நெற்றியில் குறிகள் எதற்கு?
ஆன்மிக
சிந்தனையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சுய சிந்தனையற்ற, இயற்கையோடு இணைந்த
வாழ்க்கையைக் கொண்ட இந்திய மற்றும் தெற்காசிய மக்களுக்கு, கடந்த 100-ஆண்டுகளாக
அறிவியலின் அற்புத கண்டு பிடிப்புகளான போக்குவரத்து,தொலைத்தொடர்பு சாதனங்களின்
செயல்பாடுகள் அனைத்தும் பிரமிப்பூட்டுவதாக உள்ளன.
அப்பொழுது
கூட நம்மக்களை சரியான அறிவியல் சிந்தனைக்கு செல்லும் கல்விப் பாடத் திட்டங்களை
மாற்றியமைக்கப் படவில்லை.முன்னோர்கள் கடைபிடித்த சம்பரதாயம் மற்றும் சடங்குகள் பின்பற்றுவதில்
தான் வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதனாக வாழமுடியும், என
மத-ஆன்மிக
குருக்கள்,
மனைவியை
வெறுத்த வாழா வெட்டிகள்(முற்றும் துறந்த முனிவர்கள்?)
தம்மை
வாழ்த்த மாட்டார்களா? என தாய் தந்தையரையும் உதாசினப்படுத்தி.உடன் பிறந்தவர்களையும்
விரட்டிவிட்டு மடாலயங்களில் சரணடையும் மனிதர்கள் பெருகிவிட்டனர்.
இவர்கள்
போடும் வேடங்கள் இருக்கிறதே அது கொஞ்ச நஞ்சமல்ல,
காவி உடை
அணிதல்,
தாடி
வைத்தல்,
மொட்டை
போடல்,
விரதம்
இருத்தல்,
எந்நேரமும்
மந்திரம் செபித்தல் ( தாய் மொழி தவிர பிறமொழியில்)
அதுவும்
தனக்கே புரியாத அர்த்தமற்ற மந்திரம் கற்றுக்கொண்டோம் எனும் மமதையில் பெரிய பெரிய
ஆடம்பர மாளிகைப் போன்ற மடாலயம் அமைத்துக்கொண்டு அரசியல் தலைவர்களையும் தம் காலில்
மண்டியிட வைத்தல் போன்ற கலாச்சாரம் பெருகிவிட்டது.
இதற்கெல்லாம்
சிகரம் வைத்தாற்போல் ஆதாரம் அற்ற-யூகத்தின் அடிப்படையில்,அறிவியலை துணைக்கு
இழுத்து பாமர மக்களையும்,வெய்யிலாளிகளையும் மூடநம்பிக்கையில் மூழ்கடித்துக்
கொண்டிருக்கும் ஊடகங்களான பத்திரிக்கைகளும்,தொலைக்காட்சி பெட்டிகளும் போட்டி
போட்டுக்கொண்டு மக்களுக்கு அறிவியல் சிந்தனையே வேண்டாம் என முடி வெடுத்து
இயங்குகின்றன.
உதாரணமாக
இன்று தினமணி(27.06.2014) யில் ‘திருநீற்றின் மகத்துவம்’ என அறிவியல் சிந்தனைக்கு
அப்பாற்பட்ட செய்திகளை நெற்றியில் இடும் சாம்பலைம்,குங்குமத்தையும் (இது எந்த
மதப்பிரிவினர் வேறுபடுத்தி காண உதவும் நெற்றியில் இடும் ஒரு குறியீடு-இது பற்றி
விரிவாக எனது வெளியீடான, ‘அறம் காத்த வர்மாக்கள்’எனும் நூலில் காணலாம்)
அறிவியலாக்கும் முயற்சி, ஒரு அறிவீனர்களின் கற்பனா சக்தியின் வெளிப்பாடு.தினமணி
போன்ற அறிவியல் தொடர்புடைய தினசரியில் இதுபோன்ற கட்டுரைகளை தயவு செய்து வெளியிட
வேண்டாம்.
புதுமுறைச் சிந்தனைச் சிற்பி
படைவீடு திருவேங்கடம்
நிறுவனர்:ஏழாம் அறிவு இயக்கம்
Visit:www.thiru-rationalism.blogspot.in
No comments:
Post a Comment