Tuesday, April 24, 2018

79-நட்பு


                            79-நட்பு

781-செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
   வினைக்கரிய யாவுள காப்பு.

நட்பு கொள்ளவது போன்ற அரிய செயல் வேறெதுவும் இல்லை,அதை அடைந்து விட்டால் அந்த செயலைக் காப்பது போன்ற அரிய செயல் வேறெதுவும் இல்லை.இது தேவை

782-நிறை நீர நிரவர் கேண்மை பிறைமதிப்
   பின்னீர் பேதையார் நட்பு.

அறிஞருடன் பழகும் நட்பு பிறை நிலவாய் துவங்கி முழுமதி போல் துலங்கும்,மாறாக அறிவிலிகளிடம் தோன்றும் நட்பு முழுமதி போல் தோன்றி தேய்பிறையாகும்.நல்ல ஒப்புமை.இது தேவை.

783-நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்
   பண்புடையாளர் தொடர்பு.

படிக்க படிக்க சிறப்பாக தோன்றும் ஒரு நூலைப்போல,பண்புடையாளர் நட்பு பழக பழக இன்பம் தரக்கூடியது.இது தேவை

784-நகுதற் பொருட்டென்று நட்டல் மிகுதிக்கண்
   மேற்சென் றிடித்தற் பொருட்டு.

நட்பு என்பது சிரித்துப்பேசி பழக மட்டுமல்ல,தவறிழைக்கும் நண்பனை திருத்தி நல்வழிப்படுத்தவே.இது தேவை

785-புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
      நட்பாங் கிழமை தரும்.

ஒருவரோடு மற்றொருவர் புணர்ந்தால் தான் நட்பு நீடிக்கும் என்பது இல்லை ,ஒத்த கருத்து இருந்தாலே போதுமானது.இது தேவை .

786-முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
    தகநக நட்பது நட்பு.

முகத்துதிக்காக பழகுவது நட்பல்ல,நெஞ்சோடு நெஞ்சு நேசிப்பதே நட்பு.இது தேவை.

787-அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்
   அல்லல் உழப்பதாம் நட்பு.

நண்பனை அழிவுப்பாதையிலிருந்து மீட்டு ,நல்வழியில் நடக்கச் செய்து,அவனுக்கு துன்பம் வரும்போது அதில் பங்கு கொள்வதே சிறந்த நட்பு.இது தேவை.

788-உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
   இடுக்கண் களைவதாம் நட்பு.

இடுப்பாடை நழுவும் போது நமது கை நம்மை அறியாமல் அதனை சரி செய்வது போல்,நண்பனுக்கு வரும் துன்பத்தை அறிந்து உடனடி உதவி புரிதலே சிறந்த நட்பு.இது தேவை.

789-நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
   ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.,

நட்பிற்கு இலக்கணம் யாதெனில் ,தன்னால் முடிந்த வரையில் மன வேறுபாடு கொள்ளாமல் தாங்கி நிற்பது தான் நட்பு.இது தேவை.
                             
790-இணையர் இவரெமக் கின்னம்யாம் என்று
   புகையினும் புல்லென்னும் நட்பு.

நட்பின் தன்மையை பெருமைபட பேசினாலும் நட்பின் பெருமை குறைந்துபோகும்.இது தேவை.

‘நட்பு’ அதிகாரத்தின் பத்துக்குறட்களும் பயனுள்ளவை.
           ********************************************************************************************
பொது சிவில் சட்டம் தேவை என சொல்லப்படுகிறதே, ஏன்?
இந்துக்கள் எல்லாரும் சமமாக மதிக்கப்படுகிறார்களா?
நடத்தப்படுகிறார்களா? இந்துக்களில் ஒரு கூட்டம் மட்டும் பூனூலை மாட்டிக்கொண்டு நாங்கள் மட்டுமே கடவுளுக்கு செருக்கமானவர்கள் என்கிரீர்களே இது நேர்மையா?
நாங்கள் மட்டும் தான் கடவுள் கருவரைக்கு செல்வோம்,நாங்கள் மட்டும் தான் கலசத்தில் நீர் ஊற்ற முடியும்;வாரியார்,அடிகளார் கூட நீர் ஊற்ற தகுதியற்றவர்கள் என்பது நேர்மையா?
பசுமாடு மட்டுமே புனிதம்;பால்தரும் மற்ற மாடுகளெல்லாம் புனிதமல்ல என்பது நேர்மையா?
வடகலை பார்ப்பான்,தென்கலை பார்ப்பானை கண்களால் பார்த்து விட்டாலே சுவரில் போய் முட்டிக்கொள்வான்,இதற்குப் பெயர் , ‘கண்டு முட்டு’
ஒருவனைப்பற்றி இன்னொருவன்  காதால் கேட்டுவிட்டாலே உடனே போய் சுவரில் முட்டிக்கொள்வான்.இதற்குப் பெயர், ‘கேட்டு முட்டு’
(உண்மை,நவ.16-30,2016)
இப்படி இருக்கும் போது இந்து மதம் எங்கே ஒன்று சேரப்போகிறது?(ஆனால் ஒன்றில் மட்டும் ஒன்று சேருகிறது, வெய்யிலாளியை கோயிலுக்கு போய் மொட்டை போடுவதிலும்,உண்டியல் மற்றும் அர்ச்சகர் தட்டில் காசு போட்டால் கடவுளை காட்டுவேன் என்பதில்)
                                        **************************************

No comments: