40-நீதிபதிகளின்
மறுமுகங்கள்
மனிதன் உருவாக்கிய மதங்களில்(religions)
மயங்கியவன் இன்றளவும் தெளிவு பெறவில்லை.
மதக்கொள்கைக்கு
உடன் பாடு இல்லாதவர்களை அந்நியராக நினைத்து சமுதாயத்தில் செயல் இழக்கச் செய்வதில்
மனிதனுக்கு நிகர் மனிதனே.
1-பாகித்தானில் குரானை அவமதித்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்(இன்றய 06.07.2012
தேதியிட்ட தினத்தந்தி) ஊர்மக்கள் ஒன்று கூடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு குரானை அவமதித்தவரை வெளியே இழுத்துவந்து
பெட்டரோல் ஊற்றி கொளுத்தி சாகடித்து விட்டனர்.
2-கிருட்னகிரி(தர்மபுரி) அருகே கோயில்
திருவிழாவில் ஆன்மீகத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தவரை துப்பாக்கியால் சுட்டும்
தலையை வெறிதீர தனியே வெட்டி வீசினர்,ஆன்மீகவாதிகள்
3-காவேரிப்பாக்கம் அரசு பள்ளி வளாகத்தில்
பெரியார் சிலை நிறுவுவதில் உள்ளூர் ஆன்மீக வாதிகளுக்கும் (பாரதீய சனதா
கட்சி)பெரியார் ஆதரவாளருக்கும் நீதி மன்ற வழக்கு நிலுவையிலிருந்து நேற்று
(05.07.2012)தீர்ப்பளிக்கப்பட்டது. ‘பள்ளி வளாகத்தில் பெரியார் சிலையை நிறுவுவதால்
பள்ளி மாணவர்கள் நாத்திக வாதியாக அதாவது கடவுள் மறுப்பாளராக மாறிவிடுவர் என
அஞ்சத்தேவையில்லை’ என தீர்ப்பு சொல்லி சிலையை நிறுவலாம் அனுமதி அளித்தது.
மனிதன் காட்டுவாசியாக வாழ்ந்த காலந்தொட்டு ,
இயற்கை சீற்றங்களுக்கு பயந்து தான் உயிர்வாழ நடத்திய சடங்குகளை, இன்றுவரை
மதவாதிகள் தன் சுய லாபத்திற்காக விளம்பரப்படுத்தி சிறிதும் தொய்வில்லாமல் பாமரனை மதி மயக்கி வைத்துள்ளனர்.
இதன் விளைவால் நிகழ்வதுதான் மேலே
குறிப்பிடப்பட்ட 3 நிகழ்ச்சிகள். தங்களுடைய பாதுகாப்பிற்கும் எதிர்கால
வாழ்வாதாரங்களைப் பற்றியும் சிறிதும்
கவலைப்படாத காட்டுமிராண்டி ஆன்மீக
வாதிகளால்(பாமரவாசிகள்) தான் மனித சமுதாயத்திற்கு அழிவைத்தவிர வேறு என்ன நன்மை
ஏற்படப்போகிறது?
இதற்கெல்லாம் காரணம் நாட்டின்
தலைமைப்பொறுப்பில் இருக்கும் ஆட்சியாளர்கள்தானே?
ஆன்மீகம்
மனிதநேயமற்றது. பகுத்தறிவாதம் மட்டுமே மனித வளம் பெறுக வழிகாட்டும்.
அப்பொழுதுகூட நாத்திகவாதிகளால் மனித
சமுதாயத்திற்கு என்ன தீமை விளையும் ?என அந்த தீர்ப்பு ஏன் அமையவில்லை? நீதிபதியும்
ஆன்மீக வம்சத்திலிருந்து வந்தவர்தானே?
நீதி பதிகளின் மறுமுகங்களை காண்பீர்!