மிக்க மகிழ்ச்சி அய்யா,ஒரு ஆசிரியரை நினைவில் வைத்து அழைத்துள்ளீர்கள்,இது ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக அமையும் அய்யா’ என செம்மங்கடி தெரிவித்தார்
இருவரையும் கொண்டு சிலைகளை திறந்தேன். இதனால் எங்கள் கிராமத்தின் முதல் தாய் தந்தையர் கோயில் அமைத்த நபராக ஆனேன். இளமைக்கால என் எண்ணங்கள் நிறை வேறிவிட்டது.
பள்ளிக்காலத்தில் நான் படிக்கும் தினசரி பத்ரிக்கையில் ஒரு செய்தி படித்தேன்,திரு கி.ஆ.பே விஸ்வநாதம் எனும் ஒரு தமிழறிஞர்,திருச்சியை சார்ந்தவர் அவர் திருச்சி காவேரி அற்றங்கரையில் தனக்காக 40 வயதில் ஒரு கல்லறை அமைத்து சுற்றி தென்னை மரங்கள் வைத்துள்ளதாக படித்தேன்.தன் மரணத்திற்காக காத்திருந்த அவர் 40 ஆண்டுகாலம் கழித்தே இறந்தார்.
அதைப்போல நானும் எனக்கு கல்லறை அமைத்துக் கொள்ள ஆசைப்பட்டேன். அதற்கான காலம் கனிந்து வந்தது.
2019ல் சித்தூருக்கு சென்றேன்.சித்தூரில் தேடிப்பிடித்து ஒரு கருங்கல் பலகை செய்யும் தொழிற்சாலையை கண்டுபிடித்து 6க்கு 2 அடி கொண்ட 6 கற்பலகைகளும்,2க்கு 2அடி கொண்ட நான்கு கற்பலகைகளும் ஒவ்வொன்றும் 3 அங்குல தடிமன் கொண்டது..என் மனைவிக்கும் எனக்கும் இணைந்து இரு கல்லறைகள் அமைக்க ஆசைப்பட்டேன்.
திருவள்ளூரிலிருந்து
ஒரு மினி ட்ரக் கொண்டு போய் எடுத்து வந்தேன்.இதற்கு ரூபாய் 40 ஆயிரம் ஆனது.உள்ளூர்
கல் தச்சரை கொண்டு செப்பனிட்டேன்.இதற்கு 20 ஆயிரம் ஆனது. ரூ.60 ஆயிரம் கொண்ட கல்லறையை திருவள்ளூர் வீட்டில் வைத்திருந்தேன் ,எனது
கிராமத்தில் இடுகாட்டில் கல்லறை கட்டுவதா அல்லது எனக்கு சொந்தமான இடத்தில் கட்டுவதா
எனும் யோசனையில் எங்கள் ஊர் இடு காட்டில் இரண்டு கல்லறைகளை வைத்தள்ளேன்,ஒன்று எனக்கு இன்னொன்று என் மனைவிக்கு!
என் வீட்டெதிரே எனக்க கற்சிலை வைக்க தீர்மானித்து,6 அடிஉயர பீடம் அமைத்து விட்டேன்.மகாபலிபுரத்திலிருந்து 6 அடி உயர கற்சிலையை ட்ரக் மூலம் கொண்டு வந்தேன்,வழியில் தென்பட்ட ஒரு க்ரேன்ஐ வரவழித்தேன்,அவன் 4 ஆயிரம் கேட்டான் சரி என ஒத்துக்கொண்டேன்,6 அடி உயர பீடத்தில் நிலை நிறுத்தப்பட்டது!
No comments:
Post a Comment