Tuesday, January 10, 2017

அறம் காத்த வர்மாக்கள்-1

                                                       அறம் காத்த வர்மாக்கள்
                                            தமிழர் ஒரு பன்னாட்டு தேசிய இனம்
                                                        முன்னுரை

மகாபாரத தொடரை தொலைக்காட்சிகளில் காட்டும் போது ,இது ஒரு கற்பனைக்கதை என காட்டப்படுகிறதே அது ஏன் தெரியுமா?
இக்கால அறிவியல் சிந்தனைக்கு உட்படாத நிறைய சம்பவங்கள் அதாவது கிருண்ணன், மாயம் செய்தான்!,
குந்தி, மந்திரம் சொல்லி பிள்ளை பெற்றாள்!,
திரவுபதி, ஐவருக்கும் அழி பத்தினி!

போன்ற கதாபாத்திரங்களின் புனித தன்மை கெடாத விதமாக மக்களை அருவ நிலைக்கு (சுய சிந்தனைக்கு எட்டாத) உட்பட்ட நிகழ்ச்சிகள், நிறைய உள்ளன!
அறிவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்பதற்காகவே,கற்பனை என சொல்லி விட்டால் தப்பித்து விடாலாம்!

அப்படி மகாபாரதம் கற்பனையாகவே இருக்கட்டும்!அதில் வரும் கிருஷ்னவதாரம் மட்டும் எப்படி உண்மை என நம்புகின்றீர்கள்? அதுவும் கற்பனைதானே?

இன்று நம் குல தர்மம் துரியனினின் வழி வந்தது
ஆம் துரியனின் கோட்பாடான, ‘ஒருவனுக்கு ஒருத்தி’

மாறாக, பிள்ளைக்கு ஒரு  கணவனை மாற்றிய குந்தி,
ஒருத்திக்கு பல கணவர்களை கொண்ட திரவுபதி போன்ற சத்ரிய குணங்களுக்கு மாறான குடும்ப அமைப்புகளை  இப்பொழுது நாம் காணமுடிவதில்லையே!
               அப்பொழுது மகாபாரதம் நடந்த கதைதானே? கிருஷ்ணவதாரம் மட்டுமே கற்பனை! நிஜத்தை கற்பனை என்றும், கற்பனையை நிஜமென்றும் கோயில் கட்டி வணங்குகிறோம்!

                 
                           அறம்காத்த வர்மாக்கள்
தமிழர் –ஒரு பன்னாட்டு தேசிய இனம்
*****************
அ-எல்லைக் கோடு

இந்த பூமியில் மனித இனம் தோன்றி லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன,என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மனிதர்களிடையே ஆன்மீக (மனஒழுக்க) சிந்தனைகள் தோன்றிய பின்னர்தான் மனித உறவுகளுக்கு எல்லைக் கோடுகள் வகுத்துக் கொண்டனர். இதனை நாகரிக மனிதர்கள் எனவும் கூறலாம்.இது போன்ற மனிதர்கள் தோன்றி 6000-ம் ஆண்டுகள் ஆகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அது முதல் மனிதர்கள் குடும்ப உறவுகளுக்கு போட்டுக் கொண்ட எல்லைக் கோடுகள்,
கிராம மக்களின் எல்லைக் கோடுகள்,
மொழிவாரி மக்களின் எல்லைக் கோடுகள்(மாநிலம்),
மதவாரி மக்களின் எல்லைக் கோடுகள்(நாடு),
ஒன்றிணைந்த பல நாடுகளின் எல்லைக் கோடுகள்(கண்டம்).

இப்படி பல எல்லைக் கோடுகளை வரையறுத்துக் கொண்ட மனிதர்கள்,அதனை பல முறை மீறியும் உள்ளனர். இன்றும் மீறுகின்றனர். சாதிகள் உருவாக இதுவே காரணம்.
மனிதர்களிடையே வேறுபாடுகளை உணர்த்தும் சாதிகள் எப்படி தோன்றியது ஏன் தோன்றியது? அது இன்றளவும் ஏன் நீடிக்கிறது? இவைகளை அலசுவதே நமது நோக்கம்.

தரைவழி எல்லைக் கோட்டை மீறிய மனிதர்கள், நீர் வழிப்போக்கு வரத்துக்(கப்பல்)கண்டு 500 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன, இதற்கு முன் கடலில் பாய் மரக்கப்பல்களை பயன்படுத்தினர். தமிழர்கள் 2000-ம் ஆண்டுகளுக்கு முன் பாய் மரக்கப்பல் மூலம் கிழக்கே கம்போடியா வரையிலும் மேற்கே கிரேக்கம் வரையிலும் கடல் கடந்து வாணிபம் செய்ததற்கான தொல்லியல் ஆய்வுகள் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 

எ.கா-
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ,~தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு’ முனைவர் க.த.திருநாவுக்கரசு அவர்களை ஆசிரியராக கொண்ட ஆய்வு நூல்

அமெரிக்கா மற்றும் ஆஸ்ட்ரேலியா கண்டங்களை கண்டு பிடித்து சுமார் 500 ஆண்டுகளாகி விட்டன. அது முதல் மனிதர்கள் கண்டம் விட்டு கண்டம் சென்று எல்லைக் கோட்டை வகுத்துக் கொண்டனர்.அய்ரோப்பா மற்றும்ஆசிய கண்டங்கள் இரண்டும் தரைவழியாக மனிதர்கள் பரவத் தொடங்கி சுமார் 6000 ம் ஆண்டுகளாகி விட்டன.
3000-ம் ஆண்டுகளுக்கு முன்னர் உலகெங்கும் உள்ள மக்களின் மனதில் மிகுந்த மன மாற்றம்
ஏற்பட்டது.
காட்டு வாசிகளாகத் திரிந்த மக்களுக்கு கடவுள் கொள்கைத் தேவைப்பட்டது. அந்த கொள்கையை வகுத்தவன் மகான், ஆனால் அதை வைத்து இன்று பிழைப்பு நடத்துபவன் அய்யோக்கியன்.

ஆசிரியர் கருத்து-

(இந்தியாவில் திராவிட இன மக்கள் வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் கூறுவர். இது தவறான கணிப்பு. தமிழை முதன்மை மொழி என அங்கீகரிக்க மாற்று மொழி அராய்ச்சி யாளர்களான வரலாற்று ஆசிரியர்களுக்கு மனம் ஒப்புக் கொள்ள மறுக்கிறது. தமிழோடு சமத்கிருதம் இணைந்து பலமொழிகள் தோன்றிய பின்னரே தெலுகு கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகள் தோன்றின.இதற்கு திராவிடம் என்று பெயர் )

2500- ஆண்டுகளுக்கு முன் இந்தியத் தமிழரின் வியாபாரத் தொடர்புகள் உலகின் கிழக்கும் மேற்குமாக அமைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மக்கள் மாநில எல்லைக் கோடுகளை மீறினர்.

வான் வழி போக்குவரத்து (விமானம்) கண்டுபிடித்து 100 ஆண்டுகள் ஆகின்றன.
ரேடியோ,சினிமா மற்றும் வீடுகளில் பயன்படுத்தும் தொலைக்காட்சி மனிதன் கண்டுபிடிக்கப் பட்டப்(இதுவும் 100ஆண்டுகள் ஆகிவிட்டன) பின் உலகெங்கும் உள்ள மனிதர்களின் போக்கில் மிகுந்தமன மாற்றம் ஏற்பட்டது.
                    
2-கும்பல்(குழு) குணம்
இதன் பின் எல்லாவற்றிலும் மனிதன் வரைந்து கொண்ட எல்லைக் கோடுகள் மாறிவிட்டன. பூமியில் வாழும் மனிதர்களுக்கும், வானுக்கும் ஏதோ பந்தம் இருப்பதாக நினைத்து வாழ்ந்த உலகமக்கள் ( மத எல்லைக் கோட்டில்-ஆன்மிக சிந்தனையில் வாழ்ந்த மக்கள்) அதாவது கும்பல் குணத்தில் (காட்டு வாசிகள்) வாழ்ந்த மக்கள்,நாளடைவில் தங்கள் எல்லைக் கோட்டை கடந்து பரந்த நிலப்பரப்புக்கு வீடுகளை அமைத்து தெருக்களாகவும் பின் பல இனங்கள்அடங்கிய நகரங்களாகவும் அமைத்து கொண்டனர்.
தங்களுக்கு என்று தலைவனை அமைத்துக் கொண்டு மனித வாழ்வில் ஒற்றுமை அவசியம் என  எண்ணத் துவங்கினர்.இன்றுஉலகளாவிய மனிதநேயமும் தனிமனித நலனும் முக்கியமானது எனஎண்ணத் துவங்கி 100 ஆண்டுகளாகிவிட்டன. 1900-ம் ஆண்டுகளுக்குமுன்பின்என நவீன அணு வரலாறுகளாக மாறிவிட்டன.

ஆன்மீக எல்லைக் கோடுகளை மீற மனமில்லாத மனிதர்கள்,
அறிவியல் எல்லைக் கோடுகளை மீறும்போதுதான் மனிதர்கள் ஆபத்தை தேடிக் கொள்கின்றனர்.

ஆன்மீக எல்லைக் கோடுகள் எவை எவை என நாம் எல்லாம் அறிந்ததே. ஆன்மீகம் என்பது மனம் தொடர்புடையது .மனம் கற்பனா சிந்தனைக்கு உட்பட்டது. மனித மனம் கனவு காணக் கூடியது. இதன் விளைவாக ஆன்மீக எல்லைக் கோட்டை கடக்க விரும்புகிறது, எல்லையை கடப்பதால் உடனடி பாதிப்புகள் ஏதும் ஏற்படாது. அதேநேரத்தில் அவையெல்லாம் அறம் தொடர்புடையது . அறம் என்பது அருவமானது. அறம் தவறிய செயல்கள் மனதை பாதிப்படையச் செய்யும்

3-சாதிகள் உருவாக காரணம்

மனிதர்கள் உறவு முறைகளில் எல்லைக் கோடுகளை வரையறுத்துக் கொண்டனர். அதுதான் அறவழி சிந்தனை.உலகெங்கும் உள்ள மக்களிடையே பரவியிருக்கும் நிற வேறுபாடுகளை களைய எந்த மதத்தாலும் முடியவில்லை.நிற வேறுபாடுகளே சாதிகள் உருவாக காரணமாகிவிட்டது.

மனித சமுதாயம் ஒற்றுமையாக இருக்க மதங்கள் வாரியாக, கடவுள்கள் வாரியாக வியாபித்து இருக்கும் வேறுபாடுகளை களையவும் அறவழி சுய சிந்தனை மட்டுமே பயன்படும்.

நாகரிகம் அடைந்த மக்கள் உலகெங்கும் பரவியுள்ளனர்.இவர்களின் குடும்ப உறவு முறைகள் எல்லாமே வரையறுக்கப்பட்டது.    மனிதன் இனவிருத்தி (இனப்பெருக்கம்) செய்வதில் மிருகங்களைப் போல் அதிக ஆர்வம் உள்ளவன்.மிருகங்களுக்கு எல்லைக் கோடுகள் கிடையாது. மனிதர்கள் சுயசிந்தனையால் எல்லைக் கோடுகளை வரையறுத்துக் கொண்டனர்

மனிதர்களால் மட்டுமே உணர்வுகளை, நினைவுகளை பேச்சாற்றல் மூலம் வெளிப்படுத்த முடியும் என்பதை நாம் அறிவோம்.மனிதர்கள் முதலில் சுவையான உணவுக்கும், இனப்பெருக்க உணர்வுக்கும் மட்டுமே முக்கியத்துவம்  தருகின்றனர். அதன் பிறகு தான் குடும்பம் அமைத்தல் இசை, விளையாட்டு, பொழுது போக்கு, போர்ப்புரிதல், கல்வி வேலைத் தேடல்,வீடுகட்டுதல் போன்ற செயல்களுக்கு முக்கியத்துவம் தருகின்றனர்; அவைகளுக்கு எல்லாம் எல்லைக் கோடுகளை வரையறுத்துக் கொண்டனர். 

4-உந்துசக்தி

உணவு உண்ட பின் உயிரினங்களுக்கு உந்து சக்தி ஏற்படுகிறது.எல்லா உயிரினங்களுக்கும் உந்துசக்தி(instinct) ஒன்றே. உந்து சக்தி என்பது (இயற்கையான தன் உணர்வு)

1-பிறந்தவுடன் உணவைத் தேடுவது, குழந்தைக்கு உணவூட்டுவது
(தாயின் பாலிலிருக்கும் மார்பகங்களைத் தேடுவதும் தாய் தன் குழந்தைக்கு ஊட்டுவதும்)

2-இடம் பெயர்வது,

3-ஒலி எழுப்புவது(பேசுவது). 

4-உணவை உண்டபின் கழிவுப் பொருளை வெளியேற்றுவது,

5-இனப்பெருக்கம் செய்வதற்கு தன் இணையைத் தேடுவது.

மேலே குறிப்பிடப்பட்ட அய்ந்து பிரிவிலும் மனிதர்கள் எல்லைக் கோடுகளை வகுத்துக் கொண்டனர்.பிறப்பும் இறப்பும் இயற்கையான நிரந்தர நிகழ்வுகள்.எல்லா உயிரினங்களுக்கும் மரணம் நிச்சயம்,அதே நேரத்தில், தற்கொலை உணர்வு,ஆதரவற்ற நிலையாலும் ஏற்படுவது.
மரண பயத்தை போக்கவே மனிதன் மன ஒழுக்கத்தை (ஆன்மிக சிந்தனை) வகுத்துக் கொண்டான்

விலங்குகள் பெற்றெடுக்கும் குட்டிகளுக்கும், மனிதர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கும் உந்துசக்தி வெவ்வேறு.

விலங்கினங்கள் பெறும் குட்டிகள் தாயின் வயிற்றில் வெளி வந்த சில நிமிடங்களில் எழுந்து தாயின்பால் சுரப்பு பகுதிக்கு தன் வாயைக் கொண்டு போகும். மனிதர்களோடு ஒப்பிடும்போது,
மிருகங்களின் பெண் இன பால்சுரப்பு உருப்பானது மிகவும் சக்தி வாய்ந்தது,தான் பெற்ற குட்டிகளை தன் மார்போடு (ஈர்க்கவல்ல)இணைக்கவல்ல காந்தசக்தி பெண் விலங்கின் பால் சுரப்பு உறுப்புக்கு உண்டு.

மனித குல வளர்ச்சியின் மிகப் பெரிய உந்து சக்தி பெண் இனத்தின் பாலூட்டும் மார்பகமே.மிருகங்களுக்கு மட்டும் சிறு வேறுபாடு அதாவது இனப்பெறுக்க உறுப்பு மட்டுமே ஈர்க்க வல்லது.

தாய் விலங்குகளோடு தந்தை விலங்குகள் சேருவதை பார்க்கும் குட்டிகள் தானும் அதுபோல் செய்ய தோன்றும். உந்து சக்தியின் இனப்பெருக்க எல்லைக் கோடு இவ்வளவே. 
                       
5-உறவுமுறைகள்

மனிதர்களின் இனப்பெருக்க எல்லைக்கோடு என்பது உறவுகளின் எல்லைக்கோடுகள்.

கணவன்- மனைவி,
தாத்தா- பாட்டி,
அப்பா-அம்மா,
அண்ணன்,அக்கா,
தம்பி,தங்கை,
பெரியப்பா-பெரியம்மா,
சித்தப்பா-சின்னம்மா,
அத்தை-மாமா,
அக்கா-மாமா,
அண்ணன்-அண்ணி,
மாமன்-மாமி
மச்சான்,மைத்துணி
இப்படி பல உறவு முறைகள் மனிதர்களிடையே உண்டு.இந்த உறவு முறைகள் எல்லாவற்றிற்கும் எல்லைக்கோடுகள் உண்டு.இதுதான் குடும்ப எல்லைக் கோடுகள்.

இந்த மாதிரியான குடும்ப எல்லைக்கோடுகள் உலகெங்கும் பரவியுள்ளது.மனித நாகரிகம் என்பது இதுதான். தான் பெற்ற பிள்ளைகளுக்குத் தகுந்த முறையோடு பெண்ணுக்கும் பிள்ளைக்கும் தகுந்த வயசில் உறவினர்களையும் நண்பர்களையும் கூட்டி திருமணம் செய்து வைப்பது என்பது பல ஆண்டுகளாக மனித உறவுகளில் நிலவி வருகிறது.இந்த பழக்கவழக்கங்களுக்கு எல்லைக் கோடுகளை வகுத்துக் கொண்டனர்..

பெற்றவர்களின் சம்மதமின்றி வயதுவந்த ஆணும் பெண்ணும் காதல் மணம் புரிதல் என்பது உலகெங்கும் உள்ள வழக்கம்.இதை உலகில் உள்ள எல்லா மதங்களும் ஏற்றுக் கொள்கின்றன.ஆனால் மதம்விட்டு வேறுமதமோ,
அல்லது சாதியைவிட்டு வேற்று சாதியிலோ ஆண் அல்லது பெண் காதல் மணம் புரிதலை எந்த குடும்பத் தலைவர்களும் ஏற்றுக் கொள்வது இல்லை.இவை எல்லக் கோடுகளை மீறிய செயலாகவே கருதப்படுகிறது.

இன்று இந்தியா போன்ற நாடுகளில் வாழும் குடும்பங்களில் உள்ள ஆணும் பெண்ணும் சாதி மற்றும் இனம் மீறி காதல் மணம் புரிபவர்களை கொலை செய்யும் அளவுக்கு போகிறார்கள். இதை கவுரவக் கொலை என வர்னிக்கின்றனர்.இவையெல்லாம் குடும்ப உறவுகளில் உள்ள எல்லைக் கோடுகளை மீறிய செயலாகும்.

இப்படி இயங்கும் குடும்பங்கள் பல தெருக்களாகவும் பல தெருக்கள் கூடிய கிராமங்களாகவும் உலகெங்கும் இயங்குகின்றன. மனிதர்களிடையே சாதியப் பற்று வெறியாக மாறி மனிதர்களுக் கிடையே நடக்கும் தாக்குதல் கொலை வெறியாக மாறுகிறது. இவையெல்லாம் மனிதன் வகுத்த எல்லைக் கோடுகளை மீறியதால் நிகழும் செயல்களாகும்.

இந்தியாவின் வட மாநிலங்களில் குறிப்பாக ராஜஸ்த்தான்,குஜராத்.பஞ்சாப், உத்தரபிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களில் கவுரவக் கொலைகள் நடக்கின்றன. இவையெல்லாம் காதல் எல்லைக் கோடுகளை மீறும் செயலாகும்

பதின்மவயதில்(13-19 வயது) குடும்ப எல்லைக் கோடுகளை உணர முடியாத வயது. இனம் பார்த்து மொழிப் பார்த்து காதல் வருவதில்லை.இது ஒரு பதின் மவயதில் வரும் பருவக் கோளாரு.             

பதின்ம வயதினருக்கு வாழ்வின் எல்லைக் கோடுகள் எவைஎவை என புரியவைத்து வழி நடத்தும் பொறுப்பு பெற்றோர், ஆசிரியர் மற்றும் அரசாங்கத்தையேச் சாரும்.
நமது அரசாங்கம், குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது பெற்றவர்களின் கடமை என விட்டுவிடுகிறது.பெற்றோர்களிடம் வரி வசூலிப்பதில் மட்டுமே குறிக்கோளாக உலகில் பலநாடுகள் இயங்குகின்றன. மக்களுக்கு பண்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொடுக்காத ஒரு பொறுப்பற்ற அரசாங்கம் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?

இந்தியாவில் இன்றைய குடும்ப  கட்டமைப்பு இதிகாசக் காலத்திலிருந்து (ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகள்) பராமரிக்கப்படும் கலாச்சாரமாகும். ஒரு மனிதனுக்கு குடும்பம் அமைவது விதிவழி என பாமரனை நம்பவைக்க ஆன்மிகவாதிகள் கதாகாலாட்சேபம் நடத்தி நம்பவைத்தனர், அதன் மூலம் பிராமணர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை பெருக்கிக் கொண்டனர். உழைப்பாளிகளின் பிள்ளைகள் உழைப்பதற்கே தகுதியானவர்கள் என உழைப்பாளிகளை நம்பவைத்தனர். இதனால் வெய்யில் உழைப்பாளிகள் அரசாங்கத்தில் பங்கு பெற முடியவில்லை.

உழைப்பவர்கள் குடும்பங்களுக்கு ஒரு எல்லக்கோடு,உழைக்காமல் சுகமாக வாழும் குடும்பங்களுக்கு ஒரு எல்லைக்கோடு.இங்கு தான் சாதியப் பிரச்சினைகளே உருவாகின்றன. எல்லா (ஆண்-பெண்) பதின்ம வயதினரும் ஒரே கல்விக் கூடங்களுக்கு செல்வதால் எல்லைக் கோடுகளை மீறுகின்றனர்.பாலியல் கல்விகளை இலகுவாக்கி அனைத்து மாணவர்களும் விரசமின்றி பாடங்களை சொல்லித்தரும் பாடத்திட்டங்களை உருவாக்க அரசு முன்வர வேண்டும்.  

பொது உடைமைக் கருத்துக்கள் உலகில்பரவி இப்பொழுதுதான் 100 ஆண்டுகள் கடந்தன. உலகில் பெரும்பாலான நாடுகள் மன்னராட்சியை ஒழித்துவிட்டன.மக்ளாட்சித் தத்துவம் மலரத் தொடங்கியுள்ளது. ஆனால் இன்னமும் மன்னராட்சி போலவே பலநாடுகள் இயங்குகின்றன.

உலகில் பெரும்பாலான நாடுகளில், உழைக்கும் வர்கத்தினரை(கீழ்மக்கள் ?) ஆட்சியில் பங்கு கொள்ள சட்டங்கள் இயற்றப் படவில்லையே ! ஏன்?இன்னமும் விதியை நம்பும் வெய்யில் உழைப்பாளிக்கு பகுத்தறிவுக் கல்வியை புகுத்த எந்த அரசுக்கும் மனம் வரவில்லை.

1966-76 ல்சீனாவில் ஏற்பட்டது போன்ற கலாச்சாரப் புரட்சி (கலாச்சாரபுரட்சி என்பது பழமையான மூடநம்பிக்கையில் மூழ்கி உள்ள உழைக்கும் மக்களை நவீனகால அறிவியல் சிந்தனைக்கு அரசு அழைத்துச் செல்லும்,அரசாங்கத்தைச் சார்ந்த இயக்கம்) அதவது மக்களின் சிந்தனை,பழக்கவழக்கங்கள் யாவும் மெய்யுருவில் (pragmatic outlook) இருக்கவேண்டும்

6-பகுத்தறிவாதிகள் பாவிகளா ?

இந்தியா போன்ற உலக நாடுகளில் இன்னமும் கலாச்சார புரட்சி\கூடாத அளவுக்கு பல ஆன்மீக உலகத் தலைவர்கள் படாதபாடு படுகின்றனர். இதில் அமெரிக்க முக்கிய பங்குவகிக்கின்றது. கூடவே ஆன்மிகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட(இறை நம்பிக்கையில் வெறித்தனம்) உலக இசுலாம் தலைவர்களை உசுப்பேற்றி பொதுஉடமை கொள்கைகளை பின்பற்றும் நாடுகளுக்கு எதிராக தூண்டிவிடுகிறது.

சுய சிந்தனை கொண்ட அதாவது இறை நம்பிக்கை யற்றவர்களை இறைவனுக்கு எதிரிகள் அல்லது துரோகிகள் என செய்திகளை பரப்புகின்றனர்.

முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று
தொழுதிருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்
இழுகினான் ஆகாப்பதில்லையே முன்னம்
எழுதினான் ஓலைப் பழுது

நாம் பிறப்பதற்கு முன்பாகவே இவ்வுலக வாழ்வை வகுத்துவிட்டவன் என்று கருதி தெய்வத்தை தொழுது கொண்டே இருந்தால் தமக்கு நேர்ந்த துன்பங்கள் தாமே ஒழிந்து போய்விடாது .தொழுவதனால் மட்டும் நிலைமை மாறிவிடாது என்பதை உணர வேண்டும்.(பழமொழி-400,(58)

இவர்களை (கடவுளை வணங்காதவர்களை) உலகில் வளரவிடுவது அபாயகரமானது என்கின்றனர்.

இறைவனுக்கு எதிரிகள் எங்களுக்கும் (மனிதர்களுக்கும்) எதிரிகள்தான் என்கிற எண்ணத்தில் உலகில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தும் அளவுக்கு தீவிர (மத)வாதம் வளர்ந்துவிட்டது.சமுதாய எல்லைக் கோடுகள் மீறப்படுகின்றன.பகுத்தறிவாதிகள் எல்லாம் பாவிகள் இல்லை என்பதை ஆன்மிக வாதிகளுக்கு யார் புரிய வைப்பது?

தினமும் பாகித்தான், ஆப்கானித்தான் மற்றும் சிரியா, ஈரான், ஈராக் போன்ற இசுலாமிய நாடுகளில் தற்கொலைப் படை தாக்குதல் நடக்கிறது. அவ்வப்போது  இந்தியா போன்ற நாடுகளில் தொடர்வெடி குண்டுகள் நடப்பதும் இறைவனின் எதிரிகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் தாக்குதல் என நினைத்து அப்பாவி மனிதர்கள் உயிரிழப்பதுதான் அதிகம் நடக்கிறது.

கற்பழிப்பு புகார்கள் தினமும் பத்திரிக்கையில் வருகின்றன. இதைவிட  பத்திரிக்கையில் வராத கற்பழிப்புகள் ஏராளம். மானத்துக்கு அஞ்சி வெளியில் சொல்ல முடியாத கற்பழிப்புகள் காலத்தால் ம(றை)றக்கப் படுகின்றன.

வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபின் பெண்களைப் படிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணம் பெரும்பாலான குடும்பங்களில் துளிர்விட ஆரம்பித்தது. அதன் விளைவு இன்று பெண்கள் உயர் படிப்பைபடித்து வேலைத் தேடிவெளி உலகம் செல்கின்றனர். ஆணும் பெண்ணும் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதை தவறாக பயன் படுத்துகின்றனர்
இதன் விளைவாக எல்லை மீறும் சிக்கல் உருவாகிறது.

7- அறம்காக்கும் வெய்யிலாளி

3000-ம்ஆண்டுகளுக்கு முன் செல்லவேண்டும். ஏன்? 200 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என தெரிந்து கொள்ள அப்போதைய வரலாற்று குறிப்புகளை படிக்க ஊவேண்டும்.தமிழ்ப் பேசும் தமிழினத்திலேயே அறிவார்ந்த,சுறுசுறுப்பான இனம் நாடார் இனம். இந்த இனமும் இப்பொழுது அருவ வழிபாட்டில் சிக்கி பேய்ப் பிசாசு என நம்பிக்கை கொண்டு வன்னியர் மற்றும் இடையர்களைப் போல் தங்கள் வீட்டு சுபகாரியங்களுக்கு பிராமணர்களை அழைத்து அடிமை வாழ்வு வாழ்கின்றனர்.

பாண்டிய(பண்டைய?) மாநிலமான மதுரை மாவட்டத்தின் தென்பகுதியிலும் திருநெல்வேலி (ஒன்றிணைந்த கன்யாகுமரி மற்றும் தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள்) மாவட்டத்து மக்களின் பெரும் பகுதி நாடார் இனமே வசிக்கின்றனர்.

கடும் வெய்யில் உழைப்பாளிகளான (வெய்யில் உழைப்பாளிகள் என்பவர்கள் பட்டியல் இனத்தவர் (schedule caste) என்று ஆங்கிலேயர்களால் அடையாளம் காணப்பட்ட (ஒடுக்கப்பட்ட சேரிவாழ் இனத்தவர்கள்-தலித்துகள் எனவும் இப்பொழுது அழைக்கப் படுகின்றனர்-இவர்களை முக்கியமாக கருத்தில் கொள்ளவேண்டும்) இவர்களை சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.அப்போது தென்னகம் வந்த வெள்ளையர்கள். மேலாடை இல்லாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் இறக்குமதி செய்யப்பட்ட துணிகளையும் வயிற்றுக்கு கோதுமை உணவுகளையும் வழங்கி பலரை கிறித்துவ மதத்திற்கு மாற்றினர். இந்துமதம் இவர்களை கண்டு கொள்ளவில்லை. நம்மூர் நிழலாளிகள், ஆங்கிலேயரிடம் ஆங்கிலம் கற்றுக் கொண்டு (துபாஷிகள்) வெய்யிலாளிகளை வேலை வாங்கினர்.

உழைப்பிற்கு சரியான ஊதியம் கிடைக்காத கொடுமையினால் மேலாடைக்கு கூட வழியில்லாமல் பெண்கள் சித்தாடை (சிறு+ஆடை) கட்டிக் கொண்டும் ஆண்கள் அரையாடை (இடுப்பை மறைக்கும் ஆடை) கட்டிக் கொண்டும், அரை வயிறு கால் வயிறு கஞ்சிக்கு காலத்தை ஓட்டினர்.

தமிழக கிராமங்களில் 50 ஆண்டுகளுக்கு முன் கோவணம் கட்டிய ஆண்கள், வயல்வொளிகளில் ஏரோட்டுவது, அண்டை வெட்டுவது, நாற்று பிடுங்குவது போன்ற விவசாய கூலிகளை நாம் பார்த்திருக்கின்றோம்.

நம்மூர் நிழலாளிகள் வெள்ளையனுக்கு அடிவருடிகளாக செயல்பட்டதின் விளைவே அனைத்து தமிழினமும் அடிமை இனமாக மாறிவிட்டது.கல்வி என்றால் என்ன வென்றே தெரியாத அடிமை இனமாக வளர்ந்துவிட்டது இன்றும் அதே நிலைதான். கோவணம் கட்டுவதுதான் மாறிப் போய் உள்ளது.

பஞ்சம் ஏற்பட்டதால் அந்நாளில் அண்டை நாடுகளான பர்மா, இலங்கை,மொரிசியசு போன்ற நாடுகளில் வெய்யில் உழைப்பாளிகளுக்கு பஞ்சம் ஏற்பட்டது. நம் நிழலாளிகளால் செயற்கை பஞ்சத்திற்கு தள்ளப்பட்ட தமிழினம் பஞ்சம் பிழைக்க அந்த நாடுகளுக்கு கடத்தப்பட்டனர்.

நாமெல்லாம் சுகமாக இனிப்பு சுவைப்பதற்கு பின்னணியை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.இயற்கையில் சர்க்கரை அதிகளவு கரும்பில்தான் கிடைக்கிறது.அந்த கரும்பு உற்பத்தி யாரால் நடைபெறுகிறது.?உலகில் கரும்பு விவசாயத்தில் ஈடுபடுத்தப்படுபவர்கள் பெரும்பகுதி உழைக்கும் வெய்யிலாளிகளான தமிழர்களே !

தென் ஆப்ரிக்கா நாடுகள், தென் அமெரிக்கா நாடுகள் அனைத்திலும் கரும்பு விவசாயத்தில் ஈடுபடுத்தப் பட்டவர்கள்-ஈடுபடுத்தப்படுபவர்கள் பெரும்பாலும் நம் தமிழர்களே! தேயிலைத் தோட்ட தொழிலாளிகளும் நம் தமிழர்களே!
மொரிசியசிலும் கரும்பு தோட்ட தொழிலாளர்கள் தமிழர்களே! இலங்கை, பர்மா, இந்தோனிசியா, மலேசியா போன்ற கிழக்காசிய நாடுகளிலும் கரும்பு மற்றும் தேயிலை மலைத் தோட்ட தொழிலாளர்களும் தமிழர்களே-வெய்யிலாளிகளே!

காலம் காலமாக மனித குலத்தில் ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்கு கல்வி என்றால் என்ன வென்று காட்டாமல் கர்மபயன்,பாவம், புண்ணியம் எனும் சம்ரதாயம் சடங்குகளை கடைபிடிப்பதே வாழ்வின் லட்சியம் என அறிவுறுத்தப்பட்டது.இன்றும் இந்நிலை மாறவில்லை! 

8- நிழலாளி

தேயிலைப் பதப்படுத்தப்படும் ஆலையாகட்டும், பஞ்சாலையாகட்டும், கரும்பாலையாகட்டும் இவையெல்லாம் நிழலில் வேலை செய்யும் இடம். இவைகளிலெல்லாம் தமிழ்பேசும் நம்அடிமை இனத்துக்கு வேலை கிடைக்காது. இதற்கெல்லாம் வலுவான காரணம் இல்லாமல் இல்லை. வெய்யிலாளிக்கு படிப்பே தேவையில்லை, இவர்கள் படித்து என்ன செய்வார்கள்? படிப்பு சொல்லிக் கொடுக்கும் இனத்தையே கேள்வி கேட்பார்கள்.

எனவே எந்தகாலத்திற்கும் படிப்புவாசனையே இவர்களுக்கு காட்டக்கூடாது,என 3000-ம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் தீர்மானித்துவிட்டனர். அதுசரி அதற்குமுன் தமிழர்களின் நிலை எப்படி இருந்தது? காட்டு வாசிகளாகவும், கூட்டு வாசிகளாகவும், கூடு வாசிகளாகவும், குடிவாசிகளாகவும், குடிசை வாசிகளாகவும், வெய்யிலாளி என்கிற நிலைதான்,இன்றும் இதே நிலைதான் நீடிக்கிறது.

என்றைக்கு தமிழில் (கடவுள் புகழ்பாடும்) சமய இலக்கியங்கள் தோன்றியதோ அன்றைக்கே அழிய ஆரம்பித்தது தான் தமிழர் நாகரிகம். பின் அடிமைத் தமிழர் நாகரிகம் ஆரம்பம்

அறிவியல் கண்டுபிடிப்பு என்பது,மனிதன் நடக்க,பறக்க,நீரில் பயணிக்க இயற்கை மாற்றத்திற்கு எதிரான வாழ்வியல் மாற்றங்கள் (குளிர் பதனிடப்பட்ட உணவு,பதனிடப்பட்டு தேவைக்கு ஏற்பபயன்படுத்துதல்)மற்றும் நிழல்,புகைப்பட அறிவாற்றல். இதில் எதுவுமே தமிழர் பங்களிப்பு இல்லை. ஏன் ?
மனிதகுல வளர்ச்சியின் மூல காரணங்களான இனப்பெருக்க உணர்வுகளும், முரட்டுத்தனமும் (இதுதான் காதலும் வீரமும் என தமிழ் இலக்கியத்தில் வர்ணிக்கப்படுகிறது.) மேலிட்டுப் போன தமிழர்களின் கலாச்சாரத்தை நன்கு கிரகித்துக் கொண்ட ஆரியர்கள், தமிழர்களை தங்கள் வாழ்வாதாரங்களுக்கு பயன்படுத்திக் கொண்டனர்.

அறிவார்ந்த இனமான ஆரியர்கள் பேசி வந்த சமத்கிருதம் தமிழோடும் தமிழரோடும் இணைந்து பல மொழி மாற்றங்கள் ஏற்பட்டது, (எல்லாம் பங்காளிகள் (சகோதர யுத்தம்?) சண்டையால் வந்த விளைவுகள்.  இதனால் பரந்துவிரிந்து கிடக்கும்இந்திய முழுக்க பல இனங்கள் உருவாகின.

இதிலிருந்து இந்தியர்கள் (ஆரியர் அல்லாதவர்கள்) எத்தகைய அறிவைப் பெற்றவர்கள் என யூகிக்க முடிகிறதா?
சீனாவின் பூர்வ குடிமக்கள் தவிர ஆசிய கண்டத்தின் தெற்கு,கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தூர கிழக்கு நாடுகள் அனைத்திலும் வாழ்பவர்கள் தமிழ் இனத்தின் முன்னோர்களே, தமிழ்மக்களே.ஆனால் மொழி மாற்றம் அடைந்து, எழுத்து உருக்கள் மாறி காலப்போக்கில் மக்கள் உருவங்களிலும் மாற்றம் ஏற்பட்டது. மக்களின் உருமாற்றம், விலங்குகளின் உருமாற்றம் என்பது பூமியின் புவிஈர்ப்பு விசை ஒவ்வொரு கோணத்திலும் மாறுபடுவதால் தான்.தாவரங்கள் கூட வளர்ச்சி விகிதம் மாறும்.

இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?

மேலோட்டமாக பார்க்கும்போது பூமி உருண்டையாக தோற்றமளிக்கும். ஆனால் உண்மை அதுவல்ல. பூமி உருண்டை பல மேடு பள்ளங்களை உடையது. பூமியின் சராசரி (கடல் மட்டத்திலிருந்து) உயரம் சுமார் 8000-ம் மீட்டர்.அங்கே ஒரு ஜீவராசி கூட வாழ முடியாது. காரணம் புவி ஈர்ப்பு விசையின் தாக்கம் அதிகம்.

அதே போன்று கடல் மட்டத்திலிருந்து கடலுக்கு அடிமட்டம் சராசரி சுமார் 10000-ம் மீட்டர் ஆழம் உள்ளது இங்கேயும் ஒரு ஜீவராசி கூடவாழ முடியாது.காரணம் பூமிக்கு அடியில் இருப்பது Repulsion எதிர்ப்பு விசை உருவாவதால் ஒரு ஒரு செல் உயிரினம் கூட உயிர் வாழாது.
பூமியில் மனித இனம் தோன்றி பல ஆயிரக்கணக்கான ஏன் ஒருலட்சம் ஆண்டுக்கு மேல் இருக்கலாம் என்பது அறிவியல் ஆய்வாளர்களின் கருத்து. நாகரிக மனித இனம் தோன்றி தோராராயமாக 6000-ம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என யூகிக்கப்படுகிறது.

9-மனித குணங்களை நிர்னயிப்பது-உணவுகளே

பூமியில் மனிதர்கள் தோன்றி புலம்பெயர ஆரம்பித்தார்கள். அதாவது பூமியின் தென் கோள மனிதர்களுக்கும் வடகோள மனிதர்களுக்கும் நிரம், உயரம். உடல் பருமன், முகமாற்றம், மயிரிழை மாற்றம் ,குரல் மாற்றம், பேச்சு மாற்றம்,இதை எல்லாவற்றையும் விட உணவு மாற்றம் ஏற்பட்டதால் குணமாற்றம் ஏற்பட்டது. இந்த மாற்றத்திற்கெல்லாம் காரணம் புவியியல் மாற்றம்தான்.எனவே தான்  3000-ம் ஆண்டுகளுக்கு முன் புலம் பெயர்ந்து தூரகிழக்கு நாடுகளுக்கு சென்ற தமிழர்கள்,மொழி மாறி,உருவம் மாறி மதம் மாறி இன்று நாம் காணும் உருவங்களிலும் மொழிகளிலும் உலா வருகின்றனர்.

இது வரை வரலாறு படித்தவர்களுக்கும் ஆய்வாளருக்கும் இந்தஉண்மை ஆச்சரியப்படுத்தும். கிழக்காசிய நாடுகளின் அகழ்வாராய்ச்சி மூலம் இதனை நன்கு உணரலாம். இன்று வரலாற்று சின்னங்களாக அங்கே விளங்கும் தென்னிந்திய கட்டிட அமைப்பு மற்றும் கோயில் சின்னங்கள் போன்ற அமைப்புகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். தமிழ் எழுத்தின் மூலமான வட்டெழுத்து முறை கல்வெட்டு பதிப்பு, செப்பு பத்திரங்கள்,சுட்ட மண் பாத்திரங்கள் மற்றும் நாணயங்கள் போன்ற ஆதாரங்கள் மூலம் யூகிக்கலாம். 
வரலாறு தெரிந்தவர்கள், உலக வரலாற்றை ஆராய்ந்தவர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் நடு நிலையாகவும் செயல்படுவபவர்கள் என எதிர்பார்க்க முடியாது.  வரலாற்றை எழுதும் போதே இந்த உலகத்தில் தன் முன்னோர்கள் யார் என வெளிப்படுத்த முயல்பவர்களாகத்தான் இருப்பார்கள்.
இதனால் உலகில் பல இனங்களின் வாழ்க்கை முறைகள் நமக்கு தெரியாமல் போய்விட்டது. அதில் ஒரு இனத்தின் நாகரிகம் தான் தமிழர் நாகரிகம்.

அன்றிலிருந்து இன்று வரைமனித இனத்தில் தமிழ் இனம் ஒரு அடிமை இனமாகத்தான் வாழ்கிறது.இந்த உண்மையை நம்மில் பலபேருக்கு சீரணிக்கமுடியாது.

வீரமாக வாழ்ந்தோம் என்று ஆதாரங்கள் உள்ளனவே,அது நமக்கு பெருமைதானே!.? என நீங்கள் கேட்பது புரிகிறது.முரட்டுத்தனத்தின்-மூர்கத்தின் பரிணாம வளர்ச்சிதான் வீரம்.

உடல் பலம் உள்ளவன் தான் வீரனாக வாழமுடியும்.ஆனால் விவேகியாக வாழமுடியாது. எனவே தான் சைத்தான்,பேய்,பிசாசு உள்ளதாக கூறி முரடனை வழிக்கு கொண்டு வரலாம் என ஆரியர்கள் கணக்குப் போட்டனர்,அதில் வெற்றியும் பெற்றனர்,இன்றுவரை ஆரியர்கள் சுகமாக வாழ்கின்றனர்.
உடல் பல முள்ளவன், சக மனிதனை அடக்கியாள நினைப்பான். மன வலிமை பெற்றவன் இரண்டு முரடர்களையும் மோதவிட்டு ஒருவனை அழிப்பான். இது மனித குலத்தின் வக்கிர புத்தி.

மூர்கனுக்கு எவ்வளவோ அறிவுரை சொல்லிப் பார்த்தார்கள். அதில் தோல்வி கண்ட புத்திசாலிகள் அல்லது தந்திரசாலிகள் கையாண்ட வார்த்தை தான் ‘’வீரம்’.
                                           
வெற்றி பெற்ற வீரனுக்கு பரிசளிப்பது, பாராட்டுவது போன்ற செயல்கள் முரடனை(வீரனை?) மதி மயக்கச் செய்யும். சுயசிந்தனை வேலை செய்யாது.

கட்டுக்கடங்கா முரடர்களின் செயல்களை நாகரிகப்படுத்தும் கலை தான் விளையாட்டு.

ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பற்றி பெருமையாக பேசுகிறோமே அது முரடர்கள்–படிப்பிலிகளை நாகரிக்படுத்தவே ஏற்படுத்தப்பட்டது. இதிலிருந்து என்ன தெரிகிறது? உலகில் முதல் நாகரிக–பண்பட்ட முரடர்கள் (வீரர்கள்) வாழ்ந்த மக்கள் நைல் நதி மக்களே. இவர்கள் வடக்கு மற்றும் வடமேற்கு, கிழக்குப் பிரதேசங்களான கிரீசு,இத்தாலி மற்றும் இஸ்ரேல் பகுதிகளுக்கு குடியோறினர்.
4000-ம் ஆண்டுகளுக்கு முன் இந்த நாகரிகம் ஆரம்பித்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

10-அதிசய நைல்

நைல் நதி பற்றி நாம் அறிவோம்-நைல் நதி என்பது நீல நைல் மற்றும் வெள்ளை நைல்  என இரண்டு கிளைகளைக் கொண்டது. மத்திய ஆப்ரிக்காவின் விக்டோரிய ஏரியிலிருந்து வெள்ளை நைலும் (இது தான் சானியா,உகாண்டா,தெற்கு சூடான் வழியாகப் பாய்கிறது).எத்தியோப்பியாவில் உள்ள டானா ஏரியிலிருந்து நீல நைலும்  (இது சூடானின் தென்கிழக்கு நோக்கி பாய்கிறது)  உருவாகின்றது. இவ்விரு ஆறுகளும் சூடானின் தலைநகர் கார்ட்டூம் இல் ஒன்று சேர்ந்து நைல் நதியாக பெருக்கெடுத்து ஓடுகின்றது.

உலகத்தின் மிகப்பெரிய டெல்ட்டா நைல் ஆகும்,மேற்கே அலக்சாண்ரியாவில் துவங்கி கிழக்கே செயிட் துறைமுகத்தில் முடிவடைகிறது.மேற்கிலிருந்து கிழக்காக இதன் அகலம் 240 கி.மி ஆகும் ,வடக்கு தெற்காக இதன் நீளம் 160 கி.மி ஆகும்.புகழ் பெற்ற சூயஸ் கால்வாய் இந்த டெல்ட்டாவின் கிழக்கே அமைந்துள்ளது.

அரிசி, கோதுமை, பார்லி, கரும்பு போன்ற முக்கிய பயிர்கள் செழித்து வளர்கின்றன. இதுமட்டுமல்ல நைல் டெல்ட்டாவில் மட்டுமே விளையும் மிக முக்கிய தாவரம் பாப்பிரஸ எனும் தாவரமாகும்.இதன் பழம் மற்றும் வேர்ப்பகுதி உணவாகவும் தண்டுப் பகுதிகள் ஓடம்,படகு,பாய் போன்றவை செய்யவும் ,இதன் சக்கைகள் காகிதம் செய்யவும் பயன்படுகிறது. இது ஒரு முக்கிய பணப்பயிராக கருதப்படுகிறது.

1898-ல் அஸஃவான் சிற்றணையும்,1970-ல் அஸஃவான் பேரணையும் கட்டப்பட்டு எகிப்தை வளப்படுத்துகிறது.இந்த அணை 3830 மீ நீளமும்,111 மீ உயரமும் கொண்டது.இந்த அணையின் பிரம்மாண்ட்த்தை கண்ட அன்றய ரஷஃய அதிபர் குருசேவ்,உலகின் எட்டாவது அதிசயம் என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் மிகச்சரியாக சூலை 15-ம்தேதி நைல் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்! இது ஒரு அதிசய நிகழ்வாகும்.
உலகிலேயே,தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்ந்து மத்திய தரைக் கடலில் கலக்கும் நைல்,ஒரு அதிசய நதியாகும். நைல் நதியின் அதிகப்பட்ச அகலம் எட்பு எனும் இடத்தில் 7.5 கி.மி ஆகவும் குறைந்தபட்ச அகலம் சில்வா ஜஆர்ஜஃ எனும் இடத்தில் 350 மீ ஆகவும் உள்ளது.புரூண்டியில் உள்ள கியாக ஆற்றில் தொடங்கி மத்திய தரைக்கடல் வரை இதன் நீளம் 6671 கி.மி ஆகும்.நைல் உருவாக்கியது வளமான தாவரங்கள் மட்டுமல்ல வளமான நாகிரிக மனித இனங்களான யூதர்கள் மற்றும் ஆரியர்கள்  தோன்றி உலகம் முழுவதும் பரவியது மட்டுமல்ல உலகின் வெய்யிலாளி இனங்களை ஆண்டு கொண்டிருக்கின்றனர். 
அய்ரோப்பா கண்டத்தில் யூதர்களும், ஆசிய கண்டத்தில்ஆரியர்களும் உழைக்கும் வெய்யிலாளி வர்கத்தினரை பங்கு போட்டனர். புதிய கண்டங்களான அமரிக்கா மற்றும் ஆஸ்ட்ரேலியா இவைகளிலும் மதம் மாறிய யூதமக்களே! அதாவது கிறித்தவர்களே!

11-மனிதனுக்கு,மனிதனையே அடிமைப்படுத்தும் குணம் எப்படி வந்தது?

இந்திய தமிழர்கள் அதிகபட்சமாக 5 அடி 6 அங்குலத்திற்கு மேல் வளர்வதில்லை.ஆனால் சிந்து நதிக் கரையோர மக்கள் 6 அடிக்கும் சற்று கூடுதலாக இருப்பார்கள்-இருக்கின்றனர்.

நைல் நதிக் கரையோர மக்கள் 6 அடியும் 7 அடியுமாக இருப்பார்கள்.சற்று கூடுதல் பலத்துடன் இருப்பார்கள்.அதனால் தான் மேற்கத்திய மக்கள் இந்திய மக்களை சுலபமாக வெற்றி கொள்ள முடிந்தது.வளமான, வனப்பான சிந்து நதிப் பெண்களை கொள்ளை அடிக்க முடிந்தது. தமிழர்களின் முரட்டுத் தனம்(வீரம்?) முடங்கிவிட்டது.இன்றைக்கும் முரடர்களை அடக்குவதற்கு வீரன் எனப் பாராட்டி அடிமையாக்கி வைத்துள்ளனர் அரசியல்வாதிகள்.

ஒலிம்பிக் விளையாட்டை காட்டி உலெகெங்கும் உள்ள வெய்யிலாளிகளின் பிள்ளைகள் கல்விக் கூடங்களில் சேர்த்து விளையாட்டுப் பயிற்சி உடலுக்கு நல்லது,உடலை உரமூட்டச் செய்யும் செயல் என மாணவர்களை மதிமயங்கச் செய்து, அவர்கள் எதிர்காலத்தை வீண்டிக்கின்றனர். பள்ளிக் கல்லூரிகளில் விளையாட்டில் பரிசு பெற்றவர்கள் நல்ல குடும்பத் தலைவர்களாக திகழ்ந்ததாக வரலாறே இல்லை.இன்று வரைஇந்த உண்மையை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை.

உலகில் 700 கோடிக்கு மேல் உள்ள மக்கள் தொகையில் கிரிக்கட்டில் சச்சின், கால்பந்தில் மரடோனா, டென்னிசில் ரபேல்நடார், சதுரங்கத்தில் ஆனந்ந் போன்றவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மாணவப் பருவத்தில் இவர்களைப் போல் ஆகவேண்டும் என கனவுகண்டு வாழ்க்கையை தொலைத்தவர்களே ஏராளம்.

மனிதர்களை மனிதர்களே ஆளவேண்டும் எனும் வேட்கை நிழாலாளிகளின் மனதில் வேரூன்றி விட்டது,வெய்யிலாளிகளின் பிள்ளைகளுக்கு கட்டாய கல்வி கொடுத்தால் பல செய்திகளை படிப்பார்கள்,அரசுக்கு எதிரான புரட்சியில் இறங்கி விடுவார்கள்.

12-ஒழிய வேண்டும் ஒலிம்பிக்!

வெய்யிலாளிகளின் பிள்ளைகளின் சுய சிந்தனையை சிதறடிக்கவே பள்ளி மற்றும் கல்லுரிகளில் விளையாட்டுத் துறை உருவாக்கப்பட்டது.

விளையாட்டுக்கு என்று ஒரு அமைச்சர், விளையாட்டு வாரியம்,விளையாட்டுப் பல்கலைக் கழகம், ‘ஒலிம்பிக் போட்டிக்கு தயார் செய்கிறேன்’ என அதற்கு பயிற்சியாளர்களை பணியிலமர்த்தி,பங்கு கொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு என கூறி ஓரிருவருக்கு வேலை கொடுத்து 90 சதவிகித மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்கின்றனர்.

உலகில்  எல்லா நாடுகளிலும் தான் இது போன்று நடக்கிறது. ‘இவர் சொல்லுவது என்ன புது வேதாந்தமாக இருக்கிறது? இவைக ளெல்லாம் நடை முறைக்கு சாத்தியப்படுமா?’ என வாசகர்கள் கேட்பது புரிகிறது.

தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் என்னவாக? எப்படி? உருவாக வேண்டும் என கனவுகாணும் பெற்றோருக்கு இந்த சிந்தனை ஒரு தூண்டுதலாக அமைந்தால் அதுவே இந்த ஏழாம் அறிவு இயக்கத்தின் வெற்றி.  

உலகின் பல நாடுகளில் இது போன்று அமைப்புகள் உள்ளன.மக்களின் அல்லது மாணவர்களின் சுயசிந்தனையை இழக்கச் செய்யும், அரசாங்கமே செய்யும் அல்லது ஊக்கப்படுத்தும் அமைப்புகளை கீழே உள்ளவாறு பட்டியலிடலாம்.

மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பை சிதறடிக்கும் செயல்கள்

1-பள்ளிகளில், விளையாட்டு வகுப்பு (கிரிகட்டு,கால்பந்து,கைப்பந்து,டென்னிசு,பூப்பந்து,சதுரங்கம்,கேரம்போன்றவை)

2-நுண்கலை வளர்ப்போம் எனும் பெயரில் இசைவகுப்பு
                                 
3-நாட்டிய வகுப்பு,கரகாட்டம்,மயிலாட்டம்

4-கிராமிய கலை வளர்போம் எனும் பெயரில் சிலம்பாட்டம்

5-தேசாபிமானம் வளர்ப்போம் எனும் பெயரில் என்.சி.சி,செஞ்சிலுவைச் சங்கம்

6-மாணவர்கள் மத்தியில் வீரம் வளர்ப்போம் எனும் பெயரில் வாள்வீச்சு, துப்பாக்கிசுடும் பயிற்சி,வில்அம்பு பயிற்சி,கராத்தே போன்றவை

7-மனவளர்கலை எனும் பெயரில் யோகா-இதில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது,ஏன்?சாதித்ததே இல்லை என கூறலாம். பயிற்சியாளர்கள் பணம் சம்ம்பாதிக்க மட்டுமே இது பயன்படும்.

Sound mind lies in sound body    என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

இதன் பொருள் என்ன வெனில் நல்ல உரமுள்ள உடல் இருந்தால்தான் ஆழ்ந்த சிந்தனையுடன் ஒரு மனிதன் செயல்படமுடியும் என்பதாகும்.
இதன்படி பார்த்தால் குழந்தைகளுக்கு விளையாட்டு முக்கியம் என தெரியவில்லையா? உண்மைதான் குழந்தைகளுக்கு விளையாட்டு முக்கியம்.நல்ல ஊட்டமுள்ள உணவு கிடைத்தால் அனைத்து குழந்தைகளும் தினமும் காலை ஒரு மணி நேரம் மாலை ஒரு மணி நேரம் உடல் பயிற்சி நல்லது அவசியத் தேவையும் கூட.

இதற்கெல்லாம் போட்டிகள் வைத்து குழந்தைகளுக்கு பரிசளிக்க கூடாது, கண்டிப்பாக கூடாது.உடற்பயிற்சி மட்டுமே முக்கியம்.பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு கட்டாய உடற்பயிற்சி தேவை.விளையாட்டில் போட்டிகள் வைத்து பரிசளித்தால் மாணவர்களின் கவனம் படிப்பின்மேல் இல்லாமல் சிதறிவிடும்.ஒலிம்கிக் போட்டிகளை தடை செய்யப்பட வேண்டும்!

13- பக்தர்களுக்கும் அடிமைகளுக்கும்  ஒரே மனம்

சிந்திக்க சொன்னாலே பக்தர்களின் மனதைப் புண்படுத்துவது போல் உள்ளது என திசைத் திருப்பும் நிழலாளிகளின் விரித்த வலையில் நம்மவர்கள் விழுந்து விடுவார்கள்.விழுந்து விட்டார்கள்.

சிந்திக்க சொன்னவர்களுக்கு இனத்துரோகி என பட்டம் கிடைக்கும்.அது மட்டுமல்ல சிந்தனையாளனை நாட்டை விட்டு விரட்டினாலும் பரவாயில்லை.
சிந்திப்பவனே கூடாது என தீர்த்து கட்டவும் தயங்க மாட்டார்கள். இது வரலாறு நமக்கு சொல்லும் உண்மை.இந்தியாவில் மட்டுமல்ல உலகிலே முதன்மை  இதிகாச நூலான வால்மீகி ராமாயணத்தை ஆழ்ந்து படித்தால் இந்த உண்மை விளங்கும்.

மனித இனத்தில் இன்று வரை சிறந்து விளங்கும் இனமான சத்ரிய வம்சத்தின் முதல் சிந்தனையாளன் கவுதம புத்தன்.தமிழ் இனத்தைச் சார்ந்தவன்.உழைக்கும் மக்களை ஏய்த்து பிழைக்கும் பிராமணர்களுக்கு எதிராக பகுத்தறிவு சிந்னையை வளர்க்க அரியணையை துறந்தவன்.

யாரெல்லாம் பிராமணர்களுக்கு சிறந்த உணவு, (பசு நெய்ப் பலகாரங்கள்) பட்டாடை,மற்றும் சொகுசான இருப்பிடவசதி செய்து கொடுக்கின்றனரோ அவர்களுக்கே சத்ரியர் எனப் பட்டம் வழங்கப்பட்டது. 

ராமாயண மகாபாரத காலத்திலிருந்தே பிராமணர்களை எதிர்த்த ராவணன், கம்சன், பகாசூரன், துரியோதனன், கர்னன், சிசுபாலன், நரகாசூரன், பின்னாளில் புத்தன்,மற்றும் தமிழ்ப் பேசும் இனங்களில் சூத்ர மற்றும் பஞ்சமர்கள் (அரக்கர்கள்) என அழைக்கப்பட்டனர் .இது மனுநூல் கூறும் உண்மைகள் .இன்றும் இப்படிப் தான் நடக்கிறது.

சிந்திக்கத் தெரியாத சத்திரிய வம்சத்தில் வந்த முதல் சிந்தனையாளன்,
ஒரு சிந்தனையாளக் கூட்டத்தை உருவாக்கி தனக்குப்பின் உலகில் ஒரு சுயசிந்தனை மனித வம்சத்தை தோற்றுவிக்க நினைத்தான் கவுதம புத்தன். ஆனால்,இன்று உள்ள புத்த மதத்தை காணும்போது அவன் வகுத்த கொள்கை தோல்வியில் முடிந்தது என்றுதான் கூற வேண்டும்.! 

இந்து மத கலாச்சாரத்தில் ஊறிப்போன ஆரவார மற்றும் கோலாகல திருவிழாக்கள் புத்த மதத்தில் குறைவு இருந்த போதிலும் உருவவழிபாடு மற்றும் மூட நம்பிக்கையின் மூலவித்துவான மறுபிறவி கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்களாக புத்தமதத்தினர் வாழ்கின்றனர்.  

மனித இனத்தின்   மற்றொரு சிறந்த இனமான யூத (JEWS) இனத்தின்-அறிவியல் சாதனங்களின் முன்னோடிகள்- முதல் ஆன்மீக சிந்தனையாளன் யேசு(JESUS).யூத இனத்தின் யேசு தோன்றுவதற்கு முன்தோன்றிய யூத சிந்தனையாளர்களான கலிலியோ,சாக்ரட்டிசு போன்றவர்கள் பழமை வாதிகளால் அடித்தே கொல்லப்பட்டனர்.இது வரலாறு நமக்கு சொல்லும் கதை.பழமை வாதிகளைப் பக்குவமாக பயன்படுத்திக் கொண்டவர்கள் புத்தரும் ஏசுவுமே. அதனால் தான் இன்று உலகில் பரந்து கிடக்கும் இரு பெரும் மதங்களாக புத்தமதமும் கிறித்துவமும் மனிதர்களின் மிகவும் பிடித்த  குணங்களான மூட நம்பிக்கைகளுடன் செழித்து இயங்குகின்றன.
14-மதங்கள்

இது 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக நம்பப்படும் வரலாற்று உண்மைகள்.வரலாற்று கதைகள் வேறு, வரலாற்று உண்மைகள் வேறு.சம்வங்களை காலநேரத்தோடு விவரிக்கும் முறைகள் தான் வரலாற்று உண்மைகள். யூகமாகவும் தன் வசதிக்கேற்ற அனுமானித்தலுடன் விவரிக்கும் முறைகள் வரலாற்றுக் கதைகள்.(இதிகாசக் கதைகள்)

இந்தியாவில் வரலாற்று உண்மைகள் என்பது, இந்தியாவில் கிழக்கிந்திய  கம்பனிகால் ஊன்றிய காலத்திலிருந்து அறியப்படுகிறது. அதாவது 17-ம் நூற்றாண்டிலிருந்து. இதற்கு முன் அறியப்படும் உண்மைகள் யாவும் கல்வெட்டு, செப்புத்தகடு, ஒலைச் சுவடிகளிலிருந்து அறியப்படும் இலக்கிய சிந்தனைகள். பெரும்பாலும் இவை அனைவரும் ஏற்ககூடிய அனுமானங்களாகவே இருக்கும்.

உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால் ராமாயணமும் மகாபாரதமும் வரலாற்று (இதிகாசங்கள்) இன்றும் பராமரிக்கப்படும் முகலாய காலத்து அரசு பதிவேடுகளிலிருந்து அறியப்படும் உண்மைகள், வரலாற்று உண்மைகள்.

காட்டு மனிதர்களை நாகரிகப்படுத்தவே உருவாக்கப்பட்டது தான் மதங்கள்.

இவற்றில்
1-முதன்மையானது(3000-ம்ஆண்டுகள்முன்) யூதர்களின் வாழ்க்கை முறை மதமான யூத  மதம்.
                                                               
2- அடுத்து அதே மண்ணில் தோன்றி பங்காளிச் சண்டையால் வெளியேறியவர்கள் ஆரியர்கள். தனித்தனி மொழிகளை உருவாக்கிக் கொண்டார்கள். அதே காலகட்டத்தில் இவர்கள் இந்தியாவில், வடமேற்கு மாகாணங்களான (ஆப்கன் முதல் பஞ்சாப் வரை)ஆரப்பா, மொகஞ்சதோரா,மற்றும் சிந்து சமவெளி வாழ்ந்த தமிழர்களை (சாலிவாகனர்கள்) மனம் மாற்றி உருவாக்கியது தான் இந்து மதம்.(பல சாதிகளையும் மொழிகளையும் உள்ளடக்கியது)

மனிதர்கள் வாழ்வில் சைத்தான்களின் (சாத்தான்கள் எனவும் அழைப்பர்) பங்கு அதிகம் எனவும் அவைகளை அடக்குவதற்கு கடவுள் பிரார்த்தனை அவசியம் என உணர்த்தும் வகையில் நான்கு வேதங்களை (ரிக்,யசூர்,சாமமற்றும்அதர்வணம்)உருவாக்கிக் கொண்டனர்.இந்த நான்கு வேதங்களின் சூத்தரதாரி மனுநூல்.மூலக் கடவுள் விஷ்ணு.இவையெல்லாமே மனிதனை மனிதன் அடக்கியாளும் சூட்சமங்கள்.

3-இந்து மதத்தில் சலிப்படைந்தவர்கள் புரட்சிகரமான ஒரு மதம் வேண்டும் என்று உருவாக்கியது தான்(2500 ஆண்டுகளுக்குமுன்) கவுதமபுத்தரைத் தலைவராகக் கொண்டு உருவன புத்தமதம்

4- அதே காலகட்டத்தில் இந்தியாவில் யூதர்களின் மறுசிந்தனையில் உருவானது யேசுவைத் தலைவராகக் கொண்டு (2000-ம் ஆண்டுகளுக்கு முன்) கிறித்துவ மதம் தோன்றியது.

5-காலமாற்றத்தில் மூன்று மதங்களின்–மதத்தலைவர்களின்–போக்கு பிடிக்காமல் மறு சிந்தனையில் உருவனது இசுலாம் மதம்
(1500 ஆண்டுகளுக்கு முன். இவர்கள் யூத வம்சாவழிகளா ?அல்லது ஆரியவம்சா வழிகளா?  எனும் ஆராய்ச்சிக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
                                   
6-இந்தியாவில் இந்து மதக் கொள்கையும் பிடிக்காமல் இசுலாம் மதக் கொள்கையும் பிடிக்காமல் உருவனதுதான் (400-ஆண்டுகளுக்குமுன்) சிக் மதம்.

மனிதன் மனிதனாக வாழ்ந்தால் போதும்.மனிதன் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் மனிதனே காரணம், என  மனிதனை மனிதனே ஆள்வதற்கு வழி வகுக்கப்பட்ட கொள்கைதான் பொது உடைமை கொள்கை.

பகுத்தறிவாதத்தின் தன்னிகரற்ற சிந்தனையாளர் காரல்மார்க்சு.(1818-1883).19-ம் நூற்றாண்டின் தன் கொள்கை விளக்க புத்தகமான   காபிடல் (மூலதனம்) கொள்கைள் மூலம் 20-ம்நூற்றாண்டில் உலகத்தின் மாபெரும் பொது உடைமைப் புரட்சியை மக்கள் மனதில் விதைத்தார்.அதன் விளைவாக ருசியாவும், சீனாவும் வல்லரசுகளாக உருவானது. இந்த நாடுகளைப் பின்பற்றி க்யூபா, செக்கோசுலோவாகிய, வடகொரியா போன்ற சிறுநாடுகள் பொதுவுடைமை கொள்கைகளைப் பின்பற்றி புரட்சிப் பாதைக்கு வழி வகுத்தன.

இந்தியாவில் கேரள மாநிலத்திலும்,மேற்கு வங்கத்திலும் பொது உடைமைக் கொள்கைகள் பரவி அந்த மாநிலங்களில் பொது உடைமைத் தலைவர்கள் உருவாகி உள்ளனர்.

15-பொது உடைமை-ஒரு சமத்துவ மதம்

இந்தியவின்,முதலாளித்துவ கொள்கையாளர்கள், பொது உடைமைக் கொள்கையை மற்ற மாநிலத்தில் பரவாமல் பார்த்துக் கொண்டனர்.

அது எப்படி பரவாமல் பார்த்துக் கொண்டனர்?

உலகில் செல்வந்தர் குடும்பத்தில் தோன்றியவர்கள் மனதில் உதித்தது தான் பொது உடைமைக் கொள்கை.  செர்மனியில் பிறந்த யூத இனத்தைச் சார்ந்த காரல்மார்க்சு,பொது உடைமைக் கொள்கையின் பிதா. அடுத்து அவர் இறந்த பின் ருசியாவின் லெனின், காரல்மார்க்சின் காபிடல் எனும் நூலை வாசித்தார்.இவரும் செல்வந்தரே.

ருசியாவின் சார் மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியை புரட்சியின் மூலம் முடிவுக்கு கொண்டு வந்ததை அண்டை நாடான சீனாவின் மாசேதுங் (இவரும்  செல்வந்தரே), லெனின் புரட்சியை கேள்வியுற்று,ருசியாவிற்கு சென்று லெனினை சந்திக்கிறார்.

காரல்மார்சை லெனின் மூலம் கேள்வியுற்ற மாசேதுங்,சீனாவுக்கு திரும்பி மார்க்சு-லெனினசம் எனும் வீரியமிக்க பொது உடைமைக் கொள்கையை உருவாக்கினார். பழைமை சீனாவில் புதிய கலாச்சார புரட்சியை புகுத்த பல யுக்திகளை கையாண்டார்.அதனை ஒரு சில வரிகளில் இங்கு விவரிக்க முடியாது.

சீனாவில் ஏற்பட்ட (1930) பஞ்சத்தால் மக்கள் உணவின்றி தவித்தனர். விவசாயிகளை அரசுக்கு எதிராக மாற்றி புரட்சி செய்ய புரட்சிகரமான நண்பர்களை உருவாக்கினார். பின் நாடு முழுக்க மூடநம்பிக்கையில் ஊறிய மக்களை மெய்யாக்க கொள்கைக்கு (pragmatism) மாற்றினார். 25 ஆண்டுகளில்  நவீன சீனாவாக மாற்றி உலக வல்லரசாக்கினார்.

பொது உடைமைக் கொள்கையை உருவாக்க எவ்வாறு சிரமப்பட்டனர் என்பதை மேலே குறிப்பிடப்பட்ட லெனின் மற்றும் மாசேதுங் இருவரின் வாழ்க்கை வரலாற்றை படித்த வாசகர்களுக்கு நன்கு புரியும்.
                                   
ஆனால் இந்திய பொது உடைமைத் தலைவர்கள் செல்வந்தர் குடும்பங்களில் தோன்றினாலும்,தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்தாலும்,வெய்யிலாளிகளின் வாழ்க்கைத் தரம் உயர்வுக்கு பாடுபட்டாலும்,அரசாட்சியில் வெய்யிலாளிகள் பங்கு பெற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.வெய்யிலாளிகள் அரசாட்சியில் பங்கு பெற பொது உடைமைத் தலைவர்களின் பங்கு என்ன? இந்தநூலின் கடைசி அத்தியாயத்தில் காணலாம்.
                      
16-தமிழினம்

இது இன்றய உலக நடப்புகள்.நாம் இந்தியாவுக்கு வருவோம்,அதிலும் தமிழர்கள் யார்? மனித சமுதாயத்திற்கு தமிழர்களின் பங்களிப்பு என்ன? என்பதை பார்ப்போம்.

உலகில் மிகப் பழைமையான சமுதாயங்களில் தமிழ் சமுதாயமும் ஒன்று.இவர்கள் வாழ்க்கை முறை என்பது இயற்கையோடு இணைந்தது அல்லது ஒன்றியது எனக் கூறலாம்.இன்று வரை இப்படித்தான் இயங்குகிறது.சிறிதும் அறிவியல் பூர்வமான சிந்தனை இன்றி வாழ்ந்தனர்-வாழ்கின்றனர்.

அய்ரோப்பிய(யூதர்கள்) அறிவியலாளர்கள் கண்டு பிடித்த நவீன அறிவியல் சாதனங்களான வாகனங்கள்,தொலைத் தொடர்பு சாதனங்கள், வான் வழி போக்குவரத்து,   தரைவழி போக்குவரத்து, தொலைக் காட்சி கருவிகள் அனைத்திலும் நம்மவர்கள் பங்களிப்பு எதுவுமே இல்லை,ஆனால் அந்த கருவிகளைப் பயன்படுத்துமுன் நம்மவர்கள் ராகுகாலம் எமகண்டம் பார்ப்பார்கள். அதிலும் நல்ல நாள் எது?கெட்ட நாள் எது? என கணக்கு போடுவார்கள். அதைவிட அதனை பயன்படுத்துமுன் அந்த பொருளுக்கு பூசை போடுவார்கள்.

பழுது ஆகிவிட்டால்,நன்றாக வேலை செய்யவேண்டும் எனவும் கோயிலுக்கு வந்து மொட்டைபோடுகிறேன் என கடவுளை வேண்டிக் கொள்வார்கள்.நம்மவர்களால் புதியதாக எதுவும் உருவாக்கத் தெரியாது. யாரோ உருவாக்கியதை பாதுகாக்க தெரியும். இதற்கொல்லாம் என்ன காரணங்கள்?

17-முரட்டு மனிதர்களை சாதுவாக்கியது எது?

வெய்யிலாளிகளுக்கு (முரட்டுமனிதர்கள்) என சில மன ஒழுக்க கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டது. அதுதான் ஆரியர்கள் ஆரியர்களுக்காக உருவாக்கிய மனு(தர்மம்?) சாஸ்த்திர நூல்.

மனித உடல் 5 குணங்கள் கொண்ட 5 பாகங்களை கொண்டது.எனவே குணங்களை வைத்து 5 சாதிகள் நிர்னயம் செய்யப்பட்டது.

தலை (பிரம்மம்), மார்பு (ருத்ரம்), வயிறு (வைசியம்), இடுப்பு (இச்சை) மற்றும்
கால் (இடுப்புக்கு மேல் உள்ள பாகங்களைத் தாங்குதல் அல்லது சுமைத் தாங்கி)

18-மனு சாத்திரம் -மனு நீதி?

மனு சாத்திரம் உருவாக்கிய,இந்த 5 வகை மனிதர்களுக்கு 5 வகையான கடமைகள் (கர்மங்கள்) வரையறுக்கப் பட்டன. அவைகள் முறையே, கல்வி, சமுதாய மக்கள்பாதுகாப்பு, வணிகம், விவசாயம், காவல்
                                
மனு சாஸ்த்திரத்தின் முக்கிய அம்சங்கள்;

இந்நூலை பிராமணர்களைத் தவிர ஏனைய மக்கள் படிப்பது பாவம் என பறை சாற்றப்பட்டது.

1-வீட்டுக்குள் கடவுள் படங்களையோ, உருவங்களையோ வைக்ககூடாது. அப்படி வைத்தாலும் பூசை செய்யக்கூடாது.வீட்டுக்குள் கடவுளிடம் வேண்டிக் கொண்டாலும் நேர்திக் கடனை(மொட்டைபோடுதல்,காதுகுத்தல்,மூக்குகுத்தல் போன்ற நிகழ்சிகள்) பொது வழி பாட்டுத் தலமான கோயில்களில் மட்டுமே செய்ய வேண்டும்

2-ஊர்மக்கள் ஒன்று


2-ஊர்மக்கள் ஒன்று கூடி பொது வழி பாட்டுத் தலங்களுக்கு வரவேண்டும். அங்கே நிறுவப்படும் சிலைகளை இடைத்தரகர்களை (அர்ச்சகர்கள்-புரோகிதர்கள்) மூலமாக வணங்க வேண்டும்.

3-வெய்யிலாளிகள் ஊர்க் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும்,மீறுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் தண்டனையை ஏற்க மறுப்பவர்களை ஊரைவிட்டே ஒதுக்கிவைக்க வேண்டும். (இப்படி ஒதுக்கப்பட்டவர்கள் தான் தீண்டத் தகாதவர்களாக உருவானார்கள்) பிராமணர்களுக்கு கட்டுப்பாடுகள் பொருந்தாது.

4-கொடுஞ் செயல் புரிபவர்களுக்கு மரண தண்டனை உண்டு.அதே கொடுஞ் செயல்புரியும் பிராமணர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக ஊர்கூடி மொட்டை போட்டால் போதும்.

5-வெய்யிலாளிகளுக்கு கல்வி அறிவு கூடாது.அப்படி சுயமாக கல்வி அறிவு பெற்றால் கூட வேதங்களை படிக்க கூடாது .படிப்பது பாவம் என வெய்யிலாளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.இன்றும் அந்த நிலை நீடித்தாலும் வெய்யிலாளிகளும் அவர்கள் வாரிசுகளும் இன்று பலதரப்பட்ட கல்வியில் முன்னேறுகின்றனர்.ஆனால் வெய்யிலாளிகள் மனதில் அன்று விதைத்த மூடநம்பிக்கை விதைகள் இன்று மரங்களாகிவிட்டன.மூட நம்பிக்கையை பின் பற்றுவதிலும் அதைப் பாதுகாப்பதிலும் வெய்யிலாளிகள்,  பிராமணர்களுக்கே குருவாகி விட்டார்கள்.
                      
எவ்வளவு பெரிய பாவங்கள் செய்திருந்தாலும், ‘யேசு மன்னித்து ஏற்பார் மனம் திரும்புங்கள்’ என ஒரு மதம் 2000-ஆண்டுகளாக பொய் சொல்லி வருகிறது.இந்து மதமோ கோயில்களில் உண்டியல் கட்டி வைத்து விட்டு அதில் காசு (காணிக்கை) போட்டால் மனிதன் செய்த பாவங்கள் எல்லாம் தீரும் என வெய்யிலாளி பணத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமுகத்தில் கொலை கொள்ளைகள் எங்கே குறையும்? குறைய வாய்ப்பில்லை . ‘பொய்களின் மூட்டையே மதங்கள்’

19-இசையும் மந்திரங்களும்

உலகில் உள்ள அத்துணை மதங்களும் கடவுளைப் பற்றிய சிந்தனையை மக்கள் மனதில் பதிய வைக்க இசையை உருவாக்கினர்.

யார் கடவுள் கொள்கையை உருவாக்கினானோ அவனே இசையை உருவாக்கினான்,இசை எல்லாதரப்பு மனிதர்களையும் மயக்கும்.இது மது மயக்கம் போன்றது. முரட்டு (வீரன்?) மனிதனை மயக்க அல்லது அறிவை செயல் இழக்க வைக்கும்.மனிதனின் சிந்தனையை மழுங்கடிக்கும்.

இசையோடு கற்பனைப் பாடல்களும் மனிதனை தன் சுய நினைவை இழக்கச் செய்யும்.இதுவே மந்திரங்கள் எனப்படும்.படிக்காதவன் மனதில் தோன்றியது தான் கடவுள் கொள்கை,படித்தவன் இந்த கொள்கையை சுயலாபத்திற்கு பயன்படுத்திக் கொண்டான்,சுயசிந்தனை அற்ற மனிதனை மயக்க,

1-கடவுள் நம்பிக்கை,
2-பேய்பிசாசு,சைத்தான் நம்பிக்கை
3-மது,
4-மாது,
5-இசை இந்த அய்ந்தும் போதுமானது.

அதற்கு முன் மனிதன் வாழ்வியல் இலக்கணங்களும், வீரமூட்டும் பாடல்களும் தமிழர்களிடையே உலாவந்தன. தொல் காப்பியத்திற்கு பிந்தய காலத்தில் சமய இலக்கியங்கள் தோன்ற ஆரம்பித்தது. அதாவது இந்தியாவில் ஆரியர்கள் வருகைக்குப் பின் வட இந்தியாவில் வாழ்ந்த (இன்றய ஆப்கன்)  (சாலிவாகனர்கள் கூட்டம் எனவும் அழைப்பர்) தமிழர்களிடையே மிகுந்த மனமாற்றம் ஏற்பட்டது.

வாசகர்கள் இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டும்.இந்தியாவில் சாதிய வேறுபாடுகள் தோன்ற காரணங்களை ஆய்ந்து கொண்டு வருகின்றோம்.ராமாயணக் காலத்திற்குபின் தான் மக்களிடையே சாதிய வேறுபாடுகள் தோன்றிய ஆதாரங்கள் காணப்படுகிறது.

ஆரியர்கள் வருகைக்குப் பின் இந்தியாவில் மொத்தம் 5 தேசிய இனங்கள் உருவாகின.
அவற்றுள் முக்கியமானது,
1-பிராமணர்,
2-சத்ரியர்
3-வைசியர்
4-சூத்ரர்
5-பஞ்சமர்
மக்கள் தொகைகணக்கில் எடுத்துக் கொண்டால்
1-பஞ்சமர்,
2-சூத்திரர்,
3-வைசியர்
4-சத்ரியர்
5-பிராமணர்-இவைகள் இந்திய இதிகாச சமுக அமைப்புகளைக் கொண்டது.

இந்த 5 வகை மனித இனங்களில் ஒவ்வொரு இனத்திலும் பல உட்பிரிவுகள் உள்ளன.

இந்தியாவில் பல மொழிகளிலும் பிராமணர்கள் உள்ளனர்,மொழிக்கு ஏற்றவாறு சாதியப் பெயர்கள் வேறுபடும்.அதே போல் இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளிலும் உள்ள மக்கள் மேலே குறிக்கப்பட்டுள்ள 5 இனங்களில்-குணங்களில்- காணப்படுவர்.                                        
இதில் கடைசியாக குறிக்கப்பட்டுள்ள பஞ்சமர்எனும் மனிதர்கள் மற்ற நான்கு இனங்களின் விலக்கப்பட்ட மனிதர்கள்.

இது இந்தியாவின் தலையாய அரசியல் பிரச்சினையாகவே உள்ளது.

மனதில் பட்டதையே சொல்வது அல்லது செயல் படுத்துவதே,இதுவே பஞ்சமர்களின் குணம். இதனை நன்கு புரிந்து கொண்ட உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் நிழலாளிகளின் (உயர் குடி மக்கள்?) குணமறிந்து பஞ்சமர்களுக்கு, செயல்படத் தெரியவில்லை.
                                     
இதனால் யார் நேர்மையான அரசியல்வாதி என தீர்மானிக்க முடியாத பஞ்சமர்கள், இன்றும் ஆட்சியில் பங்கு பெற முடியவில்லை.   மனிதர்களின் தேவைகளை தாங்களே பூர்தி செய்து கொள்ளாத, செய்ய விரும்பாத ஆதிக்க குணம் கொண்டவர்கள் பஞ்சமர்களை அடிமைகளாக்கிவிட்டனர்.

மனிதன் சுயமரியாதையோடு வாழ-உணவு,உடை மற்றும் உறைவிடம்- இவைகளை அடைய மூல காரணமான பணம், அதை அடைய பஞ்மர்களுக்கு கிடைக்காமல் செய்துவிட்டனர்.இதே போன்று, சூத்திரர்களையும் வெய்யில் உழைப்பாளிகளாக்கி நிழலாளிகளை மேன்மக்கள் எனவும் வெய்யில் உழைப்பாளிகளை கீழ்மக்கள் எனவும் தமிழில் இலக்கியங்கள் உருவாகின.(இதன் தொடர்சியை புதிய அஞ்சல்-2ல் காணவும்)

Wednesday, October 15, 2014

அன்றாட சுய சிந்தனை

இனி என்னுடைய அன்றாட 'சுய சிந்தனைக் கடிதங்களை' என்னுடைய முகநூல் வலை தளத்தில் படிக்கலாம்.தயவு செய்து படிக்க,face book.com/padaiveedu thiruvengadam.நன்றி,வணக்கம்.வலைதள நண்பர்கள் முக நூலில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்

Wednesday, July 30, 2014

94-பள்ளிக் குழந்தைகள் தீக்கிரை,யார் பொறுப்பு?



94 பள்ளிக் குழந்தைகள் தீக்கிரை,யார் பொறுப்பு?

கும்பகோணத்தில் சூலை 16 2004 அன்று ஒரு தனியார் (கிருட்னா பள்ளி) பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 ஆரம்ப பள்ளி குழந்தைகள் கருகி விட்டன.பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் வீடு திரும்பும் என நினைத்த பெற்றோர்களுக்கு சொல்லொணாத்துயரம்.

தான் பெற்ற பிள்ளைக்கு தனக்கு முன்னே மரணம் நேர்ந்தால்,பிள்ளையை பெற்றோருக்கு யார்தான் ஆறுதல் சொல்வது?

இவ்வளவு பெரிய மரணத்திற்கு எது காரணம்? அந்த காரணத்தை நீதி மன்றம் ஏன் குறிப்பிடவில்லை? பொறுப்பாளர்கள் 10 பேர் என சிறைதண்டனை வழங்கி தஞ்சை நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சம்பவம் நடந்த அன்று அருகில் உள்ள கோயிலில் கடவுளுக்கு பூசை.அன்று அமாவாசை.குழந்தைகளை பூட்டிவிட்டு ஆசிரியர்கள் கோயிலுக்கு சென்று விட்டார்கள்.நாமெல்லாம் நல்லா இருக்கணும் என்றுதானே கடவுளை வணங்குகிறோம்.ஒரு பாவமும் அறியா அந்த பிஞ்சு உள்ளங்கள் (உடல்கள்) தீயில் கருக யார் காரணம்? கடவுள் தான் காரணம் என நீதி மன்றம் ஏன் தீர்ப்பு சொல்ல வில்லை?அல்லது குழந்தைகளை காப்பாற்ற வக்கில்லாத கடவுளை ஏன் வணங்கப்போனீர்கள்?அதனால் தான் உங்களுக்கு இந்த சிறை தண்டனை என நீதி மன்றம் ஏன் தீர்ப்புச் சொல்லவில்லை?

அது சரி தூங்கி எழுந்த உடன் கடவுளை வணங்குகிறோம்,குளிச்சி சாப்பிட்டு பள்ளி/அலுவலகம் புறப்படும் முன் கடவுளை வணங்குகிறோம்.பள்ளி அல்லது அலுவலகம் சென்று பணி துவங்குமுன் கடவுளை வணங்குகிறோம்.மாலை வீடு திரும்பியவுடன் கடவுளை வணங்குகிறோம்.பின் படுக்கப் போகுமுன் கடவுளை வணங்குகிறோம் இவ்வளவு ஏன் ? பாக்கெட்லியே கடவுள் படத்தை பத்திரமா வச்சிருக்கிறோம். நம்மவர்களை மட்டும் கடவுள் பத்திரமா ஏன் வச்சிக்கிறது இல்லை?
நமக்கு உதவி செய்பவர்களை மறந்துவிட்டு கடவுளால் தான் உதவி கிட்டியது என கல்லை நேசிக்கிறோம்.எங்கே மனித நேயம்?  

இதை ஏன் யாரும் சிந்திக்கிறது இல்லை? பள்ளிக்கூடத்தில் தீப்பொறியை பாதுகாக்க தெரியாதவர்கள் குழந்தைகளை எப்படி பாதுகாப்பார்கள்?கடவுள் பார்த்துப்பார் என கோயிலுக்கு சென்று விட்டார்களா?

மரணம் மனிதனுக்கு வயது முதிர்ச்சியால் வரட்டும்.அறிவீனத்தால் வரக்கூடாது.

                                         புதுமுறைச் சிந்தனைச் சிற்பி
                                            படைவீடு திருவேங்கடம்              

Tuesday, July 15, 2014

வேஷ்ட்டி தமிழரின் உடையா?



              வேஷ்ட்டி தமிழரின் உடையா?            16.07.14                

சென்னையில் சென்ற வாரம் ஒரு கிரிகட் சங்க கட்டிடத்தில் ஒரு விழா.அந்த விழாவில் கலந்துகொள்ள ஒரு நீநிபதி வேஷ்டி சட்டையணிந்து (இது தமிழரின் பாரம்பரிய உடையாம்!) சென்றுள்ளார்.அந்த கட்டிடத்தின் காவலாளி நீதிபதியை உள்ளே விடவில்லை.காவலாளிக்கு இடப்பட்ட உத்தரவு அது.அவர் வேலையை அவர் சரியாக செய்தார்.

ஒவ்வொரு இடத்திற்கு செல்லும் போது மனிதர்கள் எப்படி உடையணிந்து செல்லவேண்டும் என்பது மனிதன், மனிதனுக்கு வகுத்துக்கொண்ட ஒரு நாகரிக பண்பாடு அல்லது வெளிப்பாடு.

தமிழன் பாரம்பரியமாகவே ஒரு வெய்யில் தொழிலாளி.இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.அவனுடைய அடிப்படை இயல்புகளே வயலில் உழைப்பது,விளைபொருளை தனக்குப்போக நிழலாளிக்கு விற்று விடுவது.இனப்பெருக்கம்(காதல்) செய்வது.வீரத்தை காட்ட போரிடுவது.(மூர்கத்தனத்தை காட்டுவது)தன் இனத்தை காக்க அல்ல மற்ற இனத்தை காக்க.

உலகில் இதுபோன்று அறம் காக்கும் செயல் செய்வது தமிழ் இனம் மட்டுமே.அதனால் தான் தமிழனை அடிமை இனம் என்று கூறப்படுகிறது.இவர்களுக்கு வழிகாட்டியே பிராமணர்கள்தான். இவர்கள் வீட்டில் இறந்தவர்களுக்கு கருமாதியே (தோஷ பரிகாரம்) வீட்டில் செய்யமாட்டார்கள்.தீட்டு! அதனால் வீட்டுக்கு வெளியே குளக்கறையோ அல்லது ஆற்றங்கரையோ,அல்லது கடற்கரையோ தோர்ந்தெடுப்பார்கள்.சாவு வீட்டுக்குள்ள தானே  நடக்குது?.தோஷபரிகாரம் குளக்கரையில் செய்தால் எப்படி நிவர்த்தியாகும்?தமிழன் எதை சிந்தித்தான் இதை சிந்திப்பதற்கு?

வேஷ்ட்டி தமிழ் வார்தையே இல்லை.அப்படி இருக்க தமிழனுக்கு அது எப்படி உடையாகும்?
மர உரி தரித்த தமிழனுக்கு பின்னாளில் அரைக்கோவணமும் சித்தாடையும் வழங்கியதே நிழாலாளிகள் தான்.100-ஆண்டுகளுக்கு முன்பு கூட தமிழகத்தில் பரவலாக இந்த ஆடைதான் இருந்தது.அதன் நினைவாக இப்பொழுதும் கிராமங்களில் வீட்டில் இறந்த வர்களுக்கு வைத்துப் படைப்பது அரைத்துண்டும் சித்தாடையும் தான்.(சித்தாடை என்பது 2*1/2 அடி அளவில்  கிடைக்கும் சிவப்புத் துண்டு) சென்ற நூற்றாண்டு வரை கிராம புற பெண்களின் பிரத்யோகமான ஆடையே இதுதான்.

எல்லாம் சரி.நமக்கு ஏன் காலம் மாறிப்போய் கூட பேன்ட் சட்டை அணியச் சொல்ல? பெரியவங்க முன்னாடி மரியாதை காட்ட முடியாது இல்ல? பெரியவங்க என்று சொன்னால் அவங்க(தமிழன்) வீட்டு பெரியவங்க அல்ல,கிராமத்தில் வசிக்கும் மற்ற இன மக்களான பிராமணர்கள்,பிள்ளைமார்,பணக்கார முதலாளிகள் போன்றோர் முன் நிற்கும் போது வேட்டியை மடித்துக்கட்டக்கூடாது.அதுதான் மரியாதை.அந்த மரியாதையை பேன்ட் போட்டவனிடம் பெற முடியுமா? முடியாதே .அதனால் தான் தமிழனுக்கு என்றைக்கும் வேட்டிதான்!

புது முறைச் சிந்தனைச் சிற்பி
படைவீடு திருவேங்கடம்         

Tuesday, July 1, 2014

நெற்றியில் குறிகள் எதற்கு?

                நெற்றியில் குறிகள் எதற்கு?
ஆன்மிக சிந்தனையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சுய சிந்தனையற்ற, இயற்கையோடு இணைந்த வாழ்க்கையைக் கொண்ட இந்திய மற்றும் தெற்காசிய மக்களுக்கு, கடந்த 100-ஆண்டுகளாக அறிவியலின் அற்புத கண்டு பிடிப்புகளான போக்குவரத்து,தொலைத்தொடர்பு சாதனங்களின் செயல்பாடுகள் அனைத்தும் பிரமிப்பூட்டுவதாக உள்ளன.
அப்பொழுது கூட நம்மக்களை சரியான அறிவியல் சிந்தனைக்கு செல்லும் கல்விப் பாடத் திட்டங்களை மாற்றியமைக்கப் படவில்லை.முன்னோர்கள் கடைபிடித்த சம்பரதாயம் மற்றும் சடங்குகள் பின்பற்றுவதில் தான் வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதனாக வாழமுடியும், என
மத-ஆன்மிக குருக்கள்,
மனைவியை வெறுத்த வாழா வெட்டிகள்(முற்றும் துறந்த முனிவர்கள்?)
தம்மை வாழ்த்த மாட்டார்களா? என தாய் தந்தையரையும் உதாசினப்படுத்தி.உடன் பிறந்தவர்களையும் விரட்டிவிட்டு மடாலயங்களில் சரணடையும் மனிதர்கள் பெருகிவிட்டனர்.
இவர்கள் போடும் வேடங்கள் இருக்கிறதே அது கொஞ்ச நஞ்சமல்ல,
காவி உடை அணிதல்,
தாடி வைத்தல்,
மொட்டை போடல்,
விரதம் இருத்தல்,
எந்நேரமும் மந்திரம் செபித்தல் ( தாய் மொழி தவிர பிறமொழியில்)
அதுவும் தனக்கே புரியாத அர்த்தமற்ற மந்திரம் கற்றுக்கொண்டோம் எனும் மமதையில் பெரிய பெரிய ஆடம்பர மாளிகைப் போன்ற மடாலயம் அமைத்துக்கொண்டு அரசியல் தலைவர்களையும் தம் காலில் மண்டியிட வைத்தல் போன்ற கலாச்சாரம் பெருகிவிட்டது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஆதாரம் அற்ற-யூகத்தின் அடிப்படையில்,அறிவியலை துணைக்கு இழுத்து பாமர மக்களையும்,வெய்யிலாளிகளையும் மூடநம்பிக்கையில் மூழ்கடித்துக் கொண்டிருக்கும் ஊடகங்களான பத்திரிக்கைகளும்,தொலைக்காட்சி பெட்டிகளும் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு அறிவியல் சிந்தனையே வேண்டாம் என முடி வெடுத்து இயங்குகின்றன.

உதாரணமாக இன்று தினமணி(27.06.2014) யில் ‘திருநீற்றின் மகத்துவம்’ என அறிவியல் சிந்தனைக்கு அப்பாற்பட்ட செய்திகளை நெற்றியில் இடும் சாம்பலைம்,குங்குமத்தையும் (இது எந்த மதப்பிரிவினர் வேறுபடுத்தி காண உதவும் நெற்றியில் இடும் ஒரு குறியீடு-இது பற்றி விரிவாக எனது வெளியீடான, ‘அறம் காத்த வர்மாக்கள்’எனும் நூலில் காணலாம்) அறிவியலாக்கும் முயற்சி, ஒரு அறிவீனர்களின் கற்பனா சக்தியின் வெளிப்பாடு.தினமணி போன்ற அறிவியல் தொடர்புடைய தினசரியில் இதுபோன்ற கட்டுரைகளை தயவு செய்து வெளியிட வேண்டாம்.
                                                புதுமுறைச் சிந்தனைச் சிற்பி
                                                படைவீடு திருவேங்கடம்
                                                நிறுவனர்:ஏழாம் அறிவு இயக்கம்

                                          Visit:www.thiru-rationalism.blogspot.in