Saturday, November 22, 2008

13.மிருக உணர்வும் இறையுணர்வும்...

குழந்தைகள் மனது நிறைய மிருக
உணர்வுகள் மிகுந்து காணப்படும். அதாவது
குழந்தைகள் மனதில் அடிப்படை மிருக
உணர்வுகளான (basic instincts) சக
குழந்தைகளை அடிப்பது, சொல்லால்
துன்புருத்துவது, பொறாமை கொள்வது,
ஒருவருக்கொருவர் காமுருவது (infatuation)
போன்ற இந்த உணர்வுகளை குழந்தைகள்
மனதில் இருந்து நீக்க வேண்டும்.
தற்கொலை உணர்வும் மிருக உணர்வுதான்.
கடல்வாழ் இனம் கரை ஒதுங்கி உயிரை
விடுவதும், வானில் பறக்கும் பறவைகள்
இறக்கையை மடக்கிக்கொண்டு தரையில்
மோதி உயிரை விடுவதும், நடக்கும்
மிருகங்களான புலி சிங்கம் போன்றவைகள்
மரத்தில் ஏறி கீழே விழுந்து உயிரை
மாய்த்துக்கொள்வதும், ஊர்வன யாவும்
பல நாட்கள் இரை எடுக்காமல்
இறந்து போவதும் நாம் அறிந்தது





No comments: