Friday, January 8, 2021

ஏ-அ-67

பெரியாருக்குப் பின் பகுத்தறிவு நூல்களை யாரும் வெளியிட்டதாக தெரியவில்லை. மேலும் தன் கடவுள் மறுப்பு சிந்தனைகளை மனிதனின் ஆறு அறிவுக்குள் அடக்கப்பார்த்தார்,அதில் பெரியாருக்கு தோல்வி என்றே சொல்லலாம்.

இன்றும் தமிழ் குடும்பங்களில் புரோகிதர் (பார்பனர்கள்) இல்லாமல் கல்யாணம் கருமாதிகள் நடைபெறுவதில்லை. அப்ப பெரியாரின் கடவுள் மறுப்புக்கொள்கை   தோல்விதானே?

இதை உணர்ந்த நான் மனிதர்கள் பொய்யை நம்பி வாழும் மனிதர்களாகவே உள்ளனர்.அந்த பொய்யை நம்பி வெய்யிலாளிகள் வீணாகிப் போகின்றனர்,எனும் சிந்தனைகள் என் பணிக்காலத்தில் என் மனதை உறுத்தி வந்தது.

நான் ஓய்வு பெற்றதும் அதற்கான தருணங்கள் கிடைத்தன.இந்த  ஆறறிவு  மனிதர்களை திருத்துவதை விட புதிய கோணத்தில் ஒரு இயக்கம் ஆரம்பிக்க நினைத்தேன்,அது தான் ‘ஏழாம் அறிவு இயக்கம்’

2008 செப்டம்பரில் வலைதளத்தில் ஏழாம் அறிவு சிந்தனைகளை தினமும் பதிவிட்டேன்.பின்பு வலைதளத்தை விட மக்களை வேகமாக கவர்ந்தது, முகநூல்(face book) மற்றும் வாட்சப் (whatsapp)

முகநூலை தமிழ்ப்படுத்தினேன்,இதனால் என் எண்ணங்கள்,கருத்துகளை ஒருவொருக்கொருவர் பரிமாரிக்கொள்ள முடிந்தது, உலகெங்கும் வாழும் தமிழ்  மக்கள சென்றடைந்தது. வாட்சப் மூலம் உள்ளூர் நண்பர்களை தொடர்பு கொள்ள முடிந்தது,பின்னாளில் வாட்சப் மூலம் உலகெங்கும் உள்ள நண்பர்களை தொடர்பு கொள்ள அதன் நிர்வாகம் மாற்றியமைத்தது.

 

No comments: