திருவள்ளூரில் யாரும் நூல் அச்சடிப்பதில்லை, நீங்கள் சென்னைக்குத்தான் செல்ல வேண்டும் என ஒரு அச்சக உரிமையாளர் தெரிவித்தார்.சென்னை உயர்நீதிமன்றம் எதிரே உள்ள ஒரு ஜெராக்சு கடையில் வேலை செய்யும் ஒரு நபரை குறிப்பிட்டார்.அந்த நபரின் அடையாளம் கண்டு நூல் அச்சடிக்க வேண்டும் என கூறினேன். அதற்கு அவர் என் கைப்பிரதியைப் பார்த்துவிட்டு, ‘இதை இப்படியே அச்சிலேற்ற முடியாது சார்.இதை ‘பேஜ் மேக்கர்‘ செய்ய வேண்டும்’ என்றார்.
பேஜ் மேக்கர் செய்யக்கூடிய ஒரு பெண்ணை எனக்கு அறிமுகம் செய்தார்,அவருக்கு வியாசர்பாடியில் வீடு.அவர் வீட்டை தேடி போனேன்,கைப்பிரதியை வாங்கிக்கொண்டார், ‘ஒரு பக்கத்துக்கு ரூபாய் 10 ஆகும் சார்’ என்றார். சரி என சொல்லிவிட்டு ஒரு வாரம் கழித்து சென்று அந்த நூலை பெற்று வந்தேன்.அதை மீண்டும் ,ஜெராக்சு கடையில் வேலை பார்ப்பவரிடம் தந்தேன். அவர், ‘இதை ஒரு அச்சக உரிமையாளரிடம் தந்து நான் நூலாக்கித்தருகிறேன் சார்,இதற்கு பக்கத்திற்கு ரூபாய் 25 ஆகும் சார்’ என்றார்.
மேலும் அவர், ‘இந்த நூலுக்கு மேல் அட்டை வடிவமைக்க ஒரு தொழில் நுட்பம் தெரிந்தவரை அணுக வேண்டும்’ என்றார்.
‘அதற்கு அந்த பேஜ் மேக்கர் செய்த பெண்ணையே பாருங்க சார்’ அந்த பெண் அவருக்கு தெரிந்த ஒரு அட்டையை தேர்வு செய்து தந்தார்.மீண்டும் அந்த நூலை ஜெராக்சு கடையில் வேலை பார்ப்பவரிடம் தந்தேன். நூல் தயாராகி விட்டது.
இந்த நூலை வெளியிட ஒரு பெரிய அறிஞர் தலமையில் நிகழ்த்த வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment