பிரச்சினைகளும் நிவர்த்தியும்
*********************
அ.கணவன், மனைவிக்கிடையே பிரச்சினை
ஆ.குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கொருவர் பிரச்சினை
இ.பெற்றோர்களால் பிரச்சினை
ஈ.சுற்றத்தார் பிரச்சினை
உ.நண்பர்களால் பிரச்சினை
கணவன் ,மனைவிக்கிடையே பல பிரச்சினைகள் உருவாகும் இதை அவ்வப்போது பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும் .
அமைதியான சூழலை உருவாக்கி நிதானமாக மனம்விட்டு பேசவேண்டும் .
அ.1. பணபற்றாகுறையும் நிவர்த்தியும்
2. படுக்கையரை குறைபாடுகளும் நிவர்த்தியும்
1.முதலில் பணபற்றாகுறையை எப்படி சமாளிப்பது என்பதை பார்ப்போம் .
“நமது எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் நமது வாழ்க்கை அமையும்” .
கணவன்மனைவிக்கிடையே எண்ணங்களை ஒருமுகபடுத்திக்கொள்ளவேண்டும் .
ஒருகுடும்பத்தில் கணவன் மட்டுமே சம்பாதிப்பார் அல்லது மனைவிமட்டுமே
சம்பாதிப்பார் . ஒருவர் மட்டுமே சம்பாதிக்கும் வருமானத்தை வைத்து எப்படி
குடும்பம் நடத்துவது , அதுவும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவதுதான்
முக்கியம் .கூலித்தொழிலாளி,ரிக்சா ஓட்டி ,அலுவல் வேலையாளி,
அலுவலர் ,முதலாளி அவரவர் வருமானத்திற்கு ஏற்றாற்போல் வரவுசெலவு
கணக்கு பார்த்து மகிழ்ச்சியே குறிக்கோளாக வழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்
உனக்கும் கீழே உள்ளவர் கோடி என நினைத்துப்பார்து நிம்மதி தேடவேண்டும் .
வரவுக்கு ஏற்றாற்போல் செலவினங்களை வகுத்துக்கொள்ள வேண்டும் .
1,அடுப்பங்கரை செலவு
2.சாப்பாட்டு செலவு
3.உறைவிட செலவு
4.உடைகள் செலவு
5.குழந்தைகள் பராமரிப்பு செலவு
6.எதிர்பாரா மருத்துவசெலவு
7.விருந்தினர் பராமரிப்பு செலவு
8.சுற்றுலா செலவு
9.சேமிப்பு செலவு
மாதாந்திர வருவாய் உள்ளவர்கள் மாதாந்திர வரவுசெலவு கணக்கு போடலாம் .
விவசாயம் செய்பவர்கள் நில வருவாய்கு ஏற்றாற்போல் ஆறு மாதத்திற்கு
ஒருமுறையோ அல்லது ஆண்டுக்கு ஒருமுறையோ வரவு செலவு கணக்கு போடலாம்
நடுத்தர குடும்பங்கள் அடுப்பங்கரைக்கே நிறைய செலவு செய்ய வேண்டியுள்ளது
இதை கணவன் மனைவி இருவரும் இணைந்து எவ்வளவுக்கெவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு குறைக்கலாம் , மனம் ஒத்த நிலையில்.
1.அடுப்பங்கரை செலவு என்பது கட்டை அடுப்பு, மண்ணெண்ணை அடுப்பு , வளி அடுப்பு நிறுவுதல்; அதற்கான பாத்திரங்களை வாங்குதல் போன்றவையாகும்.
சமயல் பாத்திரங்கள் வாங்கும்போது அலுமின்யம் , எக்கு பாத்திரங்கள் மட்டுமே வாங்கவேண்டும்
2.சாப்பாட்டு செலவு என்பது மிகமுக்கியமானது . ஆரோக்கியமான உடல் பராமரிப்புக்கு இது மிகவும் அவசியம்.
“உணவே மருந்து” . இதை உணர்ந்து செயல்படவேண்டும் .
குறைந்த செலவில் சத்தான உணவு சாப்பிட வேண்டும் ,மேலும் உண்ணும் உணவுக்கும் ,மனோ நிலை பாதிப்புக்கும் நெறுங்கிய தொடர்புண்டு
3.உறைவிட செலவு ;வாடகை வீடு உள்ளவர்கள், சொந்த வீடு உள்ளவர்கள் என இருவகையாக பிரிக்கலாம் .
சொந்த வீடாக இருந்தாலும் , வாடகை வீடாக இருந்நாலும் காற்றோட்டமான அறைகளையே தேர்வு செய்ய வேண்டும் , நோயற்ற வாழ்வுக்கு இது பெறும் பங்கு வகிக்கும் .
சொந்தமாக வீடு கட்டுவதற்கு பொறியல் வல்லுநரையோ , ஜோசியக்காரரையோ அணுக வேண்டாம் .
அறைகளை அமைப்பதில்
8*8 ,10*10 ,15*15 , 16*16, 20*20, எனகிறமுறையில் தேர்வுசெய்து எதிரெதிர் திசையில் சன்னல்களை அமைத்து வீடுகளை அமைக்க வேண்டும் .
மொத்தத்தில் வெளிக்காற்று உள்ளே வரவேண்டும் ,உள்ளே இருக்கும் காற்று வெளியே செல்ல வேண்டும். இதுதான் வாஸ்த்து முறை .
கட்டியவீட்டுக்கு ஜோசியரிடம் வாஸ்த்து பார்பதும் உனக்கு ஏற்ப்படும் கஷ்டங்களுக்கு கட்டியவீடுதான் காரணம் என உனக்கு சொல்பவர்களின் அறிவுரை ஏற்றால் உனக்கு வீடில்லா நிலைதான் ஏற்படும் .
அக்கம்பக்கம் கடன்வாங்கி வீட்டைகட்டி அதனுள் குடிபுக நேரங்காலம் பார்த்து ஊர்கூட்டி ஆயிரக்கணக்கில் செலவுசெய்து புகுமனை புகுவிழா நடத்துவதால், எந்த பயனும் ஏற்படாது .மேலும் பணமில்லா நிலைதான் ஏற்படும்
4..உடைகள்செலவு
வளரும் குழந்தைகளுக்கு எந்தவித காரணங்களுக்காகவும் விலையுயர்ந்த ஆடை,அணிகலன்களை வாங்ககூடாது .
புத்தாடை அணிந்துதான் ஆண்டுகள் தோறும் வரும் விழாக்களை கொண்டாடவேண்டும் என்கிற மனோபாவத்தை குழந்தைகளிடையே வளர்க்க வேண்டாம் .
போதுமான அளவுக்கு மாற்று உடைகள் இருந்தால் ஆண்டுகள்தோறும் ,விழாக்கள் தோறும் புத்தாடைகள் எடுக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை
குழந்தைகள் பிறந்த நாட்களை எளியமுறையில் சுற்று வட்டார குழந்தைகளுடன்கொண்டாடலாம்.
அப்பாஅம்மா, குழந்தைகள் கழுத்தில் மலர் மாலை அணிவித்து , இனிப்புகள் பரிமாறி கொண்டாடலாம்
5.குழந்தை வளர்க்கும் கலை
குழந்தைகளை இரண்டுவயது வரை கண்டிப்பாக உங்களோடும் , இரவு நேரங்களில் உங்கள் படுக்கையரையை ஒட்டியும் உறங்க வைத்து உங்கள் நேரடி கண்காணிப்பில் வளர்க்கவேண்டும் .
குழந்தைகளை 12 மாதங்கள் தாய்ப்பால் ஊட்டியே வளர்க்க வேண்டும் .
குழந்தை பிறந்த ஆறாவது மாத த்திலிருந்து தாய்ப்பாலுடன் திடவுணவான நன்கு வேகவைத்த சிறிதளவு பருப்பு , உருளைகிழங்கு ஆகியவற்றை நன்கு வேக வைத்த அரிசியுடன் ஊட்டிவிடலாம்
குழந்தைகள் உலா வரும் இடத்தை தூய்மையாக வைக்கவேண்டும்.
தெருவில் விற்கும் தின்பண்டங்களை வாங்கித்தரக்கூடாது.
பள்ளிசெல்லும்போது பணமோ,தின்பண்டமோ கொடுத்தனுப்பக்கூடாது.
குழந்தைகள் தெருவில் விற்கும் தின்பண்டங்களை விரும்புவதும் ,பலூன் போன்ற அலங்கார பொம்மைகளை வேண்டுமென்று அடம் பிடிப்பதும் குழந்தைகளுக்கே உரிய குணம் .குழந்தை பருவம் என்பது ஒரு 7 -8 ஆண்டுகள்தான் .
பின் சிறுவர் பருவத்திற்கு மாறிவிடுவர் .குழந்தை பருவ குணங்களை மிக கவனத்தோடு கையாண்டோமானால் மிகச்சிறந்த மனிதர்களை அல்லது மக்களை பெற்ற பெற்றோர் என உலகம் உங்களை புகழும் . .குழந்தைகள் வகுப்பறைகளில் சண்டையிட்டுக்கொள்ளும் அல்லது தெருக்களில் சண்டையிட்டுக்கொள்ளும் அந்த நிகழ்ச்சியை பொற்றோர்களிடம் முறையிடும் போது ‘பதிலுக்கு அடித்துவிட்டுவரவேண்டியதுதானே’எனகுழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் குணங்களை அவர்கள் மனதில் விதைக்ககூடாது. அடித்தால் பரவாயில்லை ‘பதிலுக்கு நீ திருப்பி அடிக்ககூடாது’என குழந்தைகள்மனதில் கோபகுணத்தை போக்கி எதையும் தாங்கும் பக்குவத்தை வளர்க்கவேண்டும்.
குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு சலிப்படையாமல் பதில் சொல்ல வேண்டும் ,
எந்தகாரணத்தைக்கொண்டும் குழந்தைகளை நீண்டநேரம் அழவைக்ககூடாது .
விலையுயர்ந்த ஆபரணங்கள் மற்றும் ஆடைகளை வாங்கித்தரக்கூடாது .
குழந்தைகள்உடுத்தும் ஆடைகளை தினமும் துவைத்து குழந்தைகளை குளிப்பாட்டியபின் உடுத்தவேண்டும் .
பள்ளி சென்றகுழந்தைகள் வீடு திரும்பும் முன் நீங்கள் பார்த்துகொண்டிருந்த தொலைக்காட்சிப்பெட்டியை அணைத்துவிடவேண்டும் .
மாலை நேரத்தில் அரைமணி நேரமோ அல்லது வாராந்திரவிடுமுறைநாட்களில் சிலமணிநேரம் தொலைக்காட்சியை பார்க்க அனுமதிக்கலாம்; அறிவுபூர்வமான நிகழ்ச்சிகளாக இருக்கவேண்டும்.
6.எதிர்பாரா மருத்தவசெலவு
குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அடிக்கடி சளி ,இருமல்,காய்ச்சல் தொற்றும் .
இதை ஒரிரு நாட்களில் சரி செய்ய வேண்டும் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும் .
இதற்காக மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை சேமிப்பாக வைத்திருக்க வேண்டும் .
7..விருந்தினர் பராமரிப்பு செலவு உண்ணாமல் கெட்டது உறவு , பார்க்காமல் கெட்டது பயிர் , கேட்காமல் கெட்டது கடன் . இது பழமொழி .
குடும்பம் நடத்தும்போது விருந்தினர் வருவதும் அவர்களை வரவேற்று உபசரிப்பதும் நமதுகடமை . இதற்காக ஒருகுறிப்பிட்டதொகையை ஒதுக்கவேண்டும்
சுற்றுலாச்செலவு வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது நான்கு அய்ந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையோ குழந்தைகளோடு முற்றிலும் புதியசூழலைக்காண்பது மிக அவசியம்
இதை கண்டுகளிக்க மாதந்தோறும் சேமிப்பது அவசியம் .
8.சுற்றுலாச்செலவு
வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டு மூன்றுவருடத்திற்கு ஒருமுறையோ மனைவியுடனோ மற்றும் குழந்தைகளுடனோ வரலாற்று புகழ்பெற்ற இடங்களை சுற்றி பார்க்க
திட்டமிடல் வேண்டும்.
இதற்காக மாதாந்திர வருவாயின் ஒரு பகுதியை(சுமார் 10%)சேமிப்பாக வைக்கவேண்டும்
9..சேமிப்பு செலவு
இது வரவுதான் இருப்பினும் மாதாந்திரவருவாயில் ஒதுக்குவதால் செலவினங்களில் சேர்க்கலாம் .
மாத வருவாயில் குறைந்த பட்சம் பத்து சதவிகிதமாவது சேமிக்கவேண்டும்
2.படுக்கையறை பிரச்சினையும் நிவர்த்தியும்
******************************
படித்தவர்கள்தான் இதை பிரச்சினை ஆக்கிக் கொள்கிரார்கள் .
கணவன் மனைவி இருவரும் அமைதியான சூழலில்சந்தோஷ தருணங்களில் (இதை நாமஉருவாக்கிக்கொள்ளவேண்டும்)மனம்விட்டு பேசித்தீர்த்துக்கொள்ளவேண்டும் .
சந்தோஷ தருணங்கள் என்பது திருமணமான புதிதில் அடிக்கடி ஏற்படும் .
வயது கூடகூட தருணங்களில் அதிக இடைவெளி ஏற்படும் .
அதற்கு காரணம் இருவருக்கும் இடையில் உருவாகும் குழந்தைகள் , கூட்டுகுடும்பம் எனில் அப்பாஅம்மா , திருமணமாகாத தம்பி தங்கைகள் , ஒருசிலருக்கு தாத்தாபாட்டியும் இருக்கும் .
இவர்களையெல்லாம் பராமரித்துக்கொண்டு தாம்பத்தியத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ளவேண்டும் .
படுக்கையறையை மனசுக்குப்பிடித்த நறுமணங்களால் நிரப்பவேண்டும் .
மனம் லயிக்கும் இசைகளை பாடவிடலாம் முக்கியமாக கொசு , ஈ கரப்பான் , சிலந்தி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .
படுக்கபோகும்முன் எக்காரணத்தைக்கொண்டும் நடந்த கசப்பான நிகழ்ச்சிகளையோ எதிர்காலம் எப்படி அமையுமோ எனகிற மனக்கவலையோ இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் .
உடலுக்கு பலமூட்டும் எளிமையான உணவு வகைகளை உண்ணவேண்டும் . இதனால் மனம் சந்தோஷப்படும் .
இந்த நேரத்தில் கருதரிக்கும் மேலும் குழந்தைகள் பிரசவிக்கும் காலங்கள் சூலை மாதம்முதல் டிசம்பர் மாத்த்திற்குள் இருக்கும்படி நிர்னயித்துகொள்வது நல்லது .
அதாவது வெப்பம் குறைந்த காலமாக இருக்கவேண்டும்குழந்தைகள் நலமுடன் பிறக்கும் . . காரணம் இந்த காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல பண்பட்ட குணம் அமைகிறது என்பது ஆராய்ச்சியின் விளைவு .
பெரும்பாலான குடும்பங்களில் குழந்தை பிறந்தவுடன் குழந்தையை தங்களோடு படுக்க வைத்துக்கொள்வார்கள் .
இதுதவறு. குழந்தை அல்லது குழந்தைகளை தங்கள் படுக்கையறைக்கு அருகே தனி படுக்கையோ அல்லது தனி அறையோ அமைத்துக்கொடுக்க வேண்டும் .
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இது மிகவும் அவசியம் அதே நேரத்தில் தங்களின் நேரடி கண்காணிப்பில் இருப்பது அவசியம் .
குழந்தைகள் தூங்குவதாக நினைத்துக்கொண்டு , நீங்கள் உங்கள் படுக்கையறையை பூட்டக்கூடாது .
இரவு நேரங்களில் இறைச்சி , முட்டை , தயிர் , கீரை , மோர் அறவே தவிர்க்கப்படவேண்டும் .
எண்ணெயில்லா கோதுமைபண்டம் உலர்பழங்கள் , மிளகு ரசம், பால் இதுவே எளிய உணவு .
இரவு நேரத்தில் உணவு உண்டவுடன் படுக்க கூடாது .ஒருமணிநேரம் இடைவெளி வேண்டும்.
அவசரப்பட்டு ஒன்றிரண்டு குழந்தைகள் பிறந்தவுடன் குழந்தைவேண்டாம் என அறுவைசிகிச்சை செய்ய வேண்டாம் .
குடும்ப பொருளாதாரம் ,மனைவியின் உடல்நிலை பொருத்து கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசி எத்தனை குழந்தைகள் தேவை என தீர்மானிக்கலாம்
ஆ. குடும்ப உருப்பினர்களில் ஒருவருக்கொருவர் பிரச்சனைகளும்
தீர்வுகளும்.
குடும்பத்தில் அப்பாஅம்மா, குழந்தைகள்,மற்றும்தாத்தாபாட்டி இவர்கள்தான் முக்கிய உருப்பினர்கள்.
குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் சண்டைபோடவேண்டாம் .
குழந்தைகள் ஒன்றோடொன்று சண்டை போட்டுக்கொள்ளும் இதை தீர்ப்பதில் பெரியவர்கள், குழந்தைகள் முன்னிலையில் சண்டைபோடவேண்டாம் .
யார்பெரியவர்களோ அவர்கள் பேச்சை சிறியவர்கள் கேட்கும்படி செய்யவேண்டும்.
இப்படி பழகும்போது குழந்தைகள் உரையாடல்களை பெரியவர்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும்.
வரம்பு மீறும் பேச்சுக்களை திருத்தவேண்டும். அதுவும் அன்பாக திருத்தவேண்டும் .
குழந்தைகள் சண்டையை தீர்க்கும் பொருட்டு எந்த குழந்தையையும் அடிக்க வேண்டாம் .
அப்படிசெய்தால் குழந்தைகள் மனசிதைவு ஏற்படும் .
குழந்தைகள் வளர்ப்பில் எந்தக்குழந்தைக்கும் மனசிதைவு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது பெரியவர்களின்பொறுப்பு .
இ.பெற்றோர்களால் பிரச்சினைகளும் தீர்வுகளும்
பெற்றோர்களை பிரச்சினையாக நினைக்கும் மனோபாவத்தை ஒழிக்கவேண்டும் .
பெற்றோர்களை மதிப்பதும் இறந்தவர்களை வழிபடுவதும் சமதர்ம மனிதகுலம் தழைத்தோங்க உதவும் .
இது ஒரு மனித உணர்வு மனிதனின் பிறப்பு இச்சையானது .
பிறந்தவுடன் அவன் தானாக வளர்ந்து விடுவதில்லை. அவன் வளர்க்கப்படுகின்றான் .
பின் இறப்புஇச்சையானது.
பிறப்பிலும் இறப்பிலும் சடங்குகளை புகுத்தி வாழ்க்கையில் மனிதனுக்கு பற்றை ஏற்படுத்தி மனிதவுணர்வுகளான அனபு ,பண்பு ,பரிவு , தர்மம் ,நீதி நேர்மை ,நன்றி போன்ற அற உணர்வுகளை அவன் வளர்க்கப்படும்போது உணரச்செய்யப்படுகிறது .
இதில் பெற்றோர்களுக்கு பெரும்பங்கு உண்டு உன் குழந்தைகள் முன்னிலையில் உன் பெற்றோரை நீ வணங்கவேண்டும் இது மிக முக்கியமான மனித பண்பு .
இந்த பண்பை ஒவ்வொருமனிதனும் உணர்ந்து வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் பெற்றோர்களால் பிரச்சினையே வராது .
