பரிகாரம் உண்டா ?
மனிதனின் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் மனிதனின் மனம்தான் காரணம்.
கடவுள் இல்லை
நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலான மனிதர்கள் இதை உணர்வதாகவோ ஏற்பதாகவோ இல்லை .
(19.01.2009) இன்றய செய்தி தாள்களில் , சென்னையில் நேற்று நடந்த பிராமணர்களின் மறுமண சுயம்வர நிகழ்ச்சியில் முதல் தீர்மானமாக, ‘திருமணம் நடக்கும் முன ஜாதகம் பார்ப்பது கூடாது அதற்கு மாறாக மணமக்களின் மனப்பொருத்தத்தைதான் பார்க்கவேண்டும். குடும்ப பின்னணி ,சமுகநிலை ,பழக்கவழக்கங்களை தெரிந்து கொண்டபிறகு திருமணம் முடித்தால் விவாகரத்து ஏற்படுவதை தவிர்க்கலாம் .’
இன்றய நாட்களில் பெரும்பாலான இந்துக்களின் மத தொடர்புடைய சம்பரதாயம் ,சடங்கு போன்ற மூட நம்பிக்கைகளின் வழிகாட்டியே பிராமணர்கள்தான் என்பது யாவரும் அறிந்ததே .
பாமர மக்களின் அறியாமையை பயன்படுத்திக்கொண்டு அவர்களின் உழைப்பில் வரும் பணத்தை தங்கள் வாழ்வாதாரமாக வாழ்வதில் புண்ணியம் என்கிற நம்பிக்கையை பரப்பிவிட்டனர் .
இன்றளவும் மற்ற சாதிகளின் பழக்க வழக்கங்கள்என்பது, கோள்களின் (கிரகங்கள்) அசைவு ,நட்சத்திரத்திரங்களின் தோற்றம் ஒவ்வொரு மாதத்திற்கும் ராசி என்கிற பெயர் வைத்து மண்ணில் பிறக்கும் மனிதனின் இயக்கத்திற்கும் அவன் படும் இன்ப துன்பங்ளுக்கு அறிவியல் அளவிலான காரண காரியங்களை மையப்படுத்தி ஜாதகம் ஜோசியம் என பஞ்சாங்கத்தை மேற்கோள் காட்டுகின்றனர் .
அரைகுறை படிப்பாளிகளான நம்ம பாமர மக்கள் பஞ்சாங்கம் தான் நமக்கு அறிவியல் வழிகாட்டி என இன்றளவும் நம்பிக்கொண்டிருக்கின்றனர்
மாஸ்ட்டர் மற்றும் டாக்டர் பட்டம் பெற்றவர்களும் சுயமாக சிந்திப்பது இல்லை பெற்றோரும் சுற்றத்தாறும் இவர்களை சிந்திக்க விடுவது இல்லை
இதில் ஒரு அநியாயம் என்ன வென்றால், ஒவ்வொரு மனிதனின் துன்பத்திற்கும், திருமணம் ஆகவில்லை மற்றும் வேலை கிடைக்க வில்லை ,இதற்கெல்லாம் நிவாரணம் பெற பரிகாரம் செய்ய வேண்டும் ,என பாமரனை நம்ப வைத்து அவனை மேலும் மேலும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர் .
இதனால் மன நிலை பாதிக்கப்பட்டு மன அழுத்தம் ,மற்றும் நீரிழிவு நோய்க்கு ஆளாகின்றனர்
பரிகாரம் என்பது அடுத்தவர்களுக்கு உபகாரம் செய்வதுதான் .மேலும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால்
1. அன்னதானம் செய்வது .
