பின்னாளில் அங்கு வாழ்ந்த சத்ரியர்கள் பங்காளிச் சண்டையால் ஒரு பிரிவினர் கங்கை நோக்கி பயணித்து பீஷ்மரின் தலைமையில் சத்ரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியது புலனாகிறது. மற்றொரு பிரிவினர் அஸ்சாம் பர்மா வழியாக கம்போடியா சென்று ஜெயவர்மன் தலைமையில் ஆட்சி அமைத்து அங்கு ஒரு பெரிய சிவன் கோயிலை கட்டியது புலனாகிறது.இதற்கு அங்கோர்வாட் என்று பெயர்.இது உலகின் மிகப்பெரிய கோயில்,தற்போது புத்தர் ஆலயமாக செயல்படுகிறது.
தமிழ் அறிஞர்களில் வரலாற்று ஆய்வாளர்கள் மிகக் குறைவு.இதனால் பிற மொழி வரலாற்று ஆய்வாளர்கள்,தமிழை முன்னிலைப்படுத்த விரும்ப வில்லை.மாறாக வரலாற்று சான்றுகளை திராவிட நாகரிகம் என மறுவி அழைத்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த புத்தக கண்காட்சியில் ‘தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு’ எனும் நூலை கண்டேன் .எனது வரலாற்று அறிவை விசாலப்படுத்தியது இந்நூல்.எழுதியவர், முனைவர் க.த. திருநாவுக்கரசு.இவர் முன்னாள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக செயலாற்றியவர் .
இந்நூல் தொடக்கத்தில் ‘ராமனின் தாத்தா ருத்தர வர்மன்’ என எழுதியிருப்பார்.இந்த வரி என் சிந்தனை களத்தை விசாலப்படுத்தியது.இந்நூலை வாங்கி வந்து படித்து விட்டேன்.கிழக்காசிய நாடுகளான பர்மா,மலேசியா,தாய்லாந்து,இந்தோனிசியா,கம்போடியா போன்ற நாடுகளின் தமிழர் கலாச்சாரத்தை விவரிக்கின்றன
No comments:
Post a Comment