ஈ . சுற்றத்தார் பிரச்சினைகளும் தீர்வுகளும்
கூட்டம் கூட்டமாக வாழ்வது மனிதர்களிடையே இருக்கும் ஒரு மிருக உணர்வு .இதுஒரு சிறந்த உணர்வு .
பிறர்கின்னா செய்யாமையும் நன்றி மறவாமையும் தான் இதற்கு தீர்வு .இது மனித உணர்வு .
நம்மிடையே உபரியாக இருக்கும் பணத்தை நம்முடைய உறவினர்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தலாம் .அவர்கள் முன்னேறிய பிறகு அதாவது யார் நம்மால் பயன்அடைந்தார்களோ அவர்கள் நம்மிடம் பாசமாக இருப்பார்கள் என எதிர்பாக்ககூடாது ,இந்த நிலையை நாம் இயல்பாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
இது மகன்,மகள்,அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை
உறவுமுறைகளுக்கும் பொறுந்தும்.நல்லது செய்ய செய்ய மனம் மகிழ்ச்சி அடையும்.
உ .நண்பர்களால் பிரச்சனையும் தீர்வும்
அப்பாஅம்மா ,அண்ணன் தம்பி ,அக்கா தங்கை இவர்களைவிட நண்பனுக்கு தனி நிலையுண்டு .
காரணம் நணபர்களிடம்மட்டுமே அந்தரங்க உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியும் .
வயதுஏற ஏற பருவத்திற்குஏற்றாற்போல் நண்பர்கள் மாறிக்கொண்டேஇருப்பார்கள்
ஆரம்ப பள்ளி உயர்நிலைப்பள்ளி ,கல்லூரி மற்றும் வேலை நிறுவணங்களில்
நண்பர்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் .
பழகும்போது நண்பர்களின் குணமறிந்து பழகவேண்டும் என கூறுவார்கள் .
ஆனால் நமக்கு என்ன குணங்கள் உள்ளன அதில் அடுத்தவர்களை கெடுக்கும் குணமுள்ளதா? அல்லது வரியவர்கள் ஏழைகள் இவர்களை பார்த்து முகம் சுழிக்கும் குணமுள்ளதா என சுய விமர்சனம் செய்யும் பக்குவம் நமக்கு வரவேண்டும்
இந்த நோக்கில் நண்பர்களை தேர்வுசெய்தால் நமக்கு நண்பர்கள் மிக குறைவாகவே அமைவார்கள் .
சிலநேரங்களில் நமக்கு பிடிக்காத பொருளைப்பற்றி அருவருக்கதக்க மொழிகளில் நம்மை வெறுப்பேற்ற மணிக்கணக்காக பேசுவார்கள் .
அந்த நேரத்தில் பொறுமை காக்க வேண்டும். அப்பொழுதும்
எல்லைமீறும்சமயத்தில் அத்தகைய நட்பை துண்டிக்க வேண்டும். எந்த நிலையிலும் வன்முறையில் இறங்க கூடாது
சூதாட்டம்,புகைபழக்கம் , குடிப்பழக்கம் பிறன்மனை கெடுக்கும் நோக்கம் இருந்தால் நிறைய நண்பர்கள் சேருவார்கள் .
இந்த மாதிரியான நண்பர்கள்தான் நமக்கு எதிரிகளாகவும்,துரோகிகளாகவும் மாறுவார்கள் இந்த நண்பர்களை வீடுவரை அழைத்து வரக்கூடாது .
இந்த நண்பர்களால் நமக்கு மன அழுத்தம் ஏற்படும். இந்த கூடா நட்பை தட்டிகழித்தால் நமக்கு எந்த பிரச்சனையும் வராது .
நட்புக்காக ஆதரவு கரம்நீட்டலாம், ஆனால் உயிரைவிடும் அளவுக்கு கோழையாக இருக்க கூடாது.
நண்பர்களுக்கு பொருளுதவி செய்யலாம் அதேநேரத்தில் நமக்கு பொருளில்லா நிலை ஏற்பட்டு விடக்கூடாது
Monday, February 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment