திராவிடம்
தேவை மறு சிந்தனை
உலகில் ஒவ்வொரு மனித இனத்திற்கும் ஒரு வரலாறு உண்டு .
கற்கால மனிதன் ,உலோக கால மனிதன், இவையெல்லாம் அழிந்து தற்கால மனிதனை இரண்டுவகையாக பிரிக்கலாம்
1. நாகரீகமனிதன்(religion oriented)
2.கணினி கால(computer oriented) மனிதன்
400 ஆண்டு கால வரலாறு நம்மிடையே உண்டு .
மதவழியாக (religion based)த்தான் மனிதன் வரலாறு எழுதப்பட்டது .
இந்து மற்றும் புத்தமதம் 2000 ஆண்டுகளுக்கு முந்தியது .
கிறித்துவமும் ,இசுலாமும் 2000 ஆண்டுகளுக்கு பிந்தியது
வீரத்தை அதாவது மூர்கதனத்தை மூலதனமாகவைத்து மனிதவரலாறு எழுதப்பட்டது .
வட்டார மொழிகளுக்கு (regional languages) ஏற்றாற்போல் இனம் தழைத்தோங்கியது
உலகில் மிகபெரிய நதிகளின் ஓரம் மனித நாகரீகம் தழைத்தோங்கியது எகிப்து, ரோமானியர்,(லத்தின் மற்றும் பெர்சியன் மொழி பேசும் அய்ரோப்பாகண்டமக்கள் ) சிந்து மற்றும் கங்கை,கோதாவிரி,காவிரி நதிகளின் ஒரம் முறையே ஹிந்துஸ்தானி மற்றும் தமிழ் பேசும் இனங்கள் தழைத்தோங்கின.
கிறித்துவத்திலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக முசுலிம் மதம் தோன்றியது .
இன்றும் இந்த கருத்துவேறுபாடு முற்றி ஒருவர் மற்றொருவர் உயிரை பறிக்கும் அளவுக்கு வன்முறை உலகெங்கும் தலைவிரித்தாடுகிறது .
இதே கருத்துவேறுபாடு ஹிந்துஸ்தானி மொழிபேசும் மக்களிடையே தோன்றி, இந்து மதத்திலிருந்து புத்தம் மற்றும் ஜைனமதம் தோன்றி கிழக்கத்திய நாடுகளில் பரவியது .
தென்னிந்தியாவில் இந்துமதம் திணிக்கப்பட்டு அதனால் மொழிமாற்றம் நிகழ்ந்தது .
அதன் விளைவாக தமிழிலிருந்து தெலுங்கு(வடுக மொழி),கன்னடம் ,மளையாளம் மற்றும் துளு மொழிபேசும் இனங்கள் உருவாகியது .
இன்றும் தமிழர்களுக்கும் ஹிந்துஸ்தானி மொழிபேசும் வட இந்தியர்களுக்கும் மதத்தாலும் மொழியாலும் கருத்து வேறுபாடு முற்றிக்கொண்டிருக்கிறது
சென்ற நூற்றாண்டில் தோன்றி நம்மிடையே வாழ்ந்து மறைந்த திரு ஈ.வே ராமசாமி நாயக்கர்(பெரியார் என்று அன்புடன் அழைப்பர்)மதம் தான் சாதி தோன்ற காரணம் என கூறுகின்றார்.
எனவே மனிதனுக்கு சுயசிந்தனையும் சுயமரியாதையும் அவசியம் என்பதை உணர்த்தி வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவாதத்தினை பறைசாற்றிமறைந்தார் .
இதே கருத்தை வலியுருத்தி மேலை மற்றும் கிழக்கத்திய நாடுகளில் காரல் மார்க்சு,இங்கர்சால்,ரூசொ ,லெனின்மற்றும் மா சே துங் போன்ற அறிஞர்கள் மனிதனுக்கு சுயசிந்தனையை ஊட்டினர்
இன்றும் மதம்,மொழியைகடந்து முதலாளி தொழிலாளி என வர்கப்போராட்டமாக உருவெடுத்து உலகம் முழுவதும் உலா வந்துகொண்டிருக்கிறது
மனிதனின் நிரம் ,உடல் உறுப்புகள் ,உயரம் ,குள்ளம் ,குரல் அமைப்பு இவையெல்லாம் இடத்துக்கு இடம் மாறுபடும் .
காரணம் பூகோள அமைப்பில் மாறுபட்ட தட்ப வெப்பமும் புவிஈர்ப்பு விசையும் உயிர்வாழ மாறுபட்ட உணவுதானியங்கள் உண்பதால்தான் . இப்பொழுது
உலகமயமாக்கல் திட்டத்தால் ஒரு கண்டத்தில் விளையும் விவசாய விளை பொருட்கள் உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் கிடைக்கிறது .
இதன்விளைவாக காலப்போக்கில் மனிதர்களின் குணங்களில் பெறும் மாற்றம் காணலாம் . இடத்துக்கு இடம் மனிதர்களிடையே அதிகவேறுபாடுகளை காணும் நாம் ,சிலநூற்றாண்டுகளில் சமநிலை அடையும்
கடல் மட்டத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட உயரத்தில் வளரும் தாவரங்கள் அதாவது மலை வாழ் தாவரங்கள் தரையில், சமவெளிப்பிரதேசத்தில் வளர்வதில்லை, அதேபோல் குளிர் பிரதேசங்களில் வளரும் தாவரங்கள் வெப்ப நிலை பிரதேசங்களில் வளர்வதில்லை .
பலதரப்பட்ட தாவரங்களில் பலதரப்பட்ட சத்துக்கள் உள்ளன .அந்தந்த இடத்திற்கு ஏற்றவாறு உயிரினங்களின் உறுப்புகளும், குணங்களும் மாறு படுகின்றன
இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா ,தென்னிந்தியா போன்ற பிரதேசங்களில் வாழும் மனிதர்கள் கருப்பாகவும் இங்கிலாந்து ,செர்மனி போன்ற வடதுருவ மனிதர்கள் வெள்ளையாகவும் அதற்கேற்றாற்போல் அவர்களின் குண வேறுபாடுகளும் நிறைந்து காணப்படுகின்றன .
வடதுருவ மனிதர்கள் தென் துருவ மனிதர்களை அடக்கியாளும் மனோபாவம் படைத்தவர்கள் .
இதை கடந்தகாலவரலாறு நமக்கு உணர்த்துகிறது .இயற்கையாகவே கருப்புமனிதர்களுக்கு அடங்கிப்போகும் குணமும் வெள்ளைமனிதர்களுக்கு அடக்கியாளும் தன்மை வந்து விடுகிறது .
மனிதர்களிடையே தலை தூக்கிஇருக்கும் மிருக குணம் இது .
மனிதன் தோன்றிய நாள்முதலாக இத்தகய மிருக குணத்தை போக்க மனித நேய சிந்தனையாளர்கள் இன்றளவும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
இதைவைத்துத்தான் மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் .இட ஒதுக்கீடும் இதைவைத்துதான்
தென்னிந்தியாவில் திராவிட மொழிகளான தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் மலையாளம் மற்றும் துளு பேசும் மக்களிடையே நிற வேற்றுமையால் சாதி சண்டைகளும் ஒழிந்தபாடில்லை .
வெள்ளைமனிதர்கள் தென்னிந்தியாவில் குடியேறியபோது(ஆரியர்கள்) அவர்கள் பேச்சும் (சமஸ்கிருதம்) திராவிடர்களுக்கு புரியவில்லை அதை தேவ மொழி என நம்பவைத்தனர்
இன்றும் பலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர் .
திராவிடர்களுக்கே உரிய அடங்கிப்போகும் குணத்தால் வந்தேறிகளும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்
இப்பொழுது நாம் வாழ்வதற்கு இட ஒதுக்கீடு கேட்டு கையேந்தி நிற்கிறோம். சென்ற நூற்றாண்டில் தந்தை பெரியாரால் உணர்த்தப்பட்ட இந்த நிலை இன்னும் மாறவில்லை .
சொந்த மண்ணிலேயே தமிழர்கள் இரண்டாந்தர குடிமகன்களாக வாழும் அவலநிலை இன்றும் நீடிக்கிறது .
இதற்கு காரணம் தமிழகம்,கடந்த2000 ஆண்டுகளுக்கு மேல் பிறமொழி இனத்தவரால் ஆளப்பட்டதும் தமிழரிடையே அடிமைபுத்தி ரத்தத்தோடு ஊரிவிட்டதால் இந்நிலை நீடிக்கிறது.
அதனால் திராவிடம் என்ற சொல்லுக்கு தமிழன்தரும் மரியாதையை பிறதிராவிட மொழி இனத்தவர் தருவதில்லை .
தமிழ்நாடு தண்ணீரின்றி தவிக்கும்போது அண்டை திராவிட மொழி இனத்தவர் குடிக்க கூட தண்ணீர் தர மறுப்பதை இந்த உலகம் வேடிக்கை பார்க்கிறது .
இனியும் திராவிடம் என்ற சொல்லுக்கு பொருள் தேடிக்கொண்டிருந்தால் தமிழனைப்போல் ஒரு இளிச்சவாய் இனத்தை உலகில் எங்கும்காணமுடியாது .
திராவிட இயக்கம் தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப்பட்டு ,சுமார் 60 ஆண்டுகளுக்குமேல் தமிழ்நாட்டில்(அந்நாளில் தமிழ் நாடு, ஆந்திரம், கன்னடம், கேரளம் அனைத்தும் ஒரே மாகாணமாக இருந்தது) கடவுள் மறுப்பு மற்றும் சுயசிந்தனையை பரப்ப அரும்பாடு பட்டார்
இதன்காரணமாக திராவிட இயக்கத்தை தன்மான இயக்கமாக மாற்றினார்.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே இந்த இயக்கம் வளர்ந்தது . தந்தை பெரியார் கன்னடத்தில் பிறந்த ,தெலுங்கு இனத்தவராக இருந்தும் ஆந்திரா மற்றும் கர்னாடகத்தில் இந்த இயக்கத்தை வளர்க்க முடியவில்லை .ஏன்?
காரணம் இவருக்குப்பின் திராவிட முன்னேற்ற கழகமாக ஆரம்பித்து அறிஞர் அண்ணா அவருக்குப்பின் தற்போது கலைஞர் அவர்கள் ஒரு இயக்கமாக வளர்த்துக்கொண்டிருக்கின்றார்.பெரியாரின் உள்நோக்கம் உணராமல் அண்ணா மட்டுமல்ல அதன்பிறகு வந்த கலைஞரும் தமிழர்களை(வெய்யில் உழைப்பாளிகளை) அய்ம்பதுகளில் மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பின்னரும் மற்ற இன மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பயன் படுத்திக்கொண்டனர். இன்றும் இந்நிலைதான் நீடிக்கின்றது
பெரியாருக்கு பின் திரு வீரமணி அவர்கள்,
திராவிடர் கழகம் என பேருக்கு நடத்திக்கொண்டிருக்கின்றார் .பெரியார் விட்டுச்சென்ற சொத்து பாதுகாக்கும் இயக்கமாக இருக்கின்றது .கொள்கை விளக்க அல்லது கொள்கை பரப்பும் இயக்கமாக இல்லை.
இதைபோல் மற்ற மாநிலத்தில் வளர்க்க பெரியாரும் அவர்காலத்தில் தவறிவிட்டார் . அவர் பெயரில் அறக்கட்டளை நடத்திவருபவர்களும் அவர் சொத்தை பாதுகாக்கும் காவலாளியாக இருக்கிறார்களேதவிர அவர்கொள்கையை பரப்ப தீவிரம் காட்டவில்லை .
தமிழ்நாட்டில் காலம்மாலமாக வாழும் தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னடம் பேசும் மக்களுக்குதான் இந்த திராவிடம் என்கிற வார்த்தை கேடயமாக விளங்குகிறது .
இதனால்தான் திராவிடம் என்கிற வார்த்தை வைத்து அரசியல்கட்சிகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன .
திரையில் தோன்றி நல்லவனாக நடித்துவிட்டால் எதையும் எளிதில்நம்பும் தன்மைகொண்ட தமிழர்களிடத்தில் நடித்து நாட்டை ஆளலாம் என்பது தமிழ்நாட்டில் வாழும் பிறமொழிஇனத்தவரின் அசைக்கமுடியாத கருத்தாக இகுக்கிறது
நம்மை நாமே ஆளவேண்டும் என்கிற எண்ணம் தமிழனிடத்தில் எப்பொழுதுமே இருந்ததில்லை .
இந்த நிலை மாறவேண்டும் .இதற்கு தமிழனிடத்தில் சுயசிந்தனையும்,சுயமரியாதை உணர்வும் வேண்டும் .
குடும்பத்தில் பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும் .
இந்த கலாச்சாரம் வடநாட்டு குடும்பங்களில் இன்றும் நாம் காணலாம் .வயதில் சிறியவர்கள் வெளியே செல்லும்போதும் ,உள்ளே வரும்போதும் வயதில் பெரியவர்களின் காலைத்தொட்டு வணங்கி ஆசி பெறுவதை நாம்காணலாம் .
இதனால் குடும்பத்தில் அமைதி நிலவும் .இணக்கமான குடும்பசூழல் உருவாகும் .
இதைபோன்ற ஒரு கலாச்சாரம் தமிழ் குடும்பங்களில் காணமுடியாது காரணம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஒற்றுமையாக இருந்த தமிழ் குடும்பங்களை கலைத்து அதில் ஆதாயம் அடைந்தவர்கள்தான் பிற இனத்தவர் . இன்றும் இது நீடிக்கிறது .
தமிழனின் முரட்டு குணத்தை அடக்குவதற்கு அருவயியல் (spritualism) தத்துவத்தை கையாண்டனர் .
கல்வியறிவு நிறைந்த இந்த காலத்திலும் இது நீடிப்பதுதான் இன்னும் வேதனையாக இருக்கிறது .
அன்றாட பிழைப்புக்கே அல்லல் படும் தமிழர்களுக்கு இனவுணர்வு பற்றி கவலைபட நேரம் எங்கே இருக்கிறது ?
தமிழ்நாட்டில் ,அதுவும்ஒற்றுமை வய்ந்த தமிழ்நாட்டில் இது சாத்தியப்படும் ஒற்றுமை வாயந்த தமிழ்நாடு என்பது மிகுந்த சிரத்தையுடன் தமிழையே தாய்மொழியாக கொண்ட தலைவனால் மட்டுமேமுடியும் .
எதற்கும்எளிதில் உணர்ச்சிவசப்படும், எதையும் எளிதில் நம்பகத்தன்மை கொண்ட தமிழ் இனத்தின் குணம் தெரிந்து கொண்ட ,தமிழ்நாட்டில் பிழைப்பைத்தேடி குடியேறிய பிற மொழியினத்தவர் குறிப்பாக தெலுங்கு பேசும் நாயுடு இனத்தவரும் நடிப்பை தொழிலாக கொண்ட கன்னடம் மற்றும் மலையாள மொழியினத்தவரும் சில்லரைகளை இரைத்து அரசியல் கட்சி ஆரம்பிக்கின்றனர் .
அன்றாட பிழைப்புக்கே அல்லல் படும் தமிழர்களுக்கு ராமன் ஆண்டால் என்ன ?ராவணன் ஆண்டால் என்ன ? என்று இலவசங்களை காட்டும் அரசியல்கட்சிக்கே ஓட்டு போட்டு ஆட்ச்சியில் அமர வைக்கின்றனர்.
இன்றய நவீன உலகில் தமிழன் தன் சுய முகவரி இழந்து ஈனப்பிறவியாகிவிட்டான் .
இதனை களைய, சுயமரியாதை மிக்க தமிழினத்தை உருவாக்க, சுயமரியாதை கொண்ட தமிழ் தலைவனால் மட்டுமே இது முடியும் .
ஏழ்மையும்,அறியாமையும் ,மண்டிகிடக்கும் தமிழினத்தை காப்பாற்ற கட்டாய மற்றும் சமச்சீர் கல்வி திட்டத்தை அதிரடியாக அமுல் படுத்துவதின்மூலமே இது முடியும்.
அல்லது
இதையெல்லாம் சாதாரண உடையில் ஏழ்மை நிலையில் சொன்னால் எடுபடாது தாடி வைத்துக்கொண்டு அசாதாரண உடையில் ஆசிரமங்களை அமைத்து அடியாளையும் தடியாளையும் வைத்துக்கொண்டு இயக்கம் என்கிற பேறுடன் கொள்கைகளை பரப்பினால் மக்களிடையே எடுபடும்
எது நாகரீகம் ?
சிந்தனை செய்பவர்களுக்கு மட்டுமே சந்தேகங்கள் வரும் .
இது மனித குணம் .பல்லாயிரமாண்டுகளுக்கு முன் இன்றயமனிதர்களின் முன்னோர்கள் காட்டுவாசிளாக வாழந்தார்கள் .
இன்றும் அடர்ந்த காடுகளில் உலகின் பல்வேறு இடங்களில் நாகரீகமற்ற மனிதர்களை காணலாம் இவர்களெல்லாம் சிந்தனை வளையத்திற்கு உட்படாதவர்கள்.
பிறப்பது,வளர்வது இனப்பெறுக்கம் செய்வது பின் இறப்பது ,இதுவே இவர்கள் வாழ்க்கை முறை .அதாவது மிருக உணர்வோடு ஒத்த வாழ்க்கை
பேச்சு,பேச்சுக்கு எழுத்து வடிவம், சிந்தனை ,கற்பனை இதுவே இன்றய நாகரீகத்தின் வெளிப்பாடு .
இன்றய மனிதன் பேசவேண்டியதில்லை நடக்கவேண்டியதில்லை ,நிற்பது ,உட்காருவது ,உண்பது, உறங்குவது சிந்திப்பது இந்த அய்ந்து நிலையே போதுமானது
உட்கார்ந்த இடத்திலிருந்து ஒருமனிதன் இன்னொருமனிதனை அழிக்க முடியும் .
இது இன்றய அறிவியல் முன்னேற்றத்தின் வெளிப்பாடு .மனிதன் தன் எதிரியை கையாலும் ,கல்லாலும்,கத்தியாலும் பின்னாளில் துப்பாக்கியாலும் தாக்கினான். இதில் வெற்றிபெற்றவனை வாழ்த்தி பரிசுகள் வழங்கி வீரனாக்கினார்கள் .
இப்பொழுதெல்லாம் ஆகாயத்தில் செயற்கை கோள்களை(satelight) நிலை நிறுத்தி வலயதளத்தை(internet) உருவாக்கி தரையில் தொலை உணர்வு (remote sensing unit) கருவிகளோடு எதிரியின் ஏவுகணைகளை (ICBMS-INTER CONTINENTAL BALISTICS MISSILES ) தன்னிடம் தயார் நிலையில் இருக்கும் எதிர் ஏவுகணைகளை (ANTE ICBMS) தொலையுணர்வு கருவி உதவியுடன் நடு வானில் அழிக்கும் யுக்தியை கையாள்கின்றனர் .
இதையெல்லாம் மீறி , மூர்க்க குணம்படைத்த வல்லரசு நாடுகள் அணு குண்டுகளையும் ,இரசாயன குண்டுகளையும் தயார் நிலையில் வைத்துக்கொண்டு எதிரி நாட்டை அச்சுருத்திக் கொண்டிருக்கின்றன
குழந்தைகளுக்கு பள்ளியில் வன்முறை வேண்டாம் என வலியுறுத்தி பாடம் சொல்லிக்கொண்டு , நாட்டின் தலைவர்கள் வன்முறையை கையாள்கின்றனர்
உலகம் முரட்டுதனத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது . அதாவது அநாகரீகத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது .
எது அநாகரீகமோ அது நகரீகமாகிவிட்டது .
ஒவ்வொருநாட்டிலும் இரண்டு வகை குடிமக்கள் உள்ளனர் .
ஒன்று முதல்நிலை குடிமக்கள்(first rank citizens )
இரண்டு ,இரண்டாம் நிலை குடிமக்கள் (second rank citizens )
முதல்நிலை குடிமக்கள் ஆளுமை திறன் படைத்தவர்கள் .
இரண்டாம் நிலை குடிமக்கள் ,தங்கள் வாழ்க்கையின் தரம் உயர்வதற்காக இட ஒதுக்கீடுவேண்டி போராடுபவர்கள்
முதல்நிலை குடிமக்கள் முதல் தர கல்வியும் சமுக அந்தஸ்த்தும் உடையவர்கள் .
இரண்டாம் நிலை குடிமக்கள் தரமான கல்வியறிவு இல்லாமலும் சமுக அந்தஸ்த்தும் இன்றி அன்றாட சாப்பாட்டுக்கே அல்லல் படுபவர்கள் .
இப்பொழுதெல்லாம் இந்தியாவில் இரண்டாம் நிலை குடிமக்களிலிருந்து தான் அரசியல் தலைவர்கள் உருவகிறார்கள்
இவர்களின் வாரிசுகள் கல்வியிலும் செல்வத்திலும் உயர்ந்தவுடன் முதல்நிலை குடிமக்களாகிவிடுகின்றனர் .
உலகில் பெரும்பாலும் பணம்தான் இந்த இருநிலைகளை உருவாக்கினாலும் பணத்தை தக்கவைத்துக்கொள்ளும் மனப்பக்குவம் சாதியும் மதமும் தான் காரணமாகிறது .
கிறித்துவத்தில் சாதியை கருப்பு வெள்ளை நிற இனமாக இருந்தாலும் கொள்கைரீதியாக கத்தோலிக், புரட்டஸ்ட்டண்ட் ,என இரு பெரும்பிரிவுகளில் எவன்சலிக்கல் பெந்தகோஸ்த் போன்ற மொழிவாரி மதங்கள் உலகெங்கும் பரவியுள்ளன இந்த மதத்தில் முதல்நிலை குடிமக்களையும் இரண்டாம் நிலை குடிமக்களையும் சாதியும் ,நிரமும் தான் தீர்மானிக்கிறது
இறைதூதர் முகமது நபி உருவாக்கிய இசுலாம் மத த்தில் அவருக்குப்பின் அவருடைய வாரிசுகள் கொள்கை மாறுபாட்டால் ஷியா ,சுன்னி போன்ற இனபிரிவுகள் தோன்றின ,இருப்பினும் நிரமும் சாதியும் தான் இங்கேயும் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை குடிமக்களை உருவாக்கின.
இந்து மதத்தில் மனிதனின் குணங்களை அய்ந்து வகையாக பிரித்து வர்னாஸ்ரம தத்துவத்தை(தர்மம் ?) புகுத்தினர் .மனிதனின் தலை ,மார்பு வயிறு ,இடுப்பு ,கால் என முறையே பிரம்மம், ருத்திரம்(ஷத்திரியம்) , வைசியம் ,சூத்தரம் ,பஞ்சமம் என அய்ந்து வகையான சாதிகளை உருவாக்கினர் .
மனிதனின் உடல் அய்ந்து வகையான குணங்களை உடையது என்பது இந்தியர்கள் கண்ட மெய்ஞானம் .அதனால் மனிதர்களை அய்ந்து வகையான சாதிகளை உருவாக்கிவிட்டனர்
பிரம்மம் என்றால் பெரியது அதாவது பிராமணர்கள் .இவர்கள் மட்டுமே வேதங்களை பயில வேண்டும் ,அதில் சொல்லப்பட்டிருக்கும் ரகசியங்கள் அறிவு சார்ந்த சுய சிந்தனைகளை தூண்டும் . மற்ற நான்கு இன மக்களுக்கும் இது தெரிய வேண்டியதில்லை என அவர்களுக்கு போதிக்கப்பட்டது .வேதங்களை மற்ற நான்கு இனத்தவர்கள் படிப்பது பாவம் என கூறப்பட்டது .
அந்த நான்கில் இரண்டாவது இனமாக, ருத்தரம் அதாவது கோவ குணமுள்ளவர்களை வீரர்களாக பாவித்து நாட்டையாள உருவாக்கிவிட்டனர் .
மூன்றாவது இனமாக வணிகம் செய்து வயிற்றை வளர்த்தனர் மற்ற இனத்து பொருளாதாரத்தை தனதாக்க தந்திரம் தான் இந்த வைசிய இன வணிகம் .இந்த இரு இனத்தவரும் சாதாரணமாக எழுத படிக்க தெரிந்தாலே போதுமானது என போதிக்கப்பட்டது .
மேலே கூறப்பட்ட மூன்று இன மக்களுக்கும் உணவு, உடை, உறைவிடம் தயாரிக்கும் பொறுப்பு மற்ற இரண்டு இன மக்களான சூத்ரா மற்றும் பஞ்சமர்களுக்கு தான் என உணர்த்தப்பட்டது
சூத் என்றால் வட மொழியில் இடுப்பு பகுதியில் இருக்கும் இனவிருத்தி பகுதியகும்.இனவிருத்தி இன்பமே, பெரியது என எண்ணத்தை உருவாக்கி பஞ்சமர்களுக்கும் சூத்திரர்களுக்கும் தீரா பகைமை உணர்வை உருவாக்கிவிட்டனர் .
கற்பு ,மானம் ,ஈனம்,சூடு,சுரணை இந்த குணங்களே இவர்கள் சொத்து என உணரவைக்கப்பட்டது . இதை கடைப்பிடிப்பதுதான் இவர்களுக்கு புண்ணியம் என போதிக்கப்பட்டது .
இவர்களுக்கு படிப்பறிவு தேவை இல்லை என போதிக்கப்பட்டது . இன்றளவும் இந்த நிலை நீடிக்கிறது.
சமுதாயத்தில் இந்த இரு இனத்தவரும் செய்யும் வேலைகளுக்கு ஊதியத்தை இவர்கள் எதிர் பார்க்க முடியாது .
இந்த அய்ந்துவகையான இன மக்களும் அந்தந்த இன மக்களுக்கென்று பார்த்த மாத்திரத்தில் அடையாளம் தெரியவேண்டும் என தனித்தனி உணவு,உடை,உறைவிடம் உருவாக்கிக் கொண்டனர் .
ஒருவர் உடுத்தும் உடைகளை அடுத்த இன மக்கள் உடுத்துவது பாவம் என உணரவைக்கப்பட்டது . முதல் மூன்று இன மக்களுக்கும் நெசவாளர்கள் உயர்வகை பட்டு ஆடைகளை நெய்தல் வேண்டும் .
பட்டை (silk)உருவாக்கும் நெசவாளர்களே பட்டாடைகளை உடுத்தமுடியாது.
தலையை அலங்கரிக்கும் ஆடைகள்,மார்பு பகுதிக்கும் இடுப்பு பகுதிக்கும் தனித்தனி ஆடைகள் .
காலுக்கு தனி காலணி என ஒரு தனி உடை தர்மத்தை(dress code)உருவாக்கிக் கொண்டனர் .
நெசவாளர்களுக்கும் அவர்களோடு இணைந்த மற்ற சூத்திர இன மக்களுக்கும் பட்டாடை உடுத்த கூடாது
இவர்களுக்கு பருத்தி ஆடைகளே உடுத்த அறிவுறுத்தப்பட்டது .
சூத்தர இன மக்களுக்கு தலைப்பாகையும் இடுப்பை மறைக்க ஒருஆடையும் மட்டுமே உடுத்தவேண்டும் .இவர்களுக்கு காலணி அணிய தடை செய்யப்பட்டது அதாவது பூமிமாதவை காலணியால் மிதிப்பது பாவம் என போதிக்கப்பட்டது .
உடையில் மட்டுமில்லை உணவிலும் மிகப்பெரிய வேறுபாடுகளை காணமுடியும் .
உணவில் சைவம் ,அசைவம் என இரு வகை உணவுகளாக பிரித்துக்கொண்டனர் .
சைவ உணவு அறிவை வளர்க்க உதவும் எனவும் அசைவம் உடலை வளர்க்கும் ,உடல் வளர்ச்சி கடுமையாக உழைக்கும் சூத்தர இன மக்களுக்கு பொருந்தும் .
அந்த அசைவ உணவு உண்பவர்களையும் இரண்டாக பிரித்தனர் அதாவது சூத்தரர் களுக்கு பறவை இனம் மற்றும்ஆடுகளை உணவாகவும் ,பஞ்சமர்களுக்கு செத்த மாடுகளை உணவாகவும் சமன் செய்தனர் .
சைவத்தில் மிருகத்தின் பாலையும் ,பாலின் திரிபுகளான தயிர் ,வெண்ணெய் நெய், மோர் போன்ற அசைவ உணவை சைவமாக்கினர் .
இது சைவம் என மற்ற இரண்டு இன மக்களையும் நம்ப வைத்தனர் .சைவ உணவு என்று உலகில் எங்கும் இல்லை எனபதே உண்மை .
சைவ உணவு என்பது இயற்கையாக பூமியில் விளையும் தாவர வகைதான் இதை மட்டுமே உண்டு உடல்நலத்துடன் ஒருவர் வாழ்வது என்பது இயலாத காரியம் .
இத்துடன் மிருக ரத்தத்தின் மருவு வான பாலும் அதன் திரிபுகளான தயிர் ,வெண்ணை ,நெய் போன்ற அசைவத்தை சைவ உணவாக்கிவிட்டனர் .இன்றளவும் இந்த நிலைதான் நீடிக்கிறது .
கடும் உழைப்பாளிகளான சூத்ரா மற்றும் பஞ்சமர்கள் கடும் வெய்யில் சேரும் சகதியும் நிறைந்த வாழ்க்கை கொண்டவர்கள் .
இதில் உழல்வதற்கு நல்ல உடல் பலம் தேவை .தாக்குப்பிடிக்க தகுந்த அசைவ மற்றும் எளிதில் செரிக்காத சைவ உணவை தேடி உண்ண வேண்டும் .
அப்படிப்பட்ட சைவ உணவுதான் கூழ் .இதை தயாரிக்க கேழ்வரகு தேவை . கிராம்ப்புற உணவாக இருந்த இது இப்பொழுதெல்லாம் இதை உண்பது நாகரீகம் இல்லை என நினைத்து இந்த உணவை ஒதுக்கி விடுகின்றனர் .
அந்நளில் நோய்யில்லாமல் நீண்ட நாள் வாழ்ந்த கிராம்புற மக்கள், மேல்தட்டு மக்கள் உண்ணும் உணவாகிய பட்டை தீட்டப்பட்ட அரிசி உணவுகளை அளவுக்கு மீறி விரும்பி உண்பதால் நீரிழிவு நோய்க்கு ஆளாகி 40 -50 வயதுக்குள் மரணத்தை நெருங்கி விடுகின்றனர் .
இத்தகைய மக்களின் அறியாமை போக்க ஆட்சியாளர்கள்தான் பொறுப்பேற்கவேண்டும் .
அடுத்து உறைவிடம் அமைப்பிலும் சூத்ரர் மற்றும் பஞ்சமர்கள் மற்ற மூன்று இன மக்களிடமிருந்து வேறுபடுகின்றனர் .
விவசாயத்திற்கு வான் மழையை நம்பி வாழும் இந்த இன மக்களுக்கு சேமிப்பு பழக்கம் இல்லாததால் அவ்வப்போது பசியின் கொடுமைக்கு ஆளாக நேரிடுகிறது .இதனால் இருப்பவர்களிடம் இருந்து பசியை போக்க கொள்ளையடிக்க வேண்டியுள்ளது .
இதற்காகவே தன் உடமைகளை காக்க முதல் மூன்று இன மக்கள் ,பின்னிரண்டு இன மக்களின் உழைப்பைக்கொண்டு கோட்டைகளை அமைத்துக்கொண்டனர் .
தமிழ்நாட்டில் தமிழை தாய்மொழியாக கொண்ட சூத்திரர்கள் என்பவர்கள் பலவகை சாதிகளாக உள்ளனர் அவற்றுள் முதலியார் ,வன்னியர் முக்குலத்தோர் அதிகம் உள்ளனர் இவர்கள் கிராமங்களில்தான் அதிகம் வாழ்கின்றனர் . இதில் ஒவ்வொரு சாதிக்கும் பல உட்பிரிவுகள் உண்டு
முதலியார் இன மக்கள் விவசாயம் மற்றும் துணி தயாரிக்கும் தொழிலாக மேற்கொண்டனர் .
அதாவது நிழலில் வேலை செய்யவதையே தங்கள் குலத்தொழில் என இவர்களுக்கு ஒதுக்கப்பட்டது .
வன்னியர்களும் முக்குலத்தவரும் விவசாய கூலிகளாகவும், உறைவிடம் அமைக்கும் தொழிலாளர்களாகவும் உருவாக்கப்பட்டனர் ,அதாவது வெய்யிலில் வேலை செய்யவதையே இவர்கள் குலத்தொழிலாக ஒதுக்கப்பட்டது .
நிழலில் வேலை செய்பவர்களுக்கும் ,வெய்யிலில் வேலை செய்பவர்களுக்கும் சமுக அந்தஸ்தில் (social status ) மிகப்பெரிய வேறுபாடுகளை இன்றளவும் காணலாம்
இந்த வேலைக்கு இந்த ஊதியம் என நிர்னயிப்பதோ வரையறுப்பதோ இல்லை.உழைத்துவாழவேண்டும் மற்றவர்களுக்கு(பிராமணர்,சத்திரியர்,வைசியர்) கொடுத்து வாழவேண்டும் என உபதேசிக்கப்பட்டது .
இது இவர்களுக்கு புண்ணியம் என நம்பிக்கை உருவாக்கப்பட்டது . இதை உணரவைக்க பாட்டாளிகளுக்கு(சூத்தரர்கள்மற்றும் பஞ்சமர்கள் ) புரியும்படி பல நாடகங்கள் உருவாக்கப்பட்டன , பல நூல்கள் எழுதப்பட்டன. உழைப்பதும் ,மற்றவர்களுக்கு கொடுப்பதும் படைப்பதும் இவர்கள் தலை எழுத்து என புரிய வைக்கப்பட்டது .
மனிதர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பஞ்சமர்களை ஈடுபடுத்தப்பட்டது .
பஞ்சமர்கள் எனப்படுபவர் இன்றும் கிராமங்களில் வெட்டி வேலை,காவல் ,பறைசாற்றுதல்,பிணங்களை அடக்கம் செய்வது அழுக்குத்துணிகளை துவைப்பது ,மனிதகழிவுகளை அகற்றுவது சுற்றுப்புறங்களை தூய்மை படுத்துவது ,காலணிகளை தயாரிப்பது
100 ஆண்டுகளுக்கு முன் இந்த நிலைதான் நீடித்தது. உலகெங்கும் மனித உரிமை ஆணையம் நிர்னயிக்கப்பட்ட பின் இப்பொழுதெல்லாம் மனித உணர்வுகள் மதிக்கப்படுகின்றன
மேலைநாடுகளில் இந்த தொழில் செய்பவர்களுக்கு அதிக ஊதியமும் இதனால் சமூக அந்தஸ்த்தும் இருப்பதை இந்தியர்களுக்கு புரியவைக்கப்பட்டது .
இருப்பினும் இதில் ஒரு கலாச்சார புரட்சி ஏற்படும் அளவுக்கு இன்னும் உணரவைக்க அரசியல் தலைவர்கள் ,சமுக ஒற்றுமையில் ஆர்வம் உள்ளவர்கள் இன்றளவும் போராடிக்கொண்டிருக்கின்றனர் .
இந்த தொழில் செய்தால் நமக்கு கெளரவம் ,இந்த தொழிலால் நமக்கு ஈனம் என நினைக்கும் அறிவீனத்தை ஒழிக்க வேண்டும் .அடிப்படை கல்வி அமைப்புகளை மாற்றியமைத்தாலொழிய இது வெறும் கனவாகவே முடியும் .
மேலும் கிராமங்களில் ஊர் பெரியவர்கள் என்கிற போர்வையில் (இவர்களுக்கு போதிய படிப்பறிவோ ,சுய சிந்தனையோ சமத்துவ மனித சிந்தனையோ இருப்பதில்லை } பஞ்சாயித்துகளை கூட்டி மூட நம்மிக்கையின் அடிப்படையில் வழங்கும் தீர்ப்புக்களை தடை செய்ய வேண்டும் .
இதை கண்காணிக்க கிராம நல பணியாளர்களை அரசாங்கம் ஈடுபடுத்தவேண்டும்
ஒவ்வொரு கிராமத்திலும் அரசு ஊழியர்களான
1. ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்
2. ஆரம்ப சுகாதார பணியாளர்கள்
3. கிராம நிர்வாக அதிகாரிகள்
4. கிராம நல பணியாளர்கள்
5. கிராம வங்கி அதிகாரிகள்
6. கிராம வங்கி பணியாளர்கள்
7. நியாய விலை கடை ஊழியர்கள்
8. கிராம துப்புரவு பணியாளர்கள்
இவர்கள் குடும்பத்துடன் தங்குவதற்கு தனித்தனி நிரந்திர கட்டிடங்கள் அரசாங்கம் கட்டித்தர வேண்டும்
இது தவிர வீடுகளில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிக்கு போதிய இடவசதி இருக்காது .இதற்காக சமுதாய கூடங்கள் கட்டித்தரப்பட வேண்டும் .
Sunday, March 8, 2009
Subscribe to:
Comments (Atom)