Tuesday, January 10, 2017

அறம்காத்த வர்மாக்கள்-2



20-தமிழ் இனம் –ஒரு பன்னாட்டு தேசிய இனம்

இன்று இந்த உண்மை மறைக்கப்பட்டு, மறுக்கப்படுகிறது. காரணம் இந்த இனம் ஆரியர்களால் அரக்கர் இனம் அல்லது அசுரர் குலம் என இதிகாசங்களில் வருணிக்கப்பட்டதனால் தான்.

ராமாயணக் காதை  எப்படி உருவாகியது என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம். இந்தியாவுக்குள் ஆரியர்கள் வருகையின் போது, சாலிவாகனர் அல்லது சாதவாகனர் வம்சம் வட இந்தியா முழுவதும் பரவியிருந்தனர்.

இவர்கள் இரண்டு பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது,
1-சூரிய வம்சம்(ரகு குலம்).,
2- சந்திர வம்சம்.
இது வேறொன்றுமில்லை பங்காளி மற்றும் சம்பந்தி முறைகளைப் பின்பற்றும் ஒரு நாகரிகப் பண்பாடு.ஆரியர்கள் வைணவ கடவுளான விஷ்னு ஆராதனையை சிந்து சமவெளிமக்களிடையே பரப்பினர்.அப்போது அங்கே பலம் வாய்ந்த சூரிய குல மன்னன் ரகுவம்சத்தைச் சார்ந்த ருத்தரவர்மன் (ராமனுடைய தாத்தா) ஆட்சி செய்து கொண்டிருந்தான். இவன் சிவனை வணங்குபவனாக இருந்தான் இவன் பெயரில் ருத்திரபிரயாக் எனும் கங்கை நதிக்கும் பெயரிடப்பட்டது.

21-தமிழர்களின் இயற்கை வழிபாடு

(தமிழர்களின் முழுமுதற் கடவுளே சிவன்(சைவம்) என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ளவேண்டும்,தமிழர்களின் சைவ வழிபாடு என்பது மரம்(வேம்பு,அரசமரம்) செடி ,கொடி (வாசமுள்ள பூக்களைத் தரும் தாவரங்கள்),மண் (புற்று),விலங்குகள் (சாதுவான குணங்கள் கொண்டபசு,காளை,நாய்,பன்றி, மனிதனுக்கு நொடியில் மரணம் ஏற்படுத்தும் கொடிய நஞ்சுள்ள நல்ல பாம்பு, மனிதர்களின் உயிர் வளர்க்கும் ஆதாரங்களான நீர் (ஆறு,கடல்),காற்று,மண் (பூமி மாதா)

ஆணும் பொண்ணும் இணைந்தால் தான் சக்தி உருவாகிறது,அதன் உருவமான லிங்க வழிபாடு போன்ற இயற்கை வளங்களை வழிபட்டனர்.
ஆரியர்கள் கடவுள் வழிபாடான விஷ்னுவுக்கு உருவம் கொடுத்த பின்புதான் சிவ வழிபாட்டுக்கு லிங்க வடிவம் கொடுக்கப்பட்டது. இது ஒரு தவறான வழிபாடு(worship of fallacy)என மேற்கத்தியரான ஆரியர்கள், தமிழர்களுக்கு சொல்லிக் கொடுத்த புதிய கடவுள் வழிபாடுதான் கற்பனைக் கடவுள் வழிபாடான கிருஷ்ன அவதார வழிபாடு.

பின்னாளில் யூதர்களின் அருவ வழிபாட்டு நூல்களான பழைய ஏற்பாடு(old testament) பின்  புதிய ஏற்பாடு(new testament) புதிய இறை வழிபாட்டுக் கொள்கை தோன்றியது.

ஆரியர்களின் வைணவ மதம் (நெற்றியில் நாமம் இட்டுக் கொள்வது) இங்குள்ள பூர்வ குடி தமிழர்களான பிள்ளை மார்களை (சைவ வேளாளர்) வைணவத்துக்கு மாற்ற முடியவில்லை. வைணவ வேளாளர் என்று யாருமில்லை. ராமாயணப் போர் இதனால் தான் ஏற்பட்டது. சைவரான  (சிவபக்தன்)  ராவணனை (தமிழன்) வைணவத்துக்கு மாற்ற முடியவில்லை. இதனாலேயே பிராமணர்களுக்கு ராவணனை பிடிக்கவில்லை, அந்நியரான ஆரியரிடம் அனுசரித்துப் போக இயலவில்லை.

ராமனை வில் வித்தையில் பயிர்ச்சிக் கொடுத்து சைவ ராவணனை எதிர்த்துப் போரிட வைத்தனர், என்கிற நிலை வந்துவிட்டது.ஒரு காலத்தில் (ஆரியர் வருகைக்கு முன்) ஒரே மதமாக இருந்த தமிழ் மதம் பங்காளிச் சண்டையாலும்,
சகோதரச் சண்டையாலும் சிதறுண்டு சிறு சிறு இனங்களாக மாறி சாதிய அமைப்புகளுக்கு வந்து  விட்டது.

இதிகாச இந்து மதத்தில் உள்ள பல இனங்களில் அல்லது பல சாதிகளில் ஒன்று,ஒரு சகோதர இனம் அல்லது சாதி பாதிக்கப்படும் போது ஒட்டு மொத்த இதிகாச இந்தியாவும் தம் சகோதர இனம் அழிகிறது,என ஒரு இனம் வாழ இந்து மதத்தின் உட்பிரிவாக அமைந்துள்ள மற்ற சாதிய அமைப்புகள் போராடியிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை.ஒரு இனம் அழிந்தால்தானே மற்ற இனம் வாழ முடியும்?.மனித இனத்தின் சுயநல கும்பல் குணம் தான் இதற்கு காரணம்..அது ஒரு மனிதநேயமற்ற கும்பல் குணம்.

ஆ- ராமாயணம்-மறு சிந்தனை

ருத்ரவர்மன் மூர்கத்தனத்தை அடக்குவதற்கும் மதி மயக்குவதற்கும் ஆரியர்கள் ஒரு யுக்தியைக் கையாண்டவிதம் தான் ராமாயணம்
ருத்தரவர்மனின் மகன் தசரதனை பிராமணர்கள் அணுகினர். தசரதன் ஒரு பெண்பித்தன். அதனால் அவனை அணுவது சுலபமாகிவிட்டது.
ராமன் ஒரு மதம்மாறிய வைணவ(converted from saivam)வீரன். வால்மீகி என்கிற  நூலாசிரியன், ராமனை நேர்மையான, ‘ஒருவனுக்குஒருத்தி’ என்கிற கோட்பாட்டில் புனையப்பட்ட கதையின் நாயகனாக சித்தரிக்கப்படுகின்றான்.

ஆனால் அதனைப் பின் தொடர்ந்து ராமன் கதைகளை பல மொழிகளில் பல கற்பனைகளோடு தெய்வாம்சம் பொருந்திய கதாபாத்திரமாக புனையப்பட்டுள்ளது.அதில் முக்கியமானது,கதை நடந்த 2000-ம் ஆண்டுகளுக்குப் பின் (கி.பி 10 அல்லது 12-ம் நூற்றாண்டு) தமிழில் கம்பராமாயணம் இலக்கிய (பொய்களோடு) ரசனையோடு வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் ராமன் தெய்வமானான். தசரத மன்னன்,அவனை பெண்களைக் கொண்டு சுலபமாக தங்கள் காரியங்களை சாதிக்கலாம் என கணக்கு போட்டனர்.போட்ட கணக்கில் வெற்றியும் பெற்றனர்.
                                                                    
தசரதனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள்.(60 ஆயிரம் மனைவிகள் என்று ஒரு கணக்கும் உண்டு).அதில் ஒரு மனைவியான பார்ப்பன கைகேயியை பிராமணர்கள் அணுகி தங்கள் வலையை விரித்தனர்.

முதலில் ஆரியர்கள் வணங்கும் கடவுளான விஷ்னுவை(நெற்றியில்நாமம்) தசரதன் வணங்க வைத்து  மதம் மாற வைத்தனர்.

முதல் மனைவி கோசலை மூலம் தெய்வாம்சம் பொருந்திய ஒரு மகன் பிறப்பான் என நம்பவைத்தனர் (அவன் தான் ராமன்) அதே காலகட்டத்தில் அண்டை நாடான மிதிலையில் சனகன் எனும் சுய சிந்தனையற்ற மன்னன் இருந்ததை கேள்வியுற்ற பிராமணர்கள் அவனை தங்கள் வளர்ச்சிக்கும் வாழ்வாதாரங்களுக்கும் பயன் படுத்த போட்ட திட்டம் தான் சீதை-ராமன் திருமணம்,ராமாயணம். பேரழகி சீதை எப்படி தோன்றினாள் எனும் மூலக் கதையை நாம் சற்று காணலாம்.

1-அகலிகை

அறிவியல் சிந்தனைக்கு அப்பாற் பட்டு புலவர்கள் கதை புனைவதில் வல்லவர்கள். இருப்பினும் அதில் சில உண்மைகள் புதைந்திருக்கும். ராமாயணத்தில் ஒரு துணைக்கதை,
                                    
                        அகலிகை தோற்றமும் மறைவும்.

பிரம்மன் பேரானந்தத்தில் இருந்த போது.பாலை(கடல்?) தேவர்களும் அசுரர்களும் இணைந்து  கடைந்த போது அமுதத்தோடு ஒரு பேரழகி தோன்றினாள். அவள்தான் அகல்யா.அந்த அகல்யாவை கண்டு இந்திரன் முதலான தேவர்கள் மயங்கினர்.அவளை தனக்கு திருமணம் செய்து வைக்கவேன்டி பிரம்மனை இந்திரன் வேண்டுகிறான். அதே போன்று மற்ற தேவர்களாகிய அக்கினி தேவன், எமன்,  வாயுதேவன் என பல பேர் அகல்யாவை மணம் செய்ய போட்டியிட்டனர்.

அறிவு கெட்ட தேவர்களுக்கு அறிவு பூர்வமான அறிவியல் போட்டி ஒன்றை பிரம்மன் அறிவித்தான். ‘எவர் ஒருவர் இரு முகங்கள் உடைய பசுவை வலம் வருகின்றனரோ அவருக்கே என் மகள் அகல்யாவை மணம் முடிப்பேன்’ எனும் நிபந்தனை விதிக்கிறான்.
‘இரண்டு தலை பசு என்பது சாத்தியமா?இதற்கு எங்கே போவது?’ தேவலோகத்தில் உள்ள அனைத்து தேவர்களும்,
‘இது முடியாது போல் தோன்றுகிறது, அகல்யாவை பிரம்மனே அனுபவிக்கும் திட்டம் தான் இது’.என குழம்பி போனார்கள்.

இதை கவனித்த நாரத பிராமணன்,கவுதம ரிஷிக்கு அகல்யாவை மண முடிக்க பிரம்மனின் நிபந்தனைக்கு உடன் படுகிறான்.ஒரு புதிய யுக்தியை கையாள்கிறான்.ஒரு கருவுற்ற பசுவை பிரம்மன் முன் நிறுத்துகிறான்.அது கன்று போடும் நிலையில் இருக்கிறது.அப்பொழுது பசுவின் பிறப்பு உறுப்பில் கன்று தலையை வெளியே நீட்டிகொண்டிருந்தது.எனவே பிரம்மன் படைப்பில் இரட்டை தலை உள்ள பசுவை வேறெங்கும் பார்க்கமுடியாது. இந்த நிகழ்வையே பிரம்மனின் நிபந்தனைக்கு சமர்ப்பித்தல் சாலச் சிறந்து,என நாரதன் தீர்மானித்தான்.பிரம்மனும் இதை ஏற்றுக்கொள்ளும் மன நிலைக்கு வந்துவிட்டான். இரட்டைத் தலையுடைய பசுவை கவுதமன் வலம் வந்தான்.பிரம்மனும் முனிவனுக்கு பெண் கொடுக்க சம்மதித்தான்.

                                  
அகல்யாவுக்கும் கொளதம ரிஷிக்கும் திருமனம் நடந்து விட்டது. இதன் பலனாக சதாநந்தன் பிறந்தான்.பின்னாளில் இவன்தான் ஜனகன் அரண்மனைக்கு புரோகிதன்.
அதாவது இல்லாததை இருப்பது போல் இட்டுக் கட்டி பாமர மக்களின் உழைப்பை சுரண்டும் யுக்தியில் கை தேர்ந்தவர்கள்,இந்த புரோகிதர்கள். இரட்டைத்தலை பசுவை தேடிப்போன தேவேந்திரன் மீண்டும் வந்தான்.அகல்யாவுக்கு திருமணம் ஆகி விட்டதை இந்திரன் ஒரு பொருட்டாகவே நினைக்க வில்லை.அகல்யாவுக்கு குழந்தை பிறந்திருப்தை கூட கவலைப்பட்டதாக தெரியவில்லை.அகல்யாவைக் கண்டதும் இந்திரன் காமத்தின் உச்சிக்கே சென்று விட்டான்;அகல்யாவை அடைந்தே தீர்வது என முடிவெடுத்தான்.

நள்ளிரவில் சேவல் கூவுவதைப்போல் செய்தான் முனிவரும் பொழுது புலர்ந்து விட்டது என நினைத்து காலைக் கடனை முடிக்க ஆற்றங்கரை சென்று விட்டான். இது தான் சமயம் என முனிவன் சென்ற சில நிமிடங்கள் கழித்து தனியே குழந்தையுடன் உறங்கும் அகல்யாவைத் தொட்டான்;தனது கணவர்தான் தன்னை தடவுகிறார் என நினைத்த அகல்யா இந்த்ரனுக்கு இசைந்தாள்.

இதன் விளைவாக அகல்யா கருவுற்றாள். வேலையை முடித்த இந்திரன் முனிவன் வருவதைக்கண்டு பூனைப் (வடிவம் கொண்டு?) போல் வெளியேறி விட்டான். முனிவன் சாபத்திற்கு இந்திரனும் உள்ளானான் (இது தனிக் கதை) அகலிகை கல்லானாள்


2- சீதையின் தோற்றம்

இந்திரனுக்கும் அகல்யாவிற்கும் பிறந்தவள் தான் சீதை,அம்மாவைப் போன்ற பேரழகி. அனாதையான அந்த பெண் குழந்தையை சதாநந்தன் (ஜனகன் அரண்மனைப் புரோகிதன்) தன் அனாதைத் தங்கை சீதையை ஜனகன் விளை நிலத்தின் வேலியோரம் போட்டுவிட்டு ஜனகனுக்கு தகவல் அளிக்கிறான்.தகவல் அளிக்கும் போது ஜனகனை மூளைச் சலவை செய்கிறான்,

‘அது தெய்வீக குழந்தை  அத்துடன் அதிசய வில்லும் அம்பும் உள்ளது.அந்த இரண்டையும் எடுத்து வந்து அரண் மனையில் வளர்த்தால் நாடு சுபிட்சம் அடையும்.சீதையை மணக்கப்போறவன் அய்யோத்தியில் வளரும் ராமனே !’என ஜனகனை நம்பவைக்கிறான்.

ஒரே நேரத்தில் அடித்த ஒரு கல்லில் இரண்டு மாங்காய் விழுந்த மகிழ்ச்சியில் சதாநந்தன் ஜனகனின் ஆஸ்த்தான ஜோதிடரானான். சோதிடனுக்கு பேச சொல்லித்தர வேண்டியதில்லை.

தன் நா வன்மையால் வான சாஸ்த்தரத்தை அறிவியல் பூர்வமாக நிருபிக்க உவமானங்களையும் உவமேயங்களையும் எடுத்துக்கூறி கடவுளிடமே வரம் பெற்று வந்ததாக எதிரியை நம்ப வைப்பான். இன்றும் இது தான் நடக்கிறது.

இதை நம்பிய சனகன் மேளதாளங்களோடு அந்த பெண் குழந்தையை அரண்மனைக்கு எடுத்துவர தனது பரிவாரங்களுடன் காணச் சென்றான். குழந்தையோடு ஒரு வில்அம்பு இருப்பதைக் கண்ணுற்றான். அது ஒரு புதுமையான ஆயுதமாக இருப்பதை கண்ணுற்ற சனகன் அருகில் உள்ளவர்களிடம் வினவினான். குழந்தையைப் பற்றி அரண்மனைக்கு தகவல் கொடுத்த பிராமணர்கள் அந்த வில்லைப் பற்றிய அற்புதங்களை சனகனுக்கு எடுத்து உரைத்தனர்.
                                          
“யார் அந்த வில்லை வளைத்து நாணேற்றுகிறானோ அவனே சீதையை மணம் முடிக்கும் தகுதி பெற்றவன்”என அவர்கள் கூறியதை சனகன் நம்பினான். குழந்தையையும் வில் அம்பையும் சேர்த்து அரண்மனைக்கு எடுத்துச் சென்றனர்.

இந்த சேதியை அய்யோத்தி அரண்மனைக்கு பரவவிட்டனர். ராமன் திருமண வயதில் அரண்மனை பிராமணர்கள் (நாடு விட்டு நாடு வந்தாலும் பிராமணர்கள், தங்களின் சாதுர்ய குணத்தால் எங்கு வளம் கொழிக்கிறதோ அங்கே ஒட்டிக் கொள்வார்கள்) பஞ்சாங்கம் பார்க்க ஆரம்பித்தார்கள்.ஏதேதோ பல பெண் சாதகங்கள் பார்க்கப்பட்டது போல்பாவனை செய்தார்கள்.சனகனின் மகள் சீதை ராசிபலன் மட்டுமே பொருந்துகிறது என கதை கட்டியதை
அனைவரும் நம்பினர். அப்பொழுது ஆரம்பித்த திருமணத்திற்கு பஞ்சாங்கம் பார்க்கும் முறை இன்று வரை நீடிக்கிறது.  
வில் அம்பு வித்தையில் கை தேர்ந்தவர்களான ஆரியர்கள் அந்த வில்வித்தையை, வாளும் வேலும் மட்டுமே அறிந்திருந்த தமிழர்களின் கலாச்சாரத்தில் புகுத்த நினைத்தனர்.குழந்தை சீதையின் அருகில் ஒருவில் இருந்தது எனவும் அந்த வில்லை வளைப்பவன் எவனோ அவனே சீதையை மண முடிக்க தகுதியானவன் என மிதிலை மன்னன் மூலம் அறிவிப்பு செய்தனர்.தேசத்தின் அசுர (அரக்கர்கள்) குல தமிழ் மன்னர்கள் இளவரசர்கள் அந்த அதிசய மகளை மண முடிக்க (சுயம்வரம்) மிதிலை அரண்மனையில் கூடி விட்டனர்.அனைவருமே வில்  வித்தையை அறியாதவர்கள்.

3-வில் – ஒரு நவீன போர் ஆயுதம்

வாளையும் வேலையும் மட்டுமே அறிந்திருந்த தமிழர்கள் முதன் முதலில் வில்லைப் பார்த்து வியந்தனர்.எந்த இளவரசரும் நாணேற்றி அம்பு தொடுக்க பயிற்சி பெற்றவரில்லை.
ஆ.க-

(வில் என்பது வளையதக்க  ஒரு கொம்பின் இருமுனையும் வளைக்கப் பட்டிருக்கும். (பிற்காலத்தில் உலோகத்தால் ஆனவில் அம்புகளும் தோன்றின. இரு முனைகளையும் ஒரு கயிற்றால் வளைத்து இழுத்து முடிச்சு
போட வேண்டும். குறுக்காக கூர்மையான கொம்பை (அம்பு) வைத்து இழுத்து எதிரியை நோக்க வேண்டும். நூறடிக்கும் அப்பால் உள்ள எதிரியை அம்பால் சாகடிக்க முடியும்.

ஆனால் தமிழன் கண்ட வாளும் வேலும் அருகில் உள்ள எதிரியை மட்டுமே சாகடிக்க முடியும்.ராமாயணத்தில் வில்வித்தை பயிற்சி பெற்ற ஒரு தமிழனிடம் (ராமனிடம்), ஒரு தமிழன்(ராவணன்) தோற்றதற்கு இதுதான் காரணம். தன் விரலைக் கொண்டே தன் கண்ணை குத்திக் கொள்ளும் கலையை தமிழர்களுக்கு பயிற்றுவித்த ஆரியர்கள் தமிழனை அடிமைப்படுத்தும் கலையை,அன்று ஆரம்பித்த பயிற்சி இன்று வரை தொடர்வது தான் சோகம். 

வாசகர்கள் ஒரு உண்மையை நினைவு கூற வேண்டும். இதுவரை வரலாறு எழுதியவர்கள் தமிழர்கள் இந்தியாவின் மூத்த குடிமக்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் திராவிட நாகரிகம் என்று சொல்லி மற்ற மொழிகளோடு இணைத்து தமிழ் கலாச்சாரம் மறைக்கப்பட்டு இருக்கும். தமிழன் பெருமைகளை எங்கும் குறிப்பிட்டு எழுதி இருக்கமாட்டார்கள். இந்தியாவில் ஆரியர் வருகைக்குப் பின் தான் சைவமாக இருந்த தமிழர்கள் பாதி வைணவமாக மாறினார்கள்.

தமிழில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் சைவமும் வைணவமும் நிறைந்துள்ளது. அத்துணை மொழிகள் உருவாக மூலகாரணமே பிராமணர்கள் தான்.

ஒவ்வொரு அரச குடும்பத்திலும் அண்ணன் தம்பி உறவு முறைகளில் விரிசல் ஏற்படுத்தி தலைக்கட்டு முறையை புகுத்தி தனித்தனி குறுநில மன்னர்களை உருவாக்குவதில் முனைப்புக் காட்டினர்.அண்ணனிடம் சென்று,

~அவன் பேசும் மொழி உனக்கு வேண்டாம்,’தம்பியிடம் சென்று அண்ணன் பேசும் மொழியும், எழுத்தும் உனக்கு வேண்டாம் உனக்கும் உன் சொந்தங்களுக்கும் தனி பத்திரப்பதிவை ஏற்படுத்தி தருகிறோம்’

என தனித்தனி கருவூலங்களையும், ஆவணங்களையும் உருவாக்கினர். அனைவரிடத்திலும் அன்பாக பேசி கடவுளை வணங்க வேண்டும், குடும்ப வாழ்க்கையில் சாஸ்த்ர முறைகளைப் பின்பற்ற வேண்டும் அதையும் ஒரு பிராமணன் மூலம் செய்ய வேண்டும் என ஒரு குடும்பத்திற்கு ஒரு பிராமணன் எனும் கோட்பாட்டில் நாடெங்கும் செயல்பட்டனர் .இன்றும் இந்நிலை நீடிக்கிறது.
                   
இதிலிருந்து ஒரு உண்மையை உணரவேண்டும், இந்தியாவில் வசிக்கும் அத்துணை இனத்திற்கும் தமிழ் தான் மூலம் என்று நாம் உணர வேண்டும்.தமிழர் கலாச்சார பின்னணி கொண்ட ராவணன் குடும்பம் ஒன்று போதும்.தமிழர்கள் குடும்ப ஒற்றுமையற்றவர்கள் என்பதை காட்ட,ராமாயணத்தை இயற்றிய வால்மீகி மூலம் இதை உணரலாம்.
வேறுவகையில் கூட கூறலாம், பொன்னுக்கும், பெண்ணுக்கும், மண்ணுக்கும், குடிக்கும், கூத்திக்கும்,
கூட பிறந்தவனையே எதிரிக்கு காட்டிக் கொடுக்கும் ஈனப்பிறவிகள் தமிழர்கள். இந்த குணத்தால் பிறஇன மக்கள் தமிழர்களை அடிமைப்படுத்த முடிந்தது ,இன்றும் முடிகிறது.உலகில் உள்ள அத்துணை இன வெய்யிலாளி குடும்பங்களுக்கும் இதே நிலைதான்.)

ராமனுக்கு மட்டுமே வில்வித்தையை ஆரியர்கள் பயிற்சி கொடுத்து தயார் நிலையில்  வைத்திருந்தனர். யாரல்லாம் ஆரியர்களை ஆதரித்தர்களோ அவர்களை தெய்வபலம் பொருந்தியவர்கள்,வீரர்கள் அல்லது சத்ரியர்கள் என புகழ்ந்தனர், புகழுக்கு மயங்கியவர்கள் தசரதனைப் போன்று ஏராளமானவர்கள் அந்நாளில் வைணவ மதம் மாறினார்கள்.

அறம்காத்த, அறவழியில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த முரட்டு தமிழர்களை தங்கள் ஆளுகைக்கு கொண்டு வந்த தந்திர முயற்சி தான் ராமன்-சீதை கல்யாணம் (ராமாயணம்).

தமிழர்களுக்கோ,தமிழ் மன்னர்களுக்கோ வில் அம்பு போர் பயிற்சி பெற்றிருக்க வில்லை.காரணம் பிராமணர்களின்

1-பிராமணர்களின் பேசும் மொழி புரியவில்லை
                                      
2-தமிழர்களின் சந்தேகங்களுக்கு அவர்கள் வானோக்கி கையை காட்டி பேசியதால் இவர்கள் வானிலிருந்து வந்தவர்கள்,என நம்மவர்கள் நினைத்து விட்டார்கள். இப்போழுதும் நம்மவர்களிடையே அந்த நினைப்பு இருக்கின்றது; இன்னமும் நம்மவர்களுக்கு வரலாற்று அறிவு இல்லை என்பதே உண்மை,இதற்கு நம்ம அரசாங்கமே பொறுப்பு ஏற்க வேண்டும்.)  

4-வைணவம் தழைக்க (ருத்ர)வர்மன்களே காரணம்

கல்யாணம் முடிந்து மிதிலைத் தெருவில் நடக்கும் போது அவர்கள் அழகையும் வனப்பையும் பார்த்து மிதிலை மக்கள் வாய்பிளந்து வியப்புற்றதாக கம்பன் தன் கவி நடையில் படிப்பவர் மனம் கொள்ளை கொள்ளுமாறு வருணிக்கிறான்.

தமிழர்கள் கெட்டுப்போனதற்கு கம்பனே காரணம்.அத்தனையும் பொய்களே இலக்கிய ரசனைக் கொண்டு படிக்கவேண்டும் அல்லது படித்ததை கேட்கவேண்டும் என பாமரனை நம்பவைத்து மெய்மறக்க செய்தனர். இன்றும் கம்பராமாயண பட்டி மன்றங்களில் கேட்டு ரசிக்கலாம்.

அ.கு-
(இப்படியெல்லாம் மெய் மறக்கச் செய்வது ஒரு மொழியின் சிறப்பு. அப்பேர்பட்ட தமிழை வைத்து தங்கள் வாழ்வாதாரங்களை பெருக்கிக் கொண்ட பிராமணர்கள்,தமிழ்- அது நீச்ச மொழி எனவும் மனிதன் மந்திர சக்தி பெற வேண்டுமானால் தாங்கள் பேசும் மந்திர (சமத்கிருதம்) மொழியில் விஷ்னு கடவுளை பூஜிக்க வேண்டும்,அதுவும் தங்கள் மூலமாகத்தான் கடவுளை வணங்க வேண்டும் என நிபந்தனைகளை விதித்தார்கள்-விதைத்தார்கள். விதைத்த வித்தைகளை அறுவடையும் செய்து விட்டார்கள், 

ஒரு மா முரடனை (வீரனை?) மண்டியிடச் செய்யும் சூட்சமத்தை மாயம் மந்திரம் மூலம் பாமர வீரனை நம்பவைத்து ஆரியர்களின் காலில் விழவைத்தனர்.

ஆ.க-தொடர்ச்சி-
பெற்ற தெய்வங்களான தாய்த்தந்தையரை வணங்குவதும் பெரியோர்களையும் மதித்து வந்த தமிழர்கள் ஆரியர்களின் பேச்சை கேட்டு சீர்கெட்டு போனார்கள்.தன் குடும்ப பாரம்பரிய பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டார்கள்.

அது நாள் வரை தமிழர்கள், அப்பா-அம்மா,தாத்தா-பாட்டி, சித்தப்பா-சித்தி, பெரியப்பா-பெரியம்மா, அண்ணன்-அண்ணி, அக்க-தங்கை மாமன் –மாமி மச்சினன்-மச்சினி நாத்தனார் என கூட்டு குடும்ப உறவு முறைகளை பாதுகாத்து வந்த  குடும்பங்கள். ஆரியர்கள் வந்த பின் குடும்ப உறவு முறைகளில் விரிசல் ஏற்பட்டது.

ஆரியர்கள்,தமிழர் குடும்பங்களை ஏன் பிரிக்க வேண்டும்? அதனால் ஆரியர்களுக்கு என்ன லாபம்?
   ( ஆ.க-தொ-)

5- நதிக்கரை மனிதர்கள்

நான் முன்னமே கூறியுள்ளது போல் உலகில் தோன்றிய மனித இனங்களில் மிகவும் அறிவுப்பூர்வமான இனங்கள் நைல் நதி முகத்துவாரத்தில்  தோன்றிய மனித இனங்களே; ஆரியர்களும், யூதர்களும்(ஜூதர்கள்)தான்.

பூமியின் மைய்யப் பகுதியில் அமைந்திருக்கும் அல்லது மலையில் தோன்றி கடலை நோக்கி சங்கமிக்கும் பெரிய வற்றா நதிகள்;

1-எகிப்தின் நைல்,(உலகிலேயே ஆப்ரிக்க கண்டத்தின் தென்புலத்தில் தோன்றி வடபுலம் நோக்கி பாயந்து மத்தியதரைக்கடலில் கலக்கும் ஒரு அதிசய நதி)
                                    
2-இந்தியாவின் இமய மலையில் தெற்கே உற்பத்தியாகும் 2-சிந்து,3-கங்கா 

3-வடபுலம் தோன்றி சீனாவின் வடபிரதேசங்கள் பயணித்து,வளமாக்கி பின் தென்கிழக்காக பசிபிக் கடலில் கலக்கும் மஞ்சள் நதி(Huango)  கரையோர மக்களான செஞ்சீனர்கள்.

உலகில் புகழ் பெற்ற மனித இனங்கள் தோன்றியது,இந்த நான்கு நதி  கரைகள் ஓரங்களில்தான். உலகின் மற்ற நாடுகளில் ஓடும் வற்றா நதிகளின் ஓரங்களிலும் மனித இனங்கள் தோன்றியது .ஆனால்அவையாவும் சிறப்பு வாய்ந்த மனித இனங்கள் அல்ல. அல்லது அழியும் நிலைக்கு வந்துவிட்டது அல்லது மேல கூறிய நான்கு நதி இனமக்கள் அழித்தார்கள் என்றே கூறலாம்.  

அனைத்து கரையோரங்களிலும் தாவரங்கள் செழித்து  வளரும், திமிர்கொண்ட விலங்கினங்களும் மனிதர்களோடு போட்டி போட்டுக் கொண்டு வளரும்.  பலதரப்பட்ட மிருகங்களின் குணத்தை ஒத்த மனிதர்களும், மிருகங்களைப் பார்த்து மனிதர்களும் தங்கள் இனங்களோடு சண்டையிட்டு மகிழ்ந்தனர்; பலர் மடிந்தனர்.
இனப் பெருமையையும் குலப் பெருமையையும் ஊட்டிவளர்த்த பெருமை மனித குலத்தின் தாய்மை இனத்தையேச் சாரும். இது மனித நேயமற்ற மிருக குணம்.
(அ.கு-தொ) (அடிக்கு குறிப்பு அல்லது ஆசிரியர் கருத்து)
உலகில் பல சாம்ராச்சியங்களும், சமத்தானங்களும் வளர்ந்துபின் வீழ்ச்சிக்குப் பின்னணியில் பெண்களே இருந்துள்ளனர். வரலாறு நமக்கு இந்த உண்மையை உணர்த்துகிறது. ஒவ்வொரு மனித இனத்திலும் (ஆரியர்களைத் தவிர) சண்டையிடும் அல்லது போரிடும் ஆண்களுக்கு,நம்பெண்கள், இனப் பாதுகாப்பு வேண்டி வாள்,மற்றும் வேல் கொடுத்து உதவினர்.

ஒவ்வொரு இனமும் தன் இனத்தை தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கான வழி முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். இதனை கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.  அப்படி பின் தங்கிய இனங்கள் என்பது வர்மாக்களும், சேனாதிகளும், இந்தியா முழுக்க பரவி இருக்கும் வன்னிய (அக்னிகுல) சத்திரிய மற்றும் யாதவா இனங்களைச் சார்ந்த பலமொழி பேசும் மக்கள் இனம்மாறி, சூத்ரா மற்றும் பஞ்சமர் இனங்கள்-வெய்யிலாளி இனங்கள் என ஆ(க்)கிவிட்டனர்.

ஆப்ரிக்க கண்டத்தின் கருப்பின மக்கள்-வெய்யிலாளிகளும் இதில் அடங்குவர்.      ராமாயண காலத்தில் இந்தியா முழுவதும் பரவியிருந்த மனித குரங்கை ஒத்த மனிதர்களை ஆரியர்கள் முரட்டுத் தமிழர்களுக்கு எதிராக சண்டையிடப் பயிற்சி கொடுத்தனர். இந்த இனம் இப்பொழுது இந்தியாவில் அழிந்துவிட்டது.
(அ.கு தொ)
ஆணாதிக்க சமுதாயத்தில் ஆண்களுக்கு பல பெண்களை மணமுடிக்கும் பழக்கம் நீண்டகாலமாக இருந்துவந்த ஒரு மனித குணம்.இந்த குணம் ராமாயண மற்றும் மகாபாரதகாலத்திற்குப் பின் இந்து கடவுள் குணமாக மாறிவிட்டதை நாம் அறிவோம்.

(சிவன் மற்றும் கிருட்னனுக்கு இரண்டுக்கு மேற்பட்ட மனைவிகள் உள்ளதை உணர்க) 3000-ம் ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றதாக ராமாயணத்தை நம்பும் நாம்,தசரதனுக்கு பல மனைவிகள் உள்ளதாக சொல்லப்பட்டாலும் முக்கியமாக தசரதனுக்கு வாழ்க்கைப்பட்ட கோசலை மற்றும் கைகேயி என இரண்டு மனைவிகளை வைத்தே கதை புனையப்பட்டுள்ளது.) தசரதனின் முதல் மனைவி கோசலை என்பதால் அவள் மகன் ராமனுக்கு முடி சூட்டுவது அரசகுல மரபு.இந்தியாவில் முதன் முதலாக ஆரியர்களின் தலைமையில் ராமன்-சீதாகல்யாணம்  (மன்னர் குல மணமக்களுக்கு) சமத்கிருத மொழி, ஒரு   தேவ மொழி என மன்னர்களை நம்பவைத்து மந்திரங்கள் ஓதி நடத்தப்பட்டது.

இதன் பிறகுதான் நாட்டின் பிற குறு நிலமன்னர்களுக்கும் பிராமணர்கள் குழு அடங்கிய மந்திரிசபை அமைக்கப்பட்டது. மன்னர்களுக்கு அறிவுரை மற்றும் அறவுரை வழங்கும் நிலையான  அமைப்பாக மாறிவிட்டது.நாட்டின் குடி மக்களுக்கும், ‘மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என மாறிவிட்டது.  இன்றுவரை இந்நிலைதான் நீடிக்கிறது.
(அ.கு.தொ)
6- பஞ்சாங்கம்-வெய்யிலாளிகளின் வேதம்

(மன்னர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் (வெய்யிலாளிகளுக்கு) பஞ்சாங்கம் உருவாக்கப்பட்டது. இந்த பஞ்சாங்கம் வானிலிருக்கும் தேவர்களால் உருவாக்கப்பட்டு கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களால் நிர்வகிக்கப்படுவதாக மக்கள் நம்பும் துணைக் கதைகள் ஏராளமாக கட்டவிழ்த்து விடப்பட்டன.                                              கிரகங்கள் மற்றும் நட்சத்திர இட மாற்றங்களால் மனிதர்களுக்கு தோஷம் ஏற்படுவதாகவும் அதனை பிராமண புரோகிதர்களைக் கொண்டுதான் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என மன்னர்களையும் மக்களையும் நம்பவைக்கப்பட்டது.ராமாயண கால கூனிக்கும், தசரதனின் மனைவி கைகேயியையும் மயக்க,இந்த தோஷ நீக்க சடங்குகள் செய்யப்பட்டன.

கைகேயி மூலம் தசரதனை மயக்க நிலைக்கு கொண்டு வரப்பட்டது.தசரதன் ஒப்புதலோடு ராமனை, மனைவி   மற்றும் ராமனுக்குத் துணையாக லட்சுமணன் ஆகியோரை காட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 14 ஆண்டுகள் தனிமை வாழ்க்கை வாழ்ந்தால் மீண்டும் ஆட்சியில் அமரலாம் என ஆசை மனைவி கைகேயி மூலம் தசரதனை நம்பவைக்க ப்பட்டது. கண்ணில்படும் எதிரிகளையெல்லாம் வெட்டிசாய்க்கும் ஆற்றல் பெற்ற முரடனை (வீரனை?) வீழ்த்த, இந்த கண்ணுக்குப் புலப்படாத மனநிலை மாற்றக் கூடிய இந்த தோஷபரிகாரம் கைகேயிக்கு நல்ல பலனளித்தது. 

தன்மகன் பரதனை அரியணை ஏற்ற,மாபெரும் வீரனான தசரதனை வீழ்த்திய இந்த தோஷபரிகார சம்பவம் உழைக்கும் மக்களிடையே நாடு முழுக்க பரவியது. மாபெறும் வீரர்களும் தடுமாறினர் பலர் தடம் மாறினர். ஒவ்வொருகு டும்பத்திலும் பிராமணர்களின் சேவை தேவையாகிவிட்டது.
ராமனும் ராவணனும் (ரகுவம்சம்) சூரிய வர்மனின் வழித் தோன்றல்களே என்பதை அன்றய தமிழர்கள் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்தும் இன ஒற்றுமை அற்ற தமிழர்களிடம் ராமனை, ராவணனுக்கு எதிரியாக சித்தரிப்பதில் ஆரியர்கள் வெற்றிபெற்றனர்.

ஆரியர்களின் கடவுள் (விஷ்னுவை) கொள்கையை ராவணன் ஏற்க மறுத்தான்.அவன் மனதை மாற்ற முடியவில்லை அதனாலேயே ராவணனை அரக்கன் என்றனர்.தலையாட்டி ராமனை கடவுளுக்கு சமமாக ராமாயணக் கதையில் சித்தரிக்கப்பட்டான் கிருஷ்னனின் மறு அவதாரமாகவே நினைத்துக் கதைகள் ஏராளமாக எழுதப்பட்டன கதாகாலட்சேபம் நாட்டு மக்களுக்கு நடித்துக் காட்டப்பட்டது.

ஆரியர்கள் தங்கள் இனத்துப் பெண்ணான சீதையை ராமனுக்கு மண முடித்ததிலிருந்து (தமிழர்களோடு) வர்மாக்களோடு உறவுஏ ற்படுத்திக் கொண்டனர் ஒட்டு மொத்த முரட்டுத் தமிழர்களை அடக்குவதற்கு இதுமட்டுமே சிறந்தவழி என போட்ட கணக்கில் வெற்றி பெற்றனர். 
அந்த காலகட்டத்தில் இது போன்ற செயல்கள் நாட்டில் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடெங்கும் தசரதராமன் ஆதரவாளர்கள் மற்றும் தசரதராமன் எதிர்ப்பாளர்கள் என இருபிரிவுகள் உண்டாயிற்று.
அதில் ராவணன் மட்டுமே சிறந்த வீரனாக உருவெடுத்தான் அதாவது அந்நியர் (ஆரியர்) எதிர்ப்பாளனாக உருவெடுத்தான்.

புதிய சாதிகள் தோன்றுவதற்கு இந்த கலப்புகல்யாணம் ஒரு காரணமானது.பங்காளிச் சண்டைகள் உக்கிரத்துக்கு போனது.பல சாதிகள் மட்டும் தோன்றவில்லை . ‘நீ, பேசும் மொழியும் எழுத்தும் எனக்குத் தேவையில்லை’ என பல புதிய மொழிகள் தோன்றலாயிற்று.

இந்த திருமணத்திற்குப் பின் இந்திய நாட்டில் சாலிவாகன (தமிழ் இனம்) கூட்டத்தின் ரகுவம்சத்தில் கலாச்சாரப் புரட்சி ஏற்பட்டது.

மவுரியா,குப்தா,ராஜபுத்ரா,ஒய்சலா,சாளுக்கிய, காகட்யா மற்றும் களப்பிற வம்சங்கள் தோன்றி மறைந்தன.பின்னாளில் இந்தியாவில் இன்றய சாதிகள் மற்றும் அவர்கள் பேசும் மொழிகள் உருவாயின.

இதற் கெல்லாம் காரணம் அந்நிய மண்ணைச் சார்ந்த பிராமணர்களே. அத்துணை சாதிகளுக்கும் மொழி மற்றும் எழுத்து தோன்றல்களுக்கு பிராமணர்களே குருக்கள்.  ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் தானே.?இதனை அந்த கால தமிழர்கள் உணர்ந்ததாக தெரியவில்லை. இன்றும் உணரவில்லை.   நாளடைவில் சமத்கிருதமும் தமிழும் சேர்ந்து பல புதிய மொழிகளும் தோன்றலாயிற்று இந்தியாவில் இன்று நாம் காணும் பல மொழிகளுக்கும் சாதிகளுக்கும் பங்காளிச் சண்டைகளும்,இந்த கலப்பு கல்யாணம்தான் மூல வித்துவே. 

இதன்காரணமாக உறவுகள் முறிந்தது மட்டுமல்ல பல புதிய மொழிகளும் எழுத்துக்களும் உருவாகியது. ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ ஆனது போல் ஆரியர்களோடு பல குழுக்கள் சேர்ந்து பல புதிய கலப்பினங்கள் உருவாகின.அப்படி உருவனதுதான், தமிழோடு சமத்கிருதம் இணைந்த திராவிட மொழிகள் என நாம் அழைக்கும் தெலுகு,கன்னடம்,மலையாளம் போன்ற மொழிகளும் எழுத்துக்களும்.

 (அ.கு-தொ)

7-தமிழ்ச் சங்கம் மற்றும் ஆதினங்கள்

அதே காலகட்டத்தில் தென்னிந்தியாவில் (அகத்தியமா முனிவன் வழி வந்த)  வேளாளப் பெருங்குடி மக்களான சைவத் தமிழ்மரபில் வந்த பிள்ளைமார், தேசிகர், முதலியார் போன்றோர், வைணவ ஆரியர்களோடு ஒத்துபோக முடியவில்லை. ராவண வழித் தோன்றல்களே  இவர்கள் தான்.

(3அல்லது5-ம் நூற்றாண்டில் ஞான சம்பந்தர் எனும் பிராமணர் தமிழகத்தில் வட இந்திய ஜயினம் தழைத்திருந்ததை கண்டு சகிக்க முடியாமல் தமிழில் சைவத் திருமறைகளை (தேவாரம்) அப்பர் மற்றும் சுந்தரர் இயற்றிய திருவாசகம் உருவாக்கி அதை பாதுகாத்து மக்களிடையே சிவ வழிபாட்டை வலியுறுத்தும் பொறுட்டு துவக்கப்பட்டது தான் மதுரை ஆதினம்)  

இறைவழிபாட்டின் மூலம் தமிழை காப்பாற்றியவர்களும்  இவர்கள்தான். பின்னாளில் சாதிகள் தோன்றியபோது வேளாள இனம் பல ஆதினங்களை உருவாக்கி சைவத் தமிழ் இலக்கியங்களை உருவாக்கியது. அவற்றுள், தர்மாபுரம் ஆதீனம், திருவாவடுதுரை, திருப்பனந்தாள்,மைலம்,திருப்பாதிரிப்புலியூர் மற்றும் காஞ்சிபுரத்தில் இயங்கும் தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சங்கம்  போன்ற ஆதீனங்கள்.

இந்த தமிழர்களை மன (மத) மாற்றமடையச் செய்வதில் தோல்வி கண்டாலும்.ஒரு புதிய யுக்தியை கையாண்டதில் ஆரியர்கள் வெற்றி பெற்றனர்.பிழைக்க வேறுவழி தெரியவில்லை, சைவத் தமிழர்களோடு ஒத்துப் போனார்கள், சிவனை வழிபடும் சைவ பிராமணர்கள் உருவானார்கள். அதாவது ஆரியர்கள் இரண்டு வகையான இந்து மதத்தை உருவாக்கினார்கள். சைவ இந்துக்கள்,வைணவ இந்துக்கள் எனப் பிரிந்து  இன்றய நிலையை அன்றே எட்டியது). 

வெய்யிலாளி இனங்களான வன்னியகுல சத்ரியர், முக்குலத்தோர், முத்தரையர் மற்றும் ஒடுக்கப்பட்ட இனங்களான வெட்டியான், வண்ணார், அம்மட்டர் போன்ற இனங்களை அடிமைப்படுத்தி ஆள இந்த ஆதீனங்கள் பிராமணர்களோடு இணைந்தனர்.

ஆணாதிக்க சமுதாயத்தில் பிரன்மனைவியை விரும்புவது உலகம் முழுக்க உள்ள மிருக குணம். இந்த குணத்தை நெறிப்படுத்தவே மக்களுக்கு நீதி நெறிக்கதைகள் புனையப்பட்டன. இந்த மிருக குணத்திலிருந்து மனிதனை மாற்றவே உலகில் தோன்றிய அத்துணை மதங்களும் வலியுறுத்துகின்றன.

இந்தியாவில் தமிழர்களிடையே பரவியிருந்த இந்த மிருக குணத்தைப் போக்க,ராமாயண காலத்திற்கு முன்பே, ‘பிரன்மனை நோக்கா பேராண்மை வேண்டும்’ என மக்ளிடையே வலியுறுத்தப்பட்டது. எனினும் ராமன் கதைக்குப் பின்பே இந்த கொள்கை மக்களிடையே பிரபலமானது.)

ராமாயணம் தொடர்..

அழகான பெண்களையே பார்த்திராத தமிழர்களுக்கு சீதையின் வனப்பும் அழகும் பிரமிப்பூட்டியது.காட்டில் கூடாரமிட்டு ராமன், சீதை மற்றும் ராமன் தம்பி லட்சுமணன் மூவரும் வாழ்ந்த காலத்தில், ராவணன் தங்கை சூர்ப்பநகை இவர்களை கண்ணுறுகிறாள். இப்படியொரு அதிச்சியூட்டும் அழகான ஆண்களையும் பெண்ணையும் பார்த்திராத சூர்ப்பநகைக்கு திருமணமாகாத லட்சுமணனை நேசிக்க விரும்பியது.இது இயற்கையான குணம்தான்.
அ.கு-
(வயது வந்த ஆணோ அல்லது பெண்ணோ ஒருவரையொருவர் விரும்பி காதலை வெளிப்படுத்துவது என்பது மனித இயல்பு. பிடிக்கவில்லை யென்றால் பக்குவமாக பிரிந்து செல்வது நாகரிகம். சூர்ப்பநகை லட்சுமணனிடம் காதலை வெளிப்படுத்திய போது பக்குவமாக சொல்லி விலகியிருக்க வேண்டும். அதை செய்யவில்லை அந்த லட்சுமணன்.மாறாக காதையும் மூக்கையும் அறுத்தான்.

இந்த அராஜகமான ஆணாதிக்க செயலை அந்தகால பெண்ணினம் எதிர்த்ததாக ராமாயணத்தில் எழுதப்படவில்லை.மாறாக சூர்ப்பநகையின் பெண்மையை குறைகூறி எள்ளி நகையாடியது.இந்த செயலை ஒரு பெண்மையின் குற்றச் செயலாக அறம்காக்கும் வெய்யிலாளிகள் மத்தியில் நாடகமாக நடித்துக் காட்டப்பட்டது,
சூர்ப்பநகையை ஆரியர்கள்,அரக்கி என்று வர்ணித்தை வெய்யிலாளி இனம் ரசித்தது.தன்  இனப் பெண்ணை அசிங்கப்படுத்துகின்றனரே என்று எண்ணத் தோன்றவில்லை.இன்றும் யோசிக்கவில்லை.

வழிவழியாக காலம் காலமாக,தலை முறை தலை முறையாக செவிவழியாக வந்த கதைகளை மாற்றி எழுதவோ ,அல்லது மறுசிந்தனைக்கோ, முடிந்துபோன கதைக்கு தீர்ப்பு எழுதும் பக்குவம்,
சிந்தனை உள்ளம் கொண்டவனால் மட்டுமே முடியும்.அப்படி ஒரு சிந்தனை கொண்ட தமிழர்கள்  அந்நாளில் இல்லை. இப்பொழுதும் இல்லை.எனவேதான் ஆன்மீகம் இந்தியாவில் தழைத் தோங்கியது.இன்று வரை இந்த மனோ நிலைதான் மாறவே இல்லை. )

ரா.க.தொ…

ஒருவர்தன் உடன் பிறந்தவர் பாதிப்பை பார்த்தாலோ அல்லது கேட்டாலோ அவர் மனம் கொதிப்படையும். அதே நிலைதான் அன்றைய ராவணனுக்கும்.தங்கை சூர்ப்பநகையின் அறுபட்ட உடலைப் பார்த்த உடன் சீற்றம் அடைந்தான்.இது மனித இயல்பு. இந்த இயல்பான குணத்தை கொச்சைப்படுத்தி கதாசிரியர் கதை புனைந்துள்ளார்,

அதேநேரத்தில் காதலிக்கச் சொன்ன தன்னை மான பங்கப்படுத்தி உடல் உறுப்புகளை அறுத்தெரிந்த பெண்ணிடம் வீரம் காட்டிய ஆண்மையற்ற ராமலட்சுமணனைப் பாராட்டி எழுதியதின் உள் நோக்கத்தை தமிழர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை. இன்று வரை மக்கள் புரிந்து கொள்ள முயலவில்லை, விரும்பவில்லை.ராவணன் குடும்பத்தினரை மக்கள் வசைபாட செய்துவிட்டார்கள்.

சிவனை வணங்கும் சைவனான ராவண உறவினர்களை அரக்கவம்சம் என்றழைக்கப்  பட்டனர்.

(ஆ.க-தொ)
8-கம்பனால் அடிமையான தமிழினம்

கம்பன்,இவன் பிராமணர்களின் அடி வருடி, தன் இனமக்களின் குணங்களை கொச்சைப்படுத்தி புனையப்பட்ட இராமாயணக் கதையை தமிழர்களாகிய நாம் உணரவில்லை. வால்மீகி ராமாயணத்தை வரிக்குவரி உண்மையாக மொழி பெயர்க்கவில்லை; தன் கற்பனைக்கு ஏற்றவாறு பொய்கள் கலந்து கம்பராமாயணத்தை இயற்றினார்.

இந்த கதை நடந்த சுமார் 2000-ம்ஆண்டுகளுக்குப்பின்(10-ம் நூற்றாண்டு)கம்பன் காவியம் படைத்ததை படித்து இன்றும் நாம் நினைத்து நினைத்து இறும்பூதெய்துகிறோம்.

9-சீதை தீக்குளிக்க வில்லை

சீதையை கற்புக்ரசியாக அதாவது ஒருவனுக்கு ஒருத்தியாக சித்தரிக்கப்பட தமிழர்கள், விரும்புவதை கம்பன்  உணர்ந்தான். வால்மீகி ராமாயணத்தை சமத்கிருதத்தில் எழுதப்பட்டதை கம்பன் படித்து நன்கு புரிந்து கொண்டுதான் ராமாயணத்தை எழுதியிருக்க வேண்டும் என்பதை அவன் இயற்றிய கம்ப ராமாயணத்தை ஊன்றி படித்தாலே புரியும்.

‘சீதை ராவணணோடு ஓடி விட்டாள்’ என்பதை  தமிழர்களால் சீரணிக்கமுடியாது/முடியவில்லை, என்பதை கம்பன் தன் கவித்திறமையில் வெளிப்படுத்தியுள்ளான்.

 ‘ராவணன் சீதையை இழுத்துக் கொண்டு போனான்’ என்று கூட எழுத மனம் வரவில்லை கம்பனுக்கு,மாறாக,

‘சீதையை அவள் இசைவின்றி ராவணன் சிறை யெடுத்தான்’ என்று கூறுகிறான்.

ஆனால் மூலக் கதையான வால்மீகி ராமாயணத்தில்,காட்டில் ராமன் சீதை மற்றும் லட்சுமணன் வாசம் செய்யும் போது, தங்கை சூர்ப்ப நகை மூலம் ராவணன் கேள்வியுற்று, நேரில் சென்று பார்த்தபோது,சீதையின் வசீகர தோற்றத்தால் ராவணன் மதி மயக்கமுற்றான்.
அ கு-தொ

சீதையும் ராவணனோடு இசைந்தே சென்றாள் என கூறப்பட்டுள்ளதை,பெரியார் தான் எழுதி வெளியிட்ட, ‘இராமாயணக் குறிப்புகள்’ எனும் நூலில் (பெரியார் சுயமரியாதை பிரச்சார வெளியீடு) பிரதிவாதி பயங்கரம் அண்ணங்ராச்சியார், அய்யோத்திய காண்டம் 30-ம் சர்க்கம் 229-ம் பக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கிறார்.அழகிய மானை பார்த்த சீதை அதை தான் அடைய ஆசைப்பட்டாள்.மானை பிடிக்க மனமில்லா  ராமனை, ஆண்மையற்றவன் என தூற்றி மானை பிடித்து தர அனுப்புகிறாள்,லட்சுமணனையும் , ‘என்னை பெண்டாள நினைக்கிறாய?’ என ஏளனப்படுத்தி அப்புறப்படுத்துகிறாள்,
ராவணனோடு செல்லும் சூழலை சீதை உருவாக்கினாள். எனும் தொனியில் எழுதப்பட்டதை உணரலாம்.

மேலும்(சி,ஆர்.சீனிவாசய்யங்கார் வால்மீகி ராமாயண மொழி பெயர்ப்பில்,ஆரண்ய காண்டம் சர்க்கம் 45-ல் 122லிருந்து 125 பக்கங்கள் வரை சீதை, லட்சுமணனை தரக்குறைவாக மிக மோசமான கீழ்த்தரமான வார்த்தைகளை பயன் படுத்தி விரட்டியுள்ளதை தெரிவிக்கிறார்)

அதாவது சீதை பத்தினி குணமுடைய பெண்டீரின் குணங்களை பெற்றிருக்கவில்லை என தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. சர்க்கம் 55 ல்,155 பக்கத்தில்  ராவணனும் சீதையும் நல்ல உடலுறவு இருந்ததாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் ராமனை ‘ஆரியபுத்ரா’ என சீதை விளிப்பதாக சர்க்கம் 14-ல்பக்கம் 484ல் குறிப்பிடப்பட்டதை ச,ஆர் சீனிவாசய்யங்கார் மொழி பெயர்த்துள்ளதாக பெரியார் விவரிக்கிறார். தமிழனாகிய ரகுவர்மனின் பேரனை,சீதை ஏன் அவ்வாறு அழைக்க வேண்டும்?

ஆரியர்கள் வீரமற்றவர்கள்.சத்திரியனுக்கு வேட்டையாடும் தைரியம் வேண்டும்,மானை வேட்டையாட ராமன் தயங்கியதால் அவனை உசுப்பேற்ற அந்த வார்த்தையை பிரயோகிக்கிறாள். இங்குதான் வரலாற்று ஆசிரியர்கள் தடம் புரள்கின்றனர், ராமன் தமிழர் குலமான முரட்டு ருத்ர வர்மன் வம்சத்தில் தோன்றியவன்.
பெண பித்தனான தசரதனை வைணவத்திற்கு மன மற்றம் அடையச் செய்வதில் ஆரியர்களின் முயற்சி வென்றது. அதனால் அப்பா வழியை ராமனும் அவன் சுற்றமும் நட்பும் ஆரியர்களை ஆதரித்த பாவத்தால்,ராமனை, ‘ஆரியபுத்ரன்’ என பு(இ)கழப்பட்டான் .அவ்வளவே!

மேலும் ராவணன் பாதுகாப்பில்,சீதை இருந்த போது (சர்கம் 117-பக்கம் 487-ல் ‘துஷ்ட்டனான ராவணன் வீட்டில் நீ இருந்த தால் உன் நடத்தை பற்றி சந்தேகம் எனக்குள்ளது’ என ராமன்       சீதையைப் பார்த்து கூறுகிறான்.

பொதுவாக பெண்களுக்கு உள்ள குணங்களைப் பெற்றவள்தான் சீதை என வால்மீகி ராமயணம் புனையப் பட்டுள்ளதை பிராமணர்கள் மொழி பெயர்ப்பிலிருந்து உணரலாம். ஆனால் தமிழனான கம்பன் எதற்காக சீதையை கற்புள்ளவள் என பொய்த்துக் கூறுகிறான் என தெரியவில்லை. ஆனால் சீதையின் வனப்பையும், அழகையும் வால்மீகியார் வர்ணித்துள்ளதை கம்பன் உள் வாங்கி சீதையின் அங்க அவையங்களை, அங்கங்களின் அசைவையும், வனப்பையும் வர்ணிக்கும் போது படிப்பவர்கள் மனதை கொள்ளை கொள்ளும்,காம இச்சையை தூண்டுமளவுக்கு எழுதியுள்ளதை அறிஞர் அண்ணா தன், ‘கம்பரசம்’ எனும் நூலில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இப்பொழுது நமக்கு சீதை கற்புள்ளவளா? இல்லையா?அல்லது தன் கணவனே அல்லாமல் மற்ற ஆண் மகனுடன் இசைவுற்று உடலுறவு கொண்டவளா? அல்லது ராவணன் பலவந்தப்படுத்தி சீதையைப் புணர்ந்தானா? என்பது முக்கியமில்லை.நம்மை பொருத்தவரை ‘ஒரு பெண் எனப்பட்டவள் பெண்தான்’கற்பு விஷயத்தில் ஆணுக்கொரு நீயாயம், பெண்ணுக்கொரு நியாயம் இல்லை.இதை நம் சமுக மக்கள் மட்டுமல்ல உலகில் பெரும்பாலான ஆண்கள் இதை உணர்ந்ததாக தெரியவில்லை!

ஆசிரியர் கருத்து…

(அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் மட்டு மல்ல அதன் தாயகங்களான இங்கிலாந்து, பிரான்சு,ஜெர்மன்,ஸ்பெயின்,போர்ச்சுகல்,நார்வேஸ்வீடன்,இத்தாலி மற்றும் கிரீஸ் போன்ற  நாகரிகம் வளர்ந்த நாடுகளில் பெண்களின் உணர்வுகள் ஆண்களால் மதிக்கப் படுகின்றன, என்பதற்கு சான்றுகள் என்ன தெரியுமா? திருமணம் நிகழ்ந்த சில நாட்களில் கணவனும் மனைவியும் சுமுகமாக பிரிந்து வாழும் வாழ்க்கைதான்.

பழமை வாதிகள் வாழும் நம் நாட்டிலும் சரி, ஆசியா நாடுகளிலும் சரி ஆண்கள் எந்த அடாவடித் தனமும் செய்யலாம்,பெண்கள் ஆண்களுக்கு அடிமை யாகவே வாழ வேண்டும் என்பது பழக்கமாகி விட்டது. அதை மீறும் பெண்களை கவுரவக் கொலை செய்யப்படுகின்றனர்.
இது போன்று கவுரவக் கொலைகள்,மேலே குறிப்பிடப்பட்ட மேலைநாடுகளில் மிக மிக சொற்ப அளவே நிகழ்கிறது)

அடுத்தவன் மனைவியை இன்னொரு ஆண்மகன் அபகரிப்பது தவறு.அதற்கு மரண தண்டனை கொடுத்தாலும் தகும் என அக்கால காட்டுமிராண்டி மக்களின் பழக்கத்துக்கு ஏற்றாற் போல் இந்த ராமாயணம் அமைந்துள்ளது.

இன்று அடுத்தவன் மனவியை அபகரித்தாலோ அல்லது அடுத்தவன் மனைவி இன்னொரு ஆண்மகனிடம் ஆசைபட்டு போனாலோ, அல்லது கற்பழித்தாலோ மரண தண்டனை என்பது உலகில் எந்த நாட்டிலும் சட்டமாக்கப் படவில்லை.மாறாக இந்த குற்றங்களுக்கு எல்லாம் அதிகப்பட்ச தண்டனையாக 10ஆண்டு தண்டனைகள் வழங்க சட்டமாக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தவறுகளுக்கு தண்டனை வழங்குவதை விட தவறு நடக்காத சமுதாயம் உருவாக்க இன்னும் இக்கால சமுக பழக்கவழக்கங்கள் அமையவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்

அந்த காலத்திலே மனைவி கணவனிடம் நேர்மையாக நடக்க வேண்டும். என வர்மா மற்றும் சேனாதிகளிடம் குல வழக்காக இருந்தது. அவ்வாறு இல்லாமல் கணவன் மனைவியை சந்தேகித்தால் அப்படி இல்லை என நிருபிக்க வேண்டிய கடமை மனைவிக்கு உண்டு.இது தலைமுறை,தலைமுறையாக பெண் இனம் பாதுகாத்துவந்த ரத்தத்தில் ஊரிய குணம். தான் நிரபராதி என்பதை நிருபிக்க, பெண்ணுக்கு அளிக்கப்பட்ட தண்டனையோ அல்லது பெண் இனமே விரும்பி விதித்துக் கொண்ட தண்டனையோ,தெரியாது

இன்றும் வட இந்தியாவின் ராஜஸ்தான் மத்திய பிரதேசம் போன்ற தேசங்களில் வாழும் பெண் மக்கள்,தாங்கள் நிரபராதி என நிருபிக்க, எரியும் எண்ணையில் கை விடுவது, கோயிலில் எரியும் கற்பூரத்தை கையில் ஏந்துவது,தீமூட்டி அதில் நடப்பது,அல்லது தீயிலே குதிப்பது, போன்ற காட்டுமிராண்டித் தனமான செயல்களால் பெண் இனம் சீரழிந்துள்ளது. அதில் ஒரு பழக்கமான ‘தீ யிட்டு அதில் குதித்து உயிருடன் வந்தால்,நான் உன்னை என் பத்தினி தெய்வமாக ஏற்றுக் கொள்வேன்’  என சீதையைப் பார்த்து ராமன் கூறுகிறான்.

இதுவரை ராமயணம் கூறும் கதை நம்பும் படி உள்ளது.ஆனால் ‘தீக்குளித்து உயிர்த்து வந்தாள்’ என்பது கட்டுக்கதை .உண்மையில் இதுதான் நடந்தது; அல்லது நடந்திருக்க வேண்டும்.இந்த அளவுக்கு சந்தேக புத்தி உள்ளவனிடம் வாழ்வதை விட,நான் காட்டுக்கே போக்றேன்; அங்கே 12 வருடம் பழகிய மக்களோடு வாழ்ந்து கொள்கிறேன். என விடை பெறுக்றாள். அப்பொழுது ராவணனின் கரு சீதையின் வயிற்றில் உள்ளதை,அவள் உணர்கிறாள்.
ராமனோடு வாழ்ந்த 12 ஆண்டுகாலம் சீதைக்கு குழந்தை உண்டாக வில்லை,சீதையும் ராமனை சில தருணங்களில் ஆண்மையற்றவன்,பேடி என வசை பாடுகிறாள்.

ராவணனோடு இருந்த காலத்தில் தான் சீதைக்கு கரு தரிக்க முடிந்ததை வால் மீகி ராமயணத்தை படித்தவர்கள் உணரலாம்; காட்டில் அவளுக்கு லவ குச என இரட்டை குழந்தைகள் பிறந்ததையும், பின் னாளில் அவர்கள் இருவரும் ராமனை எதிர்த்து போரிட்டதையும் மக்கள் அறிவர்.  ஆனால் கம்பனுக்கு ஏனோ சீதையை அசிங்கப்படுத்த எண்ணமில்லை. அறம்  காத்த தமிழினம் அல்லவா? பெண்மையை பூஜித்தது.இன்றும் பூஜிக்கிறது.          

கதையை மாற்றி எழுதி தான் சார்ந்த அறம் காத்த இனத்தவன்(ராவணன்) தவறு செய்ததாக திருத்தி எழுதி நடத்தை கெட்ட சீதையை பத்தினி தெய்வமாக வருணித்து சாகாவரம் பெறச் செய்தான்.   

ராமன்களும் ராவணன்களும் ஒரே வம்சத்தின் இருவேறு குணங்களையுடைய முரடன்கள் (வீரர்கள்?)என்பதை இன்னமும் நம்ஊர் மக்கள் உணரவில்லை. வட இந்தியாவில் இதை எடுத்துச் சொல்ல ஆளில்லை.இதனால் அங்கு ஆண்டுதோறும் ‘ராம் லீலா’ எனும் ராவண வதை படலம் அதாவது ராவண உருவத்தை தீயிட்டு கொளுத்துவது ஒரு விழாவாக நடைபெறுகிறது.
உலக மக்கள் இனங்களில் தமிழர்கள் மட்டுமே அறம்காத்தவர்கள்  என்பதற்கு இந்த ராம் லீலா நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. அரசியல் வாதிகள் பாமர மக்களை இன வேறுபாடு காண்பதற்காக ராம் லீலா நிகழ்ச்சி நடத்த கூடாது என்பார்கள், ஆனால் அது ஒரு அரசு நிகழ்ச்சியாக அங்கிகரிக்கப் பட்டுவிட்டது.

தன் இனத்தின் முன்னோடி அந்நியர்களின் சூழ்ச்சியால் கொல்லப்படுவது உறுதியாகி விட்ட நிலையிலும் போர்க்களத்தில் பின் வாங்கவில்லை.உயிரைக் காப்பாற்றிக் கொள்ள புறமுதுகிட்டு ஓட வில்லை. போர்க்களத்தில் நிராயுபாணியாக ராவணன் நிற்கும் போது, ‘நாளை போர்கள தளவாடங்களோடு வா,உன்னோடு போரிடுகிறேன்’ என ஒரு வீரனுக்கு இலக்கணமாக ராமன் சொன்ன போது, ராவணன் தனித்தே போர்க் களத்திற்கு வருகிறான்.

உலகத்தில் எந்த மனித இனத்திற்கும் இது போன்ற போர் குணம் அமையப் பெறவில்லை. (உலக வரலாறு படித்தவர்கள் இதை நன்கு உணர்வார்கள்.மனிதர்களோடு மனிதர்கள் போர் புரிவது ஒரு கொலைவெறிக் கலையாக உலகம் முழுக்க ஏற்றுக் கொள்ளப்பட்ட காட்டு மிராண்டிக் கொள்கை.இன்றும் கூட மனிதர்கள் மனித நேயத்தோடு நாகரிகமாக வாழக் கற்றுக் கொள்ளவில்லை.)

தன் உடன் பிறந்தவனே (விபிஷ்னன்) அண்ணனை எதிரிக்கு காட்டிக் கொடுக்கிறான், காரணம் அண்ணன் பிறன் மனைவியை சிறை எடுத்தது தவறு என்பது விபிஷ்னனின் வாதம்,சிறை எடுத்தது அறவழி தவறிய செயல் தானே ஒழிய அதற்கு மரண தண்டனை என்பது மனித தன்மை அற்றது.ராவணன் நினைத்திருந்தால் சீதையின் கற்பை சூறையாடி யிருக்க முடியும்.யாரும் தடுக்க ஆளில்லை.

ஒரு பெண் தன்னை தானே விரும்பட்டும்,மனம் கனியும் வரை காத்திருப்போம் என ஒரு சுத்த ஆண்மகனுக்கு உரிய நற்பண்புகளோடு காத்திருந்தான், இந்த அறம் காக்கும் இன வழியில் வந்த ஆண்மகன். ஆனால் அன்றே நம் தமிழினம் அறம் தவறியவனுக்கு, மரண தண்டனை தான் தீர்வு என்றது.    நம் ஊரில் நம் மக்களுக்கு நமது பேரறிஞர் அண்ணா அழகாக அன்றே எடுத்துச் சொன்னார் அது ஏனோ மக்களிடம் எடுபடாமல் போய்விட்டது.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்தானே?நாடோடிகளாகத் திரிந்த ஆரியர்களின் கதாகாலட்சேபம் கூத்தாடிகளின் மனநிலைக்கு, கதை கேட்கும் மக்கள் மனங்களை மாற்றி விட்டனர். இந்த கதை மக்களின் வாழ்க்கை வழிகாட்டும் நன்னூலாகிவிட்டது.  அண்ணன் சீற்றம் அடைந்ததை கண்ணுற்ற சூர்ப்பநகை, காட்டில் இரண்டு ஆண்களோடு கூடாரமிட்டிருக்கும் சீதையின் அழகை வர்ணிக்கிறாள். அண்ணனின் சீற்றத்தை காமமாக மாற்றுகிறாள்.
கோவமும் காமமும் ஆண் வர்கத்தின் இரண்டு கண்கள் போன்றது. மனிதர்களிடையே இருக்கும் மிருக உணர்வுகள்.

சீதை ராமனைத் திருமணம் புரிந்தவள் என ராவணனுக்கு சொல்லவில்லை. தெரிந்தால்தானே சொல்வதற்கு? இரண்டு ஆண்களோடு ஒரு பெண் தங்கியிருப்பது அநாகரிகசெயல் என ராவணனை நினைக்கச் செய்தாள். ராவணன் பலம் பொருந்திய அரசன்.அவனை எதிர்க்கும் ஆற்றல் அவனியில் எவருக்கும் இல்லை.அந்த சூழலில் அவனுடைய எல்லையில் இரண்டு ஆண்களுடன் ஒருபேரழகி தங்கியிருப்பதை மட்டும் தெரிவிக்கவில்லை.

சீதையின் அங்க அவையங்களை,ஒரு பெண்ணான தன் தங்கை ஒரு பெண்ணை வர்ணிப்பது ராவணனுக்கு போதை ஏற்றியது,  அதுவும் அதுவரை காணாத பேரழகியை ஒரு ஆண்மகன் அடைய நினைப்பது மனித இயல்புதானே?

அறம்காத்த தமிழினம் இங்குதான் நடுநிலை வகிக்கிறது மனிதர்களின் ஆசைகளுக்கும் அதுவும் அதிக ஆசைகளால் எல்லை மீறும் செயல்களுக்கும் மனிதனின் முற்பிறவிசெய்த பலன் என கதை கேட்ட பாமரமக்களை, நம்பவைத்தனர்.மனிதர்களுக்கு ஏழு பிறவிகள் உண்டு என கதாகாலட்சேபம் மூலம் நம்பவைத்தனர்.
இது அறிவியலுக்கு அப்பாற்பட்ட அருவ சிந்தனை என்பதை அடிமை இனமான தமிழர்கள் உணரவில்லை. இன்றும் உணரவில்லை.

இப்பிறவியில் ஒரு மனிதன்படும் கஷ்ட்டங்களுக்கும், இன்பங்களுக்கும் முற்பிறவியில் மனிதனும் அவன் முன்னோர்களும் செய்த பாவ புண்ணியங்கள்தான் காரணம் என மக்களை அமைதிப்படுத்தினர்

அதாவது விதியே(ஊழ் வினை) காரணம் என ராமாயணக் கதை மூலம் பிராமணர்கள் பலக் குழுக்களாக பிரிந்து மக்களுக்கு நாடுமுழுக்க கதாகாலட்சேபம் மூலம் நம்பவைத்தனர். 

ராவணன் நினைத்திருந்தால் தங்கையை மானபங்கப்படுத்திய, காட்டில் அனாதைகளாக திரிந்த ராமலட்சுமணனை வெட்டி சாய்த்திருக்கலாம். சூர்ப்பநகையும் அவ்வாறு செய்ய சொல்லவில்லை.

வன்முறையை பயன்படுத்தி சீதையை வன்புணர்ச்சி செய்திருக்கலாம் அதுபோன்ற அறம்தவறிய செயலை ராவணன் செய்யவில்லை. இது போன்ற அரிய குண சீலனைப் பெற்ற ராவணனின் தாயை ராமாயணம் இயற்றிய வால்மீகியோ அல்லது கம்பனோ தங்கள் இயற்றிய நூலில் பாராட்டி குறிப்பிடப்படவில்லை

10- ராவண்ணின் அரியவகை மனித குணம்

(இந்த அரிய வகை மனித குணத்தை தமிழ்மக்களுக்கு எடுத்துரைக்க அந்நாளில் ஆளில்லை. இன்று இதை எடுத்துச் சொன்னாலும் கேட்க ஆளில்லை வாசகர்கள்  ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும், அந்நாளில் இந்தியாவில் ஆண்ட அரசர்களுக்கு, ஆரியர்களுக்கு முன் அமைச்சரவை அல்லது அலோசனைசபை என்று ஒன்று கிடையாது. ராவணனுக்கும் இதே நிலைதான்.

அரசர்களையும் குடிமக்களையும் கண்ணுக்கு புலப்படாத சாத்தான்கள் ஆளுகின்றன. கடவுளை வழிபடுவதன் மூலம் மட்டுமே சாத்தான்களை அடக்க முடியும், அதுவும் பிராமணர்களை அர்ச்சகர்களாகவும் புரோகிதர்களாகவும் தமிழர்கள் நியமித்துக் கொள்ள வேண்டும் என அறிவுருத்தப்பட்டது.

ராவணன் இந்த யோசனையை நிராகரித்தான். தமிழர்கள் மற்ற மனித இனங்களுக்கு அடிமையானது இப்படித்தான்.தமிழர்களுக்கே உரிய இரக்க (அறம்சார்ந்த) குணத்தை, ஆரியர்கள் தங்களின் அனுதாப குணமாக மாற்றிக் கொண்டனர்.)

இந்தியாவில் ராமாயணகாலத்தில் வாழ்ந்த ஒரு பண்பட்ட,ஈவு இரக்கமுள்ள இளிச்சவாய்த் தமிழினத்தைப் பார்த்த ஆரியர்களுக்கு தமிழர்கள்தான் தங்களுக்கு சரியான பாதுகாவலர்கள் என பலமாக நம்பினர்.இன்றும் நம்புகின்றனர்.தன் இனத்து மக்களையே தங்களுக்கு எதிரியாக திருப்பட்டதை உணராத-அறியாத அப்பாவிகளாக தமிழர்கள் இன்றும் வாழ்கின்றனர். ராமாயணக் கதையிலிருந்து இந்த உண்மையை நாம் நன்கு உணரலாம்.தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கு மேலும் ஒருராமாயண எடுத்துக்காட்டு. இதோ.

தன் தங்கையின் பாதிப்பை உணர்ந்த ராவணன் தங்கையின் வன்முறையற்ற யோசனையை ராவணன் ஏற்றுக் கொண்டான்.

காட்டில் சீதையை பிற ஆண்களின் கண்படாமல், ராமனும் லட்சுமணனும் பாதுகாத்து வருவதை தெரிந்து கொண்டான். இந்த பாதுகாப்பு வளயத்தை உடைத்து சீதையை எப்படி கடத்துவது என்பது தான் ராவணின் திட்டம் அதாவது கத்தி இன்றி ரத்த இன்றி வன்முறையற்ற அறவழி தவறிய செயல்,

தவறு செய்யும் மக்களை அரசன் தண்டிக்கலாம் அரசன் செய்யும் தவறுகளுக்கு தண்டனையை யார் தருவது?சட்டத்தில் இடமில்லை என சாணக்கியன் சொன்னது தானே?தமிழ் மன்னனுக்கு இது பொருந்தாதா? கதை கேட்ட அன்றய மக்களும் கேட்கவில்லை,இன்றும் சிந்திக்கவில்லை.


(அ.கு-தொ)
(உலகில் பெரும்பாலான மனிதர்கள், இருப்பவனிடம் இருக்கும் பொருளை இல்லாதவன் அடைய இரண்டு வகையான முறைகளை கையாளுவர்.

I)-வன்முறை,  இதற்கு விளக்கம் தேவையில்லை.

II)-ஏமாற்றி அடைதல்,இதில் இரண்டு வகைகள் உண்டு

1-இருப்பவன் பொருளுக்கு மதிப்பு உண்டாக்கி அதற்கு விலை கொடுத்து அடைதல்.இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொழிலாகவே உலகெங்கும் நடக்கிறது.

2-பொருள் வைத்திருப்பவன் தூங்கும் போது அல்லது அவனுடன் உறவாடி நயவஞ்சகமாக அல்லது குதுகலமாக பேசி பொருளை கவர்வது.  இது அறம் தவறிய செயல் எனவே தங்கள் வேதங்களில்  எழுதிக் கொண்டான். ஆனால் எழுதியவன் பின் பற்றுவது இல்லை.

ஒரு மனிதனிடம் இருக்கும் பொருளை வன்முறையை பயன்படுத்திக் கொள்ளை அடிப்பது அரக்க குணம் அல்லது ராட்சஷகுணம் என கூறப்பட்டது.மக்களும் அவ்வாரே நம்பினர்.

ஆனால் இல்லாத ஒன்றை இருப்பதாக மக்களை (வெய்யலாளியை) நம்பவைத்து உழைத்து சம்பாதித்த உணவுப் பொருளுக்கு விலைவைத்து- செப்பு வில்லைகளை(பணம்-காசு-துட்டு) கொடுத்து உணவு பொருளை அபகரிப்பது எந்தவகையில் நியாயம்?அந்த செப்பு வில்லைகள் மீண்டும் ஏமாற்றியவன் கைக்கே வருகிறதே அது எவ்வளவு பெரிய மோசடி!?

(இதையெல்லாம் கவனித்த புத்தர் மனிதன் படும் இன்ப துன்பங்களுக்கு காரணம் பூர்வ ஜென்ம பலன் இல்லை. மனிதனின் அளவு கடந்த ஆசைகளே காரணம் என்றார்.அதாவது ஆசையே துன்பத்திற்கு காரணம் எனும் சுயசிந்தனை சித்தாந்தத்தை உருவாக்கினார்.)

பெண்களுக்கு வரியவர்களை கண்டால் உதவி செய்யும் குணம் உண்டு என்பதை ராவணன் தெரிந்து வைத்திருந்தான். தனக்கு இருக்கும் செல்வாக்காலும் ஆற்றலாலும் சீதையின் பாதுகாப்பு வளையத்திலிருந்து ராமலட்சுமணனை அப்புறப்படுத்தினான். ராவணன் நெருங்கி வருவதை கண்ணுற்ற சீதை அலறினாள்.

(இது கம்பன் கற்பனை,வால்மீகி ராமாயணத்தில் ராவணனை சீதை இசைவுடன் வரவேற்றதாகவே எழுதியுள்ளான்)

அந்த நேரத்தில் மட்டுமல்ல ராவணன் எப்பொழுதுமே மிகச் சிறந்த ஆண்மகன் என்பதை நிருபித்தான் ஆம் ராவணன் சீதையை தொடவில்லை.
பெண் விரும்பாமல் ஒரு ஆண் பெண்ணை தொடக் கூடாது,எனும் அறவழி சிந்தனை உடையவன்.

இதுதான் அறம் .இதுதான் தர்மம்.இதுதான் உலகம் ஏற்றுக் கொண்ட நியதி.இதை ராவணன் சரியாக கடைபிடித்தான். ராவணன் இந்த அறவழிதவறிய செயலை செய்யவில்லை. சீதையை தொடாமல் சிறையெடுத்தான். நாளடைவில் சீதை மனம் மாறுவாள் என்கிற அறவழியில் சிந்தித்தான் செயல்பட்டான். சிறைவைத்த பிறகுதான் சீதை திருமணமானவள் என்பதை தெரிந்து கொண்டான்.மனம் வருந்தினான். சீதையை திருப்பி அனுப்பும் வழிதான் தெரியவில்லை.

அந்நாளில் இந்தியாவில் ஆரியர்களின் வருகைக்கு முன் இருந்த அரசர்களுக்கு அமைச்சரவை அல்லது  ஆலோசனை சபை என்று இருந்தது இல்லை.அவரவர் குடும்ப உறுப்பினர்களின் யோசனை கேட்டே அரசர்கள் ஆட்சி செய்தனர்.ராவணன் காலஆட்சியும் அவ்வாரே இருந்தது என்பதற்கு வால்மீகிராமாயணம் ஒரு எடுத்துக் காட்டு.
                                           
ராவணன் துணிந்து இறங்கி செயலில் ஈடுபட்டால் யாருடைய மறுசிந்தனைக்கும் தன்செவி சாய்க்கமாட்டான் என்பதற்கு சடாயு சம்பவம் ஒரு மேற்கோள்.சீதையை சிறை எடுத்ததைக் கண்ணுற்ற சடாயு என்கிற பெரிய மனிதர் ராவணனுக்கு அறிவுரை கூறமுற்படுகிறார்.ஒரு பெண்ணை சிறை எடுப்பது ஒரு வீரனுக்கு அழகல்ல என கூறுகிறார் .

ஒரு ஆண், தனக்கு கிடைத்த பெண்ணை அனுபவிக்கும் முன் என்ன மனநிலையில் இருப்பான் என்பது யாவரும் அறிந்ததே.அதே குதுகல நிலையில் ராவணன் இருக்கும் போது சடாயுவின் அறிவுரை எரிச்சலைத் தந்தது.மீண்டும் மீண்டும் அறிவரை சொல்லும் போது கோவத்தின் உச்சிக்கே சென்ற ராவணன் சடாயுவை வெட்டி சாய்த்தான்.

அரசனாகிய ராவணனனுக்கு இது அறம் தவறிய செயல் என்று உணர முடியவில்லை.மாறாக பிராமனர்கள், ஒட்டு மொத்த தமிழர்களையும் அரக்கர்கள் என்று கூறவில்லை.

இங்குதான் தமிழர்களின் அரச தர்மத்தையும் தமிழர்களையும் விதம் பிரித்துக் கதாகாலட்சேபம் செய்து வெற்றி பெற்றனர்–இன்றும் வெற்றி பெறுகின்றனர். ராவணனையும் ராவணனுக்கு பரிந்து பேசியவர்களையும் அரக்கர்கள் அல்லது ராட்ச வம்சத்தினர் என்று அழைக்கப்பட்டனர்.பிராமணர்களை ஆதரித்த மன்னர்களை அல்லது மக்களை ஷத்ரியர் என்றழைத்தனர்.இன்று வரைஇதே நிலை தான் நீடிக்கிறது.

சீதையை காணவில்லை. அவளைத் தேடும்பணியில் ராமனும் அவனோடு லட்சுமணன் மற்றும் அவர்களின் அனுதாபிகளான தமிழர்களோடு (மனித குரங்குகளாம்-அனுமன்கள்) காட்டில் திரிந்தனர். அந்நேரத்தில் ராமனுக்கு மேலும் பல குரவர்களின் நட்பு கிடைத்தது.
வாலி அவன் தம்பிகளான குகன், சுக்ரீவன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.மனைவியை இழந்தராமனுக்கு இவர்களின் நட்பு சற்று ஆறுதலைத் தந்தது. காரணம் இவர்களும் சேர்ந்து சீதையை தேடினார்கள்.

அந்தகால கட்டத்தில் வாலியின் குடும்பத்தில் பிரச்சினை இருந்தது.வாலி சர்வபலம் பொருந்திய மாவீரன்.வாலியின் பலத்திற்கு முன்னால் நிற்பவர்கள் எவரையும் (எதிரி என்கிற நிலையில்) பலமிழக்கச் செய்யும் ஆற்றல் படைத்தவன்.

வாலியின் பரந்த மார்பும் திரண்ட தோள்களும் பெண்களை  கவரச் செய்யும் தோற்றம்.வாலியின் தம்பி மனைவிகள் வாலியிடம் தஞ்சமடைந்தனர். ராமனின் தோற்றத்தில் மயங்கிய வாலியின் தம்பிகள்,அண்ணன் வாலியின் அறம் தவறிய செயல்களைப் பற்றி ராமனிடம் முறையிட்டனர்.தம்பிகளிடம் இருந்து அபகரித்த மனைவிகளை திரும்ப அவர்களிடமே ஒப்படைக்க வாலியிடம் ராமன் வற்புறுத்துகிறான். 

ராமனின் நடுவர் மன்ற தீர்ப்பை வாலி ஏற்றுக் கொள்ளவில்லை. ‘இது எங்கள் குடும்ப விவகாரம், இதில் நீங்கள் தலையிட வேண்டாம்’ என வாலி, ராமனிடம் வாதம் செய்தான்.  இவனிடம் பேசி பலன் இல்லை. இவனை மறைந்திருந்தே கொல்வது மட்டுமே பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என ராமன் திட்டம் தீட்டினான்.
மனைவி பிரிந்த சோகத்தில் இருக்கும் ராமனின் மன நிலையை போன்று தான் வாலியின் தம்பிக்கும் இருக்கும் என நினைத்தான். தன் பேச்சை கேட்காத வாலியை வதம் செய்வது தான் சிறந்தவழி என ராமன் தீர்மானித்தான். 

(திருமண வைபவம் என்பது நாகரிக மனிதன் வகுத்துக் கொண்ட வாழ்வியல் தொடர்பான பண்பாடு.திருமணமான ஆணோ அல்லது பெண்ணோ உடல் உறவுகளை மாற்றிக் கொள்வதை தமிழ்ப் பண்பாட்டில் களவொழுக்கம் எனும் இலக்கண வரையரையில் வருகிறது.

உலகில் உள்ள அனைத்து வகையான மனித இனங்களும் திருமண பந்தத்தை ஒரு புனிதமான உறவாக கருதுகிறது. இது மனித நாகரிகத்தின் உச்சகட்ட வெளிப்பாடு. திருணத்திற்குப் பின் நடக்கும் இணையரின் பிரச்சினைகளை ஊர்ப்பஞ்சாயித்து மூலம் தீர்த்துக் கொள்வர்.இது மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்தே இருக்கும் ஒரு வாழ்வியல் பிரச்சினை. இதற்கு மரண தண்டனை என்பது தீர்வாகாது.மனித நாகரிகத்தில் மனிதர்கள் செய்யும் அடாத செயல்களுக்கு மரணதண்டனை என்பது அநாகரிக செயல்.

உணர்ச்சி வேகத்தில் நடக்கும் கொலைகளுக்குக் கூட மரண தண்டனை என்பது தீர்வாகாது. இது மேலும் தவறு செய்ய வழி வகுக்கும். குற்றம் புரிந்தவர்கள் இயற்கையாக சாகும் முன் மனம் திருந்தும் தண்டனைகள் வழங்கப் பட வேண்டும்.
இது இன்றய காலகட்டத்தில் நிலவும் அதிகபட்ச நாகரிக சிந்தனை.

ஆனால் அந்நாளில் (ராமாயண காலத்தில்) சிறு தவறுகளுக்கும் மரண தண்டனை போன்ற கொடிய தண்டனை வழங்கப்பட்டதை ராமாயண காலத்திற்குப் பின் நடந்த உலக வரலாறுகள் நமக்கு உணர்த்துகின்றன) 

ராமன், வாலியை நேருக்கு நேர் நின்று சண்டையிட்டு வெற்றி பெற முடியாது என உணர்ந்தான்.  நடுவராக இருந்து பிரச்சினைக்கு தீர்வு காணும் இடத்தில் உள்ள ராமன், மத்தியஸ்த்திற்கு வந்தவர்களை கொல்வது நியாயமாகாது என்பது தெரியும்.
(அகு-தொ)    
11-குடிகார ராமன்(இதன் தொடர்ச்சியை அ.கா.வ -3 ல் காணவும்)

No comments: