Sunday, August 5, 2012

41-உயிரினத்தோற்றம்


       41-கனிமம்  + கரிமம் +ஈரம் +காற்று>;உயிரினம்
       (உலோகம்+அலோகம்+நீர்மம் +காற்று>; உயிரினம்)
                     
        (INORGQNIC + ORGANIC + WET+AIR>; biological)
        ( METALIC+NQN METALIC+WATER+AIR>;LIVING CELLS)

குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கலாம் என அறிவியல் பூர்வமாக கணக்கிட்டு(scientific formulae) அறிவியலாளர்கள் நம்  பொருளியல்(pragmatism) வாதத்திற்கு வலு சேர்க்கின்றனர். இந்த கொள்கை உருவாகி 300 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது இதுவரை ஒரு குரங்கும் மனிதனாக மாறவில்லை.மாறும் தன்மையும் தெரியவில்லை. பரிணாம வளர்ச்சி என்னும் வார்த்தைக்கு அர்த்தமே இதுவரை விளங்கவில்லை.
ஈரமுள்ள மண்ணில் உயிரினங்கள் தோன்றுகின்றன.அவைகள் தாவரங்களாகவும்,விலங்குகளாகவும்(மனிதன் உட்பட)வளர்ந்து பின் மண்ணில் மறைகின்றன.இறந்துபோன உடலில் இருந்து பல புழு ,பூச்சிகள் கள் உருவாவதை நாம் கண்கூடாக பார்த்துள்ளோம். இறந்துபோன விலங்கின் உடலிலிருந்து விலங்குகள் உருவாவதில்லை.ஆனால் இறந்துபோன தாவரத்திலிருந்து அதன் இனத்தாவரம் உருவாகிறது.

ஒரு செல் உயிரினங்களான அமிபா,பாக்டிரியா மற்றும் வைரஸ் போன்ற  இவைகள்  அதன் உருவங்களை மாற்றிக்கொள்ள வில்லை.ஆனால் வடிவங்களை மாற்றிக்கொள்கின்றன.மற்ற உயிரினத்தின் வடிவங்களை மாற்றுகின்றன.
பல செல்களின் கூட்டு இயக்கம்தான் விலங்கினம்.
ஒரு உயிரின செல்லை பகுத்து பார்த்தால் அதில் கனிமங்கள்,கரிமங்களின்(inorganic,organic salts) உப்புக்கள் உள்ளன. கனிமங்களின் உப்பு என்பது பொட்டாசியம்,மங்கனீசு மற்றும் கால்சியத்தின் கலவைகள் உள்ளன.

ஈரமண்ணிலிருந்து மண்புழுக்கள் உருவாகின்றன. மனிதன் தலையிலிருந்து பேன் உருவாகிறது. மிருகங்கள் உடலிலிருந்து உண்ணி போன்ற உயிரினங்கள் உருவாகின்றன. ஒரு உயிரினத்திலிருந்து இன்னொரு உயிரினம் ஒட்டுண்ணிகளாக (உருவாகின்றன)வளர்கின்றன.

உலகில் அடிப்படை உயிரினம் தோன்ற காரணம் ஈரமண் தான்.சரி இந்த ஈரமண்ணில் அப்படி என்னதான் உள்ளது?
கரி உள்ளது(C12,C14-CARBON ATOMS & AVTIVATED CARBON ATOMS) நாம் உண்ணும் உணவில் நீரும் கார்போ ஹைட்ரேட்டும் நிறைந்து காணப்படுகிறது. நீரில்(H2O)-ம்,கார்போஹைட்ரேட்டில்-(C-H-O) கரியும் ஹைட்ரசனும்.ஆக்சிசனும் மூலக்கூறுகளாக (molecular bond) அமைந்துள்ளன.
மண்ணில் கிடக்கும் கனிம மற்றும் கரிம அணுக்களின் கூட்டோடு காற்றில் இருக்கும் ஹைட்ரசனோடு அணு இ(பி)ணைப்பு( ATOMIC FUISION) ஏற்பட்டு தொடர் நிகழ்ச்சியின் விளைவாக உயிரினம் தோன்றுகிறது.
                                         
ஒரு உயிரின செல்லில் மையக்கரு (nucleic acid) உள்ளது. அதைச்சுற்றிலும் உயிர்மை ஆற்றல்பெற்ற திரவங்கள் உள்ளன.உயிரின செல்லைச்சுற்றிலும் நீழ்ச்சியடையக்கூடிய மெல்லிய பாதுகாப்பு சுவர் உள்ளது    
                                
எப்படி ஒரு அணுவின் மையப்பகுதியில் கருவும் (நியூட்ரான்+புரட்டான்) அதைச்சுற்றிலும் நிலைபெறா தன்மையுடைய எலக்ட்ரான்கள்(electrons) உள்ளதோ அதைப்போலவே உயிரினச்செல்லிலும் அமைந்துள்ளது.
முதலில் தோன்றிய உலகில், அதாவது எரிமலைக் குழம்பில் கனிம,கரிம கூட்டில் நீரோடு இணைந்து வேதியல் மாற்றத்தால்  ஒரு செல் உயிரினம் தோன்றியது.(வேதியல் மாற்றம் என்பது நிலையானது. உலகம் சுழலும் வரை உயிர்கள் இயங்கும் வரை ஒரு தொடர் நிகழ்ச்சியே வேதியல் மாற்றம்)  
உலகில் அணுச் சிதறல் நிகழ்ச்சி (அதாவது ஒரு அணுவின் எலக்ட்ரான்கள் விடுபட்டு இன்னொரு அணுவில் இணையும் நிகழ்ச்சி) அன்றடம் நடக்கும்.இதனால் அணுத் தொடர்   (atomic reaction) வினை நிகழ்ந்து கொண்டே இருக்கும். உலகத்திலுள்ள உயிரினங்கள்  தொடர்ந்து இயங்குவதற்கு இது தான் காரணம்.

அணுவும் நிலைத்தன்மை அற்றது. உயிரினச் செல்லும் நிலைத்தன்மை அற்றது. உயிரினச் சலனங்களுக்கு இதுவே காரணம்.

ஒரு செல் உயிரினங்களான அமிபா,பாக்ட்ரியா மற்றும் வைரசுகளின் கூட்டுச் செல்கள்தான்  உயிரினங்களான தாவரங்கள்,விலங்குகள்,மற்றும் மனிதர்களை தாக்கி சேதங்களையும் உருவ மாற்றங்களையும்(damage and de-morphing)  ஏற்படுத்துகின்றன.

இந்த உருமாற்றங்களுக்கு காரணமான மூலக்கூறு(god particle) எது என ஆராய்ந்ததில் இன்றய(05.07.2012) செய்தி மற்றும் ஊடகங்கள் வாயிலாக படித்திருப்பீர்கள். ஐரோப்ய கூட்டமைப்பு நாடுகள் ஒன்று சேர்ந்து அணுக்கரு ஆராய்ச்சி மையம்(CERN-CENTRE FOR NUCLEAR RESEARCH) ஒன்றை உருவாக்கி பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு நேற்றுதான் அந்த ரகசியத்தை கண்டறிந்ததாக செய்தி வெளியிடப்பட்டது.

கடவுளைக் கண்டேன் என இந்திய ஆன்மீக வாதிகள் சொல்வதற்கும் கடவுள் துகள் கண்டுபிடிப்பதற்கும் பெரிய வேறுபாடுகள் இருப்பதாக தெரியவில்லை. அப்படியானால் இது மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் செயலாகத் தோன்றவில்லையா?  

கடவுள் துகளின் செயல்பாடுகள் என்ன? அதை கட்டுபடுத்துவது எப்படி? யாருக்கு கட்டுப்பட்டு இயங்குகின்றது? உயிரினங்களின் வாழ்நாளை நிர்னயிப்பது யார்? பெரும்பாலும் உயிரினங்கள் தங்கள் வாழ்நாளை(தாவரம்,விலங்கினம் மற்றும் மனிதம்)  முழுமையாக முடிக்காமல் இடையில் மரணமடைவது ஏன்? என்பதற்கு விடை கிடைக்கும்


மனிதன் காலங்காலமாக சிந்தித்து  கட்டுக்கதைகளையும் புராணங்களையும் எழுதிவைத்துவிட்டு போனதை இன்றும் அதில் அறிவியல் உண்மைகள் இருக்காதா ? என  ஆராய்ந்துகொண்டிருப்பதின் விளைவே இந்த கடவுள் துகள் கோட்பாடு.

கட்டுக்கதைகளுக்கும் உண்மைக்குப் புறம்பான  செய்திகளை மற்றவர்களுக்கு பறைசாற்றுவதில் கைதேர்ந்த இந்திய அறிவியலாளரில் ஒருவரான சத்யேந்நிர போஸ்-ன்(1925) கொள்கையும் அய்ரோப்ய அறிவியலாளர்(இங்கிலாந்து) பீட்டர் ஹிக்சு(வயது84) கொள்கைகளை இணைத்து (HIGGS +BOSE=HIGGS BOSANS THEORY) வெளியிட்டனர். இதற்குபேர்தான் கடவுள் துகள் கண்டுபிடிப்பு என பெயரிட்டனர்.

பூமிக்கு அடியில் 300 அடி ஆழத்தில் 27 கி.மி தூரத்திற்கு நீள்வட்ட சோதனை கூடத்தை கட்டி அதில் அணுக்களுக்கு இடையே பேரிடியை(BIG BANG) ஏற்படுத்தி ஒர் எடையற்ற (mass) பருமனை (புகைபோன்ற)உருவாக்கி அதற்கு எடையை உருவாக்கும் சக்தி எது என கண்டறிந்து அதற்கு கடவுள் துகள்(god particle) என பெயரிட்டனர். அவ்வளவே.

இந்த கண்டுபிடிப்பால் மனிதன் சாதிக்கப்போவது என்ன? எதுவும் இருக்காது.
அந்த சக்திவாயந்த துகளை மனிதன் தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு  விளையாட முடியுமா என்ன?

மனிதன் நினைப்பது என்ன?
கடவுள் ஒருவர் உருவமாக இருப்பதாகவே கற்பனையாக வைத்துக் கொள்வோம்.அந்த உருவத்திற்கு மனிதனுக்கு இருப்பது போல் ஆசைகள் எல்லாம் இருக்கக்கூடாது.அதாவது கடவுள் தனக்கென்று மனைவி மகன் அல்லது மகள் உறவு என சொல்லிக் கொள்ள யாருமே இருக்கக்கூடாது. அசையும் அல்லது அசையா சொத்து இருக்க கூடாது.

மனிதன் தான் நினைப்பதை எல்லாம் நொடிப்பொழுதில் கிடைக்க கடவுள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
1-வாலிபம் நிலைக்க வேண்டும்
2-தான் நினைக்கும் பெண்ணோடு கூடவேண்டும்
3-இவனுக்கு பிறக்கும் பிள்ளைகளும் இவன் பேச்சை மட்டுமே கேட்க வேண்டும்
4-நோய் வரக்கூடாது
5-இவன் வேண்டும்போது இடியில்லா மழை பொழிய வேண்டும்.
6-இவன் வேண்டும்போது மழை நிற்கவேண்டும்
7-மழையால் வெள்ள பாதிப்பு வரக்கூடாது
8-சுனாமி வரக்கூடாது
9-பூகம்பம் வரக்கூடாது.
10-மற்ற விலங்கு முதற்கொண்டு மனிதர்கள் அனைவரும் இவன் சொல்வதை கேட்க வேண்டும், கேட்டு அதன்படி நடக்கவேண்டும். மரணமே நிகழக்கூடாது.மற்றவனுக்கு மரணம் வந்தால்கூட இவனுக்கு மட்டும் மரணமே நிகழக்கூடாது.மொத்தத்தில் இவனே கடவுளாக மாறவேண்டும்.
அதுசரி மனிதன்மட்டுமே உலகை ஆளவேண்டுமா? மனிதனுக்கு இணை பெண் அல்லவா? பெண் நினைப்பது என்ன?
ஆண்கள் மட்டும் தான் வித விதமான பெண்களை(தங்களை) அனுபவிக்க வேண்டுமா?
பெண்களுக்கும் ஆண்களைபோல் ஆசை உண்டே! ,வெளியில் சொல்ல முடியாத ஆசை . அது என்ன?
1-ஆண்களை அடக்கியாள வேண்டும்
2-தான் நினைக்கும் ஆணோடு இணைய வேண்டும்
3-பெண்மை எப்பொழுதும்(இளமை) நிலைத்திருக்க வேண்டும்
4-உலகில் இவளே பேரழகி என எல்லோரும் பாராட்டவேண்டும்.
5-கணவன், மாமனார்,மாமியார்,நாத்தனார் மகன் மகள் உள்பட அனைத்து உறவுகளும் இவள் பேச்சை கேட்க வேண்டும்.அதன்படி நடக்கவேண்டும்.
6-நோய் இல்லா வாழ்க்கை வேண்டும்.
7-மரணமே நிகழக்கூடாது.      

இதெல்லாம் நடக்க கூடிய காரியமா?

இப்படி சிந்தித்த மனிதன் அவனே கடவுள் அவதாரமாக ஏன் மாறக்கூடாது? பெண் இனத்தை தலைதூக்க விடக்கூடாது.அப்படித்தான் சாமியார்களும்,மத குருமார்களும், பாதர்,பிஷப்,போப் மற்றும் இமாம்,காஜி போன்ற மத இடைத்தரகர்கள் (கடவுளுக்கும் பாமர மனிதர்களுக்கும்-கடவுள் இருக்கின்றாராம் ஆனால் பாமர மனிதனிடம் கடவுள்  பேசமாட்டாராம்,பேசக்கூடாதாம் ,அதானால்தான் இந்த இடைத்தரகு ஏற்பாடு) என உலகம் முழுக்க  உருவாக்கினர்.. 
இவர்களை மனிதர்களின் அய்யோக்கியர்கள் என அழைத்தால் என்ன தவறு?அதாவது அடுத்தவர் உழைப்பை சுரண்டி வாழ வாழ்வாதாரங்களை அமைத்துக் கொண்டவர்களை அப்படித்தானே அழைக்க முடியும்?

பிரபஞ்ச அமைப்பு அதாவது ஆகாயத்தில் அமைந்துள்ள சூரிய குடும்பம்(சூரிய குடும்பம் என்பது சூரியனை சுற்றி இயங்கும் கோள்கள் பூமியில் உயிரினங்கள் வாழ உதவுகின்றன) எப்படி இயங்குகின்றன என பல ஆயிரக்கணக்கான வருடங்களாக மனிதன் தன் அறிவாற்றலால் கற்பனையாகவும் தொலை நோக்கு கருவி கொண்டு சில நிஜங்களையும் (12 கோள்களும் அவைகளைச் சுற்றி துணைக்கோள்களும் இணைந்து சூரியனைச் சுற்றிவரும் கோட்பாடு) விளக்கும் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டன. கற்பனையில் எழுதப்பட்டது பஞ்சாங்கம்(Almanac) தொலை நோக்கு கருவி கொண்டு எழுதப்பட்ட நூல்கள் வான் அறிவியல் (Astranomy)எனப்படுகின்றன. பல பிரபஞ்சங்கள் சேர்ந்தது தான் மகா பிரபஞ்சம் (பேரண்டம்)

பிரபஞ்ச இயக்கத்தின் அடிப்படையே அணுத் துகள்(Atomic particles) கட்டமைப்பில் தான் இயங்குகின்றது. எனவே இந்த அணுத்துகளுக்கு எடை ஏற்றுவது எது என தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த எடை ஏற்றம் எப்படி நிகழ்கிறது என நாம் தெரிந்துகொள்ள அதைப்பற்றிய கொள்கை வடிவ நூல்கள் வெளிவந்த பிறகே நாம் அறிய முடியும்.

தானாக உயிரினங்கள் எப்படி உருவாகின்றது என்பதை விளக்குவது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.உலகம் முழுக்க பல தரப்பட்ட கனிமங்களும்(சுமார் 104 கனிமங்கள் ) அதனைச்சுற்றிலும் பல தரப்பட்ட கரிமங்களும் (கார்பன்,சுண்ணாம்பு,மங்கனீசு,பொட்டாசியம்,பாஸ்பரஸ் மற்றும் சிலிகா போன்ற) அதனதன் தன்மைகளுக்கு ஏற்ப மண்ணில் ஈரத்துடனும் நீருடனும் இணைந்து பல வேதியல் மாற்றங்களுக்குப்பின் பல  தரப்பட்ட பல்வேறு வடிவங்காக உயிரினங்கள் தோன்றுகின்றன.உயினங்களின் உச்சகட்ட உரு மாற்றமே தற்பொழுதுள்ள மனிதர்கள்.

இந்நிலையில் மனிதர்களை நல்வழிப்படுத்த மனிதனே உருவாக்கிய கொள்கைதான் கடவுள் வழிபாட்டுக்கொள்கை. இந்த கொள்கை வழிப்பாட்டில் சொர்க்கம்,நரகம்,முற்பிறவி மறுபிறவி,பாவம் ,புண்ணியம் இவைகளை அடைய  சடங்குகள் செய்தாலோ அல்லது செய்யாமல் விட்டாலோ அவரவர் எண்ணங்களுக்கு ஏற்றாற் போல் அமையட்டும்.

ஆனால் இந்த சடங்குகளால் அல்லது உடலை வருத்தும் விரத வழி பாட்டால்(கடவுள் வழிபாட்டால்) மனிதனிடம்(உழைப்பாளியிடம்) மனிதனே(உழைக்காமல்) பணம் பண்ணும் செயல்களை நாம் எப்படி நியாயப்படுத்த முடியும்?