94 பள்ளிக் குழந்தைகள் தீக்கிரை,யார்
பொறுப்பு?
கும்பகோணத்தில்
சூலை 16 2004 அன்று ஒரு தனியார் (கிருட்னா பள்ளி) பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தீ
விபத்தில் 94 ஆரம்ப பள்ளி குழந்தைகள் கருகி விட்டன.பள்ளிக்குச் சென்ற குழந்தைகள்
வீடு திரும்பும் என நினைத்த பெற்றோர்களுக்கு சொல்லொணாத்துயரம்.
தான்
பெற்ற பிள்ளைக்கு தனக்கு முன்னே மரணம் நேர்ந்தால்,பிள்ளையை பெற்றோருக்கு யார்தான் ஆறுதல் சொல்வது?
இவ்வளவு
பெரிய மரணத்திற்கு எது காரணம்? அந்த காரணத்தை நீதி மன்றம் ஏன் குறிப்பிடவில்லை? பொறுப்பாளர்கள்
10 பேர் என சிறைதண்டனை வழங்கி தஞ்சை நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சம்பவம்
நடந்த அன்று அருகில் உள்ள கோயிலில் கடவுளுக்கு பூசை.அன்று அமாவாசை.குழந்தைகளை
பூட்டிவிட்டு ஆசிரியர்கள் கோயிலுக்கு சென்று விட்டார்கள்.நாமெல்லாம் நல்லா
இருக்கணும் என்றுதானே கடவுளை வணங்குகிறோம்.ஒரு பாவமும் அறியா அந்த பிஞ்சு
உள்ளங்கள் (உடல்கள்) தீயில் கருக யார் காரணம்? கடவுள் தான் காரணம் என நீதி மன்றம்
ஏன் தீர்ப்பு சொல்ல வில்லை?அல்லது குழந்தைகளை காப்பாற்ற வக்கில்லாத கடவுளை ஏன்
வணங்கப்போனீர்கள்?அதனால் தான் உங்களுக்கு இந்த சிறை தண்டனை என நீதி மன்றம் ஏன்
தீர்ப்புச் சொல்லவில்லை?
அது சரி தூங்கி
எழுந்த உடன் கடவுளை வணங்குகிறோம்,குளிச்சி சாப்பிட்டு பள்ளி/அலுவலகம் புறப்படும்
முன் கடவுளை வணங்குகிறோம்.பள்ளி அல்லது அலுவலகம் சென்று பணி துவங்குமுன் கடவுளை
வணங்குகிறோம்.மாலை வீடு திரும்பியவுடன் கடவுளை வணங்குகிறோம்.பின் படுக்கப்
போகுமுன் கடவுளை வணங்குகிறோம் இவ்வளவு ஏன் ? பாக்கெட்லியே கடவுள் படத்தை பத்திரமா
வச்சிருக்கிறோம். நம்மவர்களை மட்டும் கடவுள் பத்திரமா ஏன் வச்சிக்கிறது இல்லை?
நமக்கு உதவி செய்பவர்களை மறந்துவிட்டு கடவுளால் தான் உதவி கிட்டியது என கல்லை நேசிக்கிறோம்.எங்கே மனித நேயம்?
இதை ஏன்
யாரும் சிந்திக்கிறது இல்லை? பள்ளிக்கூடத்தில் தீப்பொறியை பாதுகாக்க தெரியாதவர்கள்
குழந்தைகளை எப்படி பாதுகாப்பார்கள்?கடவுள் பார்த்துப்பார் என கோயிலுக்கு சென்று
விட்டார்களா?
மரணம்
மனிதனுக்கு வயது முதிர்ச்சியால் வரட்டும்.அறிவீனத்தால் வரக்கூடாது.
புதுமுறைச் சிந்தனைச் சிற்பி
படைவீடு திருவேங்கடம்
No comments:
Post a Comment