சடங்குகள் அறிவியல் பூர்வமானதா?
சடங்குகள்
காட்டுமிராண்டித்தனமானது. உலகெங்கும் உள்ள மக்கள் தங்கள் வாழ்நாளை மகிழ்ச்சிகரமாக
மாற்றி வாழ ஆசைப்படுபவர்கள்தான். இதற்கு மூலதனங்கள் இரண்டு மட்டுமே, ஒன்று உழைப்பு மற்றொன்று உடல்
உழைப்பு
உடலைச் சார்ந்தது;
உடல்
மனதைச் சார்ந்தது.
மனிதனின்
உடலும் மனதும் உலகில் பெரும்பங்கு வகிக்கின்றது.
உடல்
பருப்பொருள்.
மனம்
அருவமானது,ஆனால் பலம் வாய்ந்தது.
இந்த
உண்மையை பல மதங்கள் தங்கள் வேத நூல்கள் மூலம் விளக்கியுள்ளன.
அறிவியல்
வேறு,ஆன்மீகம் வேறு. இருவேறு கோட்பாடுகளும் என்றுமே இணையாது.
அறிவியல்
பருப் பொருளைக் கொண்டது. சந்தேகங்களை களையக்கூடியது.
பிரபஞ்ச
கோட்பாட்டுக்கு(பேரண்ட கொள்கைக்கு) அப்பாற்பட்டது.
இங்குதான்
ஆன்மீகம் நுழைகிறது.எப்பொழுதோ நுழைந்து விட்டது.மனிதனோடு- மனதோடு
இழைந்து,இயங்குகிறது.இதனால் மனிதன் வாழ்வில் சடங்குகள் அதிகமாகிவிட்டது.
சூரியக்குடும்பத்தில்
கோள்கள் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு
சூரியனைச் சுற்றுகிறது.
அறிவியல்
கோட்பாட்டின் படி ஒரு பொருள்(கோள்) இயங்க ஒரு விசை தேவைப்படுகிறது.இந்த கோள்கள்(பூமி,சுக்ரன்,புதன்,செவ்வாய்,வியாழன்,சனி
போன்ற கிரகம்) இயக்கம் தான் கடவுளால்
நடக்கிறது என்பது ஆன்மீக வாதிகளின் கொள்கை.
கோள்கள்
நிரந்தரமானது. கோள்கள் மீது இயங்கும் உயிர்ப்பொருள் நிரந்தரமற்றது.
அழியக்கூடியது.ஆனால் மீண்டும் வளரக்கூடியது. கோள்கள் இயங்குவதும்,பூமி மீது
உயினங்கள் தோன்றுவதும் அழிவதும் புரியாத
புதிராக உள்ளது.
உயிரினங்களில்
மனித இனம் அபூர்வமானது,அதிசயமானது. மனிதர்கள் பிறப்பதும் இறப்பதும் இயற்கை
என்றாலும் அதில் மிருக குணங்களிலிருந்து வேறுபடும் பேச்சு,சிந்தனை,சிரிப்பு,அழுகை
போன்ற உணர்வுகள் மனிதனாக்குகிறது.
பூமியில்,
மனிதன் வாழ்நாளை அர்த்தமுள்ளதாக்குகிறது.மனித மனம் வாழ்வில் அர்த்தம் தேடுகிறது.
மனிதனுக்கு
ஏழுபிறவிகள்,ஏழு உலகங்கள் வாழ்க்கை உள்ளது
என காணமுடியாத உணரமுடியாத கற்பனைகளுக்கு மனதை ஈடுபடுத்தி மனம் போன போக்கில்
கதைகளை புனையவிட்டனர்.
மனித
பிறவியின் மூலத்தையும் உலகின் - பிறப்பின் மூலத்தையும் மனித மனம் அறிய
முற்படுகிறது,பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.பிரபஞ்சத்தில் பல உலகங்கள் உலா வரலாம்
என நினைத்து ஆய்வுகள்
நடத்தப்படுகிறது.பிரம்மாண்டமான தொலைநோக்கு கருவிகள் மூலம் ஆய்வுகள்
நடத்தப்படுகின்றன.
இத்தகைய
ஆய்வுகள் யாவும் மெய்ப்பொருளானது.மனிதன் வாழ சடங்குகள் போதாதா? அறிவியல் எதற்கு ?
என கோட்கும் இன்றளவும் படித்த பாமர மக்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
பூமியில்
கிடைக்கும் பொருட்களை வைத்து மனிதன் புதுமைகளை படைத்தான்.படைக்கின்றான்.மிருகங்களைப்போல்
மனிதன் வாழ விரும்புவதில்லை.மிருகங்களுக்கு அறிவியல் தேவையில்லை.சிந்தனை
தேவையில்லை,சுய சிந்தனை தேவையில்லை.
ஆனால்
பெரும்பாலான மனிதர்கள் இப்படியே வாழ்ந்து முடிக்கின்றனர்.ஏமாற்றி பிழைக்கும்
மனிதர்களுக்கு இது போன்ற மனிதர்கள் தேவை.
ஒரு மனிதன்
தன்னோடு பழகும்போது எதற்காக நம்மோடு நட்புகொள்ள விரும்புகிறான் என்பதை
தெரிந்துகொள்ள நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அதைப்போன்ற சிந்தனைகள்
நம்மில் பொரும்பாலோருக்கு இருப்பதில்லை.
அன்புப்
பரிமாற்றம்
பணப்பரிமாற்றம்
பொருள்ப்
பரிமாற்றம்
உணவுப்
பரிமாற்றம்
உடைப்பரிமாற்றம்
இருப்பிடப்
பரிமாற்றம்
கருத்துப்
பரிமாற்றம்
இப்படி பல
பரிமாற்றங்கள் சமுதாயத்தில் உலா வருகின்றன. பரிமாற்றங்கள் என்பது
இருதரப்பினருக்கும் இணையாக, சமமாக இருக்க நம்மை தயார்ப் படுத்திக்கொள்ள வேண்டும்.
சமதர்ம-சமச்சீர்
கல்வி உள்ள சமுதாயத்தில் மட்டுமே இவை சாத்தியம்.ஏற்றத்தாழ்வற்ற பகுத்தறிவாத கல்வி
அமைப்பைப் பெற்றிட்ட அல்லது அளிக்க முன்வரும் ஆட்சியாளர்கள் இருந்தால் ஒழிய
இத்தகைய சமுதாயம் அமையாது.
மக்கள்
கல்வி அமைப்பை பெற அரசாங்கம் மட்டும் பொருப்பல்ல.ஊடகத்துறைக்கும் முக்கிய பங்கு
உண்டு.மக்களின் மத்தியில் காட்டுமிராண்டித்தனமான மூட பழக்கவழக்கங்களுக்கு அறிவியல்
பூர்வமான சாயம் பூசும் வேலைகளை ஊடகத்துறைகளான தொலைக்காட்சி,திரைப்படம் மற்றும்
பத்திரிக்கைகள் முக்கிய இடம் வகிக்கின்றன.
மக்களின்
பொதுக் குடிநீர்த் தொட்டியில் சில சமுக விரோதிகள் விடம் கலப்பதுபோல, கடைகளில்
விற்கப்படும் உணவு பொருட்களில் உடலை கெடுக்கும் அதே நேரத்தில் கொள்ளை லாபம்
பார்க்க நினைக்கும் மன சாட்சி அற்ற வியாபாரிகளைப்போல மூட நம்பிக்கைக்கு அறிவியல்
சாயம்பூசி பணம் பார்க்கும் பத்திரிக்கைகளை நல்வழிப்படுத்த அரசாங்கம்
முன்வரவேண்டும்.
அவ்வப்போது
சமுதாயத்தில் நடக்கும் பேரழிவுகளுக்கும் கற்பனையான அதியசங்களுக்கும்
பத்திரிக்கைகள் விளக்க செய்திகளை வெளியிடுகின்றன.
20
ஆண்டுகளுக்கு முன் (மத்திய பிரதேசம்) போபாலில் நள்ளிரவு நேரத்தில் ஒரு அமெரிக்க
யூனியன் கார்பைட் நிறுவனத்திலிருந்து சைனைட் என்கிற கொடிய விடவாயு காற்றிலே பரவி,
உறங்கிக்கொண்டிருந்த சுற்று வட்டார மக்கள்
ஆயிரக்கணக்கில் மாண்டுவிட்டனர்.இது ஒரு விரும்பதாகாத மாபெரும் துயர சம்பவம்.
தினம் ஒரு
தகவல் தரும் ஒரு மாபெரும் தமிழ்ப் பத்திரிக்கை(தினத்தந்தி) சமீபத்தில் இத்தகவலை
வெளியிட்டது. அந்த நள்ளிரவு நேரத்தில் அங்கே அருகில் உள்ள கிராமத்தில்-இரண்டு
குடும்பத்தில் கணபதி ஓமம் செய்து
கொண்டிருந்தார்களாம்.
(கணபதி
ஓமம் என்பது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல்பாடுகள். அதாவது காடுகளில் கிடைக்கும்
வித விதமான விறகு கட்டைகளை கொளுத்தி அதில் அத்தியாவிசிய உணவுப்பொருளான அரிசி மற்றும்
பசு நெய் ஊற்றி தீயிட்டு எரிப்பது.- ஒரு மனிதனை இன்னொரு மனிதன் ஏமாற்றும் பொய்களை
நம்ப வைக்கும் செயல்கள் எல்லாமே காட்டு மிராண்டித் தனமானதுதான்)
அவர்கள்
யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையாம். மனிதன் சடங்குகள் செய்துகொள்ளட்டும்.
அது அவன் மனதை திருப்தி செய்யட்டும்.இதில் உணவு பொருளை வீணாக்குவதும்,தீயிட்டு
கொளுத்துவதும் மன நிலை பாதிப்பின் உச்சகட்டும். இதனை எந்த அரசும் மக்களிடையே
விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புவதில்லை.இது மக்களை ஏமாற்றும் செயல் என்பது படித்தவர்களும்
புரிந்து கொள்வதில்லை என்பது தான் வேதனையானது.
மனிதர்களை
விடவாயு தாக்குவது அடிக்கடி நிகழும் சம்பவங்கள்.அதற்காக உலகெங்கும் அடிக்கடி கணபதி
ஒமம் செய்வது சாத்தியமா?
அதே
தினத்தந்தி செய்திப் பத்திரிக்கையில் (09.01.14) தினம் ஒரு தகவலில் சொல்லப்பட்டது மூட நம்பிக்கையின் உச்ச கட்டம்.
உலகில் பல
நாடுகள் விண்ணில் செயற்கை கோள்களை ஆய்விற்காக அனுப்புகின்றன.அந்த செயற்கை கோள்கள்
யாவும் திருநள்ளாறு மேலே செல்லும்
போது மூன்று நொடிப்பொழுது நிலைப்பட்டு போகுமாம். இது திருநள்ளாறு சனியனுக்கு உள்ள
பராக்கிரம செயல்பாடுதான் என்பதை கட்டுரையாளர் சொல்ல வருகின்றார்.கடவுளை வணங்குபவன் கடவுளை நெருங்கிவிட்டான் என்று சொல்லப்படுகிறது எனில்,சனியனை வணங்குபவர்களை, சனி பிடித்துக்கொண்டது என்று தானே பொருள்.
தினத்தந்தி
பத்திரிக்கை சி.பா. ஆதித்தனார் எனும்
பகுத்தறிவாத தமிழரால் ஆரம்பிக்கப்பட்டு பல காலம் அதே கருத்தை வலியுறுத்தும் விதமாக
தமிழ் மக்களிடையே உலா வந்தது. அனால் அவர் வாரிசுகள் ஆன்மீக சிந்தனையை மக்களிடையே
பதிய வைக்க வேண்டும் எனும் நோக்கத்தில் மன நிலை பாதிக்கப்பட்ட –அறிவியல் அறிவே இல்லாத கட்டுரையாளரை
வேலைக்கு அமர்த்தி இப்படி ஒரு பொய்த் தகவலை பரப்ப வேண்டுமா?
No comments:
Post a Comment