Friday, April 27, 2018

88-பகைத்திறம் தெரிதல்


                      88- பகைத்திறம் தெரிதல்

871-பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
    நகையேயும் வேண்டற்பாற் றன்று.

பகை என்பது பண்பற்றது ,அதை விளையாட்டாக கூட ஒருவன் விரும்பக்கூடாது.இது தேவை

872-வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
    சொல்லேர் உழவர் பகை.

படை வீரர்களை பகை கொண்டாலும் தவறில்லை,சொல்லாற்றல் மிக்க அறிஞர்களை பகை கொள்ளக்கூடாது.இது தேவை.

873-ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
    பல்லார் பகைகொள் பவன்.

பலர் பகையை தேடிக்கொள்பவன் ஆணவம் பிடித்தவன் என்பதை விட அறிவிலி எனலாம்.இது தேவை.
                         
874-பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
    தகைமைக்கண் தங்கிற் றுலகு.

பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்ளும் பண்பாளனை இந்த உலகமே போற்றும்.இது தேவை.

875-தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்
   இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று.

தன்னுடைய பகைவர்கள் இரண்டுபட்டால் ஒருவனை துணைக் கொள்வதே சிறந்தது.இது தேவை.

 876-தேறினும் தேறாவிடினும் அழிவின்கண்
    தேறான் பகாஅன் விடல்.

ஒருவனுக்கு மரணம் நெருங்கும் வேளையில் பகைவரை கண்டும் காணாது விட்டு விடல் வேண்டும்.இது தேவை

877-நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
   மென்மை பகைவர் அகத்து.

நமது துன்பத்தை நண்பர்களிடமும்.நமது அச்சத்தை பகைவர்களிடமும் வெளிப்படுத்தக்கூடாது.இது தேவை.

878-வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
    பகைவர்கண் பட்ட செருக்கு.

சமயம் அறிந்து தற்காப்பு மேற்கொண்டு பகைவரின் முன் தோன்றினால் பகைவரின் ஆணவம் தானாகவே அழிந்துவிடும்.இது தேவை.

879-இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
    கைகொல்லும் காழ்த்த இடத்து.

முள் மரத்தை முளையிலேயே கிள்ளி விடவேண்டும்,அதுபோல் பகை முற்றுமுன்பே வீழ்த்தி விடவேண்டும்.இது தேவை.

 880-உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
    செம்மல் சிதைக்கலா தார்.

பகைவரின் ஆணவத்தை குலைக்க முடியாதவர்கள்,உயிரோடு உலவும் பிணங்களே.

இந்த குறள் மனித குல அழிவுக்கே வழி வகுக்கும்.பாமர மக்களை உசுப்பேற்றி வீண் பகையை வளர்க்க உதவும். சுய சிந்தனையற்ற முரட்டுத்தனத்தை வளர்க்க உதவும்,பழிக்கு பழி வாங்க மட்டுமே தூண்டும் ஒரு குறள் இது .தற்கால மனித குல வளர்ச்சிக்கு  தேவையற்ற குறள்.எனவே இது மாணவர்கள் கற்க தகுதியற்றது.

‘பகைத்திறம் தெளிதல்’ அதிகாரத்தின் 880-ம்  குறள் தவிர மற்றவை கற்க தகுதி வாய்ந்தது.
         **************************************************************************************************
கடவுளை நம்புகின்ற்வன் கடவுள் விதித்த விதிப்படி வாழ்வு அமையும் என நம்ப வேண்டும்.அப்படி எனில் சோதிடத்தை நம்புகிறவன்,கடவுளை மறுக்கிறான் என்பதே  பொருளாகிறது.சோதிடம் ,கிரகங்கள் இயக்கப்படிதான் வாழ்வு என்பதால்,கடவுள் விதிப்படித்தான் வாழ்வு என்பதை மறுப்பதாக பொருள்,
சோதிடத்தை நம்புகிறவன் கடவுளை மறுக்கிறான் என்பதுதானே உண்மை!

வாஸ்த்து நம்பிக்கையாளன், கடவுளையும் மறுக்கிறான், சோதிடத்தையும் மறுக்கிறான். வாசக்காலை மாற்றி அமைத்தாலே உன் கஷ்ட்டமெல்லாம் மாறிவிடும் என்கிறான்,அப்படியானால் வாழ்வை கடவுளும்,கிரகங்களும் தீர்மானிக்கவில்லை என்பது புலனாகிறது அல்லவா?
                     *********************************

No comments: