Monday, July 2, 2012

39-பக்தர்களின் மறுமுகங்கள்


                               39-பக்தர்களின் மறுமுகங்கள்

இன்றய செய்தி தாளில் (30.06.2012 தேதியிட்ட தினத்தந்தி) திருப்பதியில்  1¼ லட்சம் மது புட்டிகளும் மக்களின் உணவு பொருட்களான கோழி மற்றும்  ஆட்டிறைச்சியையும் அழித்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என அதே செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது. அதாவது மேல் திருப்பதி(திருமலை) கடவுள் வாழும் இடமாம். அங்கே மதுவுக்கும் இறைச்சிக்கும் இடமில்லையாம்.
அப்படியானால் அங்கே மனிதர்கள் வாழ்வதே இல்லையா? மனிதன் உண்ணும் உணவுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு ?மனிதன் தாவரங்களையோ அல்லது தாவர தானியங்களையோ மட்டுமே உயிர்வாழ முடியாதென்பது நிருபிக்கப்பட்ட உண்மை.
 மதுவோடு மாமிசம் உண்பதால் மனிதன் அறவழி தவறிய செயல்களில் ஈடுபடுவான் என்பது உண்மைதான். அதற்காக பயணம் செய்யும் காலங்களில் மட்டும் மதுவை தடை செய்யலாம் .இன்றியமையாத மாமிச உணவை தடை செய்வது என்பது அரசாங்கம்  மனித உரிமையில் தலையிடும்  செயலாகும். 
விலங்கினங்களிலும் மனிதரிலும் சைவ உணவு விரும்பிகள் உண்டு .ஆனால் அவைகள் யாவும் அசைவ உணவான தன் தாய் இனத்தின் ரத்தத்தை(பால்) உறிஞ்சி வளர்கின்றன. வளர்ந்த பின் ஆடு மாடுகளும் சில மனித இனங்களும் தாவர உணவுக்கு மாறுகின்றன.

அப்பொழுது கூட வளர்ந்த மனிதர்கள் மாட்டுப்பாலையும் ஆட்டுப்பாலையும் அதன் விளைபொருட்களான தயிர் மற்றும் நெய் போன்ற வற்றை இறக்கும் வரைகூட விடுவதில்லை. அந்த வகையில் சைவ விலங்குகளை விட சைவ மனிதன் மோசமானவன்.

உலகில் சுமார் 700 கோடி மக்கள் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகம் சைவ உணவு உண்டு வாழும் மக்கள்   இந்தியாவில் உள்ளனர்.(சுமார் 20 கோடி மக்கள்)

சுமார் 680 கோடி மக்கள் அசைவ உணவு பிரியர்களே. இவர்களில் 300 கோடி மக்கள்(கிறித்துவம் மற்றும் இசுலாம் மதம்) தினமும் யேசு மற்றும் அல்லா போன்ற தெய்வங்களை வணங்குபவர்கள்.மற்ற 380  கோடி மக்களில் 100 கோடிக்குமேல் இந்துக்கள்(இந்தியா மற்றும் நேபாளம்) அசைவ உணவு விரும்பிகள்.மீதமுள்ள 280 கோடி மக்கள் புத்த மத மற்றும் மாறுபட்ட இந்துக்களாக சைனா,சப்பான்,மலேசியா,சிங்கப்பூர்,கம்போடியா வியட்நாம்,தாய்லாந்து,இலங்கை,மியான்மர் போன்ற நாடுகளில் வாழ்கின்றனர் .

இவர்கள் யாவருமே அசைவ உணவு பிரியர்கள் தான் முக்காலமும் கடவுள் பக்தி கொண்டவர்கள். அசைவ உணவு உண்ணும் மக்களுக்கு எல்லாம் ஆண்டவன் அருள் கிடைக்காதா?என்னதான் தங்களுக்கு இறைவன் அருள் என்றும் உள்ளது என நம்பி வாழ்ந்தாலும்  வழக்கமான இயற்கை சீற்றங்களான பூகம்பம்,சுனாமி,இடி,மின்னல்,வெள்ளச்சீற்றம், மற்றும் சாலை,கடல் மற்றும் வானூர்தி விபத்துக்கள் (என்னதான் மனம் உருகி இறைவனை வேண்டினாலும்) போன்றவைகளிலிருந்து மனிதன் தப்ப முடியவில்லை.உலகில் மனிதனின் சராசரி வாழ்நாளான 100 ஆண்டுகளை முழுவதுமாக நிம்மதியாக முடிக்க முடியவதில்லை.
                            
உயிர்வாழ உணவு உண்ண வேண்டும்.என்னதான் உண்ணா நோன்பு இருந்தாலும் மீண்டும் உணவு உண்ண வேண்டும்.இதில் சைவமா இருந்தால் என்ன? அசைவமாயிருந்தால் என்ன? எல்லாருக்கும் முடிவு ஒன்றுதானே?

உலக மக்கள் இப்படி இருக்க திருப்பதியில்  வாழும் கடவுளுக்கு பாலாபிஷேகம்(அசைவம்)மட்டும் பிடிக்குமாம்.   திருமலையில் வாழும் மக்களுக்கு இறைச்சி உணவு பிடிக்காது என்பது யார் கண்டுபிடித்த உண்மை? திருமலையில் உணவைத்தேடும் பக்தர்களுக்கு (மக்களுக்கு நீரிழிவு நோயைத் தரக்கூடிய)சைவ உணவை திணிப்பது மனித உரிமை மீறல் அல்லவா? இவையாவும்(இறைச்சி உணவை அழிப்பது) இறைவனின் இடைத்தரகர்களான மதவாதிகளின்  ஆர்பாட்டம் அல்லவா?கடவுள் பக்தர்களின்(மத வாதிகளின் ) மறுமுகங்களை காண்பீர்!        




No comments: