வட்டெழுத்து முதலில் தோன்றியது,நெட்டெழுத்து பின்னாளில் தோன்றியது.
உலகில் பெரும்பாலும் எழுத்து வடிவங்கள் எல்லாம் தமிழைப்போன்ற வட்டெழுத்து முறைகளே.
ஐரோப்பிய நாடுகளிலும் வட்டெழுத்து முறைகளே.இதிலிருந்து என்ன தெரிகிறது? முதலில் தோன்றிய மொழி தமிழ் என்று தெரிகிறதா?
பின்னாளில் தோன்றிய மொழிகளாக சமத்கிருதம், நெட்டெழுத்துக்களாகவும், எதிர்மறையான அரபு மொழியின் எழுத்துக்கள் படுக்கவாட்டிலும் அமைந்திருக்கும். 400 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்தி மொழியும் சமத்கிருதம் போல் நெட்டெழுத்துக்களை கொண்டது
கிழக்காசிய மக்கள்(சீனம்,கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள்) எழுத்துக்களை பொருளியல் மொழி என அழைப்பர்.அதாவது சக மனிதர்களுக்கு புரியவைக்க ஓவிய முறையை பயன் படுத்தி புரியவைப்பது.
தமிழில்தான் ஏராளமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன, இவைகளை படித்து புரிந்து கொள்ள தனிப்பயிற்சி எடுக்க வேண்டும். தமிழ் கல்வெட்டுகள் இலங்கை,பர்மா, கம்போடியா போன்ற கிழக்காசிய நாடுகளிலும் காணப்படுகின்றன.
100 ஆண்டுகளாகத்தான் தமிழ் நாட்டில் சாதியங்களைப்பற்றி பேசக்கூடாது,சாதி என்பதையே ஒழிக்கப்படவேண்டும் என பெரியார் தோன்றி மேடையில் முழங்கினார்.அதன் பலனாக தமிழ் நாட்டில் மட்டும் பேர்களுக்குப் பின்னால் அய்யர்,அய்யங்கார்,செட்டியார், முதலியார்,படையாட்சி,கவுண்டர் என சாதிப்பதிவுகள் மறைந்து விட்டன,ஆனால் பெண் கொடுத்து பெண் எடுப்பதில் சாதி பார்ப்பது இன்றளவும் வழக்கத்தில் உள்ளன.
No comments:
Post a Comment