Friday, June 22, 2012

38-தமிழரின் மறுமுகங்கள்


                            38  தமிழரின் மறுமுகங்கள்

ஒவ்வொரு இனமும் அதன் குணம் சார்ந்த அதாவது ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடக்கியாள நினைக்கும் மிருக குணம் நிறைந்த மக்கள் இனம் தான் அதிகம்.
மனிதனை மனிதன் அடக்கியாள உருவாக்கிய கருவி தான் வே(பே)தங்கள்.
எத்தனை மதங்கள்? எத்தனை வே(பே)தங்கள்-வேறுபாடுகள்? இதோ
1-     இந்து மதம் உருவாக்கியதுதான் பகவத் கீதை                       
கடவுள் மனிதனுக்கு அறிவுருத்திய அறிவுரைகள் அடங்கிய நூல்.அதாவது கிருட்ண கடவுள் அவதாரம் அர்ச்சுனன் என்னும் அசாதாரண மனிதனுக்கு போர்களத்தில் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பை(வாழ்வியல் தத்துவம்) நூல் வடிவமாக மக்களுக்கு தந்தது வியாசமுனிவர்.(3000 ம் ஆண்டுகளுக்கு முன்)

2-இந்து மதத்திலிருந்து பகுத்தறிவாத இயக்கம், மதமாக  மாறிப்போன புத்த மற்றும் சைன மதங்களின்- போதனைகள் அடங்கிய வேத நூல்கள்(2500 ஆண்டுகளுக்கு முன்) பராமரிக்கப்படவில்லை எனினும் சைன மதத்தில் மனிதன் மகிழ்ச்சியாகவும் சக மனிதனை(உயிரினங்களை) துன்ப படுத்தாமல் அறவழி நிலையை கடைபிடிக்க  மக்களுக்கு போதிக்கப்பட்டன. 

3-கடவுள் அனுப்பிய தூதராக(யாரும் கடவுளை கண்டதாக  பைபிளில் கூறப்படவில்லை)  மண்ணில் தோன்றிய யேசுவின் அறிவுரைகளினால் வெகுண்டெழுந்த மன்னர்களின் கோபத்திற்க்கு ஆளாகி சிலுவையில் அறையப்பட்டார்.மக்களின் அனுதாபத்தை பெற்ற யேசு மீண்டும் உயிர்த்தெழுந்ததாக கூறப்படும்  10 கட்டளைகளின்(மனிதர்களின் வாழ்வியல் தத்துவம்) விரிவாக்கம் தான் பைபிள் (2000 ம் ஆண்டுகளுக்கு முன்)

4- ஆனால் கடவுளே தனக்கு நேரில்(கனவில்?)தோன்றி அருளப்பட்டது தான் குரான் எனும் மனித வாழ்க்கை வழி காட்டி நூல் என முகமது நபி அவர்கள் மக்களை நம்பச் செய்தார். (1500 ஆண்டுகளுக்கு முன்)

5-அறிவியல் முன்னேற்றம் அடைந்த காலங்களில் இந்தியாவில் உருவான சீக்கிய மதம்,அறிவியல் ரீதியாக மக்களை அடக்கியாள முடியாது என அறிவியலை புறந்தள்ளி   மூட நம்பிக்கைகள் கொண்ட புதிய மதம் இது.(400 ஆண்டுகள் முந்தையது) இதன் மத நூல் கிரந்தம்  என அழைக்கப்படுகிறது.  

சைன மதம் தவிர அனைத்து மத மக்களும் அறவழி தவறிய செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முனைப்பு காட்டுகின்றன.(மனித வதை,மிருக வதை,கோபம்,களவு,மனித மற்றும் மிருக கொலை போன்ற கொடிய அறவழி தவறிய செயல்)

அதாவது தனக்காக ஒரு வாழ்க்கை பிறருக்காக ஒரு வாழ்க்கை என இரட்டை நிலைதான் இப்பொழுது பெரும்பாலான மதம் சார்ந்த மக்களின் வாழ்க்கையாகிவிட்டது.தன்னலம் ஒன்றே இந்த அனைத்து மத மக்களின் கொள்கையாகிவிட்டது .

மத நூல் வழிகாட்டும் அறிவரைகளை யாரும் கடைபிடிப்பதே இல்லை; மத குருமார்கள் உட்பட. இதனால்தான் போலி சாமியார்கள் பிரச்சினைகள் தலைதூக்குகின்றன.
தற்கால சைன மதத்தவரும் அறவழி தவறிய வட்டிக்கடை, மற்றும் அதர்ம வியாபார உத்திகளை கையாளுகின்றனர்.இவர்கள் வெய்யிலில் உழைக்க விரும்புவதே இல்லை. (உழைக்காமல் பிழைக்கும் யுக்தி) பின் எப்படி தர்ம சிந்தனை தோன்றும்?

மனிதனின் கற்பனா சக்தியில் உருவானதுதான் கடவுள் கொள்கை.கற்பனையும் உண்மைக்கு புறம்பான கட்டுக்கதைகள் நிறைந்த, நிருபிக்க முடியாத, சொல்லாற்றல் பெற்றதுதான்(enchanting words or mantras) புராணக்கதைகள். நடந்த உண்மை நிகழ்ச்சிகளாக புராணத்தில் கூறப்படும் செய்திகள் யாவும் அறிவியல் பூர்வமாக மாற்றமுடியாதா ? என மனிதனை ஏங்க வைக்கும் கற்பனை கதைகள்.  புராணக்கதைகள் எல்லா மதங்களிலும் உலகம் முழுக்க பரவியுள்ளது.

மதமும் அறிவியலும் ஒன்றாக ஒத்து இயங்காது .அறிவியல் பூர்வமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும், என உலகில் யாரும் கவலைப்பட்டுக் கொள்ளவதில்லை. இதற்கு காரணம் நாட்டின் ஆட்சியாளர்களே இந்த சிந்தனையில் அமைவதில்லை.

அப்படி ஒரு சிந்தனையாளன் நாட்டில் உருவனால் அவனுக்கு பாராட்டு தெரிவிப்பதோடு சரி,அவனுடைய புரட்சிகரமான கொள்கைகளை வாழ்க்கையில் கடைபிடிக்க முயற்சிப்பதோ அல்லது முயற்சிக்க வைப்பதோ முனைப்பு கட்டுவதில்லை. பெரியாரின் பிறந்த நாளை கொண்டாடுவதும் அவர் இறந்த நாளை நினைவு கூறுவதும் ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்ச்சிகள்.ஆனால் அவருடைய பகுத்தறிவாத சிந்தனைகளை பள்ளி மற்றும் கல்லுரி பாடத்திட்டத்தில் சேர்க்க திராவிட கட்சி ஆட்சி காலத்தில் அதன் தலைவர்கள் ஏனோ முயற்சிக்கவில்லை. 

அதைப்போலவே புரட்சிக்கவி பாரதிதாசனின் பிறந்த நாளும் கொண்டாடப்படுகின்றன.   புரட்சிக்கவி இறந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் அவருடைய பகுத்தறிவாத கவிதைகளை,பாடல்களை பள்ளி கல்வி பாடத்திட்டத்தில்,கல்லுரி பாடத்திட்டத்தில்  இதுவரை ஏன் சேர்க்கவில்லை? திராவிடக்கட்சிகள் அவருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக அவருடைய கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் பரப்ப ஏன் முயற்சிக்கவில்லை?

பொய்யும் கற்பனையும் நிறைந்ததுதான் சமய இலக்கியங்கள்.சமய இலக்கியங்களை பய பக்தியுடன் போற்றி பாதுகாக்கும் குணம் கொண்டவர்களாக தமிழர்களை மாற்றிவிட்டனர். மக்களை  தற்சிந்தனையாளராக மாற்ற எந்த அரசியல் கட்சியும், ஆட்சியாளரும் விரும்புவதில்லை. தமிழகத்தை ஆண்ட ஆளப்போகும்,ஆளத்துடிக்கும் அத்தனை கட்சிகளும் தமிழர்களை திராவிட இனங்களில் ஒன்றாக நினைக்கிறது. தமிழ் நாட்டில் தனியாக தமிழர்களுக்கு என்று தனி இட ஒதிக்கீடு வழங்க முடியாது என்கிற எண்ணத்தில் செயல்படுகின்றன
.தமிழகத்தில்

1-முதல் தர குடிமக்களாக தெலுங்கர்கள்(நாயுடு,கம்ம நாயுடு,நாயக்கர்)உள்ளனர்.தமிழகத்தின் பெரும் பணக்காரர்களாக உள்ளனர்,சுமார் 400 பொறியியல் கல்லுரிகளும் 10க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லுரிகளும்,பெரும் நில உடமையாளர்களாகவும் தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.
2- அடுத்து வட இந்தியாவைச்சார்ந்த சைன சமுகத்தினர் மற்றும் ராசபுத்திர ர்கள்(மார்வாரிகள்) -இவர்கள் தமிழக கிராமபுர மக்களின் நம்பிக்கைகளான தாலி மற்றும் பித்தளை பாத்திரங்களை அடகுவைத்து அதிக வட்டிக்கு பணத்தை கொடுத்து அவைகளை மீட்டெடுக்க ஏழைகளின் வியர்வை துளிகளை தங்களின் ஆடம்பர வாழ்க்கைக்கு அடித்தளமாக பயன்படுத்துவதை இன்றளவும் காணலாம் - இவர்கள் தமிழகத்தின் இரண்டாம் தர குடிமக்களாக வாழ்கின்றனர். 
3-அடுத்து மலயாளிகள்(நாயர்,மேனன் போன்றோர்) தமிழகம் முழுக்க தேநீர் மற்றும் உணவு விடுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் வைத்து மூன்றாம் தர குடிமக்களாக வாழ்கின்றனர்

4- அடுத்து கன்னடியர்கள்(அய்யங்கார்,கவுடா,லிங்காயத் போன்றோர்),இவர்கள் உடுப்பி உணவகங்கள் ,பேக்கரிகள் நடத்தி நான்காம் தர குடிமக்களாக வாழ்கின்றனர்.

(தமிழகத்தில் பணம் கொழிக்கும் தொழிலான சினிமா உலகத்தை சார்ந்தவர்கள் கூட மேலே சொன்ன நான்கு  இனத்தவர்தான், திரை இசை பின்னணி குரலில் பாட கூட ஒரு தமிழனும் இதுவரை பிறக்கவில்லை)
தமிழகத்தின் நிரந்தர ஆட்சியாளர்களாக I.A.S,I.P.S  போன்ற ஆட்சியாளர்களாக இருப்பவர்கள் கூட தெலுங்கு,மலயாளம் ,கன்னடம்,மற்றும் ஒடிசா போன்ற வடமாநிலத்தவராகவே உள்ளனர்..இதுதான் கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடந்துவரும் -நடக்கும் ஆட்சியாகும் .இதனல்தான் இதுவரை தமிழில் ஒரு அரசு ஆணை கூட வெளியிட முடியவில்லை .தப்பித்தவறி ஒரு தமிழன் அமைச்சராகிவிட்டால் அவருடைய தேவைகளை மட்டும் அறிந்து அவருக்குமட்டும் பயன் அளிக்கும் விதமாக நடந்துகொண்டு, அரசு பணிகளை தங்கள் இன மக்களுக்கு அளித்துவிடுவர். .தமிழருக்கு கடைநிலை பணிகளான வாகன ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணிகள் கிடைக்கச்செய்வர்.   எல்லாம் பணம் படுத்தும் பாடு.ஊழல் அரசு.
5- அடுத்து நம் தமிழர்கள் வெய்யிலில் வயல் வெளியில் உழைக்கும் கடும் உழைப்பாளிகள். கூழுக்கும் குடிக்கும் ஆசைபட்டு மற்ற நான்கு இனங்கள் நடத்தும் அரசியல் கட்சிகளுக்கு ஒட்டு போடுவார்கள்.இவர்களை அய்ந்தாம் தர மக்கள் என்று அழைப்பதில் என்ன தவறு?     தமிழர்களுக்கு மொழி உணர்வும் இல்லை, சாதிய உணர்வும் இல்லை, என்பதை தமிழ் நாட்டில் வாழும் மற்ற இனத்தினர்  நன்கு உணர்ந்துள்ளனர்.

இதற்கு உதாரணமாக கூறவேண்டுமானால் 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் ராவண காவியமே(ராமாயணம்)இதற்கு சாட்சி..அதில் தமிழன் (ராவணன்) குடும்பத்தில் தோன்றிய(உடன் பிறந்த) ஒரு இனத்துரோகியைப் பற்றி   அப்பொழுதே விபிஷணன் என்கிற கதாபாத்திரத்தின் மூலம்    அந்த கதையில் விவரிக்கப்பட்டுள்ளது. இன்றளவும் தமிழினத்தின் நிலை இதுவே. அதாவது ஒரு இனத்து மக்கள் ஓரணியில்(ஒரு கட்சியில்) இல்லை என்பதற்கு இன்றய அரசியல் தன்மை எடுத்துக்காட்டுகளாக உள்ளது. இதைப்பறியெல்லாம் நினைத்து வெட்கி தலைகுனியும் நிலை எப்பொழுது இந்த தமிழனுக்கு ஏற்படும்? அந்த நாளே தமிழன் தன்னிலை உணர்ந்த நாள்.

தமிழர்களுக்கு மொழி உணர்வு இருந்திருந்தால், ஆந்திரம்,கேரளம்,மற்றும் கன்னடம் போன்று தனித்துவமாக மொழி சார்ந்த மாநிலம் அமைத்திருப்பார்கள். தமிழ் பேசும் இனங்களில் பல சாதிய அமைப்புகள் உள்ளன. ஒரு சாதிக்கும் தன் இனத்தோடு ஒத்து வாழ தெரியவில்லை.
தமிழ் பேசுபவர்கள் பெரும்பாலும் ஏழைகளே. இவர்களில்- அவர் வாழும் ஊர்களில் யாரவது ஒருவர் சுய முயற்சியாலோ அல்லது பிறர் உதவியாலோ பொருளாதாரத்தில் முன்னேறினால் அவரை தன் இனத்திலிருந்து ஒதுக்கிவிடுவர். நேற்றுவரை நம்மோடு பசியும் பட்டினியுமாய் இருந்தவனுக்கு எப்படி பணக்காரனாக மாறினான்.இது நியாய வழியில் வந்ததாக இருக்காது,என பழித்து கூறுவர்.இதுவே தமிழரை நண்டு இனத்திற்கு ஒப்பிடுவர், மற்ற முன்னேறிய இனத்தவர்.

தமிழர்கள் சங்கம் வைத்து இலக்கியங்கள் வளர்த்த காலங்களில் (சுமார் 2000-ம் ஆண்டுகளுக்கு முன்) கவிதைகளில் உணர்வுகளை பறிமாறிக்கொண்டனர்.அத்தகைய மொழிக்கு வசியம் இருந்தது அதாவது மந்திர சக்தி இருந்தது .பின்பு வந்த ஆரியர்கள், ‘தமிழ் நீச மொழி அதில் மந்திர சக்தி இல்லை’  என தன் மொழியை மட்டுமல்ல இனத்தையும்  பழித்ததை உணர முடியாமல் போனது எப்படி? என இன்றுவரை தெரியவில்லை.  எப்படி சுரணையற்ற தமிழராக மாறினார்கள் ? சமஸ்கிரதம் தேவ மொழி என்று கூறியதை நம்மவர்கள் எப்படி நம்பினர் என இன்று வரை தெரியவில்லை.
                                         
 இன்றும் திருமணங்களில் புரியாத சமஸ்கிரதத்தை ஓதுவதால் மணவாழ்க்கையில் அற்புதங்கள் நிகழும் என பாமரன் மட்டுமல்ல எம்.ஏ.எம்.பில்-பி.எச்.டி படித்தவர் மட்டுமல்ல உயர் அறிவியல் பட்டதாரிகளும்,பொறியியல் வல்லுநர் பட்டம் பெற்றவர்களும்   அதை நம்புகிறார் எனில், ஆட்சியாளருக்கு மட்டும் எப்படி சிந்தனை தோன்றும்?

முற்கால தமிழக மன்னர்கள் தற்ச்சிந்தனை அற்றவர்களாக இருந்தனர். சமய சடங்குகளில் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். மக்கள் வரிப்பணத்தில்  உயர்ந்த கோபுரங்களை கொண்ட சைவ மற்றும் வைணவத்தலங்களை அதிகம் கட்டினர்.
குருகுலம் போன்ற பள்ளிக்கூடங்களை நகரங்களில் அமைத்தனர். வெய்யிலில் உழைக்கும் தமிழர்களுக்கு பள்ளிக்கூடம் தேவையில்லை என மன்னரின் அவையில் தீர்மானிக்கப்பட்டது. இதன் காரணமாக படிப்பறிவே இல்லாத கிராமத் தமிழ் சமுதாயம் உருவாகியது.   
                                        
 தமிழகத்தின் நீர்நிலை பிடிப்புள்ள வளமான நிலங்களை ஆந்திரத்தின் தெலுங்கர்கள் கைப்பற்றினர். தமிழர்கள் மலையும் மலைச்சார்ந்த அல்லது கடலும் கடல்சார்ந்த இடங்களில் குடியேறினர். தமிழர்கள்  பங்காளிகளை பகையாளிகளாக்கி வீரத்தை நிலைநாட்டினர்.இனப்பெருக்கம் செய்வது மட்டுமே இவர்கள் பொழுதுபோக்கு.

தங்களுக்குப் பின்னும் தற்சிந்தனையற்ற வாரிசுகள் உருவாவதையே விரும்பினர்.
இதனாலே முன்னோர் கடைபிடித்த சடங்குகளான மூட நம்பிக்கைகளை இன்றளவும் போற்றி பாதுகாக்கின்றனர்.தப்பித்தவறி தானாக படித்து தெளிவடைந்தவனை கூட ‘படித்த முட்டாள்’ என பட்டம் கொடுத்து மகிழ்கின்றனர்.

சமீபத்தில் நான் ஒரு நாள்காட்டி(காலண்டர்) வடிவமைக்க அச்சகத்திற்கு சென்றேன். ராகுகாலம் எம கண்டம் நல்லநாள் கெட்ட நாள் குறிக்கப்படாத நாள்காட்டி அச்சடிக்க விரும்பினேன். அப்படி நாள்காட்டியே அச்சடிக்க முடியாது என அச்சகத்தார் சொல்லிவிட்டனர். ‘அப்படி ஒரு நாள்காட்டி அச்சடிக்க விரும்பினால் ரூ.5000.00லிருந்து 10000.00 வரை செலவாகும். அதுவும் அதை நீங்களே வைத்துக் கொள்ள வேண்டியதுதான்,அப்படி ஒரு நாள்காட்டியை நாங்கள் வணிகத்தனமாக வியாபாரம் செய்ய இயலாது.’ என கூறிவிட்டனர். அப்படியும் ஒரு அச்சக நண்பர் ‘உங்களுக்காக ஒரு இங்லீசு நாள்காட்டி வலை தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து 200 நாள்காட்டி செய்து தருகிறேன்’ எனக் கூறினார்.

அப்படி என் செலவில் அச்சடித்த நாள் காட்டியை நான் அன்றாடம் சந்திக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு விநியோகம் செய்தேன். எனக்கு நன்கு பழக்கமான மளிகை கடைக்காரர் ,நான் தினமும் பத்திரிக்கை வாங்கும் தேநீர் கடைக்காரர் இங்கெல்லாம், ‘நீங்கள் பஞ்சாங்கம் காட்டும் நாட் காட்டி பக்கத்தில் இதையும் மாட்டவேண்டும்’ என கேட்டுக்கொண்டேன்.

மளிகைகடைகாரர் வன்பொருள் கடைக்காரர் இவர்களெல்லாம் வாங்கி வைத்துக்கொண்டனர். தேநீர் கடைக்காரர் வாங்கி வைத்துக்கொண்டு இதை மாட்ட இடமில்லை என கூறிவந்தார்.

நானே அவர் கடையில் இடம் உருவாக்கி மாட்ட வைத்தேன். சனவரி மாதம் மாட்டிய நாள்காட்டி மார்ச் வரை மாற்றவே இல்லை அவர்கடையில் மற்ற நாள்காட்டியேல்லாம் மாதா மாதம் சரியாக மாற்றப்பட்டு வந்தது ஆனால் இந்த பகுத்தறிவு நாள்காட்டியை தொடவே இல்லை.சில நாட்களில் அந்த நாள்காட்டி தாளை கைதுடைக்க வைத்துக்கொண்டனர்.

இன்னும் சிலர் நான் கொடுத்த நாள் காட்டியை சுருட்டி ஒரு மூலையில் வைத்தனர்.மெத்த படித்த தமிழறிஞர் கூட அதை சுருட்டி ஒரு ஓரம் வைத்துவிட்டார் அவர் அலுவலகத்தில் நாலைந்து நாள் காட்டி வைத்துள்ளார்.இந்த பகுத்தறிவு காலண்டரை மாட்ட இடமில்லையாம்.'பகுத்தறிவாளரை பார்ப்பதே பாவம்,அவரோடு பழகுவதே துஷ்ட்ட சகவாசம்' என நினைக்கும் அளவுக்கு தமிழர்களை மாற்றிவிட்டனர் 

இத்தனைக்கும் இந்த மூதறிஞர் எனது ஏழாம் அறிவு இயக்கம் மூலம், நான் எழுதிய நூலை தலைமையேற்று நடத்தி வெளியிட அரும்பாடு பட்டவர்.தினமும் நெற்றியில் குங்குமமத்தையும் சாம்பலையும் பூசாமல் பணிக்கு வரமாட்டார்.    ஆண்டுதோறும் புரட்சிக்கவி பாரதிதாசனுக்கு விழா எடுப்பார்.

அன்றய தினம் பாரதிதாசனுக்கு விழா எடுத்து பாராட்டியவர்கள் அனைவருமே நெற்றியில் பட்டையும் குங்குமமும் வைத்துக்கொண்டு பாரதிதாசனை புகழ்ந்தார்கள்.

அவருடைய கொள்கைகளை வாழ்க்கையில் யாரும் பயன்படுத்த முன் வரவில்லை.அவருக்கு பாராட்டு எதற்கு? அதுவும் செத்தவருக்கு?

எனக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. ‘புரட்சி கவியின் பகுத்தறிவு கொள்கைகளை இன்றுவரை யாரும் மாணவர் உணரும் விதத்தில் பாடத்திட்டத்தில் சேர்க்க வில்லை.அதை ஒரு தவறாக இதுவரை யாரும் உணர வில்லை பின் எப்படி தமிழ் சமுதாயம் தன் மானமுள்ள, சுய மரியாதையுள்ள சமுகமாக மாறும் ?’ என நான் வினவினேன். அதோடு முடிந்தது அந்த விழா,மீண்டும் அடுத்த ஆண்டு புரட்சிக்கவிக்கு பிறந்த நாள் கொண்டாட.இப்படி இருந்தால் அடிமைத் தமிழருக்கு எப்பொழுது விடிவுகாலம் வரும்?  

புலமை என்றாலே பொய் தான். இதில் புரட்சிக்கு இடமளித்து ஒரு கவி உருவாகியுள்ளார் எனில் அது நம் தமிழ் மண்ணுக்கு கிடைத்த பெருமை. இவர் எழுதிய புரட்சிக்கருத்தை சீந்துவார் இன்றுவரை இல்லை.
அவர் பெற்ற மகனே இதற்குச் சான்று.
அறிவாளிகள் வயிற்றில் முட்டாட்கள் பிறப்பார்கள்.முட்டாட்கள் வயிற்றில் அறிவாளிகள் பிறப்பர். இது காலத்தின் சான்று. 
இறந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது மீண்டும் ஒரு புரட்சிக்கவி எப்பொழுது பிறப்பார் ?
எத்தனை புரட்சிக்கவிகள் தினமும் பிறந்தாலும் அடிமைத் தமிழனின் ஆளுமை குணம் எப்பொழுது உயரும்?எப்படி உயரும்?
படித்தால் தானே! படித்தும், படித்ததை அறிவியல் பூர்வமாக சிந்தனை செய்தால்தானே !
காண்பீர் நம் தமிழரின் மறுமுகங்களை !  





Thursday, June 7, 2012

37-இந்திய அரசின் மறுமுகம்-


                     37-இந்திய அரசின் மறுமுகம்
 பலதரப்பட்ட குணங்களை உள்ளடக்கியவன் தான் மனிதன்.
1-ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொன்று வாழ்வது-இனத்துரோகம்
(கும்பல் குணம்)இதற்கு உலகில் பல புராண கால சர்வாதிகாரிகளை உதாரணமாக கூறலாம் , தற்கால இனத் துரோகிகளாக 1-மறைந்துபோன ஹிட்லர், 2-தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை அதிபர் ராசபக்சே 

2-ஒருமனிதன் இன்னொரு மனிதனை அடக்கியாள நினைப்பது-மிருக குணம்-இதற்கு உதாரணமே தேவை இல்லை.உலகில் பெரும்பான்மையான மனிதர்கள்  இதில் அடக்கம்

3-முதிர்ச்சி அடைந்த மனிதன் கூட குழந்தை குணங்களை விட்டொழிக்க முடியாமல்-முயற்சிக்காமல் மடிந்துவிடுவது-குழந்தை குணம் .ஆன்மீக வாதிகளும் ,அருவ வழிபாட்டு மனிதர்களும் இதில் அடக்கம்

4-தன்னுள் உறங்கி கிடக்கும் திறமைகளை வெளிப்படுத்தி பெருமை கொள்வது-அறிவியலாளர்கள் மற்றும் பொருளியல் வாதிகள்(pragmatics) பகுத்தறிவாத குணம் உலக மக்கள் தொகையில் இவர்கள் எண்ணிக்கை சொற்ப அளவே.

உலக நாடுகள் ஒன்றுகூடி மனிதன் ஒரு நாகரிக விலங்கு இனத்தைச் சார்ந்தவனாக இருக்க அல்லது வாழ்ந்து காட்ட பல வழிகாட்டு நெறிகளை வகுத்துள்ளது.

அதேநேரத்தில் எந்த நாட்டு உள் விவகாரங்களிலும் தலையிடுவதில்லை என அடங்கிப்போகிறது.  வலுவிழந்த அதேநேரத்தில் அறவழி கோட்பாட்டை ஒவ்வொரு நாடும் பின் பற்ற வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ளது.

பொது உடமைக் கொள்கையில் கவனம் செலுத்த மனமிருந்தாலும் அதை முதலாளித்துவ நாடுகள் தடுக்கின்றன. உலக வல்லரசுகளான 5-நாடுகளில் 3-நாடுகள் முதலாளித்துவ நாடுகள்.(அமெரிக்கா,பிரிட்டன்,பிரான்சு-முதலாளித்துவ வல்லரசுகள்,ரஷ்யா மற்றும் சீனா-சமத்துவ-பொதுவுடமை வல்லரசுகள்)  . முதலாளித்துவ நாடுகளில் ஆன்மீக சிந்தனையும் மனிதனை மனிதன் அடிமை படுத்தும் குணமும் மேலோங்கியிருக்கும் .

மனிதனின்   குழந்தை குணங்களில்
1- குரங்கை போன்று குடும்பம் நடத்தும் இயல்புடையவன்.
2-மனிதர்களை பார்த்து குழந்தைகள் அப்பா-அம்மா விளையாட்டும் நிலா சோறு ஆக்குவதும் கல்லை வைத்து பூஜீப்பதும், மணல்வீடு கட்டிவாழ்வதும்
ரத்தத்தில் ஊறிய குணங்கள்.
மரண பயமும்(மிருக உணர்வு),இசையை ரசிப்பதும் ,சுய இன்பமும்(இதுவும் மிருக குணமே)மனிதன் சாகும் வரை மறப்பதே இல்லை.மனிதன் முதிர்ச்சி அடையா குழந்தையாகவே வாழ்க்கையை முடித்துக் கொள்கிறான்.
                                                                          
உலக மக்களில் குழந்தை குணங்களும் அடிமை புத்தியும் மனித குலம் தோன்றிய நாளில் இருந்து இன்றுவரை மாறா குணங்கள் பெற்ற ஒரே இனம் தமிழர் இனம்.
இவர்களுடைய சுயசிந்தனையும் சுய மரியாதையும் 2000-ம் ஆண்டுகளுக்கு முன்னரே அழிய தொடங்கி இன்றயநாளில் அடிமை இனமாக திராவிட மாயையில் சிக்கி  சீரழிகிறது. தமிழ் இலக்கியங்களில் இருந்து இதனை நன்கு அறியலாம்.  

இவர்களை இவர்களே ஆள(அதாவது தமிழர்களை தமிழர்களே) தகுதி ஆக்க  பாடு பாடும் ஒரே இயக்கம் ஏழாம் அறிவு இயக்கம்.

மனித இனங்களில் பல மதங்கள்,பல சாதிகள் நிறம்பிவிட்டது. தற்கால சூழலில் இதனை தவிர்ப்பது இயலாத செயல்.உலகத்திலே கடைசியாக உருவான மதம் சீக்கிய மதம் . அது உருவாகி 300 ஆண்டுகளுக்குமேல்   ஆகிறது.இன்றய நிலவரப்படி சுமார் 3 கோடி மக்களுக்கு மேல் வாழ்கின்றனர்.இசுலாம் மதக்கோட்பாட்டையும் இந்து மத கோட்பாட்டையும் இணைத்து உருவாக்கப்பட்டதுதான் சீக்கியமதம். இவர்களின் தற்காப்புக்காக ஒவ்வொரு சீக்கியனும் ஒரு குறு வாள் வைத்துக்கொள்ளலாம் என விதி வகுக்கப்பட்டது.

இதனை எந்த அரசும்(அப்போதய முசுலிம் அரசும்,அதன்பின் வந்த ஆங்கில அரசும் தற்போது ஆளும் மதச்சார்பற்ற இந்திய அரசும்) கண்டுகொள்ளவில்லை.அதாவது ஒரு அரசின் கீழ்வரும் அனைத்து மக்களும் ஆயுதம் அற்றவர்களாக அதாவது நாகரிக மனிதர்களாக மாற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.அவர்களைப்பார்த்து மற்ற இன மக்களும் வீட்டுக்கு வீடு நீண்ட கத்தி மற்றும் நவீன ரக துப்பாக்கிகளும் வைத்துக்ககொண்டனர். இப்பொழுதும் இதனை அரசு கண்டுகொள்ளவில்லை.

ஆனால் தென்னிந்தியர்கள் மட்டும் ஆயுதங்களை வைத்துக்கொள்ளக் கூடாது என மக்களை நிராயுத பாணியாக மாற்றிவிட்டனர்.அதாவது அடிமையாக்கிவிட்டனர்.

சமீபத்தில் பஞ்சாபில் ஒரு சம்பவம் நடந்தது. சில ஆண்டுகளுக்குமுன் பஞ்சாப் முதல் அமைச்சராக இருந்தவரை,அவர் அந்த இனத்துக்கு ஆதரவாக செயல் படவில்லை என ஒரு இன வெறி பிடித்தவன் கொலை செய்துவிட்டான். அதற்கு நாட்டின் உச்ச நீதி மன்றம் கீழ் கோர்ட்டு தீர்ப்பளித்த மரண தண்டனையை உறுதி செய்தது.

இந்த தீர்ப்பை கேட்டு சீக்கிய இன மக்கள் ஒன்று திரண்டு அனைவரும் நீண்ட வாளுடன் தெருவிற்கு வந்து விட்டனர்.

இதனைப் பார்த்த மாநில அரசு உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யவேண்டும் என மனு செய்தது. உச்ச நீதி மன்றம் தீர்ப்பை மாற்றிக்கொண்டது.

ஆனால் ராசீவ் காந்தி கொலையில் (உண்மையான நேரடிக் குற்றவாளிகள் அப்போதே சாகடிக்கப்பட்டனர்)கொலைக்கு துணை புரிந்ததாக மூவருக்கு  தூக்குதண்டனை விதித்தது, இந்திய நீதி மன்றம்.

பஞ்சாபில் போராடியது போல் தமிழின விசுவாசிகள் போராட முடியவில்லை,காரணம் தமிழன் நிராயுத பாணியாகி பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. அவன் போர்குணம் இழந்துவிட்டான். 
இன்னமும் போர்குணம் இழக்காத  சீக்கியர்கள் அவர்கள் இன ஒற்றுமையை நிலைநாட்டி வருகின்றனர்.  

இதிலிருந்து என்ன தெரிகிறது. நமது இந்திய அரசு ஒரு போலியான மதச்சார்பற்ற நாடு என புலனாகிறது.வன்முறைக்கு பயந்து நீதி மன்றமும் தன் நிலையை மாற்றிக்கொள்கிறது.
வன்முறை கும்பல் குணத்தால் ஒரு இனம் வாழ்கிறது.இதே வன்முறை கும்பல் குணத்தால் இன்னொரு இனம் அழிந்து கொண்டிருக்கிறது.

தமிழர்களின் வீரத்தை பெருமையாக பேசி பேசி அந்த நினைப்பில் காலம் கடத்திவிட்டனர். வாளொடு தோன்றிய மறத்தமிழன் ஊருக்கெல்லாம் சோருபோட்டு வந்தாரை வரவேற்று வாழவைத்த தமிழன், இன்று ஒரு புடி சோற்றுக்கு நியாய விலைக் கடைகள் முன்னும், மதுக்கடைகள் முன்னும் மண்டியிட்டு ஈனப்பிழப்பை நடத்துகின்றன். அரசியல்(திராவிட) கட்சிகளும் அவனிடம் 100 ரூபாய் கரந்து அவன் குடும்பத்துக்கே விலையில்லா வீட்டு உபயோகப் பொருட்களை வழங்குகின்றன.திராவிட மாயையிலிருந்து விடுபட்டு என்று தமிழன் என்கிற நினைப்பு  வருமோ அந்த நாளே தமிழனுக்கு சுயமரியாதை நாள். 

 இலங்கையின் பூர்வ குடிமக்களான தமிழர்கள்  வாழ்வாதாரம் தேடி அகிம்சை முறையில் போராடினர். தோல்வி கண்டனர்.சலிப்புற்று ஆயுதம் தாங்கி அந்த அரசை எதிர்த்து போராடி அதிலும் தோல்வி கண்டனர்.அந்த அராஜக அரசுக்கு இந்தியா உட்பட பல உலகநாடுகள் துணைபுரிந்தன.இதனால் தமிழர்கள் வீரமரணத்தை தழுவ நேரிட்டது. 

எஞ்சியுள்ள மக்களை முள்வேலி அமைத்து மிருகங்களுக்கு உணவளிப்பது போல் அந்த அரசு தமிழர்களை சிறுகசிறுக சாகடித்துக் கொண்டிருக்கின்றது. இங்கே வாழும் தமிழின சொந்தங்களிடையே பதற்றம் நிலவுவதைப் பார்த்த இந்திய அரசு ஒரு தந்திரம் செய்தது.இலங்கை அரசும் இதற்கு ஒப்புக்கொண்டது.

இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளை ஒன்று சேர்த்து அதனதன் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரின் தலைமையில் இலங்கைக்கு அனுப்பிவைத்தது.

இலங்கையின் ராசபக்சே அரசும் சிறந்த நாடகத்தை அரங்கேற்றியது இதற்கு இந்திய அரசின் எதிர்கட்சி தலைவரை எப்படி வளையகட்டி பிரம்மாண்டமான குளு குளு விருந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என இரண்டு அரசும் நாடகம் போட்டது. நன்கு  உபசரித்தது என வெளி உலகம் உணராமல் இல்லை.
                                   
‘ராசபக்சே, தமிழர்களுக்கு நல்லது செய்ய உள்ளார்.அங்குள்ள தமிழர்கள் தனி நாடு கேட்கவில்லை. சிங்களவரோடு வாழ விரும்புகின்றனர்’ என இலங்கை சென்று பரிசு பொருட்களுடன் திரும்பிய இந்திய நாடளுமன்ற குழு உறுப்பினர்களை கூற வைத்தனர். முள் வேலியில் உள்ள தமிழர்களை துப்பாக்கி முனையில் பேச வைத்து படமெடுத்தவர்கள் துப்பாக்கி முனையை மறைத்து, வெளிஉலகுக்கு ராசபக்சே மனித நேயப்பற்றாளர் என இந்திய தமிழர்களை நம்ப வைத்து நாடகம் அரங்கேற்றினர்.இதற்கு இந்திய செய்தி ஊடகங்கள் துணை புரிந்தன. நாதியற்ற தமிழன் வாய்மூடி மவுனியாகிவிட்டான்.

எப்படி எதிரிகளிடம் தங்களைக்காப்பாற்ற பஞ்சாபிகள் ஆயுதம் ஏந்தி இருப்பதை இன்றளவும் நியாயப்படுத்தப்படுகிறதோ, எப்படி 1920-40 ஆம் ஆண்டுகளில் சப்பானிய துணையுடன் சீன அராஜக அரசை அகற்ற சாதாரண விவசாயிகளை ஆயுதம் ஏந்தி போராட மா.சே.துங் தயார் செய்தாரோ அதைப்போன்று தமிழீழ போராளிகள் போராட்ட யுக்தியை கையாள வில்லை.

இதன் காரணமாக இலங்கையில் தமிழின  வீழ்ச்சிக்கு காரணமாகிவிட்டது. தமிழர்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்ட இந்தியாவின் மறுமுகத்தை காண்க.