2.உடைகளை தானம் செய்வது
3.பொன் பொருளை தானம் செய்வது
4. ஆடு மாடுகளை தானம் செய்வது
5.கோயில் உண்டியலில் பணம் போடுவது
6.உண்டியலில் மாங்கல்யம் செலுத்துவது
7. தலை மயிரை காணிக்கை என்கிற பெயரில் மொட்டைபோடுவது
காலப்போக்கில் இதெல்லாம் திசைமாறி தான் செய்யும் வணிகத்தில் அளவுக்கு அதிக லாபம் கிடைத்தால் பாதியை உண்டியலில் செலுத்துவது (இந்த வணிகம் என்பது கள்ள ரூபா நோட்டு அச்சடித்தல் போன்ற அறவழிதவறிய செயல் மூலம் பெறும் லாபம் ).இதை நல்ல பணமாக மாற்றியபின் பாதியைஉண்டியலில் போடுவது என பிரார்த்தனை செய்வதுகொள்வது
மனிதனும் கிரகங்களும்
சம்பரதாயம் ,சடங்கு என்பதெல்லாம் மனிதன் சுயமாக எதையும் செய்யக்கூடாது என்பதுதான் அதன் பொருள் .
இது பல நூற்றாண்டுகளாக முதல் நிலை குடிமக்கள் ,இரண்டாம் நிலை குடி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்ட நிலை ஆகும் .
அறவழியில் (அதாவது சக மனிதனுக்கு துன்பம் விளைவிக்காத) எந்த செயலை ஆரம்பித்தாலும் அதற்கு மூலதனமே துணிவுதான்.
இதற்கெல்லாம் பஞ்சாங்கம் பார்க்க வேண்டியதில்லை என்கிற துணிவுதான் இந்த துணிவு சாதாரணமாக யாருக்கும் எளிதில் வந்துவிடாது .
இந்த துணிவு அறவழி சுய சிந்தனையாளருக்கு மட்டுமே அமையும்.
இப்பொழுதெல்லாம் ஒரு தொழில் ஆரம்பிக்க ,ஆரம்பித்த உடனே கொள்ளை லாபம் வர வேண்டும் ,இதற்கு கடவுள் அனுக்கிரகம் வேண்டும் என ஏமாற்றி நம்ப வைப்பது
அப்பொழுதுதானே அவர்கள் பிழைப்பு நடக்கும் .
அடிக்கும் கொள்ளை லாபத்தை பார்ப்பவன் கவனத்தை திசை திருப்பவே கணபதி ஒமம் நடத்துவது , பின் செப்புத்தக்கடுகளில் புரியாத எழுத்துக்களை எழுதி அதற்கு அபரிமிதமான சக்த்தியுண்டு என அடுத்தவனை(பாமரனை) நம்ப வைப்பது .
அதை வணிகம் நடக்கும் வளாகத்தில் பிறர் கண்ணில் படும்படி வைப்பது .எதையும் எளிதில் நம்பும் நம்மவர்கள் உடனே அந்த செப்புத்தகடு அடித்தவன் முகவரி தேடி, அவன் கொழிக்க இவன் அள்ளி கொடுப்பான் .
இதற்கு தான் அந்த செப்புதகட்டை கண்ணில் படும்படி வைக்கச்சொல்வது .
புதியதாக வீடுகட்டிக்கொண்டு போவோரும் இதை தான் செய்ய ஆசைப்படுகின்றனர் .
நான் வீடு கட்ட ஆரம்பிக்கும் போது என் மனைவி மற்றும் மேஸ்த்ரி போன்றோர், நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டும் என வற்புறுத்தினர் .நான் மறுத்துவிட்டேன் .பல நாள் யோசித்து , எப்படி வீடு அமையவேண்டும் அதற்கு பொருளாதாரத்தை எப்படி பெறுவது, செலவினங்களை எப்படி சமாளிப்பது என முடிவு செய்து இந்த நாளில் ஆரம்பித்து இத்தனை நாட்களுக்குள் முடிக்கவேண்டும் என மேஸ்த்ரியிடம் ஒப்படைக்கப்பட்டது
அதன்படி வீடு கட்டி முடிக்கப்பட்டது .
பின் புகு மனை விழா எடுக்க வேண்டும் என்றனர் .
மறுத்துவிட்டேன் .
கடன் வாங்கி வீடுகட்டிவிட்டு அதில் குடிபுக விழா தேவை யில்லை . கணபதி ஒமம் தேவையில்லை.
அடுத்தவேளை சோத்துக்கு பணமும் ,தேடி வருபவர்களுக்கு முகவரியும் முன் சுவற்றில் எழுதி வைத்தால் போதுமானது என என் மனைவியை சமாதானம் செய்து ,வீடு கட்டி 25 ஆண்டுகளுக்கும் மேலாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் .
ஊருக்கு தான் உபதேசம் என கூறுவார்கள் ,ஆனால் உபதேசம் செய்தபடி தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள் ஒரு சிலரே, அவர்களே வரலாற்றில் இடம் பெறுவர் .
வானத்தில் எண்ணில் அடங்கா நட்சத்திரங்களும் ,கோள்களும்(கிரகங்கள்) உள்ளன .
நாம் வாழும் பூமிக்கும் சூரியன் சந்திரன் உள்ளதுபோல் ,பல பூமியும் சந்திர சூரியன்கள் உண்டு . இது இன்றய அறிவியலாளரின் கூற்று பூமிகளில் உயிரினங்கள் தோன்றுவதும் மறைவதும் இயற்கையான நிகழ்வுகள் .
இது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெறும் தொடர் நிகழ்ச்சி .
இது மேலும் தொடரும் .
இதில்சிலகாலம் வாழ்ந்துவிட்டு போகும் மனிதனின் மனதில் அளவில்லா கற்பனைகள் . பேராசைகள்
அவன் பாறைகளில் வரைந்த ஓவியம் அல்லது அவன் வடித்த சிலைகள் .
அவன் பேசிய பேச்சிற்கு எழுத்து வடிவம் அதன் படிவங்களை கதைகளாக நாம் படித்து அதற்கு அறிவியல் அர்த்தங்களை தேடிக்கொண்டிருக்கின்றோம் .
வானத்தில் தோன்றும் இடி ,மின்னல் மற்றும் தொடர் கன மழை காரணமாக உயிரை காப்பாற்றிகொள்ள மிரண்டு இங்கும் அங்கும் ஓடினான்.
மரணபயத்தால் தன்னை காப்பாற்றிகொள்ள மனிதன் பாதுகாப்பு தேடினான் .
இந்த பயத்தின் காரணமாக அருவ இயல் (theory of god ) தத்துவம் தோன்றியது.( அதாவது மனிதனை மனிதன் ஏய்க்கும் தத்துவம் அல்லது முரட்டு மனிதனை நல்வழிபடுத்தும் தத்துவம்)
பெரும்பாலும் இயற்கையான குகைகள் அவனுக்கு வசதியாக அமைந்துவிட்டது . இல்லாத இடத்தில் பாறைகளை குடைந்து கொண்டு குடும்பமாக வாழ ஆரம்பித்தான். காலப்போக்கில் செயற்கையான வீடுகளையும் கோட்டைகளையம் அமைத்துக்கொண்டான்.
பஞ்சாங்கம் எப்படி ஏற்பட்டது ?
மனிதன் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் அவன் வாழ்நாளில் அவன் படும் ,இன்பதுன்பம் ,உயர்வு ,தாழ்வு ,நோயற்ற அல்லதுநோயுற்ற உடல்நிலை போன்றவை எப்படி நிகழ்கிறது என்பது முதலில் புரியாத புதிராக இருந்தவனுக்கு ,இதற்கு ஒரு அர்த்தம் வேண்டும் என வரையறுத்துக்கொண்டானர் .
இதன் விளைவுதான் வானத்தில் கண்ணில் படும் நட்சத்திரங்களையும் வளர்ந்து தேயும் நிலவையும் .
அவ்வப்போது தோன்றும் வால் நட்சத்திரங்களையும் கணக்கில் கொண்டு வானில் தோன்றும் நிகழ்ச்சிக்கும் அதன் விளைவாக பூமியில் நிகழும் பூகம்பம் ,இடி மின்னல் கடலலைச்சீற்றம் ,போன்ற இயற்கை நிகழ்வுகளால் மனிதனின் பிறப்பையும் இறப்பையும் அதற்குள் அவன்அடைந்த உயர்வு தாழ்வு நிகழ்ச்சிகளுக்கு முடிச்சு போட ஆசைப்பட்டான் .
அதன் விளைவுதான் இந்த பஞ்சாங்கம் .மற்றும் கைரேகை சாஸ்த்ரம்
பஞ்சாங்கம் பார்ப்பது யார் ?
இப்பொழுதெல்லாம் பூமியுன் சுழற்சிவேகம் மிக துல்லியமாக கணக்கிட்டு கால மாற்றங்கள் ஒரு ஆண்டில் எப்படி நிகழ்கிறது எனவும் முழு காலமாற்றமும் நிகழ ஒரு ஆண்டு ஆகிறது எனவும் ஒரு ஆண்டுக்கு 365 நாட்களும் 6 மணி நேரமும் ஆகிறது எனவும் கணக்கிட்டுள்ளனர் .
இந்த கணக்கை இன்று உலகெங்கும் உள்ள நாடுகளும் அனைத்து மதங்களும் ஏற்று கொண்டுள்ளன .
முதலில் கண்ணில் பட்ட 7. கோள்களை அதற்கு தனித்தனியாக பேர்வைத்து வாரக்கணக்காக 7.நாட்கள் என பெயர் வைத்தனர் .
ஒரு நாளுக்கு 24 மணிநேரம் என்பது மேலை நாட்டு கணக்கு .
நம்முடைய பஞ்சாங்க வாதிகள் இரவு நேரத்தை கணக்கில் கொள்ளாமல் பகலை நாழிகை முறையில் கணக்கிட்டனர்.
இரவு நேரத்துக்கு ஜாமக்கணக்கு போட்டு 4 பாகமாக பிரித்துக்கொண்டனர்.
அதாவது ஒரு ஜாமம் என்பது 3 மணிநேரம் இரவு நேரத்தில் எந்த காரியம் செய்தாலும் அதற்கு தடையில்லை .
ஆனால் செய்யக்கூடாது
பகலில் மட்டும் காலை 6 மணியிலிருந்நு மாலை 6.மணி வரைக்கும் அதாவது சூரிய உதயத்திலிருந்து சூரியன் மறையும் வரைக்கும் பஞ்சாங்கம் பார்த்து செயல்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது .
பின்னாளில் ஒரு ஆண்டை 12.மாதங்களாகவும் மாத த்திற்கு 4 வாரங்களாகவும் மேலை நாட்டு வானவியல் வல்லுநர்கள் வகுத்தபோது நம் நாட்டு பஞ்சாங்க வாதிகள் வாரத்திற்கு 7 நாடுகள் எனவும் மாதத்திற்று 27 நட்சத்திரங்கள் எனவும் வருடத்திற்கு 27*12=324 நாட்கள் என கணக்கிட்டனர் .
முதலில் 7 பிறகு 9- தற்போது 12 கோள்கள் இருப்பதாகவும் இவைகள் தான் நம்மை ஆட்டி படைக்கின்றன ,என மேலை நாட்டு பஞ்சாங்க வாதிகளுடன் சேர்ந்து நம்நாட்டு பஞ்சாங்க வாதிகளும் பாமரனை குழப்பிக்கொண்டிருக்கின்றனர்.
இன்னும் ஒருசில மேலைநாட்டு வானவியல் வல்லுநர்கள் ஒரு ஆண்டை 9 வகையாக பிரித்து அதாவது மாதத்த்தின் 31 நாட்களை 9வகையாக பிரித்து கீழ்கண்டவாறு கணக்கிட்டு அந்த காலகட்டத்தில் பிறந்தவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான நிலைகளும் மாற்றங்களும் நிகழும் என பத்திரிக்கையில் எழுதி படித்தவனை குழப்புகின்றனர்
1-10-19-28
2-11-20-29
3-12-21-30
4-13-22-31
5-14-23
6-15-24
7-16-25
8-17-26
9-18-27
மேலும் சில வான நூல் பொய்யர்கள் 12 ராசிகளுக்கும் உருவங்களை கொடுத்து கீழ்கண்டவாறு மேலும் குழப்புகின்றனர்
மார்ச்20- ஏப்ரல்18------------------ARIES --------------- மேஷம்
ஏப்ரல்19- மே 19--------------------TAURUS-------------- ரிஷபம்
மே20- ஜூன்20--------------------- GEMINI--------------மிதுனம்
ஜூன்21-ஜூலை21--------------- CANCER--------------- கடகம்
ஜூலை22-ஆகஸ்ட்21----------- LEO -------------------சிம்மம்
ஆகஸ்ட்22- செப்டம்பர்20------- VIRGO ----------------கன்னி
செப்டம்பர்21 -அக்டோபர்22 -----LIBRA ----------------துலாம்
அக்டோபர்23- நவம்பர்21 --------SCORPIO -------------விருட்சிகம்
நவம்பர்22 -டிசம்பர்22 ------------SAGITTAURUS------- தனுசு
டிசம்பர்23- ஜனவரி19 ------------CAPRICORN ----------மகரம்
ஜனவரி20 -பிப்ரவரி18 -----------AQAUARIUS ---------கும்பம்
பிப்ரவரி19-மார்ச்19 ---------------PISCES ---------------மீனம்
(பார்க்க-டைம்சு ஆப் இந்தியா,தினத்தந்தி,இந்தியன் எக்சுபிரசு)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் யாவருக்கும் வாழ்க்கையில் ஒரே மாதிரியான ஏற்றத்தாழ்வுகள் நிகழும் என அடித்து கூறுகின்றனர் .
மேலே குறிப்பிடப்பட்ட தேதிகளில் வரும் ராசிகள் நிலை மாறுவதே இல்லை ஆனால் மனிதனின் நிலைகள் மட்டும் எப்படி மாறும் ?
இதில் நமது பழய பஞ்சாங்கமான 12 ராசி 27 நட்சத்திரம் 7 நாட்கள் இதில் நாழிகை, ஜாமக்கணக்கு,பாத கணக்கு ராகு காலம் ,எம கண்டம், கரிநாள், அமிர்தயேகம், மரணயேகம் ,சுக்கில பட்சம் கிருஷ்ன பட்சம். என பாமரனுக்கு புரியாத வார்த்தைகளை போட்டு கீழ்கண்டவாரு குழப்பிக்கொண்டிருக்கின்றனர் .
மொத்தத்தில் எந்த நாளில் எந்த வேலையை ஆரம்பித்தாலும் அதைப்பற்றி தெரிந்து கொள்ள எதற்கும் சோதிடரையோ அல்லது புரோகிதரையோ அணுகி அதற்கு தட்சணையாக உணவு பொருளோ அல்லது பணத்தையோ கொடுக்க வேண்டும் என்பதுதான் அதன்பொருள் .
விடாமுயற்சியும்,தொடர்உழைப்பும் கொண்டவர்கள் வாழ்க்கையில் ஜோதிடமும்,பஞ்சாங்கமும் இடம் பெறா
அவர்களே வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள்.
கட்டங்களை போட்டு குரு(வீடு மாறும்) மற்றும் சனி கிரக சஞ்சார பலன் சொல்லும் சோதிடர்களின் பொய் பித்தலாட்டத்தை நம்பி மன நலம் குன்றியவர்கள் ஏராளம் .
ஒரு சோதிடர் கணிப்பு அடுத்த சோதிடருக்கு ஒத்து வராது
உழைப்பை நம்பாமல் ஊர் சுற்றும் வீணர்களின் பணத்தை வைத்து இந்த சோதிடர்கள் பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கின்றனர் .
இது வரை இந்த உலகில் இது நடக்கும் ,இது நடக்காது என அடித்துகூற மாட்டார்கள் . அத்தகைய பந்தயம் கட்டும் வேலைக்கும் முன் வர மாட்டார்கள் .
குரு மட்டுமில்லை இந்த கோள்கள் இட மாற்றத்தாலும் மனிதன் மனம் மாறுகின்றது என்பது இந்த வானவியல் நிபுணர்களின் கூற்று .
ஒரு வகையில் இதை நம்பினாலும் ,சுய சிந்தனையாளன் கேள்விக்கு, வீடு விட்டு வீடு மாறும் கோள்களின்(கிரக சஞ்சாரம்) நிலையை வரையறுத்து கூறுவது யார் ? .
வானத்தில் இருக்கும் கற்பனை வீடுகளில் எந்த வீட்டில் எந்த கோள் எந்த நட்சத்திரத்தோடு இணைகிறது என தினமும் தொலைநோக்கி(telescope) வைத்து கணக்கிட்டுக்கொண்டிருப்பது யார் ?
வானளாவிய செயற்கை கோள்கள் உலகெங்கும் உள்ளன.
அவற்றின் உதவியால் கிரக சஞ்சாரங்களையெல்லாம் படம் பிடித்து தொலைகாட்சியில் காண்பித்து மனிதர்களின் மன ஒட்டங்களையும் மாற்றங்களையும் ,எதிர்காலத்தில் இது நடந்தே தீரும் என நிருபிக்கவேண்டியதுதானே ?
இதற்கு யாரும் பதில் சொல்ல முடியாமல் இது ஒரு விதண்டாவாதம் என ஒதுக்கிவிடுவர் .
தினமும் ராகுகாலம் 1 ½ மணிநேரமும் எம கண்டம் 1 ½ மணிநேரமும் நமது பாமரனை பாடாய்படுத்துது .
இதை பார்த்து பார்த்து எந்த செயலையும் ஒழுங்காக செய்வதில்லை .
ஒருநாளைக்கு 24 மணிநேரம் வாரத்திற்கு 7 நாட்கள் இது எல்லாம் நாம் அறிந்தது தான் .
இருந்தாலும் அந்த 7 பகல் நாட்களில் தினமும் வந்து போகும் அந்த 1 ½ +1 ½ =3 மணி நேரத்தில் பூமியில் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது ?
ஏன் அந்த மூன்று மணிநேரம் எந்த வேலையும் செய்யக்கூடாது ? அப்படி மீறி செய்தால் என்ன ஆகிவிடும்?
இந்த கேள்விக்கெல்லாம் யாருக்கும் பதில் தெரியாது .
இது பெரியவர்கள் வகுத்தது .பஞ்சாங்கத்தில் இருப்பது என கூறுவர்
அதிகம் படித்தவர்கள் (அதாவது MA ,MSc ,PHD ,MPHIL,MA ML .MS MD ,IAS ,IPS ME ,M TECH இந்த பட்டங்களெல்லாம் இந்தியாவில் இருக்கும் பல்கலை கழகங்கள் வழங்குபவை ) கூட இதை பற்றி சிந்திப்பதே இல்லை
இந்தியாவில் வாழும் பிறமதத்தவரும் இந்துக்களின் இந்த மூட நம்பிக்கையோடு இணைந்து விட்டனர் .
மேலை நாடுகளில் இதுபோன்று ராகுகாலம்,எமகண்டம் பார்த்து ,உழைப்பாளிகள் காலத்தை வீண்டிப்பதாக தெரியவில்லை
சமீபத்தில் சந்த்ராயன் விண்கலத்தை விண்ணில் ஏவும் முன் நாள் திருப்பதியில் வந்து ~,விண்கலம் வெற்றிகரமாக அதன் பயணத்தை முடிக்கவேண்டும்” என பிரார்த்தனை செய்த இந்தியாவின் முன்னணி அறிவியலாளர் கூட ,தன்னம்பிகை இல்லா பஞ்சாங்க வாதி என நிருபித்து வருகின்றனர் .
இவர்களை நம்பி இந்திய அரசும் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி சீரழிக்கிறது.
Tuesday, February 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment