Tuesday, November 10, 2020

ஏ.அ-38

 

உலக அளவில் மக்களை நல்வழிப்படுத்துவது அந்தந்த மொழி இலக்கியங்கள் தான். அந்த இலக்கியங்களை ஒதுக்கி விட்டு 1818ம் ஆண்டு பிறந்த யூத மதத்தினரான காரல் மார்க்ஸ், தனது 50 வயதுகளில் எழுதிய நூல் தான் ‘மூலதனம்’ (capitol).1883 "மார்ச் 14ல் இறந்து போனார்.பின்னாளில் இந்நூல் Toss capitol  என்றழைக்கப்பட்டது.காரணம் அப்போது ரஷ்ய புரட்சியாளரான லெனின் மூலதனம் நூலை உள்வாங்கி தனக்குள் ஒரு வைராக்கியத்தை உருவாக்கிக் கொண்டார்.ஒரு மக்களாட்சி நிறுவ வேண்டுமானால் அது காரல் மார்க்ஸ் நூலில் விவரிக்கப்பட்ட ஆட்சியமைப்பாக மட்டுமே இருக்க வேண்டும் என நினைத்து சர்வாதிகார சார் மன்னராட்சியை நீக்கி ஒருங்கிணைந்த (USSR) ரஷ்யாவை நிறுவினார்.

அப்போது பெரும்பங்கு வகித்தது ரஷ்ய வானொலியான Tass மட்டுமே.எனவே மார்க்சின் நூலுக்கு டாஸ் கேபிடல் என்றொரு பேரும் உண்டு.

அந்நாளில் சீனாவில் மாசே துங் தன் நாட்டில் நடை பெற்ற கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து விவசாயிகளை ஒன்று திரட்டி போராடிக் கொண்டிருந்தார்.லெனின் தன் நாட்டில் கம்யூனிச ஆட்சி நடத்துவதை கேள்வியுற்று லெனினை சந்திக்கின்றார். ஆட்சி மாற்றத்தின் காரணங்களை கேட்றிந்தார்.மூலதனம் நூலை வாங்கி தன் நாட்டிற்கு சென்றார். ‘மார்க்சிய லெனினிசம்’ எனும் புதிய கொள்கையை உருவாக்கினார்.இன்றைய சீன வல்லரசு மாசே துங் உருவாக்கியது தான்.

No comments: