே இல்லை அவர்கடையில் மற்ற நாள்காட்டியேல்லாம் மாதா மாதம் சரியாக மாற்றப்பட்டு வந்தது ஆனால் இந்த பகுத்தறிவு நாள்காட்டியை தொடவே இல்லை.சில நாட்களில் அந்த நாள்காட்டி தாளை கைதுடைக்க வைத்துக்கொண்டனர்.

இன்னும் சிலர் நான் கொடுத்த நாள் காட்டியை சுருட்டி ஒரு மூலையில் வைத்தனர்.மெத்த படித்த தமிழறிஞர் கூட அதை சுருட்டி ஒரு ஓரம் வைத்துவிட்டார் அவர் அலுவலகத்தில் நாலைந்து நாள் காட்டி வைத்துள்ளார்.இந்த பகுத்தறிவு காலண்டரை மாட்ட இடமில்லையாம்.'பகுத்தறிவாளரை பார்ப்பதே பாவம்,அவரோடு பழகுவதே துஷ்ட்ட சகவாசம்' என நினைக்கும் அளவுக்கு தமிழர்களை மாற்றிவிட்டனர் 

இத்தனைக்கும் இந்த மூதறிஞர் எனது ஏழாம் அறிவு இயக்கம் மூலம், நான் எழுதிய நூலை தலைமையேற்று நடத்தி வெளியிட அரும்பாடு பட்டவர்.தினமும் நெற்றியில் குங்குமமத்தையும் சாம்பலையும் பூசாமல் பணிக்கு வரமாட்டார்.    ஆண்டுதோறும் புரட்சிக்கவி பாரதிதாசனுக்கு விழா எடுப்பார்.

அன்றய தினம் பாரதிதாசனுக்கு விழா எடுத்து பாராட்டியவர்கள் அனைவருமே நெற்றியில் பட்டையும் குங்குமமும் வைத்துக்கொண்டு பாரதிதாசனை புகழ்ந்தார்கள்.

அவருடைய கொள்கைகளை வாழ்க்கையில் யாரும் பயன்படுத்த முன் வரவில்லை.அவருக்கு பாராட்டு எதற்கு? அதுவும் செத்தவருக்கு?

எனக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. ‘புரட்சி கவியின் பகுத்தறிவு கொள்கைகளை இன்றுவரை யாரும் மாணவர் உணரும் விதத்தில் பாடத்திட்டத்தில் சேர்க்க வில்லை.அதை ஒரு தவறாக இதுவரை யாரும் உணர வில்லை பின் எப்படி தமிழ் சமுதாயம் தன் மானமுள்ள, சுய மரியாதையுள்ள சமுகமாக மாறும் ?’ என நான் வினவினேன். அதோடு முடிந்தது அந்த விழா,மீண்டும் அடுத்த ஆண்டு புரட்சிக்கவிக்கு பிறந்த நாள் கொண்டாட.இப்படி இருந்தால் அடிமைத் தமிழருக்கு எப்பொழுது விடிவுகாலம் வரும்?  

புலமை என்றாலே பொய் தான். இதில் புரட்சிக்கு இடமளித்து ஒரு கவி உருவாகியுள்ளார் எனில் அது நம் தமிழ் மண்ணுக்கு கிடைத்த பெருமை. இவர் எழுதிய புரட்சிக்கருத்தை சீந்துவார் இன்றுவரை இல்லை.
அவர் பெற்ற மகனே இதற்குச் சான்று.
அறிவாளிகள் வயிற்றில் முட்டாட்கள் பிறப்பார்கள்.முட்டாட்கள் வயிற்றில் அறிவாளிகள் பிறப்பர். இது காலத்தின் சான்று. 
இறந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது மீண்டும் ஒரு புரட்சிக்கவி எப்பொழுது பிறப்பார் ?
எத்தனை புரட்சிக்கவிகள் தினமும் பிறந்தாலும் அடிமைத் தமிழனின் ஆளுமை குணம் எப்பொழுது உயரும்?எப்படி உயரும்?
படித்தால் தானே! படித்தும், படித்ததை அறிவியல் பூர்வமாக சிந்தனை செய்தால்தானே !
காண்பீர் நம் தமிழரின் மறுமுகங்களை !  





Thursday, June 7, 2012

37-இந்திய அரசின் மறுமுகம்-


                     37-இந்திய அரசின் மறுமுகம்
 பலதரப்பட்ட குணங்களை உள்ளடக்கியவன் தான் மனிதன்.
1-ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொன்று வாழ்வது-இனத்துரோகம்
(கும்பல் குணம்)இதற்கு உலகில் பல புராண கால சர்வாதிகாரிகளை உதாரணமாக கூறலாம் , தற்கால இனத் துரோகிகளாக 1-மறைந்துபோன ஹிட்லர், 2-தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை அதிபர் ராசபக்சே 

2-ஒருமனிதன் இன்னொரு மனிதனை அடக்கியாள நினைப்பது-மிருக குணம்-இதற்கு உதாரணமே தேவை இல்லை.உலகில் பெரும்பான்மையான மனிதர்கள்  இதில் அடக்கம்

3-முதிர்ச்சி அடைந்த மனிதன் கூட குழந்தை குணங்களை விட்டொழிக்க முடியாமல்-முயற்சிக்காமல் மடிந்துவிடுவது-குழந்தை குணம் .ஆன்மீக வாதிகளும் ,அருவ வழிபாட்டு மனிதர்களும் இதில் அடக்கம்

4-தன்னுள் உறங்கி கிடக்கும் திறமைகளை வெளிப்படுத்தி பெருமை கொள்வது-அறிவியலாளர்கள் மற்றும் பொருளியல் வாதிகள்(pragmatics) பகுத்தறிவாத குணம் உலக மக்கள் தொகையில் இவர்கள் எண்ணிக்கை சொற்ப அளவே.

உலக நாடுகள் ஒன்றுகூடி மனிதன் ஒரு நாகரிக விலங்கு இனத்தைச் சார்ந்தவனாக இருக்க அல்லது வாழ்ந்து காட்ட பல வழிகாட்டு நெறிகளை வகுத்துள்ளது.

அதேநேரத்தில் எந்த நாட்டு உள் விவகாரங்களிலும் தலையிடுவதில்லை என அடங்கிப்போகிறது.  வலுவிழந்த அதேநேரத்தில் அறவழி கோட்பாட்டை ஒவ்வொரு நாடும் பின் பற்ற வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ளது.

பொது உடமைக் கொள்கையில் கவனம் செலுத்த மனமிருந்தாலும் அதை முதலாளித்துவ நாடுகள் தடுக்கின்றன. உலக வல்லரசுகளான 5-நாடுகளில் 3-நாடுகள் முதலாளித்துவ நாடுகள்.(அமெரிக்கா,பிரிட்டன்,பிரான்சு-முதலாளித்துவ வல்லரசுகள்,ரஷ்யா மற்றும் சீனா-சமத்துவ-பொதுவுடமை வல்லரசுகள்)  . முதலாளித்துவ நாடுகளில் ஆன்மீக சிந்தனையும் மனிதனை மனிதன் அடிமை படுத்தும் குணமும் மேலோங்கியிருக்கும் .

மனிதனின்   குழந்தை குணங்களில்
1- குரங்கை போன்று குடும்பம் நடத்தும் இயல்புடையவன்.
2-மனிதர்களை பார்த்து குழந்தைகள் அப்பா-அம்மா விளையாட்டும் நிலா சோறு ஆக்குவதும் கல்லை வைத்து பூஜீப்பதும், மணல்வீடு கட்டிவாழ்வதும்
ரத்தத்தில் ஊறிய குணங்கள்.
மரண பயமும்(மிருக உணர்வு),இசையை ரசிப்பதும் ,சுய இன்பமும்(இதுவும் மிருக குணமே)மனிதன் சாகும் வரை மறப்பதே இல்லை.மனிதன் முதிர்ச்சி அடையா குழந்தையாகவே வாழ்க்கையை முடித்துக் கொள்கிறான்.
                                                                          
உலக மக்களில் குழந்தை குணங்களும் அடிமை புத்தியும் மனித குலம் தோன்றிய நாளில் இருந்து இன்றுவரை மாறா குணங்கள் பெற்ற ஒரே இனம் தமிழர் இனம்.
இவர்களுடைய சுயசிந்தனையும் சுய மரியாதையும் 2000-ம் ஆண்டுகளுக்கு முன்னரே அழிய தொடங்கி இன்றயநாளில் அடிமை இனமாக திராவிட மாயையில் சிக்கி  சீரழிகிறது. தமிழ் இலக்கியங்களில் இருந்து இதனை நன்கு அறியலாம்.  

இவர்களை இவர்களே ஆள(அதாவது தமிழர்களை தமிழர்களே) தகுதி ஆக்க  பாடு பாடும் ஒரே இயக்கம் ஏழாம் அறிவு இயக்கம்.

மனித இனங்களில் பல மதங்கள்,பல சாதிகள் நிறம்பிவிட்டது. தற்கால சூழலில் இதனை தவிர்ப்பது இயலாத செயல்.உலகத்திலே கடைசியாக உருவான மதம் சீக்கிய மதம் . அது உருவாகி 300 ஆண்டுகளுக்குமேல்   ஆகிறது.இன்றய நிலவரப்படி சுமார் 3 கோடி மக்களுக்கு மேல் வாழ்கின்றனர்.இசுலாம் மதக்கோட்பாட்டையும் இந்து மத கோட்பாட்டையும் இணைத்து உருவாக்கப்பட்டதுதான் சீக்கியமதம். இவர்களின் தற்காப்புக்காக ஒவ்வொரு சீக்கியனும் ஒரு குறு வாள் வைத்துக்கொள்ளலாம் என விதி வகுக்கப்பட்டது.

இதனை எந்த அரசும்(அப்போதய முசுலிம் அரசும்,அதன்பின் வந்த ஆங்கில அரசும் தற்போது ஆளும் மதச்சார்பற்ற இந்திய அரசும்) கண்டுகொள்ளவில்லை.அதாவது ஒரு அரசின் கீழ்வரும் அனைத்து மக்களும் ஆயுதம் அற்றவர்களாக அதாவது நாகரிக மனிதர்களாக மாற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.அவர்களைப்பார்த்து மற்ற இன மக்களும் வீட்டுக்கு வீடு நீண்ட கத்தி மற்றும் நவீன ரக துப்பாக்கிகளும் வைத்துக்ககொண்டனர். இப்பொழுதும் இதனை அரசு கண்டுகொள்ளவில்லை.

ஆனால் தென்னிந்தியர்கள் மட்டும் ஆயுதங்களை வைத்துக்கொள்ளக் கூடாது என மக்களை நிராயுத பாணியாக மாற்றிவிட்டனர்.அதாவது அடிமையாக்கிவிட்டனர்.

சமீபத்தில் பஞ்சாபில் ஒரு சம்பவம் நடந்தது. சில ஆண்டுகளுக்குமுன் பஞ்சாப் முதல் அமைச்சராக இருந்தவரை,அவர் அந்த இனத்துக்கு ஆதரவாக செயல் படவில்லை என ஒரு இன வெறி பிடித்தவன் கொலை செய்துவிட்டான். அதற்கு நாட்டின் உச்ச நீதி மன்றம் கீழ் கோர்ட்டு தீர்ப்பளித்த மரண தண்டனையை உறுதி செய்தது.

இந்த தீர்ப்பை கேட்டு சீக்கிய இன மக்கள் ஒன்று திரண்டு அனைவரும் நீண்ட வாளுடன் தெருவிற்கு வந்து விட்டனர்.

இதனைப் பார்த்த மாநில அரசு உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யவேண்டும் என மனு செய்தது. உச்ச நீதி மன்றம் தீர்ப்பை மாற்றிக்கொண்டது.

ஆனால் ராசீவ் காந்தி கொலையில் (உண்மையான நேரடிக் குற்றவாளிகள் அப்போதே சாகடிக்கப்பட்டனர்)கொலைக்கு துணை புரிந்ததாக மூவருக்கு  தூக்குதண்டனை விதித்தது, இந்திய நீதி மன்றம்.

பஞ்சாபில் போராடியது போல் தமிழின விசுவாசிகள் போராட முடியவில்லை,காரணம் தமிழன் நிராயுத பாணியாகி பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. அவன் போர்குணம் இழந்துவிட்டான். 
இன்னமும் போர்குணம் இழக்காத  சீக்கியர்கள் அவர்கள் இன ஒற்றுமையை நிலைநாட்டி வருகின்றனர்.  

இதிலிருந்து என்ன தெரிகிறது. நமது இந்திய அரசு ஒரு போலியான மதச்சார்பற்ற நாடு என புலனாகிறது.வன்முறைக்கு பயந்து நீதி மன்றமும் தன் நிலையை மாற்றிக்கொள்கிறது.
வன்முறை கும்பல் குணத்தால் ஒரு இனம் வாழ்கிறது.இதே வன்முறை கும்பல் குணத்தால் இன்னொரு இனம் அழிந்து கொண்டிருக்கிறது.

தமிழர்களின் வீரத்தை பெருமையாக பேசி பேசி அந்த நினைப்பில் காலம் கடத்திவிட்டனர். வாளொடு தோன்றிய மறத்தமிழன் ஊருக்கெல்லாம் சோருபோட்டு வந்தாரை வரவேற்று வாழவைத்த தமிழன், இன்று ஒரு புடி சோற்றுக்கு நியாய விலைக் கடைகள் முன்னும், மதுக்கடைகள் முன்னும் மண்டியிட்டு ஈனப்பிழப்பை நடத்துகின்றன். அரசியல்(திராவிட) கட்சிகளும் அவனிடம் 100 ரூபாய் கரந்து அவன் குடும்பத்துக்கே விலையில்லா வீட்டு உபயோகப் பொருட்களை வழங்குகின்றன.திராவிட மாயையிலிருந்து விடுபட்டு என்று தமிழன் என்கிற நினைப்பு  வருமோ அந்த நாளே தமிழனுக்கு சுயமரியாதை நாள். 

 இலங்கையின் பூர்வ குடிமக்களான தமிழர்கள்  வாழ்வாதாரம் தேடி அகிம்சை முறையில் போராடினர். தோல்வி கண்டனர்.சலிப்புற்று ஆயுதம் தாங்கி அந்த அரசை எதிர்த்து போராடி அதிலும் தோல்வி கண்டனர்.அந்த அராஜக அரசுக்கு இந்தியா உட்பட பல உலகநாடுகள் துணைபுரிந்தன.இதனால் தமிழர்கள் வீரமரணத்தை தழுவ நேரிட்டது. 

எஞ்சியுள்ள மக்களை முள்வேலி அமைத்து மிருகங்களுக்கு உணவளிப்பது போல் அந்த அரசு தமிழர்களை சிறுகசிறுக சாகடித்துக் கொண்டிருக்கின்றது. இங்கே வாழும் தமிழின சொந்தங்களிடையே பதற்றம் நிலவுவதைப் பார்த்த இந்திய அரசு ஒரு தந்திரம் செய்தது.இலங்கை அரசும் இதற்கு ஒப்புக்கொண்டது.

இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளை ஒன்று சேர்த்து அதனதன் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரின் தலைமையில் இலங்கைக்கு அனுப்பிவைத்தது.

இலங்கையின் ராசபக்சே அரசும் சிறந்த நாடகத்தை அரங்கேற்றியது இதற்கு இந்திய அரசின் எதிர்கட்சி தலைவரை எப்படி வளையகட்டி பிரம்மாண்டமான குளு குளு விருந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என இரண்டு அரசும் நாடகம் போட்டது. நன்கு  உபசரித்தது என வெளி உலகம் உணராமல் இல்லை.
                                   
‘ராசபக்சே, தமிழர்களுக்கு நல்லது செய்ய உள்ளார்.அங்குள்ள தமிழர்கள் தனி நாடு கேட்கவில்லை. சிங்களவரோடு வாழ விரும்புகின்றனர்’ என இலங்கை சென்று பரிசு பொருட்களுடன் திரும்பிய இந்திய நாடளுமன்ற குழு உறுப்பினர்களை கூற வைத்தனர். முள் வேலியில் உள்ள தமிழர்களை துப்பாக்கி முனையில் பேச வைத்து படமெடுத்தவர்கள் துப்பாக்கி முனையை மறைத்து, வெளிஉலகுக்கு ராசபக்சே மனித நேயப்பற்றாளர் என இந்திய தமிழர்களை நம்ப வைத்து நாடகம் அரங்கேற்றினர்.இதற்கு இந்திய செய்தி ஊடகங்கள் துணை புரிந்தன. நாதியற்ற தமிழன் வாய்மூடி மவுனியாகிவிட்டான்.

எப்படி எதிரிகளிடம் தங்களைக்காப்பாற்ற பஞ்சாபிகள் ஆயுதம் ஏந்தி இருப்பதை இன்றளவும் நியாயப்படுத்தப்படுகிறதோ, எப்படி 1920-40 ஆம் ஆண்டுகளில் சப்பானிய துணையுடன் சீன அராஜக அரசை அகற்ற சாதாரண விவசாயிகளை ஆயுதம் ஏந்தி போராட மா.சே.துங் தயார் செய்தாரோ அதைப்போன்று தமிழீழ போராளிகள் போராட்ட யுக்தியை கையாள வில்லை.

இதன் காரணமாக இலங்கையில் தமிழின  வீழ்ச்சிக்கு காரணமாகிவிட்டது. தமிழர்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்ட இந்தியாவின் மறுமுகத்தை காண்க.           

                                             



           

Friday, May 11, 2012

36-அரசாங்கத்தின் மறுமுகம்


                             36-அரசாங்த்தின் மறுமுகம்
இன்றய செய்தியில்(02.05.2012) திருவண்ணாமலை அருகே ஆரணியில் தேர்த்திருவிழாவில் தேரின் அச்சு முறிந்து 5பேர் நிகழ்விடத்தில் மரணம் மற்றும் 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அடுத்த பக்க செய்தி நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் சந்தன உரூஸ் திருவிழாவில் மின்சாரம் தாக்கி தேரில் இருந்த 2 நபர் இறந்தனர்.03.05.20122 அன்று பேரணாம்பட்டு அருகே தேர் திருவிழாவில் 5 பேர் தேரில் மின்சாரம் பாய்ந்து இறந்தனர்.(ஒரே வாரத்தில் தேர்த்திருவிழாக்களில் மட்டும் தேர் அச்சு முறிந்து மற்றும் தேரில் மின்சாரம் பாய்ந்து பல்வேறு இடங்களில் 16 நபர்களுக்கு மேல் இறந்துள்ளனர்)

முழு நிலா  நாளில் கேரளா திருச்சூரில் ஆண்டுதோறும்  நடக்கும்  பூரம் திருவிழாவில் நிறைய யானைகளை அலங்கரித்து மக்கள் யானைகளிடம் ஆசி பெறுவது வழக்கம். இந்த யானைகள் திருவிழாவில் மேள சத்தத்தில் மிரண்டு மக்களை காலில் போட்டு மிதிப்பது வழக்கமானது ஒன்றே. இருப்பினும் ஆண்டுதோறும் இதே யானைகளை மக்களிடையே விழா என நிலை நிறுத்துவது ஏன்?  யானைகள்  என்ன மனிதர்களைவிட அறிவில் சிறந்ததா?அல்லது கடவுளுக்கு நிகரான கருணை காட்டும் ஆற்றல் பெற்றதா? மனிதன் தன் ஆறாவது அறிவான பகுத்தறிவை இங்கு ஏன் பயன்படுத்தவில்லை?

பொது வழிபாட்டுத்தலங்களில் 1-உண்டியல் கூடாது,2- அர்ச்சகர் தட்டு ஏந்தக்கூடாது,3- யானைப்போன்ற காட்டு விலங்குகளை வளர்க்கக்கூடாது    

மக்கள் திருவிழாக்களுக்கு சென்று மரணமடைய வேண்டிய அவசியமென்ன?
அதுவும் கோயில்களுக்கு சென்று மரணமடையவேண்டிய அவசியமென்ன?
கடவுள் நம்மை அல்லது மக்களை காப்பாற்றுகின்றார் அல்லது கடவுள் நமக்கெல்லாம் படியளக்கின்றார் எனில் திருவிழாவிற்க்கு வரும் பக்தர்கள் ஏன் மரணமடைய வேண்டும். படித்தவர்கள் இதனை சிந்திக்க வேண்டாமா?   

கடவுளை உருவாக்கிய மனிதர்கள் அதற்கு பொது வழிபாட்டுத்தலங்கள் வேண்டும் என 1000,2000 ஆண்டுகளுக்கு முன்னரே மன்னர்களை வற்புறுத்தி மக்கள் வரிப்பணத்தில் உலக முழுக்க மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் கோயில்,சர்ச்,மசூதி என பிரம்மாண்ட முறையில் போட்டி போட்டுக்கொண்டு ஒன்று இன்னொன்றை மிஞ்ச வேண்டும் என்கிற எண்ணத்தில் கடவுளுக்கு வீடுகளை கட்டி விட்டனர். கடவுளுக்கு வீடு கட்டினால் தனக்கு வீடு (மோட்சம்?) கிடைக்கும் என்கிற நப்பாசையில் கட்டிய மனிதர்களுக்கு தங்களுக்கு ஒரு குடிசையை மட்டுமே கட்ட முடிந்தது. இன்றளவும் இதுதான் நிலமை.

உழைப்பாளியின் பணத்தை சுரண்டுவதற்கு கோயிலில் உண்டியல் வைக்கப் பட்டுள்ளது என்பதை அப்போதைய மனிதனுக்கு எண்ணத் தோன்றவில்லை. இப்ப மட்டும் என்ன வாழுதாம் ?

மனிதனுக்கு எப்பொழுதுமே இருக்கும் ஆசைகளில் ஒன்று மனித கூட்டங்களை வேடிக்கை பார்ப்பது.
                                     
அதைப்போன்றே நீர் நிலைகள் (ஏரி குளம்,கடல்,ஆறுகள்) மற்றும் மேடு பள்ளங்களை (குன்று ,மலை,பள்ளத்தாக்குகள்) வேடிக்கை பார்ப்பது அவர்களின்  பிறவிப்பயனாக கருதுகின்றனர். மனிதர்களுக்கும் குரங்கு கள் போன்ற குணங்கள்தான். 
                                     
மனிதர்கள் தங்கள் இனத்தை தங்களுக்குள் இருக்கும் உந்து சக்தியால் இனப்பெருக்கம் செய்யமட்டுமே முடியும். மனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் மரணத்தை தடுக்க முடியாது.
ஆனால் விபத்துகளினாலும் நோய்களினாலும்   ஏற்படும் மரணத்தை தங்களுக்குள் இருக்கும் பகுத்தறிவால் 99% தவிர்கலாம்.

விபத்துக்களை தவிர்ப்பது எப்படி?
1-மோட்டார் சைக்கிளில் முடிந்தவரை ஒருவர் மட்டுமே பயணிப்பது அதுவும் 40-50 கி.மி வேகமே செல்வது பாதுகாப்பானது  

2- வாகனத்தை முந்த வேண்டும் எனில் எதிரே கண்ணுக்கெட்டிய தூரம் வரை வாகனம் இல்லாத பட்சத்தில் முந்தலாம்

3-இரவுநேர பயணத்தை தவிர்ப்பது நல்லது .அல்லது இரவு 10 மணிக்குமேல் பயணத்தை தவிர்ப்பது நல்லது.

4-இதேபோன்று கார் பயணத்தையும் 10மணிக்குமேல் பயணிக்க கூடாது வழியில் தங்கிவிட்டு அடுத்த நாள் காலை 6 மணிக்குமேல் பயணத்தை தொடர வேண்டும். பெரும்பாலும் கோயிலுக்கு செல்பவர்கள் கடவுள் மீது இருக்கும் அதீத நம்பிக்கையால் இரவு முழுவதும் கண்விழித்து கார் ஓட்டுகின்றனர். மனிதனின் பகுத்தறிவை இங்கு சிறிதும் பயன் படுத்தப்படுவதில்லை  .அதுவும்  அதிகாலை தன்னையறியாமல் கண் மூடிவிடும். இதனால் விபத்து ஏற்பட்டு விடுகிறது.

5-பணம் சேர்க்கவேண்டும் எனும் அதிக ஆசையாலும் வியாபாரப் போட்டியாலும் இரவுமுழுக்க லாரிகளை ஓட்டுவதால் அதிகாலை கண்ணயர்ந்து விடுவதால் பெரும் உயிர்சேதம் ஏற்படுகின்றது.இரவு 10 மணிக்குமேல் லாரி ஓட்டுவதை தவிர்க்கலாம்.
அல்லது அரசாங்கம் இது குறித்து ஒரு சட்டமே போடலாம்.

6-மது அருந்திவிட்டு எந்த வாகனத்தையும் தொடக்கூடாது.

7- 50 வயதுக்கு உட்பட்டவர்கள் மது அருந்துவதை சட்டம்போட்டு தடுக்கலாம்.

பொது வழிபாட்டுத்தலமும் அங்கு உண்டியல் வைத்து பணம் திரட்டுவதும் அறவழி சிந்தனைக்கு புறம்பானதாகும்.ஏழாம் அறிவு இயக்கத்திற்கு எதிரானது. இருப்பினும் மக்களின் அறியாமையால் ஏற்படும் மரணத்தை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோயில்களிலும் அங்கு நடக்கும் தேர்த்திருவிழாக்களிலும் நடக்கும் விபத்துக்களினால் ஏற்படும் மரணத்தை  தவிர்பது எப்படி?
மனிதன் சக்கரம் கண்டுபிடித்து அதன் பயன்கள்  நாகரிக வளர்ச்சிக்கு வித்திட்டது.இன்று 2மற்றும் 4 சக்கர வாகனங்கள் பயன்பாடு சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

அதென்ன இன்றும் மரத்தாலான மக்கிப்போன சக்கரத்தை வைத்து சிலைகள் மட்டுமல்ல அதில் நாலைந்து பிராமணர்களை உட்காரவைத்து மற்ற மனிதர்கள் வடம்பிடித்து இழுப்பது?எல்லாம் தெரிந்த அல்லது உணர்ந்த கடவுளென்றால் தேர்  முறிந்து பக்தர்கள் ஏன் மரணமடையவேண்டும்? விதி முடிந்த தென்றால் மரணம்  வீட்டில் நிகழ வேண்டியதுதானே?  இந்த பழக்கம் தமிழகத்தில் தான் அதிகம்.பழய மன்னர்கால தேர்களையெல்லாம் கோயில்களில் காட்சிப்பொருளாக பராமரிக்கலாம். இதன் பயன்பாட்டை சட்டம் போட்டு தடுக்க வேண்டும்.

 தேரில் இரும்பு சக்கரம் பொருத்துவதுகூட ஆபத்து தான். மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது.
விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டர் கொண்டு சிலைகளை இழுக்கலாம். பழை முறையான மரச்சக்கரம் பயன்பாட்டை  தடை செய்யப்பட வேண்டும்.இன்னும் சில இடங்களில் 20 அல்லது 30 மனிதர்கள் தோளில் சிலைகளை தூக்க முடியாமல் தூக்கி  ஊர்வலம் வருவது, இதுஒரு மனித வதை. இதையும் தடை செய்யப்பட வேண்டும்.

கோயில்களுக்கு வரும் பக்தர்களின் உயிர்களுக்கு ஆன்மீக வாதிகள் பொறுப்பு ஏற்க வேண்டும்.உழைப்பாளிகளின் பணத்தை கோயிலில் உண்டியல் வைத்து சுரண்டும் ஆரசாங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் உயிருக்கு பாதிப்பு இல்லாமல். விழாவை எப்படி நடத்துவது என கோயில் நிர்வாகிகளுடன் கலந்து முடிவெடுக்க வேண்டும்.ஏதுமறியா அப்பாவிகளின் உயிர்கள் பலியான குடும்பத்திற்கு சொற்ப நிதி உதவி வழங்குதால் அரசாங்கம் தப்பிக்க பார்க்கிறது. அரசாங்கத்தின் மறுமுகத்தை மக்கள் காணட்டும்.     

Friday, May 4, 2012

35-வியாபாரி- பத்திரிக்கையாளரின் மறுமுகங்கள்


  35- வியாபாரி-பத்திரிக்கையாளரின் மறுமுகங்கள்          
இந்திய பஞ்சாங்கத்திற்கும் மேலைநாட்டு பஞ்சாங்கத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. எல்லாம் மக்களின்  சுய சிந்தனையை மழுங்கடிக்கும் வழிகாட்டிகள். இதற்கு அறிவியல் உண்மைகளை தொடர்புபடுத்தி உழைக்கும் மக்களின் பொருளாதாரத்தை சுரண்ட திட்டமிட்டனர்
அதன் விளைவுதான் பரிகாரம் ,தோஷ நிவர்த்தி,விரதம் தியானம்,படையல் உண்டியல் காணிக்கை.மொட்டை அடித்தல், வேப்பிலை அணிதல் சூன்யம் வைத்தல், சூன்யம் எடுத்தல் போன்ற மன நிலை பாதிக்கும் மோசடி சடங்குகள்.
உலகில் பெரும்பாலான நாடுகள் எப்படி மக்களை கட்டுக்குள் வைத்துள்ளன என்பதனை பார்ப்போம்.

காட்டுக்குள் திரிந்து மர பொந்துகளில் வாழ்ந்த மனிதர்கள் மரத்தடியில் கல்லை வைத்து வணங்கிய மனிதர்கள், பின்னாளில் காடுகளை அழித்து கிராமங்களாகவும்  பின் நகரங்களாகவும் மனித குலம் பெருகியது.இடி மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களுக்கு பயந்து வானத்தை நோக்கி மண்டியிடச் செய்தானர்.பயம்தான் பக்தியாக மாறியது.
குளிர்காலம் முடிந்து கோடை ஆரம்பத்தை குதுகலமாக கொண்டாடச் செய்தானர். உலகில் எல்லா மனிதர்களுமே கோடை கால துவக்கத்தை மிக விமரிசையாக கொண்டாடினர்.இதுதான் ஆண்டின் துவக்கம் என பஞ்சாங்கம் எழுதினர். பூமி நிலையாக உள்ளதாகவும். சூரிய சந்திரன் பூமியை சுற்றிவருவதாகவும் பூமி தன் முழு பருவ காலத்தை முடிக்க 365 நாட்கள் ஆகிறது என கணக்கிட்டனர். தற்கால அறிவியல் கூற்றுப்படி சூரியனைச் சுற்றி அதன் கிரகங்களான 12 ம் தத்தமது துணைக் கோள்களுடன் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு  சூரியனை சுற்றுவதன் மூலம் பூமியில் பருவ காலங்கள் உருவாகின்றன. இதற்கு சூரிய குடும்பம் என பெயர். 

தமிழர்கள் பஞ்சாங்கத்தை உருவாக்க வில்லை. ஆரியர்களின் வருகைக்குப் பின்னரே பஞ்சாங்கம் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைந்து விட்டது. பஞ்சாங்கம் பார்த்து  பிறருக்கு வழிகாட்டி, அதன்மூலம் தன் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொண்டவர்கள் ஆரியர்கள். இன்றளவும் இதுதான் நடக்கின்றது.

சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் முதல்நாளை தமிழர் சரியாக கணக்கிட்டு கோடையின் ஆரம்ப நாளை(தை-1 அல்லது ஜனவரி-14)  பொங்கலிட்டு அருவடைத் திருநாளாக கொண்டாடினர்.
சூரியன் வடதுருவம்  நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நாடுகளில் அது ஆண்டின் துவக்கமாகவும் கணக்கிட்டு பஞ்சாங்கம் உருவாக்கப்பட்டது.வட இந்தியாவில் அது ஹோலிப்பண்டிகையாக கொண்டாடப்படுகிறது(மார்ச்-முதல்வாரம்)

வடக்கிலிருந்து வந்த ஆரியர்கள் கண்டுபிடிப்பான(பஞ்சாங்கம் எழுதியவர்கள் இவர்கள்தான்) 27 நட்சத்திரங்களில் 12 நட்சத்திரங்களை மட்டும் 12 மாதங்களில் வரும் முழுநிலவுகளுக்கு ஒதுக்கி அந்த மாதங்ளுக்கு பெயர் சூட்டினர்.
                                          
அதில் வடக்கில் தாமதமாக ஆரம்பிக்கும் சித்திரை மாதத்தையே தமிழர்க்கு ஆண்டின் துவக்க நாளாக பஞ்சாங்கத்தில் கணித்தனர். அதுவரை தமிழர்க்கு தைமுதல்நாளே ஆண்டின் துவக்கமாக இருந்தது.

சூரியன் வடக்கு பயணத்தை முடித்து பின் தெற்கு(ஜூன் முதல் வாரம்) நோக்கி பயணம்( 6+6=12 மாதங்கள்) இப்படி கணக்கிட்டு பருவகாலங்கள் கணக்கிடப்பட்டன. 
சம்பரதாயம் மற்றும் சடங்குகள் நிறைந்ததுதான் வாழ்க்கை என பஞ்சாங்கவாதிகள் பாமரனுக்கு அறிவுறுத்தி அதன்மூலம் காசு பார்க்க ஆரம்பித்தனர்.இன்றும் இது தொடர்கிறது.

சமீபத்தில் இரண்டு திராவிடத் தலைவர்கள் (முன்னாள் முதல்வர் திரு கருணாநிதி-இன்னாள் முதல்வர் செல்வி செயலலிதா ) இருவரும் தமிழ் பத்தாண்டு பற்றிய இருவேறு கருத்துக்களை இலக்கிய மற்றும் வரலாற்று  ஆதாரங்களுடன் பத்திரிக்கைகள் மூலம் வெளிப்படுத்தினர்.

செல்வி செயலலிதா அதுவும் பெண் இனத்தைச் சார்ந்த அவரிடம் பகுத்தறிவாத கொள்கையை எதிர்பார்க்க முடியாது. இது தெரியாத போலி பகுத்தறிவாதியான திரு கருணாநிதி ( ஆம் அவரை அப்படித்தானே அழைக்க முடியும்),தனக்குள்ள அதிகார மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி தனது மனைவிகளை கூட மட்டுமல்ல குறைந்த பட்சம் தனது குடும்ப உறுப்பினர்களான மகன் மற்றும் மகள் பேரன் பேத்திகளை  ஒருவரைக்கூட பகுத்தறிவாத பாதைகளுக்கு வழிகாட்டத்தெரியாத துப்புகெட்ட (பகுத்தறிவாதியாக?) மனிதராக வாழ்ந்து கொண்டு ஒரு அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்து கொண்டிருக்கின்றார். இது ஒரு கேவலமான பிழைப்பாக தெரியவில்லையா?

பஞ்சாங்கம் என்பது அறிவியல் பூர்வமான நூல் இல்லை என்பது திரு கருணாநிதிக்கே தெரியும். அப்படி இருக்கும் போது பஞ்சாங்கவாதியான இன்னாள் முதல்வருக்கு  இவர் பதில் அறிவியல் சார்ந்ததாக அமையவேண்டும் . அப்படி இல்லையே . வாரத்தின் 7 நாட்களுக்கு நட்சத்திரமான சூரியனை(ஞாயிறு) வாரத்தின் துவக்க நாளுக்கு பெயர்வைத்து பின் வரும் 6 நாட்களுக்கு கிரகங்களின் பெயரை சூட்டினர். வாரத்திற்கு  7 நாட்கள்,மாதத்திற்கு 27 நாட்கள்(27 நட்சத்திரங்கள்) பெயரை சூட்டினர். வருடத்திற்குள் வரும் 12 மாதங்களுக்கு  12 நட்சத்திரங்கள் பெயரை சூட்டினர்.12*27=324 நாட்கள். அறிவியல் கூற்றுப்படி வருடத்திற்கு 365நாட்களும் 6 மணி நேரமும் . எனவே பின் நாளில் நமது பஞ்சாங்க வாதிகள் (365-324=)41 நாட்களை தங்கள் பிழைப்பான புரோகிதம் செய்யும் தொழிலுக்கு வசதியாக 12 மாதங்களுக்கு பங்கிட்டுக்கொண்டனர்.

12 மாதங்களுக்கு 12 ராசிகளின் பெயர்களை சூட்டி அதற்கு 27 நட்சத்திங்களை பங்கிட்டு கற்பனை கட்டங்களை வரைந்து படித்தவனையும் பாமரனையும் நம்பவைத்தனர்.

அதற்கு  சோதிடக்கலை என பெயரையும் வைத்து ,சோதிட விற்பன்னர்கள் என தங்களை விளம்பரப்படுத்தி இன்றும் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு தனிமனிதனுக்கு ஒரு சோதிடர் கணிக்கும் கணிப்பை போல இன்னொரு சோதிடர் கணிப்பும் இருக்காது.இது தான் உண்மை. இதிலிருந்தே தெரியவில்லையா? இது ஒரு ஏமாற்று வேலை என்று.
அப்படி இருக்கும் போது இந்த இரண்டு முதல்வர்களுக்குமே ஆழ்ந்த அறிவியல் முதிர்ச்சி இல்லை என்பது தெரிகின்றது . இல்லை என தெரிந்தும் மக்களை ஏமாற்றுகின்றனரா? 

இந்த ஏமாற்று வேலைக்கு தினசரி பத்திரிக்கைகளும் ஒரு சில  வார மற்றும் மாதாந்திர பத்திரிக்கைகளும்  நட்சத்திர மற்றும் ராசி பலனை புத்தகமா தயாரித்து ,விற்று பணத்தை குவிக்கின்றன.
இது ஒரு புறமிருக்க சில காலமாக பத்திரிக்கைகளும் நகை வியாபாரிகளும் கூட்டணி அமைத்து அட்சய திருதியை எனும் மயக்கு வார்தையை மக்களிடையே பரப்பினர். கற்பனை கதையை உண்மை என  நம்ப வைத்தனர். அன்றயதினம் ஒரு குன்றிமணி பொன்னாவது வாங்கி வீட்டில் வைத்தால் (கடன் வாங்கியாவது) வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என கட்டுக்கதைகளை எழுதி அதனை மக்களை நம்பவைத்தனர்.

அது சரி போன ஆண்டும் ,அதற்கு முந்தயாண்டுகளிலும்  அட்சய திருதியை அன்று வாங்கிய நகைகளினால் அந்த குடும்ப வளம் பெருகியதா? அதை கண்டுபிடித்து  அந்த நகை வாங்கியவரின் தற்போதைய நிலை என்ன? என எந்த பத்திரிக்கைகளும் ஏன் எழுதவில்லை? பத்திரிக்கைகள் சமூக அக்கறை உள்ளது போல் நடிக்கின்றன .அவ்வளவே.

இதற்கு ஆங்கில பத்திரிக்கைகளும் சளைக்கவில்லை. ‘இதுவெல்லாம் இல்லாமையா எழுதறான்’ என படித்தவனும் மதி மயங்கி நகைக்கடைகள் முன் நாளெல்லாம் வரிசையில் நின்று நகையை வாங்கி குவிக்கின்றனர். இது ஆண்டுதோறும் நடக்கும் மோசடி வியாபாரம்.இதில் ஆதாயம் நகை வியாபாரிக்கு மட்டுமே அன்றி வாங்குவனுக்கு அல்ல என ஒரு பத்திரிக்கையும் ஏன் எழுத வில்லை?
நகையை வாங்குவதும் முட்டாள்தனம் விற்பதுவும் முட்டாள்தனம் என ஏன் பத்திரிக்கைகள் எழுதக்கூடாது?

ஊழலைப்பற்றி எழுதும் பத்திரிக்கைகளுக்குகூட இதைபற்றி ஏன் எழுத மனம் இல்லை?
சமூக சிந்தனையாளர்கள் ஏன் கண்டு கொள்ளவில்லை?
மூட நம்பிக்ககளை ஒழிக்கும் அமைப்புகளான திராவிட கழகமும் பெரியார் பெயரில் நடத்தும் இயக்கமும் இதனை ஏன் கண்டு கொள்ளவில்லை?
வருடத்தில் வரும் ஏதாவது ஒரு நாளை அறிவியல் நாளாக ஏன் அறிவிக்க கூடாது ?

அந்த நாளில் ஒரு புத்தகமாக வாங்கினால் தான் உங்கள் சிந்தனை பெருகும், அறிவு பெருகும் என ஏன் பத்திரிக்கையாளர்கள் நூல் ஆசிரியர்களோடு கூட்டணி அமைத்து மக்களுக்கு வழிகாட்டக்கூடாது ?
பத்திரிக்கைகள் ,வியாபாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இந்த முப்பெரும் கூட்டணிகளின் மறுமுகங்களை மக்கள் காண்பது எப்போது?            
   
  

Friday, April 27, 2012

34-திராவிடகட்சிகளின் மறுமுகங்கள்


                        34- திராவிடக்கட்சிகளின்  மறுமுகங்கள்
                                                                              
முதல் நிலை தகுதி பெற்ற மாணவர்களுக்கு அண்ணா பல்கலை கழகத்தில் முதல் சுற்றிலேயே பொறியியல் படிப்புக்கு தேர்வு பெற்றுவிடுகின்றனர்.எதைவைத்து தேர்வு செய்யப்படுகின்றனர் என புரியவில்லை.பொறியியல் படிப்பாகட்டும் மருத்துவம் சார்ந்த படிப்பாகட்டும் அனைத்துமே 12-ம் வகுப்பிற்குப்பின் ஆங்கிலத்தில் சொல்லித் தரப்படுகின்றது. ஆனால் தமிழகத்தில் கடந்த 50 வருடங்களாக கிராமங்களில் ஆரம்ப கல்வி முதல் பள்ளி இறுதிப்படிப்பான 11 அல்லது 12 ஆவது பாடத்திட்டங்கள்  அனைத்துமே தமிழ வழி பாடமாக (அதாவது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் தமிழ் வழியிலும் கூடவே ஒரு ஆங்கில மொழி பாடமும்) சொல்லித்தரப்படுகின்றது. ஆனால் உயர் கல்விபாடத்திட்டமான தொழில் கல்விகள் (பி.இ,எம்பிபிஎஸ்) அனைத்துமே ஆங்கிலத்தில் சொல்லித்தரப்படுகின்றது .   பேர்தான் தமிழ்நாடு.

சுதந்திரம் பெற்று 65ஆண்டுகளாகிவிட்டது.தாய்மொழியில் உயர்கல்வி படிப்பைத் தொடர முடியவில்லை. இன்னும் அடிமையுணர்வில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்‘தமிழ்தான் என் உயிர்மூச்சு,நான் சுவாசிப்பதும் நேசிப்பதும் தமிழே’  என மக்களிடையே பேசி மயக்கி ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகள் உயர் கல்வி பாடத்திட்டங்களை தமிழில் மொழிபெயர்க்க எந்த முயர்ச்சியும் மேற் கொள்ளாதது,தமிழினத்திற்கு செய்த மாபெரும் துரோகம்.

திராவிட இனங்களான தமிழைத்தவிர மலையாள,தெலுங்கு மற்றும் கன்னடம் இனம் சார்ந்த மாணவர்கள் தமிழகத்தில் உயர்கல்வி தொடர முடியாது என்னும் ஒரே நோக்கத்தில் தமிழ் மாணவர்களை பற்றி கவலைப்படாமல்,கொஞ்சமும் மனசாட்சி அற்ற அரசியல் வாதிகள் தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கும் திராவிட கட்சிகள் தமிழர் நலனை கருத்தில் கொள்ளாமல் நடிப்பைத்தொழிலாக கொண்டு வாழும் இனமான தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னட இனத்து மேனா மினுக்கிகளின் அழகில் மயங்கி அவர்களிடையே தமிழனை அடகுவைத்துவிட்டனர்.   தமிழன் வளர்ச்சிக்கு பாடு பட்டதாக இன்றளவும் தெரியவில்லை.

இன்றய செய்தி தாள்களில்(17,18-04.2012) பொறியியல் படிப்பை தொடர முடியாமல் கல்லூரி வளாகத்திலேயே தற்கொலை செய்து கொள்ளும் ஏழை கிராம மாணவர்கள் நிலை கண்டு நாமெல்லாம் கண்ணீர் வடிக்கும் நிலையில் உள்ளோம்.

கிராமத்தில் தமிழ் வழிப்பாடத்திட்டத்தில் முதல் மாணவராக திகழ்ந்த ஒரே காரணத்தால் அண்ணா பல்கலை வளாகத்தில் படிக்கும் வாய்ப்பினை பெற்று வகுப்பிற்குள் செல்லும் போதுதான் தெரிகிறது ‘தாம் மோசம் போய்விட்டோம்’ என்கிற உண்மை. ஆம் வகுப்பில் பேராசிரியர் பாடம் நடத்துவதும் ,நகரத்து மாணவர்கள் பழகும் விதமும் அதுவரை கிராமத்திலே பிறந்து ,கிராமத்திலே வளர்ந்து முதன்னிலை தேர்வான மாணவர்களுக்கு
                                    
அது ஒரு சவாலாகவே தோன்றுகிறது,தன்னம்பிக்கை கொண்ட கிராம மாணவர்களுக்கு. ஆனால் தைரியமற்ற கிராம மாணவர்களுக்கு (பேரு தைரிய லட்சுமி?)  தற்கொலை தவிர ஒன்றுமே தோன்றவில்லை.

அந்நிய மொழியான ஆங்கிலத்தை தமிழக கிராம மாணவர்களுக்கு பாட மொழியாக கொண்டுவருவது அரசாங்கத்தின் தோல்வி முயற்சியே.கிராம மக்களின் வாழ்க்கை முறைக்கும் நகர மக்களின் வாழ்க்கை முறைக்கும் வேறுபாடுகள் நிறைந்திருப்பது அரசியல்வாதிகளுக்கு புரியாதது ஒன்றுமில்லை. இரு தரப்பினருக்கும் ஒரே மாதிரியான  பாடத்திட்டம்  நடைமுறைக்கு ஒத்துவராது என்பது யாவரும் அறிந்ததே.  

 (Separate Urban and rural curriculum should be enacted) உண்மையிலேயே மக்கள்மீது அக்கரையுள்ள அரசு நகரத்து மாணவர்களுக்கும் கிராமத்து மணவர்களுக்கும் தனித்தனியான கல்வி இயக்குனரகம் உருவாக்கவேண்டும். கிராமத்து மாணவர்களை அரசு தத்து எடுக்க வேண்டும். தாய் மொழியில் உயர் கல்வி அளிக்க வேண்டும் அவர்களுக்கு வேலைவாய்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஆசிரியர் பயிற்சி என்பது தகுதி அடிப்படையில் தேர்வு செய்து பணியில் அமர்த்த வேண்டும். வயிற்றுப் பிழைப்புக்கு வருபவர்களையும் ஆசிரியர் தொழிலில் அதிக சம்பளம் வரும் என்றும் வட்டிக்கு பணத்தை விட்டு வருமானத்தை பெருக்கலாம் என்னும் எண்ணங் கொண்டவர்களை வேலைக்கு அமர்த்தகூடாது.கிராமத்து பள்ளிக்கூடங்களையும் ஆசிரியர்கள் பயிற்று திறனையும் மதிப்பீடு செய்ய வேண்டும் .இதில் அரசியல் தலையீடு கூடாது.

மற்றவர்களை  வாழவைத்து மகிழ்ச்சி கொள்ளும் தமிழரல்ல ,மற்ற இனத்தவரை  வரவேற்று வாழ மகிழ்ச்சி கொள்ளும் குணம் தமிழர் குருதியில் ஊரிப்போனது .இதனை மற்ற இனத்தவர் நன்கு புரிந்து கொண்டு பிற மாநில இனத்தவர்களும் தமிழகத்தில் குடியேறுவது மட்டுமல்ல தமிழன் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடும் கயவரை அடையாளம் காண அரசு வழிவகை செய்யவேண்டும். அதைதடுக்கும் முகத்தான் சட்டங்களை இயற்ற வேண்டும்.
தமிழர்களுக்கு  அரசுப் பணியிடங்கள் கிடைப்பதில்லை. (குறிப்பாக பெரும்பான்மை இனங்களான வன்னியர் மற்றும் ஆதி தமிழர்களுக்கு )
தமிழ்நாட்டில் அரசுத்துறை எப்படி செயல்படுகிறது?

இந்த இரு இனத்தவரும் அவர்களின் மொத்த மக்கட்தொகையில் 90% கிராமங்களில் வெய்யிலில் பாடுபடும் மக்கள். இந்த இனத்தவருக்கு அவர்களை யார் ஆண்டாலும் கவலை கிடையாது. அவர்களை கையை நம்பித்தான் வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றனர்.                  
மீதமுள்ள 10% மக்களில் 9% மக்கள் நகரத்தில் பெட்டிக்கடை,காய்க்கனி கடை,சிறு அளவில் மளிகைக்கடை, நடை வண்டி வியாபாரம். பணக்கார வீடுகளில் பத்துப்பாத்திரம் தேய்த்தல்,அரசியல்வாதி வீடுகளில் அடியாட்களாக செயல்படுவது.  
                                       
மீதமுள்ள 1% மக்கள் சுயமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நிழலில் உழைக்கும் வேலை கிடைக்கின்றது. 7 கோடி மக்களில் 2கோடி மக்கள் பிற மாநிலத்தவர். 5கோடி மக்களில் 1கோடி முன்னேறிய மற்றும் ஆதிக்க சாதிகள்.இவர்கள்தான் மீதமுள்ள 4கோடி தமிழர்களின் வேலை வாய்ப்பை நிர்னயிக்கின்றனர்.

4கோடி தமிழரில் வருடத்திற்கு 12-ம் வகுப்பு முதல்நிலை (தமிழ்வழிக்கல்வி)தேர்வு அடைந்த மாணவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம் . அவர்களுக்கு உயர்தொழில் கல்வி படிக்க இடம் கிடைக்கின்றது. ஆங்கில வழி கல்வியை ஆரம்பத்திலிருந்து படிக்கும் நகர மாணவர்களிடையே போட்டி போட முடியாமல் திணறு கின்றனர். அவமானம் தாங்காமல் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர்.

தைரிய லட்சுமி போன்ற கிராமத்து மாணவர்கள் உயர் தொழில் கல்வி படிப்பை ஆங்கிலத்தில் தொடர முடியாமல் மன அழுத்த நோய்க்கு ஆளாகும் மாணவர்களைப்பற்றி தமிழக அரசு கவலைப்படுமா? கவலைப்பட்டு என்ன நன்மை கிடைக்கப்போகிறது தமிழ் வழி கல்வி படித்த மாணவர்களுக்கு?  இதற்கு அரசாங்கம் பொறுப்பு ஏற்க வேண்டும். அப்படி ஒரு அரசாங்கம் அமையுமா? என்பது கேள்விக்குறியே. தமிழகத்தை தமிழர்களே ஆள வேண்டும்.ஆளும் திராவிட கட்சிகளின் மறுமுகத்தை தமிழர்கள் என்று உணரப்போகின்றனர்?