Friday, January 30, 2009
2. வாழ்க மகிழ்ச்சியுடன்
வாழ்கமகிழ்ச்சியுடன் 0oct2008
வாழ்க்கை *ஒருகலை*
ஆலோசனை பெற முக்கிய தகுதி
1. திருமணமானவராக இருக்க வேண்டும்
2. +2 படித்திருக்க வேண்டும்(குறைந்த பட்சம்)
வாழ்க வளமுடன் என்னும் இயக்கத்திற்கும் வாழ்க மகிழ்ச்சியுடன் என்னும் இயக்கத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
வாழ்க வளமுடன் -இந்த இயக்கத்தில் தொடர்புடையவர்கள் செலவச்செழிப்பால் சிறுவயதில் சில தீயபழக்கங்களாலும் ,முறையற்ற உணவு முறை பழக்கத்தாலும் மது, மாது இவைகளோடு நிறைய அளவுக்கு மீறி பழகியவர்கள் .
இதனால்
மன உளைச்சல்.நீரிழிவு நோய் ,இதய தொடர்பான வியாதிகளினால் மருத்துவ கண்காணிப்பில் வாழ்பவர்கள் .,
மறுவாழ்வு தருவதாக எண்ணி யோகா போன்ற பயிற்சியுடன் தியான முறை மன ஒழுக்கம் கிடைப்பதாக அதில் சேறுகின்றனர்.
இந்த இயக்கத்தில் இருப்பவர்களுக்கு அறவழி சுய சிந்தனை இருக்காது .
இது ஒரு உடல் மற்றும் மன நோயாளிகளின் கூட்டம்.
ஆனால்
வாழ்க மகிழ்ச்சியுடன் -இந்த இயக்கம் ஏழாவது அறிவு இயக்கத்தின் மறு பக்கமாகும்
அதாவது அறவழி சுய சிந்தனை மற்றும் வாழ்க மகிழ்ச்சியுடன் இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் போல் செயல் படுகிறது .
மணமான புது இணையர் இந்த இயக்கத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் .
அவர்களின் குறைந்த பட்ச வருமானமாக இருந்தாலும் அதிக பட்ச வருமானமாக இருந்தாலும்,அதனை வரையறுத்து, வாழ்க்கைமுறைகளை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும்,என வழிகாட்டபடுகிறது
அவர்கள் பெறும் குழந்தைகளை கர்ப காலத்திலிருந்து அறிவாற்றலோடு எப்படி பேணிகாப்பது என வலியுறுத்தி வருகிறது .
இந்த இயக்கத்தில் ஈடுபடுத்தி கொண்டவர்களின் வாழ்க்கை- அதிக பட்ச வயதுடன்- நோய் இன்றி மகிழ்ச்சியுடன் வாழ்வதே- குறிக்கோளாகும் .
குடும்பத்தில் யாரொருவர் தன்குழந்தைகள் முன்னிலையில் தனது பெற்றோர்களின் பாதங்களை தொட்டு வணங்குகிராரோ ,அவர் குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் .
துக்கப்படுவது என்பது ஒருவரது அறியாமையால் ஏற்படுவதுதான்--சுவாமி விவேகானந்தா கூறுகிறார்
இதில்ஒன்பது தொகுப்பு மூலம் பல தரப்பட்ட வினாக்கள் உள்ளன
இதற்கு விடைகளை தயார் செய்துகொண்டு என்னை இ மெயில் tr_bsc@yqhoo.com மூலம் தொடர்பு கொள்ளவும் .
அத்துடன் அவ்வப்போது வெளியாகும் வரலாறு ,பூகோள மற்றும் உடற்கூறு அறிவியல் தொடர்பான கட்டுறைகளை படித்து சந்தேகம் இருப்பின் என்னோடு தொடர்பு கொள்ளவும் .
(உங்களுக்கு தொடர்பில்லாத வினாக்களுக்கு பதிலளிக்கவேண்டாம்)
1,பெயர்---------------------------------:
2.ஆண்/பெண்---------------------------:
3.வயது--------------------------------:
4.படிப்பு------------------------------- :
5.திருமணம் ஆன தேதி-------------------:
6.வைதீக முறைபடி திருமணமா-------- ----?
7.காதல் திருமணமா----------------------?
8.குழந்தைகள்:
ஆண்: வயது:
பெண்: வயது:
9. குழந்தைகளின் படிப்பு(தனித்தனியாக):
10. குழந்தைகளுக்கு வீட்டில் பாடம்
சொல்லி கொடுப்பது: அம்மா/அப்பா----- ?
11. குழந்தைகள் படிப்பை முடித்து
வேலைக்கு செல்கிறார்களா ------------ ?
12. பிள்ளைகளுக்கு திருமணமாகிவிட்டதா---?
எத்தனை ஆண்
எத்தனை பெண்
( தனித்தனியாக குறிப்பிடவும் )
13 கூட்டுகுடித்தனமா?(அ)தனிக்குடித்தனமா-- ?
14. பேரப்பிள்ளைகள் எத்தனை ------------ ?
1. கணவரைப்பற்றி (மனைவி பதிலளிக்க வேண்டும்)
1.கணவர் வேலைசெய்யும் நிறுவணம்-----?
2.ஷிப்ட்டு முறையா -----------------?
3.எத்தனை மணிக்கு சென்று வருகிறார்--?
4.கணவருக்கு சாப்பாடு கட்டித்தருவீர்களா?
5.கணவர் குடிப்பழக்கம் உள்ளவரா------ ?
6.எந்தவயதிலிருந்து கீழ்கண்ட பழக்கம்-- ?
,, புகைப்பழக்கம் ?
,, சீட்டாட்டம் ?
,, சூதாட்டம் ?
,, சினிமா ?
சின்னவீடு ?
7.எத்தனை நண்பர்கள்-----------------?
8.நண்பர்கள் வீட்டுக்கு வருவார்களா------?
9.விருந்து அல்லது டீ,காபி------------- ?
10.நண்பர்கள் வீட்டுக்கு வரவேண்டாம்என்று
கணவரிடம் சொன்னீர்களா?
11.கணவர் காலதாமதமாக வீட்டுக்கு
வருவாரா?
12.அந்த காரணங்களை நம்புவீர்களா-----?
13.அல்லது சண்டை போடுவீர்களா-------?
14.கணவரிடம் அடிக்கடி கருத்து வேறுபாடு
கொண்டு சண்டைபோட்டு பின் சமாதானம்
அடைவீர்களா?அல்லது அவர் வந்து
பேசட்டும் என்றிருப்பீர்களா ------?
15. வீட்டில் விசேஷமாக கருதப்படும் நாட்கள் ;
பொங்கல்------- உங்கள் பிறந்தநாள்----
தீபாவளி-------- கணவரின் பிறந்தநாள்--
வருடப்பிறப்பு---- குழந்தைகள் பிறந்தநாள்
அமாவாசை----- திருமணநாள்----------
கிருத்திகை----- சஷ்டி----------------
16 விசேஷ நாட்களில் துணி,நகை வேண்டும் என
அடம் பிடிப்பீர்களா?
17. கணவர் தன்னை அடிக்கடி வெளியே
அழைத்துச்செல்லவேண்டி வற்புறுத்துவீர்களா?
18 . மற்ற பெண்களை பற்றி உங்களிடம் அடிக்கடி
புழ்வாரா ?
19. அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியமல் மனம்
புழுங்கியதுண்டா ?
20. அல்லது அப்படி பெண்களை புகழ்வது பிடிக்க-
- வில்லை என எடுத்து சொன்னதுண்டா ?
21. விளையாட்டுக்கு சொன்னேன் என்று
சொல்வாரா?
22.கணவர் புகழவேண்டும் என எதிர்
பார்த்ததுண்டா?
23. அந்த எண்ணமே இல்லையா --------------?
24. கணவர் உங்களை விட மூத்தவர் எனவேஅந்த
மரியாதை தரவேண்டும்எனநினைப்பீரா?
25. உங்களுக்கு பிடிக்காத உணவு வகைகளை
செய்யச்சொல்வாரா ?
26.ஆர்வத்துடன் செய்வீரா ,அல்லது கடமைக்காக
செய்துவைப்பீரா ?
27.கணவர் சம்பாதிக்கும் மொத்த வருமானத்தையும்
உங்களிடம் தரவேண்டும் என எதிர்பார்ப்பீரா?
28. வரவுசெலவு கணக்கு சொன்னால் போதும்
என்று இருப்பீரா-?
29. கணவர் இன்னொருபெண்ணிடம் உறவு
வைத்துள்ளார் என்பது அடுத்தவர் சொல்லித்தான்
தெரியுமா(அ)கணவரே உங்களிடம் சொன்னாரா?
30. இதைகேட்டு நீங்கள் கணவரிடம் சண்டை
போட்டு சமாதானம் அடைந்து வாழ்க்கை
நடத்துகிரீரா(அ)பிரிந்நு வாழ்கிறீரா-?
31.கணவர் ஏகபத்தினி விரதன் என நம்பிக்கையா?
2.மனைவியைப்பற்றி (காதல்) (கணவர் பதிலளிக்க வேண்டும்)
1.மனைவியை நீங்களே தேர்ந்தெடுத்தீர்களா-----?
2 ,, ,, எங்கே சந்தித்தீர்கள் ---?
3.பார்த்த உடனே மனதை பறிகொடுத்தீர்களா---?
4.அடிக்கடி சந்திக்க வேண்டுமென்று
வற்புறுத்தினீர்களா?
5.சந்தித்தபோதெல்லாம் உடலுறவுக்கு
வற்புறுத்தினீர்களா?
6.எத்தனைநாட்கள் அப்படி இருந்தீர்கள் -------?
7. திருமணத்திற்கு பின்தான் உலுறவு என்பதை
நீங்கள் ஏற்கவில்லையா?
8.வாக்குறுதிப்படி திருமணம் செய்து
கொண்டீர்களா ?
9.கருதரித்தபின் மனைவியின் கட்டயத்தின் பேரில்
திருமணம் செய்துக்கொண்டீர்களா ?
10. திருமணத்திற்கு மனைவியின் பெற்றோர்
சம்மதம் கிடைத்ததா?
11 . உங்கள் பெற்றோரின் சம்மதம் கிடைத்ததா--?
12. தனிக்குடித்தனம் நடத்துகிறீர்களா----------?
13. நீங்கள் வெவ்வேறு இனத்தவராக இருந்தால்
எந்த இனத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு
திருமணம் செய்வது என யோசித்தது உண்டா-?
14. காதலிக்கும்போது இருந்த மன ஒற்றுமை மற்ற
செயலுக்கும் அதாவது உங்கள் உறவினர்களை
நேசிக்கும்போது மனைவி சந்தோஷப்படுவாரா ?
15. உங்கள் மனைவியின் உறவினர்களை நீங்கள்
நேசிப்பதுண்டா?
16. அப்பொழுது உங்கள் மனைவி
மகிழ்ச்சியடைவாரா ?
17.இருவருக்கும் அடிக்கடி பிரச்சினைகள் வருமா?
18. விட்டுக்கொடுப்பது நீங்களா அல்லது உங்கள்
மனைவியா?
3.மனைவியைப்பற்றி(பெற்றோர்களால் நடத்தப்பட்டது)
(கணவர் பதிலளிக்கவேண்டும்) 1 . உங்கள் மனைவி பெற்றோர்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டவரா?
2 . பெற்றோர்களின் வற்புறுத்தலின் பேரில்
திருமணம் செய்து கொண்டீரா?
3 . தனி அல்லது கூட்டுக்குடித்தனமா----------?
4 . கூட்டுக்குடித்தனம் எனில்
அ . குடும்ப உறுப்பினர்களுடன் சகஜமாக
பழகுகின்றாரா?
ஆ உங்கள் குடும்பத்தில் எத்தனை
உறுப்பினர்கள் ?
இ . அத்தனை உருப்பினர்களுக்கும்
மனமுவந்து சேவை செய்கின்றாரா-?
ஈ . உங்கள் வற்புறுத்தலின் பேரில் சேவை
செய்கின்றாரா ?
உ . இதனால் உங்கள் இருவருக்கும்
அடிக்கடி பூசல் வருமா?
ஊ. சமயல் தனியாக செய்வாரா ?(அ)
அம்மாவுடன் கூட்டா---?
எ .தனி படுக்கை அறை உண்டா ---------- ?
ஏ. தனி குடித்தனம் போக வேண்டும் என
அடிக்கடி வற்புறுத்துவாரா?
5.தனிக்குடித்தனம் எனில்
அ.உங்கள் குறிப்பறிந்து சேவை செய்பவரா---?
ஆ.நேரம் தவராமல் உணவளிப்பாரா---------?
இ.நீங்கள் கேட்டபிறகு உணவளிப்பாரா------?
ஈ.இன்றைக்கு என்ன உணவு தயார் செய்ய என
அனுமதி கேட்பாரா-?
உ.செய்யும் உணவுகள் அனைத்தும் சுவையுடன்
இருக்குமா?
6 .குழந்தைகள் பராமறிப்பில் தனி கவனம்
செலுத்துவாரா? படிப்பில்-?
7.குழந்தைகளின் சுட்டித்தனம் அல்லது
குறைகளை தினமும் உங்களிடம்
விவரிப்பாரா?
8.கடை மற்றும் சினிமாக்களுக்கு
குழந்தைகளோடு செல்ல்லாம் என்பாரா
அல்லது குழந்தைகளை தவிர்க்கலாம் என்பாரா?
4.குழந்தைகள் பராமரிப்பு(இருவரும் இணைந்து பதிலளிக்க வேண்டும்)
1.குழந்தைகள் பராமரிப்பில் அதிககவனம்
செலுத்துவது தாயா(அ)தந்தையா? அல்லது
இருவருமா?
2.குழந்தைகள் யாரோடு பழகவேண்டும் யரோடு
விளையாடவேண்டும் தீர்மானிப்பீர்களா?
3.குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு
சலிக்காமல் பதில் சொல்வீர்களா?
4.தெரியாத கேள்விகளுக்கு மூடு வாயை
என்பீர்களா?
5.வயதுக்கு தகுந்த உணவுவகைகளை
தெரிந்துகொண்டு குழந்தைகளுக்கு
கொடுப்பீர்களா?
6.உயர்ந்த வகை ஆடைகளையே
வாங்கித்தருவீர்களா?
7. குறைந்த விலை ஆடைகளாயினும் தினமும்
தூய்மை ஆக்கி அணிவிப்பீர்களா?
8.பள்ளி செல்லும் காலங்களில் மாலையில்
விளையாட்டு காலையில் படிப்பு போக
குழந்தைகளோடு கொஞ்சி விளையாட
நேரம் ஒதுக்குவீர்களா?
9.குழந்தைகள் இன்ன பொருள் வேண்டுமென்று
அடம்பிடிக்கும் ,அப்பொழுது அடித்து
அடக்குவீர்களா?
10.மெதுவாக,அன்புடன் நல்வழிபடுத்த
முயற்ச்சிப்பீர்களா?
11. ஒழியட்டும் என கேட்டதை
வாங்கிக்கொடுப்பீர்களா ?
12. உணவுப்பொருளாக இருந்தால் உண்ணுமழகை
பார்த்து ரசிப்பீர்களா?
13.மற்றவர்களுடன் பகிர்ந்துண்ணும்படி சொல்லிக்
கொடுப்பீர்களா?
14.பள்ளியில்,வகுப்பறை நண்பர்களைப்பற்றி
தெறிந்து கொள்வீர்களா?
15. வகுப்பறை நண்பர்களின் குணங்களை
பிள்ளைகள் மூலம் தெறிந்து கொள்வீர்களா?
16. இன்ன குணமுள்ள நண்பர்களிடம்தான் பழக
வேண்டுமென்று அறிவுறுத்தீர்களா?
17. பள்ளிக்கு சென்று பிள்ளைகளின் வகுப்பறை
ஆசிரியர்களை சந்தித்து நடவடிக்கைகளைப்
பற்றி தெரிந்நு கொள்வீர்களா?
18. பள்ளி நண்பர்களுடன் விளையாட்டுத்தனமாக
சண்டை போட்டுக்கொள்வார்கள். இதில்
உங்கள் பிள்ளைகளுக்காக பரிந்துபேசி
சண்டையை பெரிதுபடுத்துவீர்களா?
19. நண்பர்கள் அடித்தாலும் பரவாயில்லை,
திருப்பி அடிக்கவேண்டாம் என
அறிவுறுத்துவீர்களா ?
20. பள்ளியில் உங்கள் குழந்தைகள் முதல் தகுதி
பெற வேண்டுமென தனியாக ஆசிரியர்களிடம்
பயிற்சிக்காக அனுப்புவீர்களா?
21.படித்தவரை படிக்கட்டும் என
விட்டுவிடுவீர்களா?
22. சரியாக படிக்காதத்திற்கு அடியோஅல்லது
திட்டோ வாங்கும் பிள்ளைகளுக்காக
ஆசிரியர்களிடம் சண்டைக்கு போவீர்களா ?
23. சகமாணவர்களின் உடமைகளான பென்சில்,
பேனா போன்றவற்றை உங்கள் குழந்தைகள்
வீட்டுக்கு எடுத்து வருவார்களா?
24. அப்படி எடுத்து வரவேண்டாமென
அறிவுறுத்துவீர்களா?
25. உங்கள் குழந்தைகள்ன் உடமைகளை
தொலைத்தவிட்டு வரும்போது சலிக்காமல்
பதிலுக்கு வேறு பொருளை வாங்கித்தருவீர்களா?
26. அதற்காக பிள்ளைகளை அடித்துவிட்டு
வாங்கித்தருவீர்களா ?
27.இரவு நேரங்களில் பிள்ளைகள் படிக்கும் வரை
கண்விழித்துருபீர்களா ? (அ)அவர்களுக்குமுன்
நீங்கள் தூங்கிவிடுவீர்களா?
28.பள்ளிக்குச்செல்லும் பிள்ளைகளை நடந்து ---
போகச்சொல்வீர்களா ?(அ)வண்டி ஏற்பாடு
செய்வீர்களா ?
29.பள்ளிக்கட்டணங்களை நீங்களே நேரில்
சென்று கட்டுவீர்களா ?(அ) குழந்தைகளிடம்
கொடுப்பனுப்புவீர்களா?
30.பென்சில்,பேனா,புத்தகங்களகூட
அப்படித்தானே?
31.குழந்தைகளிடம் அடிக்கடி ,நீங்கள் மருத்துவர்
ஆகவேண்டும் ,பொறியியல் வல்லுநர்
ஆகவேண்டும் என வலியுறுத்துவீர்களா ?
32.ஆங்கிலம்,அறிவியல் மற்றும் கணிதம் போன்ற
படிப்புகளுக்கு குழந்தை பருவத்திலிருந்து
தனிகவனம் செலுத்தினீர்களா ?
33. பள்ளிப்படிப்புடன் வெளிப்புற ஈடுபாடுகளான
விள்யாட்டு,நுண்கலை மற்றும்நூலகம் போன்ற
துறைகளுடன் குழந்தைகளை ஈடுபாடு
கொள்ளச்செய்வீர்களா ?
34.குழந்தைகள் பள்ளி இறுதிப்படிப்பை
முடித்தவுடன் தொழில்கல்வியான மருத்துவம்,
பொறியில் போன்ற படிப்புகளை தொடர அரசு
தரும் சலுகைகளை பயன்டுத்தவேண்டும் என
அவ்வப்போது அறிவுறுத்தி அதற்கான
வழிகாட்டுதலை அளிப்பீர்களா?
35. பள்ளிகளில் குழந்தைகள் படிக்கும்
காலங்களில் மாணவர்-பெற்றோர்-ஆசிரியர்
அமைப்பு நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவீர்களா ?
36. விளையாட்டு,படிப்பு மற்றும் கலாச்சார
துறைகளில் நடத்தப்படும் போட்டிகளில்
கலந்து கொள்ள,(அ) கலந்து கொண்டு
பரிசுகள் பெறவேண்டும் என அவ்வப்போது
உற்சாகப்படுத்துவீர்களா ?
37. விளையாட்டு துறை என்பது சினிமா,தொலைக்
காட்சி போன்றது இதில் கவனம் செலுத்தினால்
கல்வியில் முன்னேற்றம் காணமுடியாது .
எதிர்காலம் சிறப்பான கல்வியில்தான் உள்ளது
என தெரியுமா ?
5.குடும்ப பராமரிப்பு (இருவரும் இணைந்து பதிலளிக்க வேண்டும்)
1.குடும்பத்தின் வரவு, செலவு, சுகாதாரம் போன்ற
பிரச்சினைகளை இருவரும் ஒன்றாக
ஆலோசிப்பீர்ளா ?
2. குடும்பத்தின் வரவு என்பது
அ.விவசாய விளைபொருள் விற்பதின் மூலம்
ஆ.கணவரின் அலுவல் மூலமாக-----------
இ.மனைவியின் மூலமாக----------------
ஈ.பிள்ளைகள் மூலமாக-----------------
உ.பெற்றோர்மூலமாக------------------
ஊ. வீட்டு வாடகை,நிலகுத்தகை மூலமாக--
கூட்டுகுடும்பம் எனில் இவை அனைத்தையும்-
ஒன்று சேர்ப்பீர்களா?
3. புதிதாக தனிகுடித்தனம் அமைப்பவர்கள்;
கணவன்,மனைவி மற்றும் பிள்ளைகள்
இன்னும் பிற வருமானங்களை
ஒன்று சேர்ப்பீர்களா ?
4.வரவு செலவு கணக்குகளை கணவன்
மனைவி இருவரும் ஒன்று சேர்ந்து
மாதாந்திரம் தீர்மானிப்பீர்களா ?
5. வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டுமுறை
சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்களா ?
6. உறவினர்கள் உபசரிப்பு,மருத்துவ செலவு
என தனியாக பணம் ஒதுக்குவீர்களா?
7. ஆன்மீகத்தில் இருவருக்கும் ஈடுபாடு உண்டா ?
8. வாரத்தில் எந்தந்த நாட்களில் விரதம் இருப்பீர்?
9. மாதத்தில் எத்தனை நாட்கள் விரதம் ஓருப்பீர் ?
10. வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள்
விரதம் இருப்பீர் ?
11. விரத நாட்களில் உங்கள் உணவு -----------?
காலை மாலை இரவு
12.விரத முடிந்தவுடன் அன்றோ அல்லது
மருநாளோ உடல் நிலை பாதிப்பு உணர்வீரா?
13.எது மகிழ்ச்சியான குடும்பம் ?தெரியுமா ?
14.எது துக்கமான குடும்பம் தெரியுமா ?
6.உடல்பராமரிப்பு(கணவனுக்ககு)
1 .உடல் பராமரிப்புக்கு உணவு முக்கியமானது
என்பது தெரியுமா ?
2.சரிவிகித உணவு என்பது எது--------------?
3.குழந்தை பருவ உணவு எது (13 வயது வரை)---?
4.வாலிப பருவ உணவுஎது (30 வயது வரை )---- ?
5.நடுத்தர பருவ உணவு எது(45வயதுவரை ) -----?
6.வயோதிக பருவ உணவு எது(46வயதுக்குபின்)--?
7.தினமும் உடற்பயிற்சி செய்கின்றீரா ---------?
8.நடை பயிற்சி செய்கின்றீரா----------------?
9.எத்தனை மணிநேரம் நடப்பீர்---------------?
10.உங்கள் முன்னோர்களுக்கு தீரா வியாதி
-----இருந்ததா ?
என்ன வியாதி(தாய்/ தந்தை தனித்தனியாக
---- குறிப்பிடவும் )------?
11.உடல் நிலை சரியில்லையெனில்
மருத்துவரிடம் செல்வீரா ?
12 வீட்டில் கைமருந்து உண்பீரா--------------?
13..உணவுதான் மருந்து என்பதை உணர்ந்தீரா---?
14.எதையும் அளவோடு உண்டால் மருந்து
--தேவை இல்லை என்பதை உணர்ந்தீரா ?
15.எந்தவயதில் உணர்ந்தீர்-------------------?
16. புகை பழக்கம், மது பழக்கம் எந்த வயதில்
ஆரம்பித்தது (தனித்தனியாக எழுதவும் )?
17.காலையில் எழுந்த உடன் டீ/காபி
அருந்துவீரா?
18. ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ,காபி
அருந்துவீர்?
19. டீ மற்றும் காபி அருந்துவதால் உடலுக்கு
கெடுதி என நினைத்து ஆர்லிக்சு,போர்ன்-
விட்டா போன்ற மென்பானங்களை அருந்துவீரா?
20. மேலே குறிபிட்ட பானங்களை சக்கரை
இல்லாமல் சாப்பிடுவீரா ?
21.எந்த வயதிலிருந்து அப்படி சாப்பிடுகின்றீர்---?
22.பெப்சி,கோக்கோலா போன்ற பானங்கள
அருந்துவீரா?
23.காலை,மாலை,இரவு போக இடையிடையே
சிற்றுண்டி அருந்துவீரா ?
24.மாலை நேரங்களில் துரித உணவு சாப்பிடுவீரா?
25.நண்பர்களுடன் அடிக்கடி பெரு விருந்துகளில்
கலந்து கொள்வீரா?
26.மதியம் உணவு முடித்தவுடன் சிறிதுநேரம்
தூங்குவீரா?
27.இரவு நேர களியாட்டங்களில் ஈடுபாடு உண்டா?
28.இரவு வழக்கமாக தூங்கும் நேரம் என்ன------?
29.காலை வழக்கமாக கண் விழிக்கும் நேரம்
என்ன?
30.காலையில் எழுந்து காலைக்கடனை
முடித்தவுடன் உடற்பயிற்சி செய்வீரா ?
31காலையில் தினசரி செய்தி பத்திரிக்கை
படிக்கும் பழக்கம் உண்டா?
32எந்தந்த நேரங்களில் தொலைக்காட்சி பார்ப்பீர்?
33.எந்தந்த நேரங்களில் வானொலி கேட்பீர்-----?
34.தொலைக்காட்சியில் நீங்கள் அதிகம் விரும்பி
பார்க்கும் நிகழ்ச்சி எது?
35.வானொலியில் நீங்கள் விரும்பி கேட்கும்
நிகழ்ச்சி?
36.வீட்டில் வீடியோ மூலம் சினிமா பார்ப்பீரா----?
37.தியேட்டருக்கு சென்று சினிமா பார்ப்பீரா----?
38.தியேட்டருக்கு தனியாக போவீரா ?அல்லது
மனைவி குழந்தைகளுடன் செல்வீரா ?
39. மாலையில் மது அருந்துவீரா--------------?
40. தனியாக அல்லது நண்பர்களுடன் மது
அருந்துவீரா ?
41. மனைவியுடன் மது அருந்துவீரா------------?
42. மனைவி , வீட்டில் மது அருந்த ஒப்புதல்
தருவாரா ?
43. மனைவிக்கு மது அருந்தும் பழக்கம் உண்டா?
44. உங்களை மணமுடிக்குமுன் மனைவிக்கு மது
அருந்தும் பழக்கமுண்டா -----?
45. திருமணத்திற்குபின் உங்கள் கட்டாயத்தின்-
பேரில் ஏற்பட்டதா---?
46. மது அருந்திவிட்டு நண்பர்களுடன் அதிகம்
பேசுவீரா ---------?
47மது அருந்திவிட்டு, மனைவியிடன் தகராரு-
செய்வீரா ?
48.மது அருந்திவிட்டு வாய்க்கு ருசியாக –
உணவில்லை என மனைவிடம் சண்டை
போடுவீரா ?
49.உங்களுக்கு மன அழுத்தம் உண்டா--------?
50.மனைவிக்கு மன அழுத்தம் உண்டா---------?
51.மன அழுத்தம் எதனால் ஏற்படுகின்றது
என்பதை உணர்ந்தீரா?
52. உங்களுக்கு சர்கரை வியாதி உண்டா -----?
53. ரத்த அழுத்தமும் சர்க்கரை வியாதியும்
சேர்ந்தால் மரணம் நெருங்கிவிட்டது என்பது
தெரியுமா?
54.ஒருநாளைக்கு எத்தனைமுறை மது அருந்துவீர்?
55. மன அழுத்தம்தான் ரத்த கொதிப்புக்கு
வழிவகுக்கிறது என்பது தெரியுமா---?
7.உடல்பராமரிப்பு(மனைவிக்கு)
1.காலையில் எத்தனை மணிக்கு வழக்கமாக
எழுந்து கொள்வீர் ?
2.கணவர் எழுமுன்னே படுக்கையைவிட்டு எழ
வேண்டும் என நினைப்பீரா ?
3.காலையில் காபி,டீ அருந்தும் பழக்கமுண்டா?
4.கணவருடன் காபி,டீ அருந்துவீரா------------?
5.உங்களுக்கு சர்கரை வியாதி உண்டா -------?
6.எந்தவயதில் சர்க்ககரை வியாதி ஆரம்பித்தது-?
7.உங்கள் பெற்றோர்க்கு சர்கரை வியாதி உண்டா?
8.உணவே மருந்து எனபது தெரியுமா-----------?
9.இல்லத்தரசியா?(அ)அலுவல் வேலை செய்பவரா?
10.நொருக்குத்தீனி சாப்பிடுவீரா---------------?
11.உங்கள் வயது, உயரம் அதற்கு தகுந்தாபோல்
எடை யிருக்க வேண்டும் என தெரியுமா ?
12.உடல் எடை கூடினால் வியாதிகள் அதிமாகும்
என்பது தெரியுமா ?
13.வீட்டு வேலைகளுக்கு ஆட்கள் வைத்துள்ளீரா?
14.வீட்டில் துணி துவைக்க,மாவாட்ட எந்திரங்கள்
உண்டா---?
15.கணவர் வேலைக்கு சென்றபின் பொழுது போக
வீட்டில்டீ.வி பார்ப்பீரா?(அ)சினிமாவிற்கு போவீரா?
16.மதியம் சாப்பிட்ட உடன் தூங்குவீரா --------?
17.கடவுள் நம்பிக்கை உண்டா ---------------?
18.உடலை வருத்தி விரதம் இருப்பீரா----------?
19.வாரத்தில் எத்தனைநாள் உண்ணாவிரதம்
இருப்பீர்?
20.விரதம் என்றால் ஒருநாளைக்கு ஒருவேளை
மட்டும் உண்பீரா?
21.அல்லது ஒருநாளைக்கு ஒருவேளைமட்டும்
உணவை நிருத்துவீரா ?
22.விரதம் இருந்து கடவுளை வேண்டி,விரதம்
முடித்தபின் இனிப்புவகை
தயார் செய்து உண்பீரா?
23.விரதம் முடித்தவுடனோ அல்லது அடுத்த
நாளோ உடல்நிலை பாதிப்பு உணர்வீரா ?
24.பிரார்த்தனை வேண்டி ஈரத்தலையுடனோ
அல்லது ஈரத்துணியுடனோ கோயிலுக்கு
செல்வீரா-?
25.பிரார்த்தனை நிறைவேற
மொட்டைபோடுவீரா?
26. அப்படி மொட்டை போட்டு பிரார்தனை
நிறைவறியுள்ளதா ?
27. குடும்பத்துடன் மொட்டை போடுவீரா
அல்லது நீங்கள்மட்டும் தனியாக
மொட்டைபோடுவீரா?
28. மொட்டை போட்டவுடன் அன்றோ,அடுத்த
நாளோஉடல்நிலை பாதிப்பு உணர்ந்தீரா ?
(பாதிப்பு எனில் சளி,தலைவலி,காய்ச்சல்)
29. சளி,தலைவலி,காய்ச்சல் போன்றவை
வந்தால் தானாக சரியாகிவிடுமா
அல்லது மருத்துவரிடம் சென்றால்தான்
குணமாகுமா ?
30. மது அருந்தும் பழக்கமுண்டா-------------?
31. கணவரின் கட்டாயத்தின் பேரில்
மதுஅருந்துவீரா?
32. அதிகம் விரும்பி உண்பது சைவமா,
அசைவமா?
33. உடற்பயிற்சி செய்வீரா------------------ ?
34. எத்தனை குழந்தைகள்(ஆண்,பெண் )விவரம்--?
35. குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டீரா -----?
36.இதனால் உடல் எடை கூடியதா------------?
9.மனோதிறன் (இருவரும் இணைந்து பதிலளிக்க வேண்டும்)
1.இருவருக்கும் கடவுள் நம்பிக்கையுண்டா------?
2.குழந்தைபருவத்திலிருந்து உண்டா ----------?
3.சொந்தபந்தங்கள்,நண்பர்கள் ,கடவுள் இதில்
நீங்கள் அதிகம் நேசிப்பது யாரை------?
4.உங்களுக்கு ஜோசியத்தில் நம்பிக்கையுண்டா-?
5.பேய்,பிசாசுபோன்றவைகளில் நம்பிக்கையுண்டா?
6.மந்திரம்,தந்திரம் இவைகளில் நம்பிக்கையுண்டா?
7.உழைத்தால்தான் குடும்ப வருமானத்தை பெருக்க
முடியும் என்ற உருதியான நம்பிக்கையுண்டா?
8.பூஜைகள் செய்தால் குடும்பத்தில் கஷ்ட்டங்கள்
தீரும் என்ற நம்பிக்கையுண்டா ?
9.பிரச்சினைகள் தீர தற்கொலைதான் ஒரேவழி என
நினைத்தது உண்டா ?
10.என்ன ஆனாலும் சரி வாழ்ந்தே தீர்வது என
வைராக்கியம் கொண்டதுஉண்டா- ?
11.கடவுள் நம்மை கைவிடமாட்டார் என
நினைத்தது உண்டா--?
12.நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் எனகிற
நம்பிக்கையுண்டா -------?
13.சொந்தங்களைவிட நண்பர்களை அதிகம்
நேசிப்பீர்களா---?
14.நண்பர்கள் துரோகிகளாகவோ,எதிரிகளாகவோ
மாறியதுண்டா?
15.இப்பொழுது உங்கள் பிள்ளைகளின் வயது என்ன?
16.படிப்பை முடித்தார்களா (அ)வேலைக்கு
செல்கிறார்களா?
17.சம்பளத்தை உங்களில் யாரிடம் தருவார்கள்-- ?
18.ஓய்வூதியம் வருகிறதா---------------------?
19.பிள்ளைகளுக்கு எல்லாம் திருமணம் முடிந்ததா?
20.நீங்களே ஏற்பாடுசெய்த திருமணம் எத்தனை ?
21.பிள்ளைகளே காதலித்து திருமணம்
செய்து கொண்டார்களா ?
22.ஆடம்பரமாக நிகழ்ச்சிகளை நடத்த
விருப்பமா?
23.மற்றவர்களின் கேலிக்கும்
விமர்சனத்திற்கும் பயந்து திருமணம்
போன்ற நிகழ்ச்சிகளை ஆடம்பரமாக
செய்ய ஆசைபட்டதுண்டா?
24.இதற்காக கடன்பட்டதுண்டா--------------?
25.ஒருகடனை அடைக்க இன்னொரு
கடன் வாங்கியதுண்டா?
26.கடன்வாங்காமல் குடும்பம் நடத்த
முயற்சித்ததுண்டா?
27.குழந்தைகள் படித்தகாலத்தில் சொத்து
வாங்க ஆசைப்பட்டதுண்டா ?
28 சொத்து வாங்கினீர்களா ----------------- ?
29.முன்னோர்கள் மூலம் சொத்து வந்ததா-------?
30.குடும்பம் தழைக்க வேண்டி அடிக்கடி
கோயிலுக்கு செல்வீரா----?
31.கோயிலுக்கு சென்று மொட்டை
போன்ற பிரார்த்தனைமுடிந்தவுடன்
உங்கள் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்தது
என நினைத்ததுண்டா ?
32.உங்கள் சேமிப்பிலிருந்து செலவு
செய்து கோயிலுக்கு செல்வீரா?
33.பிரார்த்தனை முடிக்கவேண்டி கடன்
வாங்கி கோயிலுக்கு செல்வீரா?
34.உங்களுக்கு எந்தெந்த வழிகளில்
வருமானம் வருகிறதோ அவையெல்லாம்
கடவுள் கண்ணை திறந்ததால்
வந்தது என நினைப்பீரா?
35.அற்காக தினமும் பூஜைகள் செய்வது,
பிரார்தனை வேண்டி திருப்பதி,திருத்தணி
சபரிமலை என அவ்வப்போது செல்வதுண்டா-?
36.இதுபோன்ற பிரார்த்தனை முறைகள்
உங்கள் குடும்பத்தில் வழிவழியாக வந்ததா
அல்லது மற்றவர்கள் அறிவுரையின்
பேரில் வந்ததா?
37.வீட்டில் கடவுளின் படங்கள் உண்டா--------?
38.வீட்டில் கடவுளின் சிலைகள் உண்டா-------?
39.இவைகளுக்கு தினமும் பூஜைகள்
செய்வதுண்டா------?
40.உங்கள் வீட்டில் உள்ள கடவுளின்
படங்கள், சிலைகளைவிட கோயில்களில்
உள்ள சிலை களுக்கு அதிக சக்தி
வாய்ந்தது என்பதுஉங்கள் எண்ணமா---?
41.கோயில்களில் உள்ள சிலைகளுக்கு
முறையாக மந்திரங்கள், கும்பாபிசேஷங்கள்
செய்வதால் அதற்கு அதிக சக்தி
உருவாகிறதுஎன்பது உங்கள் எண்ணமா?
42.உலகையே கடவுள் தான் படைச்சார்
எல்லா உயிரினங்களுக்கும் அவர்தான்
படியளக்கிறார் என்பதுதான்
உங்கள் எண்ணமா ?
43.நம் சக மனிதர்களை வணங்கவில்லை
எனில் நம்மை பகைத்துக்கொள்வார்கள் ,
அதேபோல் கடவுளை
வணங்கவில்லையெனில் நம்மீது
கோபம் கொள்வாரா ?
44.மனிதர்களைவிட கடவுள் மேலானவர்தானே ,
அப்படியுருக்க கடவுளை நாம்
வணங்காவிட்டால் நம்மை
வாழவைக்கமாட்டாரா ?
45.மனிதர்கள் நமக்கு நம்பிக்கை துரோகம்
செய்வார்கள் ,கடவுள் அப்படி செய்யமாட்டார்
என்பது உங்கள் எண்ணமா ?
46உங்கள் தகுதி இதுதான் , கடவுள் சக்தி
இதுதான் என தெரிந்து கடவுளிடம்
கோரிக்கை வைப்பீர்களா ?
47.உங்கள் சக்தி இதுதான் என எப்படி
வரையறுக்கிறீர்கள்உங்கள் பொருளாதாரம்
,உறவினர்கள்,நண்பர்இதைவைத்துதானே ?
48. உங்களுக்கு அமைந்த பொருளாதாரம்,
உறவினர்கள் நண்பர்கள் சுற்றுச்சுழல்
இவையெல்லாம் கடவுள் உங்களுக்கு
அளித்த வரம் என்பது உங்கள் நம்பிக்கையா ?
49.இவையெல்லாம் உங்கள் பெற்றோர்கள்
செய்த புண்ணியத்தால் ஏற்பட்டதுதான்
என்பது உங்கள் எண்ணமா?
50.எதுபாவம்,எது புண்ணியம் என்பது தெரியுமா?
51.எது நல்லது , எது கெட்டது என்பது
தெரியுமா?
52.அடுத்தவர்களுக்கு சொல்லாலோ,
உடலாலோ துன்பம் விளைவிக்காதபோது
நாம் பாவம் செய்யவில்லை என்கிற
உணர்வு உங்களுக்கு தோன்றவில்லையா?
53.அப்படியிறுக்கும்போதுஆடம்பரமாக , செலவுசெய்து கடவுளை வணங்கவேண்டுமா?
54.கடவுளைவணங்குவதால் மனம் அமைதி
பெறுகிறதஎன நினைக்கிரீர்களா ?
55.பக்தர்கள் கூடுமிடம் ஆரவாரமாகதானே
இருக்கும் அப்படியானால் மனம் எப்படி
அமைதிபெரும்?
56.கோயிலில் சத்தம்போட்டு அதாவது இசை
கருவிகளுடன் பஜனை செய்வதும் ,
சத்தம்போட்டு மந்திரங்கள் படிப்பதும்
வரிசையில் கால் கடுக்க காத்திருந்து
எவ்வளவு நேரமானாலும்பசியோடு கடவுளை
தரிசிப்பதும் உங்களுக்கு பிடிக்குமா ?
57.வேண்டுதலுக்காக விரதம் இருப்பீர்களா
,அல்லது மன அமைதிவேண்டி விரதம்
இருப்பீர்களா ?
58நீங்கள் அசைவ உணவு பரியராக
இருந்தாலும் விரதநாட்களில் சுத்த
சைவமாக மாறிவிடுவீர்களா ?
59.அசைவ உணவு உண்பதாலோ அல்லது
கடவுளுக்கு அசைவ உணவு
படைப்பதாலோ கடவுளின் அருள்
கிடைக்காது என்பது உங்கள் எண்ணமா ?
60.உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும்
இறைவன்தான் படியளக்கிறான் என்பது
நமது நம்பிக்கை, அப்படியிறுக்கும்போது
அசைவம் சாப்பிடும் உயிரினங்களை கடவுள்
உதாசினப்படுத்துவார் என்பது உங்கள்
எண்ணமா ?
61.உலகில் பெறும்பாலான மக்கள் (கிறிஸ்த்து,
முஸ்லிம்)அசைவம்சாப்பிட்டுஇறைவனை வணங்குகின்றனர்,அல்லது வணங்கிவிட்டு
அசைவம் உண்கின்றனர் அவர்களுக்கு
அருளாசிவழங்கும்போதுஉங்கள்இறைவன்
உங்களுக்கஆசிவழங்மாட்டாரா?
62.சுத்த சைவ உணவு உலகில் எங்கும்
இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா ?
63.தாய்ப்பால், மிருகத்தின் பால் அனைத்தும்
அசைவம் தானே ?
64.தாய்ப்பாலில் தாயின் குணமும் அதாவது மனித
குணமும்.பசும்பாலில் மிருகத்தின் குணமும்
நிறைந்து காணப்படும் என்பது தெரியுமா ?
65.குழந்தைகள் வளரவளர மனித பண்புகள்
குறைவதற்கு மிருகத்தின் பாலும் மிருகத்தின்
இறைச்சியும் உண்பதால்தான் என்பது
தெரியுமா ?
66.நமது ரத்தத்தில் கொழுப்பு குறிப்பிட்ட
அளவுக்கு மேல் இருந்தால்
இதய சம்பந்தமான வியாதிகள்
அதிகரிக்கும் என்பது தெரியுமா ?
67.சைவ உணவைவிட அசைவ உணவு அதிகம்
உண்பதால் ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும்
என்பது தெரியுமா ?
68.நடுத்தர வயதை அடைந்தவுடன்(35 மேல் )
வாய்க்கு ருசியான உணவின் அளவை
குறைக்க வேண்டும் என்பது தெரியுமா ?
69.கொழுப்புவகை உணவுதான் வாய்க்கு
சுவையூட்டுகிறது என்பது தெரியுமா ?
70.அடுத்து வாய்க்கு சுவையூட்டுவது உப்பு
,இதன் அளவை குறைத்து சாப்பிடவேண்டும்
என்பது தெரியுமா ?
71.அன்றாடம் நாம் உண்ணும் உணவு
வகைகளில் சக்கரை சத்து அதிகம்
உள்ளது 35 வயதுக்கு மேல் இதன்
அளவை பாதியாக குறைக்க வேண்டும்
என்பது தெரியுமா ?
72.ஆண்டவன் புண்ணியத்தில் ‘நமக்கு
ஒன்றும்வராது’என்பதுஉங்கள் எண்ணமா ?
73.உங்கள் உடல் நலத்தை ஆண்டவன்
கவனித்துக்கொள்வார் என்கிற
நம்பிக்கையா----?
74. உங்களுக்கு மரணபயம் உண்டா ----------?
75.இதற்காகதான் கடவுளை வணங்குகிரீர்களா ?
76.குலம் தழைக்கவேண்டும் ,குடும்பத்தில்
எல்லாரும்நல்லாஇருக்கவேண்டும்,
அமைதிநிலவேண்டும் ,எப்பொழுதும்
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வேண்டும்
என்பதற்குதானே
கடவுளை வேண்டுகிறீர்கள் ?
77.நீங்கள் வேண்டுவது உமக்கு
கிடைக்கவில்லையெனில் உங்களுக்கு
ஏமாற்றம் தானே ?
78.மனிதர்களிடையே ஏமாந்தாலோ,
கடவுளிடம் ஏமாந்தாலோ மன
அழுத்தம் (tension) ஏற்படும்
என்பது தெரியுமா ?
79.மன அழுத்தம் அதிகரித்தால்
நெஞ்சு வலி வரும் என்பது தெரியுமா ?
80.மனிதர்களிடையே ஏமாந்தால்
சண்டைபோடலாம் இதனால் மன அழுத்தம்
குறையும் ,கருத்து பரிமாற்றத்தால்
மன இறுக்கம் குறையும் மனம்
சமாதானம் அடையும் ,ஆனால்
எதைவைத்து கல் உருவம்கொண்ட
அல்லது சித்ர உருவம்கொண்ட
கடவுள் உனக்கு அருளுவார் என
நம்புகிறீர்கள் ?
81. அப்படி அருள் புரியவில்லையெனில்
அது ஏமாற்றமாக இல்லையா ?
இதனால் மனழுத்தம் ஏற்படாதா ?
82.உலகத்தில் எல்லாம் இப்படித்தான்
பண்றாங்க நாலுபேர் எப்படி
போறாங்களோ அப்படி போறதுதானே
நமக்கு நல்லது என்கிறீர்களா ?
83.அந்த நாலுபேர்ல எத்தனைபேர் படிச்சவங்க ,
எத்தனைபேர் அனுபவ அறிவு உடையவர்கள்
எத்தனைபேர் அடுத்தவங்கஉழைப்பில
பொழைக்காம, சுய சம்பாத்தியத்தில்
வாழ்க்கைய நடத்தறாங்கன்னு தெரியுமா ?
84.அடுத்தவங்க நமக்கு அறிவுரை சொல்லும்போது
நமது நலனில் அவர்களுக்கு ஏன் அக்கரை
வரவேண்டும் என யோசித்தீர்களா ?
85. காசு கொடுத்து அறிவுறை அல்லதுயோசனை
(ஜோசியம்) பெறுவதில் உள்ள அக்கறை
இலவசமாக அறநெறி பிறழாமல் வாழ்க்கைக்கு
யோசனை யார் கூறினாலும் அதைமனம் ஏற்கமறு
க்கிறது அப்படித்தானே ?
அனைத்து வினாக்களுக்கும் விடையளித்தவர்களின் வாழ்க்கையில்
5* வாங்கி வெற்றவர்காளாவர். -----------------------------------------------------------
90% விடையளித்தவர் 4* ம்----------------------------------------------------------------
80%விடையளித்தவர் 3* ம்-----------------------------------------------------------------
70% விடையளித்தவர் 2*ம்-----------------------------------------------------------------
60% விடையளித்தவர் 1*ம் பெற்றவராவர் . இயக்கத்திலிருப்பவர் அனைவரும் 5* அந்தஸ்த்து பெற முயலவேண்டும்.
தொடர்புக்கு: tr_bsc@yahoo.com அஞ்சல்மூலமாக நூல்களை பெறவிரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு ரூ.100.00 அல்லது200.00 முறையே,1- அறவழி சுய சிந்தனையுடன் மகிய்ச்சியுடன் வாழ-ஒரு வழிகாட்டி(112 பக்கங்கள்) அல்லது 2-அறவழி சுய சிந்தனையுடன் வாழ வழிகள்(பக்கங்கள்-320) பணவிடைத்தாள் P.THIRUVENGADAM ,4-PERIYAR ST.KANNADASAN NAGAR,THIRUVALLUR-602001 என்கிற முகவரிக்கு அனுப்பவும்.இதே பெயருக்கு DD எடுத்து அனுப்பலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment